தொடரும் தோழர்கள்
செவ்வாய், ஜூன் 13, 2017
உப்புமா....ஆ ஆ ஆ !
அந்தக் காலத்துப் பாட்டு ஒன்று..
"உப்புமாவைக் கிண்டிப் பார்ப்போமே
உல்லாசமாகவே நாம் உப்புமாவை...
கடுகு மிளகாய்ப் பழம் காயம் கருவேப்பிலை
உளுத்தம் பருப்புடனே ஒரு சேர் நெய்யை விட்டு......உப்புமாவை"
உப்புமா சுவையாக இருக்க வேண்டுமென்றால் சூக்குமம் இதுதான்.."ஒரு சேர் நெய் !"
சேர் என்பது அந்தக்கால அளவை.
8 பலம்= 1 சேர்
5 சேர்=1 வீசை
ஒரு சேர் என்பது இன்றைய 280 கிராமுக்கு இணையானது.
இவ்வளவு நெய்!
ஆனால் ஒன்று நிச்சயம்
உப்புமா சுவையாக இருக்க வேண்டுமென்றால்,கை தாராளமாக இருக்க வேண்டும்...எண்ணை,நெய்யில்!
உப்புமாவில் உள்ளங்கையை வைத்து விட்டு எடுத்துப் பார்த்தால் கையில் நெய் மினுமினுக்க வேண்டும்.
உப்புமா என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது,பலரும் அஞ்சுவது ரவா உப்புமாதான்.
அதிலும் இரண்டு வகை
பம்பாய் ரவை,கோதுமை ரவை என.
இந்த ரவா உப்புமா செய்த பிரச்சினை ஒன்று நினைவுக்கு வருகிறது.
கோவில்பட்டியில் நான் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம்.
ஒவ்வொரு ஆண்டும் ஹாக்கி பந்தயம் சிறப்பாக நடை பெறும்.
கலந்து கொள்ளும் அணிகளில் அனைவருக்கும் பிடித்த அணி,தெற்கு ரயில்வே பெரம்பூர்.
ஒரு முறை இறுதிப்போட்டியில் பெரம்பூரும்,லக்ஷ்மி மில்ஸ் அணியும் மோத வேண்டும்.
போட்டியன்று மாலை,பெரம்பூர் அணியினர் ஓட்டலுக்கு சிற்றுண்டி சாப்பிடப் போனார்கள்.
அப்போது அங்கே என் அண்ணாவும் அவர் தோழர்களும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
பெரம்பூர் அணியைப் பார்த்து உற்சாகமான அவர்கள்,உங்களுக்கு வேண்டியதை சாப்பிடுங்கள்,செலவு எங்களது என்று சொல்லி விட்டனர்.
சூடான ரவா உப்புமா மேல் என்ன மோகமோ,அதை வரவழைத்துச் சாப்பிட்டனர்.
உப்புமா நன்றாக இருக்கிறது என்று இன்னும் ஒன்று சாப்பிட்டு விட்டு மகிழ்ச்சியாகச் சென்றனர்.
மகிழ்ச்சி அதோடு சரி.
அன்றைய ஆட்டத்தில் லக்ஷ்மி மில்ஸ் அணி வென்று கோப்பையைக் கைப்பற்றியது.
பெரம்பூர் அணியில் ஓர் அருமையான ஆட்டக்காரர் இருந்தார்.அவர் பெயர் ...கார்!ஆங்கிலோ இந்தியர்)
ரவா உப்புமா தவிர வேறு பல உப்புமாக்களும் உண்டு.
அரிசி உப்புமா(அம்மா அந்தக் காலத்தில் வெணகலப் பானையில் செய்வார்கள்.தொட்டுக்கொள்ள கத்திரிக்காய் புளிக் கொத்ஸு....ஆகா!)
புளி உப்புமா(புளிமா,பச்சைமாப்பொடி உப்புமா என்று பல பெயர்கள் உண்டு)
அவல் உப்புமா
சேமியா உப்புமா
ரொட்டி உப்புமா
ஜவ்வரிசி உப்புமா(சாபுதானா கிச்சடி)
இவை தவிர முன்பு சில முறை சாப்பிட்ட ஓர் உப்புமா...அரைத்த உப்புமா!
இதன் செய்முறை யாருக்காவது தெரியுமா?.......ஸ்ரீராம்?
இன்று உப்புமா புராணத்தின் காரணம்........
வீட்டில் தோசை மாவு இல்லை
சப்பாத்தி செய்தால் சப்ஜி வேறு செய்ய வேண்டும்
வெளியே வாங்கிச் சாப்பிட மனம் இல்லை.
வேறு வழி.........
ரவா உப்புமா!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உப்புமா புராணங்கள் அருமை.
பதிலளிநீக்கு//உப்புமாவில் உள்ளங்கையை வைத்து விட்டு எடுத்துப் பார்த்தால் கையில் நெய் மினுமினுக்க வேண்டும்.//
மிகவும் சரியே. இல்லாதுபோனால் கைகால் முறிவுக்கு மாவு கட்டு போடுவார்களே, அதில் உள்ள மாவு போல துளியும் ருசி இல்லாமல் போய்விடும்.
//அரிசி உப்புமா (அம்மா அந்தக் காலத்தில் வெணகலப் பானையில் செய்வார்கள்.தொட்டுக்கொள்ள கத்திரிக்காய் புளிக் கொத்ஸு.... ஆகா!)//
இது பிரமாதமாக இருக்கும். அதிலும் அந்த ஒட்டல் சூப்பராக இருக்கும். அதெல்லாம் எங்க அம்மா காலத்தோடு சரி. இப்போதுதான் வெங்கலப்பானையே உபயோகிப்பது இல்லையே. :(
//புளி உப்புமா (புளிமா,பச்சைமாப்பொடி உப்புமா என்று பல பெயர்கள் உண்டு)//
இவை இரண்டும் எனக்குப் பிடித்தமானவை. அதிலும் அந்த பச்சைமாப்பொடி உப்புமா சூப்பர் டேஸ்ட் ஆக இருக்கும். இதிலும் எண்ணெயை தாராளமாக விடணும். இதன் ஒட்டலும் அருமையாக இருக்கும்.
பசி வேளையில் .... பசியைக் கிளப்பும் பகிர்வுக்கு நன்றிகள்.
ரசித்தமைக்கு நன்றி சார்
நீக்குஉப்புமா பதிவுதான் என்றாலும்
பதிலளிநீக்குஇது ஒரு உப்புமா பதிவாக இல்லாமல்
தங்கள் கைவண்ணத்தால்
சுவாரஸ்யமான பதிவாக இருக்கிறது
வாழ்த்துக்களுடன்...
சுவையான உப்புமா?!
நீக்குநன்றி ரமணி
பதிலளிநீக்குரவா உப்புமா தவிர வேறு பல உப்புமாக்களும் உண்டு.
அரிசி உப்புமா(அம்மா அந்தக் காலத்தில் வெண்கலப் பானையில் செய்வார்கள். தொட்டுக்கொள்ள கத்திரிக்காய் புளிக் கொத்ஸு....ஆகா!)
புளி உப்புமா(புளிமா, பச்சைமாப்பொடி உப்புமா என்று பல பெயர்கள் உண்டு)
அவல் உப்புமா
சேமியா உப்புமா
ரொட்டி உப்புமா
ஜவ்வரிசி உப்புமா(சாபுதானா கிச்சடி)
இத்தனை உப்புமா இருக்கென இன்று தான் அறிகிறேன்.
ஒவ்வொன்றும் ஒரு சுவை
நீக்குநன்றி
ரசித்து ருசித்து படித்தேன். அந்தக் கால ஊர் திருவிழாக்களில்,ரேடியோ ச்ட் அபிமானிகள், ‘உப்புமா கிண்டி வையேண்டி ... பத்துமா உப்புமா கிண்டி வையேண்டி’ என்ற பாடலை அடிக்கடி ஒலி பரப்புவார்கள்.
பதிலளிநீக்குரவா உப்புமா அல்லது ரவா கிச்சடியுடன் ஜீனி சர்க்கரையை தொட்டுக் கொண்டு சாப்பிடுவது எனக்கு பிடிக்கும். கூடவே காரமான முட்டை ஆம்லேட் சாப்பிட்டு விட்டு, காபி சாப்பிடுவது நமது ஸ்டைல்.
நானும் சர்க்கரை/எலுமிச்சை ஊறுகாய்!
நீக்குநன்றி தமிழ் இளங்கோ சார்
உங்கள் "கை" ஜொலிக்கிறதே ஐயா.
பதிலளிநீக்குநெய்!
நீக்குநன்றி கில்லர்ஜி
ரவா உப்புமாவில் சிறிது புளிப்பு மோர் விட்டுச் செய்தால் கூடுதல் சுவை.
பதிலளிநீக்குஅரைத்த உப்புமா? தோசைக்கு அரைக்கும்போது அரிசி மாவை மட்டும் எடுத்துச் செய்வதோ?
//ரவா உப்புமாவில் சிறிது புளிப்பு மோர் விட்டுச் செய்தால் கூடுதல் சுவை.//
நீக்குஅப்படித்தான் செய்தேன்!
நன்றி ஸ்ரீராம்
த ம +1. அரிசி உப்புமா மாதிரியே புளி உப்புமா உண்டு. அது பயணத்துக்கு நல்லாருக்கும். அரிசிமாவை வைத்துச்செய்யும் புளிஉப்புமா உண்டு.
பதிலளிநீக்குஎனக்கு ஹோட்டல்களில் உப்புமா வாங்கிச் சாப்பிடுபவர்களைப் பார்த்தால் பரிதாபமாயிருக்கும் (இதைக்கூட செய்யமுடியாதான்னு)
வீடுகள்ல டக்குனு ரவை உப்புமா செய்து தலையில் கட்டிவிடுவதால்தான் பெரும்பாலானவர்களுக்கு உப்புமா பிடிப்பதில்லை.
இன்னொரு பாட்டு "உப்புமா கிண்டிவையடி.. அடி சுப்பம்மா மவளே தப்பேதும் இல்லாம உப்புமா கிண்டிவையடி" கேள்விப்பட்டிருக்கிறேன்.
புளி உப்புமாவும் சொல்லியிருக்கிறேனே!
நீக்குநன்றி நெல்லைத் தமிழன்
படிக்குபோதே நாவூறுது ஐயா சிலருக்கு பிடிக்காத உப்புமா எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுக்கு தொட்டுக்க வற்றக்குழம்பு இல்லன்னா மாங்காய் தொக்கு செம காம்பினேஷன் ..இப்போல்லாம் கோதுமை ரவை சாப்பிட முடியாததால் ஒன்லி அரிசி உப்புமா
பதிலளிநீக்குக்ளூடன் ஒவ்வாமையா?
நீக்குஅரிசி உப்புமாதான் பெஸ்ட்.
நன்றி ஏஞ்சலின்
ஆமாம் அதேதான்..
நீக்குவேறுவகை உப்புமாக்கள் பற்றி சொல்லும்போது, தினை அரிசி உப்புமாவை பற்றி சொல்லவில்லையே. அதுவும் அரிசி உப்புமா போல் சுவையாய் இருக்கும்.
பதிலளிநீக்குஅரிசி உப்புமாவில் அதுவும் அடக்கம்!
நீக்குநன்றி சார்
உப்புமா
பதிலளிநீக்குஇனிமை ஐயா
நன்றி ஜெயக்குமார்
நீக்குuppumaa redio nilaiya vitthuvaan maatiri ,veru onrum veettil illaatha pothu kaikoduppathu :)
பதிலளிநீக்குநன்றி பகவான் ஜி
நீக்குபெரம்பூர் அணி தோற்பற்கு உப்புமா காரணமா?
பதிலளிநீக்குரெண்டு உப்புமா வயித்திலே போய் திம்னு உக்காந்திடுச்சு போல்!'காரா'லயே வேகமா ஓட முடியலை!!
நீக்குநன்றி
துளசி: உப்புமா ஆஆஆஅ...ரவா உப்புமா மட்டுமே வேறு எதுவும் செய்ததில்லை....எனது பல நாள் உணவே அதுதான்! எனவே நான் அதைக் குற்றம் சொல்ல மாட்டேன்!!! என் வயிற்றை நிரப்பும் உணவைப் பழிக்கலாமா??!!! ஹஹஹ்
பதிலளிநீக்குகீதா: முழங்கை நெய் வழிவார உப்புமா போலருக்கே!!! எனக்குப் பிடிக்கும்....கொஞ்சம் புளிச்ச மோர் விட்டுச் செய்தாலும் நன்றாக இருக்கும் சேமியா உப்புமாவிலும் கூட புமோ விட்டுச் செய்யலாம். அவலிலும் செய்யலாம் புமோவில் ஊற வைத்து....
புளி உப்புமா என்பதை நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. அரிசி ரவையில் கூட புளி உப்புமா செய்வதுண்டு ஆனால் அரிசி மாவில் புளித் தண்ணீர் ஊற்றி கலந்து, மோர் மிளகாய் கடுகு, கறிவேப்பிலை தாளித்து நல்லெண்ணை/சமையல் எண்ணை விட்டு இந்த கலந்த மாவைப் போட்டு கொத்திக் கொத்திக் கிளற வேண்டும். இடையிடையே பெருங்காயம் ஊற வைத்த தண்ணீரைத் தெளித்து கிளற அது சிறு சிறு உருண்டைகளாக உசிலித்தது போல் வருமே அந்த உப்புமாவா? நீங்கள் சொல்லியிருக்கும் புளி உப்புமா??!!
கூழ் உப்ப்மா எனப்படும் மோர்க்களி யும் இதில் சேத்திதானே?!
ஆஹா அணி தோத்ததற்குக் காரணம் உப்புமாஆஆஆஆஅ!!! ஆஆஆஆஆ!! வா??!!!வயிறு மந்தமாகிவிட்டது போலும்!!!