தொடரும் தோழர்கள்

ஞாயிறு, அக்டோபர் 04, 2015

சாக்லேட் பெண்கள் !காலை

மணி 8.00 

ரகுநந்தன் அலுவலகம் செல்லத் தயாராகிக் கொண்டிருக்கிறான்

“அப்பா”என்றைழைத்தபடி அவன் கால்களைக் கட்டிக் கொள்கிறாள்  7 வயது மகள் மைத்ரி

சீருடையில் பள்ளி செல்லத் தயாராக இருக்கிறாள்

“அப்பா!ஆபிஸ்லேந்து வரும்போது சாக்லேட்,நெறய சாக்லெட், வாங்கிட்டு வாப்பா”

எதுக்குடா?

”நாளைக்கு எனக்கு ஹேப்பி பர்த்டே இல்லயா?என் கிளாஸ்ல எல்லாருக்கும் குடுக்கணும்; மிஸ்ஸுக்கும் குடுக்கணும் ”

“சரிடா நல்லசாக்லெட்டா வாங்கிட்டு வரேன்!

பள்ளி உந்து வரவே அவள் டாடா சொல்லி விட்டுப் போய் விடுகிறாள்

அவன் அலுவலகத்துக்குப் புறப்படும்போது மனைவி சுமா மீண்டும் நினைவுபடுத்துகிறாள் சாக்லெட்டைப் பற்றி.

தலையசைத்து விட்டுப் புறப்படுகிறான் ரகுநந்தன்........

காலை 8 முதல் 9 வரை...

அருகில் உள்ள  சிறார் பள்ளிக்குச் சாரி சாரியாகச் செல்லும் குழந்தைகளை  ஏக்கத்துடன் பார்த்தவாறு கேட்டருகில் நிற்கிறாள் மாலினி.சில குழந்தைகள் அவளைப் பார்த்துக் கையாட்டி விட்டுச் செல்கின்றனர்.

உள்ளே வருகிறாள்

யாருடனோ பேசிக் கொண்டிருந்த கணவன் மதன்லால் தொலைபேசியை வைத்து விட்டு டியூட்டி முடிஞ்சாச்சா எனக் கேட்கிறான்.

ஆம்! அவளுக்கு எல்லாம் இருந்தாலும் கொஞ்ச ஒரு குழந்தையில்லை;கல்யாணமாகி ஆறு ஆண்டுகளுக்குப் பின்னும்.

காலையில் பள்ளி செல்லும் அந்தப் பளிச்சிடும் முகங்களைப் பார்ப்பதில் அவளுக்கு ஓர் ஆறுதல்

இன்னும் சிறிது நேரத்தில் கணவன் கடைக்குப்போய் விடுவான்;மதியம் உணவுக்கு 2 மணிக்கு அவன் வரும் வரை,தொலைக்காட்சி, பலனி என்று அவள் பொழுது போகும்; போகாது, நகரும்.

அவன் வந்து சாப்பிட்டு விட்டு  மூன்று மணிக்குப் போனபின் இரவு லேட்டாக அவன் வரும் வரை மீண்டும் வெறுமை.சில தினங்கள் இரவும் ஏதோ வேலை என்று அவன் வெளியே போய் விடுவான். அதைப் பற்றி ஒரு முறை அவனிடம்  கேட்டு அவளை அவன் கண்டித்து அதன் பின் அவள் அது பற்றி எதுவும் கேட்பதில்லை.கடையைத் தவிர வேறு ஏதோ மர்மமான வேலை செய்கிறான் என்பது அவளுக்குப்புரிந்திருந்தது.நேரங்கெட்ட நேரத்தில் சிலர் வருவதும் அவர்களுடன் அறைக்குள் சென்று அவன் பேசுவதும் ஆகிய செய்கைகள் அதை உறுதிப் படுத்தின...........

மணி 10
அலுவலகம் சென்றதும் ரகுநந்தனுக்கான ஃபேக்ஸ் காத்திருந்தது.அதில் கேட்கப்பட்டிருந்த விவரங்கள் அன்றே  தயார் செய்து விட வேண்டும் என்று மேலாளர் சொல்லி விட்டார். கோப்புகளை எடுத்து வைத்துக் கொண்டு வேலையிலாழ்ந்தான் ரகுநந்தன்........

மணி 1,30
பியூனை அழைத்து சேண்ட்விச்சும் தேநீரும்வாங்கி வரச்சொன்னான் ரகுநந்தன்.வந்ததும் அதைச் சாப்பிட்ட படியே வேலையைத் தொடர்ந்தான்.........

மணி2.30
மதன்லால் சாப்பிட்டு முடித்து இளைப்பாறிக்கொண்டிருந்தபோது ஒரு மனிதன் வந்தான். இருவரும் அறைக்குள் சென்றனர்,அவசரத்தில் அறைக்கதவு சரியாகச் சாத்தப் படாமலி ருந்தது.அவன் ஏதோ கொடுக்க அதை மதன் வாங்குவது தெரிந்தது.அப்போது அறைக்கதவு சரியாக மூடாததைக் கவனித்த மதன்லால் அதைச் சரியாக மூடினான். காட்சி மறைந்தது. சிறிது நேரத்தில் அந்த ஆள் வெளியே சென்றான்.மதன்லாலும் வழக்கம்போல் 3 மணிக்குக் கடைக்குச் சென்று விட்டான்;

இத்தனை நாட்களாக ஏற்படாத ஆர்வம் உந்துதல் மாலினிக்கு ஏற்பட்டது..........!

--தொடரும்

35 கருத்துகள்:

 1. தொடர்கிறேன்.

  தமிழ்மணம் வேலை செய்யவில்லையோ? எங்களுக்குப் படுத்துகிறது. இங்கும் சப்மிட் செய்யப் படாமல் இருக்கிறது. வாக்கு பிறகு வந்து அளிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பின்னர் வேலை செய்யத் தொடங்கி விட்டது
   நன்றி ஸ்ரீராம்

   நீக்கு
 2. வணக்கம் அய்யா! கூடவே போய் கண்காணிப்பாங்களே!
  தொடர்கிறேன் அய்யா!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 3. ஆஹா.... அடுத்த தொடர்கதை..... சஸ்பென்ஸ் நாளை வரையா?

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. மாலினிக்கு ஏற்பட்ட ஆர்வம் எங்களுக்கும் வந்துள்ளது? மதன்லாலுக்கும் அந்த குழந்தை மைத்ரி கேட்ட இன்பசைபண்டத்திற்கும் (Chocolate) தொடர்பு உண்டோ?

  பதிலளிநீக்கு
 5. சூப்பர் சார் தொடர்கிறேன்,,,,,,,

  பதிலளிநீக்கு
 6. பாவம் மாலினி தொடர்கிறேன் ஐயா...

  பதிலளிநீக்கு
 7. சுவாரஸ்யம் வழக்கம் போலவே! தொடர்கிறேன்!

  பதிலளிநீக்கு
 8. சுவாரஸ்யமாகவே போகிறது தொடர்கிறேன். நன்றி

  பதிலளிநீக்கு
 9. தொடர்கிறேன்
  எழுதத் தெரிந்தவர்களுக்கு
  ஒரு வரியிலேயே கூட சுவாரஸ்யம் கூட்டிவிடமுடியும் என்பதற்கு
  கடைசி வரி சாட்சி

  பதிலளிநீக்கு
 10. ஓட்டுப் போடுவது மகிழ்ச்சிதான்
  அதுவும் ஏழாவது எனில் இரட்டிப்பு தான்

  பதிலளிநீக்கு
 11. அட! எப்படியோ சாக்லேட் பெண்கள் விடுபட்டுவிட்டார்கள்..இணையம் பக்கம் வர தாமதமாவதால்...சாக்லேட் பெண்களை விட முடியுமா? இதொ தொடர்கின்றோம்...

  பதிலளிநீக்கு
 12. சாக்லேட் மர்மத்தை தொடர்கிறேன் :)

  பதிலளிநீக்கு
 13. /தொலைக்காட்சி, பலனி என்று அவள் பொழுது போகும்;/ பலனி....?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பலகைக் கணினி என்ன்பதன் சுருக்கமாம்!(டேப்லெட்)
   நன்றி ஐயா

   நீக்கு