தொடரும் தோழர்கள்

வியாழன், ஜூன் 01, 2017

கடுகு!

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் என்று சிலர் பாடுவது கேட்கிறது.

இதே வேலையாப் போச்சு என்று சலித்துக் கொள்வது மனக் கண்ணில் தெரிகிறது.

ஆனாலும் ஏமாறத்தான் போகிறீர்கள்.


கடுகு திரைப்படம்....

என் பள்ளி ஜூ.......னியர்  செங்கோவி அவர்களின் விமரிசனத்தைப் படித்தபின் எனக்குப் படம் பார்க்கும் அவா ஏற்பட்டது.

 யோகி துணைக்கு வந்தார்.

படம் பார்த்து விட்டேன்.

எனக்குப் பிடித்திருந்தது.

நான் விமரிசகன் அல்ல.

வெறும் ரசிகன்.

எனவே படத்தைக் கண்களால் பார்த்தேன்,இதயத்தால் ரசித்தேன்.மூளை குறுக்கே வரவில்லை.

படம் பார்க்கும்போது சில இடங்களில் உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடியது என்பதே உண்மை.

அநேகமாக எல்லா இயக்குனர்களும் நல்ல  நடிகர்கள்தான் என்பதை ராஜகுமாரன் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

பெரிய நடிகர்களின் ஃபார்முலா குப்பைகளுக்கு நடுவில் இது போன்ற படங்கள் அவ்வப்போது வருவது ஒரு ஆறுதல்.

..................

கடுகு மிகச்சிறியபொருள்.ஆனால் கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பர்.

கடுகு தாளிக்காமல் சமையல் முழுமையடையாது.

ஆனால் கடுகெண்ணையை சமையலில் பயன்படுத்தினால் நமக்கு(தமிழ்நாட்டவர்) நிச்சயமாகப் பிடிக்காது.

படத்துக்கு ஏன் கடுகு என்று பெயர் வைத்தனர்,சொல்லுங்கள்.

டிஸ்கி:பழைய தமிழ்ப்படம் ஒன்றில் கடுகு பிடிக்காத கடுகு என்று சொன்னாலே அலறும் ஒரு பாத்திரம் வந்தது.அது என்ன படம்,நடிகர் யார் சொல்லுங்கள் பார்க்கலாம்.

10 கருத்துகள்:

  1. புதிருக்காண விடை தெரியவில்லையே ஐயா

    பதிலளிநீக்கு
  2. இன்னும் ‘கடுகு’ படத்தைப் பார்க்கவில்லை. அதனால் முதல் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.
    இரண்டாவது கேள்விக்கான பதிலையும் நீங்களே சொல்லிவிடுங்களேன்!

    பதிலளிநீக்கு
  3. கடுகு படம் இருக்குன்னு நினைக்கிறேன். பார்த்துடறேன்.

    பதிலளிநீக்கு
  4. கடுகு என்று ஒரு படமா? நான் அறியேன். புதிருக்கான விடைக்காகக் காத்திருக்கிறேன். ஏனென்றால் கூகிளில் கூடத் தேட முடியவில்லை! அதற்கே தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
  5. இன்னும் படம் பார்க்கவில்லை பித்தரே
    பார்க்கிறோம் ....புதிருக்கு விடை சொல்ல நமக்கு அம்புட்டு அறிவு இருக்கா என்ன ?

    பதிலளிநீக்கு
  6. கடுகும் லிஸ்டில் உள்ளது பார்க்கனும்

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு