தொடரும் தோழர்கள்

புதன், அக்டோபர் 07, 2015

’இந்து’(தமிழ்)வில் என் வலைப்பூ அறிமுகம்

நேற்றைய தமிழ் இந்துவில்- வலைஞர் பக்கத்தில் என் வலைத்தளம் அறிமுகம் செய்யப் பட்டிருக்கிறது.என் மகிழ்ச்சியை வார்த்தைகளால்  வர்ணிக்க இயலாது;அதை இங்கே உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்

மிக்க நன்றி ’இந்து’

http://tamil.thehindu.comநெட்டெழுத்து: சென்னைப்பித்தன்... பதிவர்களில் இவர் கபாலி!

க.சே. ரமணி பிரபா தேவி
Comment (1)   ·   print   ·   T+  
2
எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் இதுதான் சென்னைப்பித்தனின் வலைப்பதிவு. ஆனால் ஏராளமான நிகழ்வுகளையும், கருத்துகளையும், சுவாரசியம் மிகுந்த கதைகளாகவும், கட்டுரைகளாகவும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் சென்னைப்பித்தன்.
படிக்கத் தூண்டுகிற, சுவாரசியம் மிக்க கதைகளை, அதன் ஓட்டத்திலேயே இழுத்துச் செல்வதில் வல்லவரான சென்னைப்பித்தன் ஒரு கதையை எழுதி, அதன் முடிவுகளை பல விதங்களில் மாற்றியமைக்கிறார். மாறிய முடிவே வேறொரு கதைக்கான முன்னோட்டத்தை அளித்துச் செல்கிறது.
வட இந்தியாவில் வங்கியில் பணியாற்றியவரான சென்னைப்பித்தன், தன் பணி ஓய்வுக்குப் பிறகு சென்னையில் வசித்து வருகிறார். வலைப்பதிவுகள் பிரபலமாகத் தொடங்கிய காலகட்டமான 2008-ல் எழுதத் தொடங்கியவர், இப்பொழுதும் எழுத்துலகத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார். கதைகளை தனக்கே உரிய பாணியில், விறுவிறுப்பாக எடுத்துச் செல்வது இவரின் பாணி.
ஓர் அடர்ந்த காடு. அங்கிருக்கும் மான் ஒன்று கருவுற்றிருக்கிறது. அது குட்டியை ஈன்றெடுக்கும் நேரம் நெருங்கி விட்டது. அருகில் இருக்கும் ஒரு புல்வெளியை அடைந்து விட்டால் நல்லது என நினைக்கிறது. அப்போது பார்த்து சட்டென மேகங்கள் திரள்கின்றன. வானம் கருக்கின்றது. பெரிய மின்னல் தாக்கிக் காட்டில் மரங்கள் பற்றி எரியத் தொடங்குகின்றன. மானுக்குப் பிரசவ வலி எடுத்து விட்டது. இடது புறம் சிறிது தொலைவில்,ஒரு வேட்டைக்காரன் தன் துப்பாக்கியுடன் தயாராகிக் கொண்டிருப்பதைக் காண்கிறது. வலது புறம் சற்றுத் தொலைவில் பதுங்கி வரும் புலியைப் பார்க்கிறது. என்ன ஆகும் அந்த மானுக்கு?
காட்டுத்தீயில் கருகிச் சாகுமா? வேட்டைக்காரனின் குண்டுக்கு மடியுமா? வேங்கையின் பசிக்கு உணவாகுமா? என்ன நடக்கும்? இதைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
விடுமுறை- சிரிமுறை என்ற தலைப்புகளில், சிரிக்க வைக்கும் சிந்தனைப் பதிவுகளை ஞாயிற்றுக் கிழமைகளில் இடுகிறார். வாசிக்க: விடுமுறை- சிரிமுறை
அந்தக்கால சென்னையின் திரையரங்குகளைப் பற்றி யாருக்கெல்லாம் தெரியும்? தெரிந்துகொள்ள ஆசைப்படுபவர்கள் வாசிக்க: மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்!! இழந்த சொர்க்கங்கள்!
கைபேசி எவ்வாறு நம் வாழ்வின் இன்றியமையாத அங்கமாகி விட்டது, நம் பண்பாட்டை எவ்வாறு பாதித்திருக்கிறது என்று நக்கலடிக்கும் பதிவு. வாசிக்க: கடவுளுடன் ஒரு செல்ஃபி!
கருத்துகளை நகைச்சுவையாகவும், நக்கலாகவும் சொல்லியே பழக்கப்பட்ட சென்னைப்பித்தன், வலைத்தளத்தில் அடிமையாகிக் கிடப்பவர்களைப் பற்றி ஒரு பாடலை எழுதி இருக்கிறார். வாசிக்க: வலைப்பூ அடிமைகள்!
கால ஓட்டத்தில் இழந்ததை எல்லாம் திரும்பத்தரச் சொல்லி இறைவனிடம் கேட்கிறார் சென்னைப்பித்தன். இழந்தது என்ன என்று இறைவன் கேட்க, பட்டியலும் இடுகிறார். அதற்கு இறைவன் என்ன பதில் சொல்லியிருப்பார்? வாசிக்க: இழந்ததெல்லாம் திரும்பத் தா இறைவா!
சுவாரசியக் கதைகள்
பெரும்பாலான சமயங்களில் நம்மால் பொறுமை காக்க முடிவதில்லை. எந்த நிகழ்வுக்கும் உடனே எதிர்ச்செயலாற்றி விடுகிறோம். பொறுமை காப்பதால் ஏற்படும் நல்ல விளைவுகளைக் கதையொன்றின் வழியாகச் சொல்கிறார் சென்னைப் பித்தன். வாசிக்க: மந்திரத் தண்ணீர்!
வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம். அது மற்றவர்கள் நம்மைப் பார்த்து மகிழ அல்ல. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்! எப்படி? வாசியுங்கள்: யார் புத்திசாலி!
எதிர்பாராத சூழ்நிலையைச் சமாளிக்கவும் தனித்திறன் வேண்டும். அப்படி இருப்பவர்கள் சீக்கிரத்திலேயே உயர்நிலையை அடைவார்கள் என்பதை ஒரு குறுங்கதை மூலம் விளக்குகிறார் சென்னைப்பித்தன். வாசிக்க: அப்படிப் போடு!
எந்த விஷயத்திலும், அவசரப்பட்டு முடிவுக்கு வரக்கூடாது; எப்படியும் மனிதர்கள் இருக்கலாம் என்றும் கதை நவில்கிறார் சென்னைப்பித்தன். வாசிக்க: மகிழ்வுந்தில் மூன்று பெண்கள்!
கண்டதும் காதல் என்று சொல்வார்கள். அவனைப் பொறுத்தவரை அதுவே நடந்தது. கண்டான்; காதல் கொண்டான். முதல் பார்வையிலேயே அவள் அழகு அவனை அவள் மேல் காதல் கொள்ள வைத்தது. அவளுடன் கழித்த இரண்டு ஆண்டுகள் இரண்டு நொடிகளாகக் கடந்தன. படிப்பு முடிந்தது; பிரியும் நேரம் வந்தது. விரைவில் அவளைக் காண வருவேன் என்று உறுதி எடுத்துக்கொண்டான். திரும்ப வந்தானா? யார் அவர்கள்? வாசிக்க: அவன் ஒரு காதலன்!
அன்றாட வேலைகளுக்கிடையே இணையத்தில் ஆறுதலும், மாறுதலும் தேடி வருபவர்களுக்கு, இந்த அறுபது வயது இளைஞரின் வலைதளம், கபாலி போஸ்டர் போல் கம்பீரம் குறையாதது.
சென்னைப்பித்தனின் வலைதள முகவரி: http://chennaipithan.blogspot.in/

62 கருத்துகள்:


 1. இந்து நாளிதழின் தமிழ் பதிப்பில் தங்களையும் தங்கள் பதிவையும் அறிமுகப்படுத்தி கௌரவித்ததற்கு வாழ்த்துக்கள்!

  //அன்றாட வேலைகளுக்கிடையே இணையத்தில் ஆறுதலும்,மாறுதலும் தேடி வருபவர்களுக்கு, இந்த அறுபது வயது இளைஞரின் வலைதளம், கபாலி போஸ்டர் போல் கம்பீரம் குறையாதது.//

  என்று உங்களின் சரியான அகவையை சொன்னதற்கும் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி சபாபதி சார்.
   பத்து வயசைக் குறைச்சிட்டாங்க

   நீக்கு
 2. மிகவும் பெருமையாக உள்ளது. மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துகள் ஐயா.

  தங்களின் பணி தொடர வேண்டும்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 4. முதற் கண் வாழ்த்துகள்!உங்களைப் பெருமைப் படித்திய இந்துவுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 5. மிக்க மகிழ்ச்சி
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. பெருமையான விடயம் ஐயா!

  இன்னும் இன்னும் பல மகிழ்வுத் தருணங்கள்
  உங்களை வந்தடைய உளமார்ந்த வாழ்த்துக்கள்!

  த ம +1

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்துக்கள் ஐயா !

  அசத்தலாய்ப் பதிவிட்டால் அம்புவியே ஆடும்ல ...இப்போ ஆடிடுச்சி
  பார்த்தீங்க இல்ல ..ம்ம் தொடர வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 8. ஆஹா மிக்க மகிழ்ச்சி ஐயா வாழ்த்துகள் தொடரட்டும் எழுத்துப்பணி.
  வாழ்க தமிழ்

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கள்
  வாழ்த்துக்கள் அய்யா! மிக்க மகிழ்ச்சி
  தங்கள் பதிவுகளை கொஞ்ச நாளாகத்தான் படித்துவருகிறேன்! எல்லாம் அனுபவத்தில் விளைந்த அற்புதங்கள்!
  இன்னும் பல சாதனைகள் புரியவும் வாழ்த்துக்களய்யா (பொடிப்பய வாழ்த்தலாமா?)
  எப்பவும் முதலாளக வருவேன்! இதில்??,,
  மீண்டும் வாழ்த்துக்கள் அய்யா!

  பதிலளிநீக்கு
 10. மகிழச்சியான செய்தி அய்யா!
  உங்களைப் பற்றி எழுதிய விதமும் அருமை.
  வாழ்த்துக்கள் அய்யா!
  த ம 7

  பதிலளிநீக்கு
 11. மேலும் மேலும் பல வெற்றிகளுடன் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று, தங்களின் உற்றார் உறவினர்கள் மற்றும் குடும்ப நண்பர்களுடன், சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்... அன்புடன் கோகி-ரேடியோ மார்கோனி

  பதிலளிநீக்கு
 12. வணக்கம்
  ஐயா
  மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 13. மிகவும் மகிழ்வான செய்திங்க ஐயா. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. எப்படி கவனிக்காமல் விட்டேன்! ரெகுலராக தமிழ் இந்து படிக்கிறேன்! வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
 15. வாழ்த்துகள் ஸார். உங்கள் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன். வீட்டுக்கே வரும் தமிழ் ஹிந்து. நானும் தினமும் படிக்கிறேன். எப்படித் தவற விட்டேன்?

  பதிலளிநீக்கு
 16. மிக்க மகிழ்ச்சி..வாழ்த்துக்கள்!! அய்யா....

  பதிலளிநீக்கு
 17. உங்க திறமைக்கு இந்த அங்கீகாரம் சரியானதுதான் . இதைவிடவும் இன்னமும் பெறுவீர்கள் அய்யா:) வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 18. நாளிதழில் வந்த செய்தியின் ஊடே ,' நகாசு' வேலை செய்து அசத்தி விட்டீர்கள் ..வாழ்த்துகள் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. tamil.thehindu.com இல் வந்த செய்தியை அப்படியே காபிபேஸ்ட் செய்திருக்கிறேன்.எந்த நகாசு வேலையும் செய்யவில்லை.தாங்கள் எதை நகாசு வேலை என்று சொல்கிறீர்கள் என்பதைத் தெளிவு படுத்த வேண்டுகிறேன்.
   நன்றி

   நீக்கு
  2. பகவான்ஜி! உங்கள் பதிலுக்குக் காத்திருக்கிறேன்!

   நீக்கு
  3. தப்பாக எதுவும் சொல்லவில்லை ,அந்த பத்திரிகை செய்தியில் லிங்க் விலாசம் மட்டுமே கொடுக்கப் பட்டிருக்கும்.அதை நாங்கள் கிளிக் செய்து படிக்கும் விதமாய் செய்து இருக்கிறீர்கள் ,அதைத்தான்;நகாசு 'வேலை என்று சொன்னேன் !உங்களின் எழுத்துத் திறமை உலகம் அறிந்ததாசே ,நான் சிறியேன் ,குறை சொல்லுவேனா :)

   நீக்கு
  4. பகவான்ஜி!அது கூட நான் செய்யவில்லை .பதிவின் தொடக்கத்திலேயே நான் http://tamil.thehindu.com என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்த்து அத்தளத்துக்கு சென்று நீங்கள் பார்த்திருந்தால்,அக்கட்டுரையிலேயே ,சொடுக்கினால் பதிவு வரும்படி அமைத்திருப்பதைப் பார்த்திருக்கலாம்;. நான் காபி பேஸ்ட் மட்டுமே செய்தேன்..
   தெளிவு படுத்தியமைக்கு நன்றி

   நீக்கு
  5. நீங்கள் சொன்ன பிறகுதான் கவனித்தேன் !
   ஹிந்துவின் சேவை பதிவர்கள் நமக்கு தேவை ,ஹிந்துவுக்கும்,விளக்கம் தந்த உங்களுக்கும் நன்றி :)

   நீக்கு
 19. வாழ்த்துக்கள்...மிக்க மகிழ்ச்சி..அய்யா....

  பதிலளிநீக்கு
 20. மகிழ்ச்சி இனிய நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 21. அவ்வப்போது வந்தாலும், ஸ்வாமி பித்தானந்தா அளிக்கும் கருத்துக்கள் அருமை. ‘விடுமுறை சிரிமுறை’ என வாரம் ஒரு பதிவு இடுவது போல் ஸ்வாமி பித்தானந்தா கருத்துக்கள் என வாரம் ஒரு பதிவு வெளியிட்டால் என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு மாறி வந்து விட்டது!
   ஸ்வாமியிடம் கேட்டுப் பார்க்கிறேன்!
   நன்றி ஐயா

   நீக்கு
 22. வாழ்த்துக்கள்! நானும் இணையத்தில் இந்து (தமிழ்) வலைஞர் பக்கத்தில் படித்தேன் அய்யா!

  பதிலளிநீக்கு
 23. Congaratulations. Long awaited recognition from one of the most reputed journals of south india. Wish you more glorious days ahead.

  பதிலளிநீக்கு
 24. ஆஹா! செபி இன் த இ யில்!! மிகவும் மகிழ்வாக இருக்கிறது ஐயா. நம் வலைப்பூக்கள் கவனிக்கப்படுகின்றன என்பதை அறியும் போது....மிக மிக அழகாக எழுதியிருக்கிறார்கள்...மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா!

  பதிலளிநீக்கு