தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜனவரி 31, 2012

நிர்வாண தேசம்-தொடர்ச்சி

காவலர்கள் அவனை மன்னன் முன் கொண்டு போய் நிறுத்தி விவரம் சொன்னார்கள்.

மன்னன் அவனை ஏற இறங்கப்பார்த்தான்,பின் கேட்டான்யார் நீ?இங்கு எப்படி வந்தாய்?”

அவன் சொன்னான்அரசே!நான் காம தேசத்தைச் சேர்ந்தவன்.காடெல்லாம் சுற்றி வரும்போது இந்தக் கோட்டையை கண்டேன்.சுற்றிப் பார்த்தால் கதவுகளே இல்லை.இப்படிப்பட்ட கோட்டைக்குள் என்ன இருக்கிறது எனப் பார்க்கும் ஆவலில் சிரமப்பட்டு கோட்டைச் சுவரில் ஏறி உள்ளே இறங்கினேன்.அதன் பின் நடந்ததெல்லாம் காவலர்கள் சொன்னதுதான்

அந்தச் சுவரில் ஏறி இறங்கினாய் என்றால்,நீ திறமைசாலிதான்.பார்க்கவும் வலுவானவனாகத் தெரிகிறாய்.நீ இந்த நாட்டுக்குள் நுழைந்தது தவறுதான்; மரணதண்டனைகுரியதுதான்.ஆனாலும் உன்னைக் கொல்ல மனம் வரவில்லை. உன்னை என் அடிமையாக்குகிறேன்.இன்று முதல் அரண்மனைப் பணிகளை நீ செய்ய ஆணையிடுகிறேன்.இவனை அழைத்துச்   சென்று தோட்டப் பணியில் விடுங்கள்.சில நாட்கள் அங்கே பணி புரியட்டும்”. மன்னன் ஆணையிட்டான்.

தொடர்ந்து சொன்னான்”இவன் தனியாளாக இருப்பினும் ,இவனுக்குக் கவசம் அணிவித்து விடுங்கள்.அதுதான் நல்லது.சாவியைத் தலைமை  தோட்டக் காரனிடம் கொடுத்து விடுங்கள்”

அவன் அழைத்துச் செல்லப்பட்டான்.செல்லும்போது அவன் காவலர்களைக் கேட்டான்அரசனுக்கு மணமாகவில்லையா?கவசம் அணியவில்லையே?”

காவலர்கள் அவனிடம் கோபமாகக் கூறினர்வாயை மூடிக்கொண்டு வா

தோட்டத்துக்குச் சென்ற பின் அங்கிருந்த தோட்டக்காரனிடம் அரசாணை பற்றி கூறி அவனை ஒப்படைத்தனர்.சாவியையும் கொடுத்தனர்.

தோட்டக்காரக் கிழவன் அவன் செய்ய வேண்டிய வேலைகளை எடுத்துக்கூறி வேலை செய்யப் பணித்தான்.

அவன் கோபத்தில் இருந்தான்,தனக்குக் கவசம் அணிவிக்கப் பட்டதில்.ஆனால் என்ன செய்ய முடியும்?

அன்று வேலையின்போது தோட்டக்காரனிடம் பேசிப் பல செய்திகளை அவன் தெரிந்துகொண்டான்.அரசர் மணமானவராயினும் அவர் கவசம் அணிவதில்லை என்பதும் ஒன்று.

மாலையில் ஒரு அழகிய பெண் அங்கு வந்தாள்.அவளும் நிர்வாணமாகத்தான் இருந்தாள்.ஆனால் கவசம் அணிந்திருந்தாள்.

தோட்டக்காரக் கிழவன் அவளைத் தலை குனிந்து வணங்கினான்.
”வணக்கம் ராணி அவர்களே”

புரிந்துகொண்ட அந்நியனும் அவளை வணங்கினான்.

அவள் அவனை நன்கு பார்த்தாள்”நீதான் அந்தப் புதியவனா?”முகத்தில் லேசாகப் புன்னகை ஓடியதாக அவனுக்குத் தோன்றியது.

”ஆம்,மகாராணி”


“எனக்கு இந்த ரோஜாக்கள் மிகவும் பிரியமானவை.இவற்றை நன்கு பராமரித்து வா

ராணி சென்று விட்டாள்.

அவன் தோட்டக்காரனிடம் கேட்டான்.”அரசன் கவசம் அணியவில்லை.அரசி மட்டும் ஏன் கவசம் அணிந்திருக்கிறார்?”

“அதெல்லாம் ராஜ காரியம்.நாம் பேசக் கூடாது.


அவன் மனதில் அரசி மட்டும் கவசம் அணிந்திருப்பது உறுத்தியது. அரசனுக்கு விதி விலக்கு உண்டென்றால் அரசிக்குக் கிடையாதா என யோசித்தான்.

அரசி தினமொரு முறை தோட்டத்துக்கு வந்து மலர்களை பார்த்துச் செல்வாள். அவளைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் இவளது கவசத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்தது.

சில நாட்களில் மக்களுடன் நன்கு பழகி விட்டான்.அவன் பல செய்திகள் அறிந்தவனாக இருப்பது மக்களை வியக்க வைத்தது.சிறிது சிறிதாக அரசன், அரசி கவசம் பற்றிப் பேச ஆரம்பித்தான்.ஏன் வேறுபாடு என்ற கேள்வியை எழுப்பினான்.அரசிக்கு விதிவிலக்குக் கிடையாதா எனக் கேட்டான்.மக்கள் மத்தியில் இந்த விவாதம் வளர்ந்து,ஒற்றர் மூலம் மந்திரியை அடைந்தது.

மந்திரி மன்னரிடம் சொன்னார்.

மன்னன் யோசித்தான்.ஒரு முடிவுக்கு வந்தான்.அரசவையைக் கூட்டினான்.

அரசவைக்கு அரசியும் வந்திருந்தாள்

மன்னன் எழுந்தான்.

”மக்கள் மத்தியில் ஒரு நியாயமான கேள்வி எழும்பியுள்ளது.எல்லா மக்களையும் போல் மன்னன் கவசம் அணிவதில்லை.ஆனால் அரசி மட்டும் அணிந்தி ருக்கிறார்.இது சரியா,என்று.இது சரியல்ல.எனவேதான் இந்த முடிவு”என்று சொல்லி விட்டு அரசியை அருகே அழைத்தான்.

”இன்று முதல் உங்கள் பிரதிநிதியான அரசனும் உங்களைப் போலவே கவசம் அணிவான்” என்று சொல்லி விட்டு,கவசம் ஒன்றை அரசியை அணிவிக்கச் சொல்லி அதன் சாவியை அவளிடம் அளித்தான்!

மக்களுக்கு எதுவோ,மன்னனுக்கும் அதுவே!


வயசானா இப்படித்தான்.!!

ஒரு வயதான தம்பதி படுக்கையில் படுத்திருந்தனர்.

கணவருக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றியது.

ஆனால் மனைவியோ பழங்கதைகள் பேச ஆரம்பித்தாள்.

”நாம் காதலித்த காலத்தில்,தனிமையில் இருக்கும்போது நீங்கள் என் கைகளைப் பிடிப்பீர்கள்”என்றாள்..

கணவர்,சரியென்று அவள் கைகளைப் பற்றிக் கொண்டார்.

அடுத்து அவள் சொன்னாள்”பின் என்னை முத்தமிடுவீர்கள்”

அவர் எரிச்சலுடன் அவள் கன்னத்தில் உதட்டை ஒற்றியெடுத்தார்.

அவள் சொன்னாள்”என் கழுத்தில் செல்லமாகக் கடிப்பீர்கள்”

அவர்படுக்கையிலிருந்து எழுந்து புறப்பட்டார்.

”எங்கே போகிறீர்கள்?” அவள் கேட்டாள்

அவர் சொன்னார்--------

போய் என் பல்செட்டை வைத்துக் கொண்டு வருகிறேன்!!!

திங்கள், ஜனவரி 30, 2012

என்னை முடக்கிப் போட்ட வின் 32

வெள்ளியன்று இரவு என் கணினி வின் 32 வைரஸ் தாக்குதலுக்கு ஆளானது!இன்று ,இப்போதுதான் பொறியாளர் வந்து சரி செய்து விட்டுப் போனார்.என்ன இருக்கிறது, என்ன போயிற்று எனத் தெரியாது.இரண்டு நாள் வலைப்பக்கமே வராமல் இருந்தது,இப்போது எழுதுவது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.இன்று இரவு ஏதாவது எழுத வேண்டும் என நினைக்கிறேன்.

பொறியாளர் பேசியவாறே பணியில் ஈடுபட்டிருந்தார்.அவர் பேசியதில் ஒரு துணிவான தந்தை பற்றிய  செய்தி கிடைத்தது.ஒரு பெரியவர்.அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்வர்.15 ஆண்டுகளுக்கு முன் மனைவியை இழந்தவர்.ஒரே பையன் .அவனைத் தானே வளர்த்து நன்கு படிக்க வைத்தார்.நன்கு செலவு செய்து திருமணம் செய்து வைத்தார்.வந்த மருமகள் சிறிது காலத்தில் வேலையை ஆரம்பித்தாள்.தங்களிருவருக்கும்,காலை,மதிய உணவு செய்து,சாப்பீட்டு எடுத்துக் கொண்ட பின் அவருக்கு எதுவும் வைப்பதில்லை.பெரியவரும் பக்கத்து ஓட்டலில் சென்று சாப்பிட்டு வந்தார்.

ஒரு நாள் மகன் அவரை அன்புடன் காரில் .தன் மனைவியுடன் அழைத்துச் என்றான்.. ஒரு முதியோர் இல்லத்துக்குச் சென்று சுற்றிக்காட்டி,பிடித்திருக்கிறதா எனக் கேட்டான்.அவர் தலையசைத்தார்.இனி நீங்கள் இங்குதான் தங்கப்போகிறீர்கள்.நான் மாதாமாதம் பணம் கட்டி விடுகிறேன் எனச் சொன்னான்.பின் அவர்கள் வீடு திரும்பினர்.

வீட்டில் அவர் மகனிடம் சொன்னார்”நீ உன் பணத்தில் வாங்கிய அனைத்தையும் தனியாக எடுத்து வை,ஏன் எதற்கு எனக் கேட்காமல் ”

மிகக்குறைந்த சாமான்களே இருந்தன. அவர் சொன்னார்”இதி நான் கட்டிய வீடு.நீ உன் சாமான்களை எடுத்துக் கொண்டு வெளியே போய்விடு.”

இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.திகைத்தனர்.பெரியவர் உறுதியாயிருந்தார்.அப்போது இரவு நேரம்.நாளை காலை போகிறேன் என மகன் சொல்ல அவர் மறுத்தார்.பின் அவன் புறப்படக் கார் சாவியை எடுத்தான்.
அவர் சொன்னார்”அது நான் வாங்கிக் கொடுத்தது.”
அவர்கள் வெளியேறினர்.

வைரஸ் வந்தது,கதை கிடைத்தது.
பாராட்டப்பட வேண்டிய பெரியவர்.

வெள்ளி, ஜனவரி 27, 2012

நிர்வாண தேசம்!


ஒரு நாடு இருந்தது.

அந்நாட்டு மக்கள் எவருமே உடை அணிவதில்லை

 ஆண் ,பெண் அனைவரும் எப்போதும் நிர்வாணமாகவே இருப்பர்.

இதற்கும் ஒரு கதை  உண்டு. 

ஒரு வியாபாரியால் முன்பு ஒரு அரசன் யாருக்கும் தெரியாத உடை என்று  சொல்லி ஏமாற்றப்பட்டான்.

அதன் பின் அந்த  மன்னன்,நிர்வாணமே சிறந்த உடை என்று பிரகடனம் செய்து மக்கள் அனைவரும் ,அரச குடும்பம் உட்பட ,நிர்வாணமாகவே இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தான்.

காலப்போக்கில் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன,.அரசியல் நிர்ணயச் சட்டத்திலேயே காலத்துக்கேற்ப  திருத்தங்கள் வரும் போது அரசாணையில் வரக்கூடாதா என்ன?

மணமான ஆணும் பெண்ணும் அவர்களது  பிறப்புறுப்பை மறைத்து ஒரு கவசம்  அணிவது கட்டாயமாக்கப்பட்டது.அதற்குப் பூட்டும் உண்டு!

இந்தச் சாவி கணவன் பூட்டுக்கான சாவி மனைவியிடமும்,மனைவி பூட்டுக்கான சாவி கணவனிடமும் இருக்கும்.இதன் காரணமாக இருவரும் எந்நேரமும் சேர்ந்தே இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.வேலையில் கூட இருவரும் ஒரே இடத்தில் பணி புரிவதற்காகச் சட்டம் இயற்றப் பட்டது.    ஒருவர் மற்றவருக்குத் துரோகம் செய்வதென்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத செயலாயிற்று. இருவரும் விரும்பினாலொழிய, உடலுறவு என்பது இயலாததாயிற்று.

அந்நாடு ஒரு அடர்ந்த கானகத்தின் நடுவே இருந்தது.மிகப்பெரிய கோட்டைச்  சுவர் இருந்தது.கதவு கிடையாது.மக்கள் யாரும் வெளி உலகத்தைப் பார்த்ததில்லை.வேண்டியன எல்லாம் உள்ளேயே கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

ஒருநாள் ஒரு அந்நியன் காட்டுக்குள் வந்தவன்,கோட்டைச் சுவரைப் பார்த்து,அதில் உள்ள.குழிகள்,கற்கள் மீது கால் வைத்து ஏறி ,அது போலவே உள்ளே இறங்கினான்.அப்போது இரவு நேரம்.ஒரு புதர் மறைவில் அவன் தூங்கிப் போனான்.

காலை குரல்கள் கேட்டு விழித்தான் . புதர் மறைவிலிருந்து பார்த்தான். அவன் கண்டதை அவனால் நம்ப முடியவில்லை.ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகச் சென்று கொண்டிருந்தனர்.அருகில் இருந்த வயலில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்தனர்.

இப்போது அவர்கள் முன் போய் நின்றால் தன் உடைகளைக் கண்டு அவர்கள் அந்நியன் எனத் தெரிந்து கொண்டு விடுவார்கள் பிரச்சினை யாகி விடும் எயோசித்தான்.தன் உடைகளைக் களைந்து விட்டு வெளியே வந்தான்.

அவர்கள் முன் நடந்தான்.

அவர்கள் பிறவியிலிருந்தே  நிர்வாணத்துக்குப் பழகிப் போனவர்கள். அனால் அவன் அப்படியல்ல.அந்தப் பெண்களின் நிர்வாணம் அவனையும்  மீறி வெளிப்படையான மாற்றத்தை அவனில் நிகழ்த்தியிருந்தது. அதைப் பார்த்த அவர்கள் அவன் அவர்களில் ஒருவன் அல்ல என்பதைத் தெரிந்துகொண்டனர்.சத்தம் போட்டனர்.அவன் தப்பிக்க முடியாதபடி ஆண்கள் அவனை வளைத்துப் பிடித்தனர்.

அவர்களில் மூத்ஒருவன் சொன்னான்”நாம் இவனை மன்னர் முன் இழுத்துச் செல்வோம்.இவனுக்கான தண்டனையை மன்னர் முடிவு செய்வார்”

அவன் இழுத்துச் செல்லப்பட்டான்.

(தொடரும்)

வியாழன், ஜனவரி 26, 2012

எதிர் வீட்டுப் பெண்ணும் நானும்!

சன்னல் ழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
எதிர் வீட்டில் குடியிருக்கும் பெண் ஸ்கூட்டியில் வந்து இறங்கி உள்ளே சென்றாள்.
அவளுக்கு வயது 30 இருக்கலாம்.
அழகான பெண்.
வாளிப்பான உடற்கட்டு.
இன்னும் திருமணமாகாதவள்.
அந்த வீட்டில் தனியாகத்தான் இருந்தாள்.
அவள் உறவினர் என்று யாரும் வந்து நான் பார்த்ததில்லை.

அவள் ஒரு செல்ல நாய் வளர்த்து வந்தாள்.என்னைக் கண்டால் வாலாட்டும்
அவள் காலை அலுவலகம் சென்று ,மாலை திரும்பி வரும் வரை அந்த நாயைப் பார்த்துக் கொள்வதற்காக ஒரு வேலைக்காரி வைத்திருந்தாள்.
அந்த நாயை ராஜா என்று பெயரிட்டு அழைத்து வந்தாள்.

அன்றும் அவள் வந்து சிறிது நேரத்தில் வேலைக்காரி போய் விட்டாள்.
நானும் என் ஆசனத்தில் சென்று அமர்ந்து விட்டேன்

சிறிதுநேரத்தில் அழைப்பு மணி ஒலித்தது.
கதவைத் திறந்தேன்.
அவள்!
புதிதாக ஒப்பனை செய்து அழகாக உடுத்தியிருந்தாள்.
வெளியில் செல்லத் தயாராக இருக்கிறாள் என்பது தெரிந்தது.
”வாங்க!” அழைத்தேன்.

உள்ளே வந்தாள்.”இன்றைக்கு எனக்கு ஒரு ஊக்கத்தொகை கிடைத்தது. எனவே நான் கொண்டாடும் மன நிலையில் உள்ளேன்.வெளியில் சென்று,கொஞ்சம் ஒயின்,பின் நல்ல உணவு.இரவு சினிமா என ஜாலியாகக்  கொண்டாட நினைக்கிறேன்.அதற்காகத்தான் உங்களைத் தேடி வந்தேன்.உங்களுக்கு ஏதாவது வேலையிருக்கிறதா?”

எனக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா?மனம் எங்கோ பறந்தது. எதையெதையோ நினைத்தது.

”ரொம்ப சந்தோஷம்.எனக்கு ஒரு வேலையும் இல்லை”  சொன்னேன்.

”அதற்குத்தான் உங்கள் உதவி வேண்டும்.நான் இல்லையென்றால் ராஜா கத்த ஆரம்பித்து விடுவான்.உங்களுடன் அவன் பழகியிருக்கிறான்.எனவே நான் வரும் வரை ராஜாவைக் கொஞ்சம் பார்த்துக் கொள்வீர்களா?”

இப்படி ஒரு பல்பா?!

புதன், ஜனவரி 25, 2012

பட்ஜெட் விமானப் பயணம்!

இப்போது  பல விமான நிறுவனங்கள் குறைந்த செலவுடைய சேவை நடத்துகின்றனர்.சாப்பாடு,பானங்கள் எதுவும் கிடையாது.இந்தக் காணொளியில்,  விமானத்தில் அப்படிப்பட்ட தனிப் பகுதியில் பயணம் செய்யும் ஒருவர் படும் துன்பங்களைப் பாருங்கள்!கொஞ்சம் நீளமான வீடியோதான்,ஆனால் விழுந்து விழுந்து சிரிப்பது உறுதி.பட்ஜட் சேவையில் இப்படி நடக்காமல் இருந்தால் சரி!

                      

சில சிந்தனைகள்!


நான் பணத்திடம் சொன்னேன்”நீ என்ன வெறும் காகிதம்தானே?”

அது சிரித்தது.பின் சொன்னது”உண்மைதான் .ஆனால் எனக்கான குப்பைத் தொட்டி எதுவுமேயில்லை!

------------------------------------------------------------------------------------------


நாக்குக்கு எலும்பில்லை.

ஆனால் அதனால் ஒரு இதயத்தை உடைக்க முடியும்!

உடைந்த ஒரு உள்ளத்தை சரி செய்ய ஒரு தூணாகவும் முடியும்!

----------------------------------------------------------------------------------------


ஒவ்வொரு இரவும் படுக்கச் செல்கையில்,எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை நாளை விழித்தெழுவோமென!

ஆயினும் நாளைக்கான திட்டங்களை இன்று வகுத்துக் கொண்டேதானிருக்கிறோம்!

அதுதான் நம்பிக்கை!

---------------------------------------------------------------------------------------------

மன்னிப்பென்பது என்ன?

ஒரு மலரைக் கசக்கும்போது அது ஒரு  நறுமணத்தைத் தருகிறதே,

அதுதான்!

--------------------------------------------------------------------------------------------

 நாளை என்பது தினம் வரும்.

ஆனால் இன்று என்பது இன்று மட்டுமே வரும்.

எனவே இன்றைய வேலையை இன்றே முடியுங்கள்!

நாளை நிம்மதியாக இருங்கள்!

-----------------------------------------------------------------------

 
நேற்றைய நிகழ்வுக்காய் வருந்தி

நாளைய நிகழ்வெண்ணிக் கவலுற்று

இன்றைய மகிழ்ச்சியைத்

தொலைக்கிறோம் நாம்!


நேற்று நிகழ்ந்ததை அழிக்க இயலாது

நாளை நிகழ்வதை நாளை எதிர்கொள்வோம்

இன்றேன் இழக்க வேண்டும் மகிழ்ச்சி?

--------------------------------------------------------------

செவ்வாய், ஜனவரி 24, 2012

செவிடர் தேசத்தில் ஒரு ஊமையனும்!

குருடன் மிக வசதியாக அந்நாட்டில் வாழத் தொடங்கினான்.

ஓரிரு முறை  அவன் கொடுத்த ஆலோசனை,குருட்டு அதிர்ஷ்டத்தால் நன்மையில் முடியவே அவன் செல்வாக்கு வளர்ந்தது.

இந்நிலையில் ஒரு நாள் அந்த நாட்டின் வாசலுக்கு ஒரு ஊமை வந்து சேர்ந்தான்.

அவனைக் கண்ட காவலர்கள்  அவனைக் கேட்டனர்”யார் நீ?இங்கு எப்படி வந்தாய்?”

அவன் எப்படி பதில் சொல்வான்?பேச இயலாதவன் ஆயிற்றே?

சைகையால் சொல்ல முயன்றான்.

காவலர்களுக்குப் புரியவில்லை.

“என்னாடா?கையைக் காலை ஆட்டுகிறாய்?பதில் சொல்.”

மீண்டும் அவன் செய்த சைகைகள் அவர்களுக்குப் புரியவில்லை.

“இவன் பதில் சொல்ல மறுக்கிறான்.திமிர் பிடித்தவன் போலத் தோன்றுகிறது.  இவனை மன்னர்  முன் கொண்டு நிறுத்துவோம்.”

அவனை இழுத்துச் சென்றனர்.மன்னன் முன் நிறுத்திச் செய்தி சொன்னார்கள்.

மன்னன்  கேள்விகளும் பயனளிக்கவில்லை.அதற்குள்,குருடனை அவையில் பார்த்த அவன்,கையைக் குருடன் பக்கம் நீட்டி ஏதோ சைகைகள் செய்தான்.

மன்னன் குருடனிடம் சொன்னான்.

”அறிஞரே! அவன் பதில் எதுவும் சொல்ல மறுக்கிறான்.உங்களைக் காட்டி ஏதோ சைகை செய்கிறன்.புரியவில்லை”

குருடனுக்குப் பொறிதட்டியது போல்  விளங்கியது.”வந்திருப்பவன் என் பழைய நண்பன்.சுற்றித்திரிந்த காலத்தில் வழிகாட்டியவன்.அவனைப் பிரிந்துதான் இங்கு வந்தேன்.”நினைத்துக்கொண்டான்

யோசித்தான்”இப்போது இவனைத் தெரிந்தது போல் காட்டிகொண்டால் எந்தப்பயனும் ஏற்படப் போவதில்லை.மாறாக ஏதாவது பாதகம் வரலாம். என்ன செய்யலாம்?”

முடிவுக்கு வந்தான்

“மன்னா!எனக்கு விளங்கி விட்டது .இவன் ஒரு பாவி. சபிக்கப்பட்டவன். ஆனால் அப்போதே இவனுக்கு மோட்சம் இங்குதான் என்று தீர்மானிக்கப் பட்டு விட்டது.நாம் இவனுக்குச் செய்யக் கூடிய நன்மை. இவனை மேலும் அல்லல் பட விடாமல் முக்தியளிப்பதுதான் கொற்றவை முன் இவன் பலியிடப்பட வேண்டும்.”

ஊமையன் உரத்த குரலில் கத்த ஆரம்பித்தான். மன்னன் அவனை இழுத்துச் சென்று பலியிட ஆணையிட்டான்.அவன் இழுத்துச் செல்லப்பட்டான்,  கதறியபடியே.

குருடன் நிம்மதியாக மூச்சு விட்டான்.அகக்கண்ணும் தொலைந்தவனாய்!
 

திங்கள், ஜனவரி 23, 2012

செவிடர் தேசத்தில் ஒரு குருடன் !

ஒரு  நாடு இருந்தது.

அதன் மக்கள் அனைவரும்,மன்னன் உட்பட,காது கேட்கும் திறன் அற்றவர்களாக  இருந்தனர்.

இதற்கும் ஒரு காரணம் உண்டு.

ஒரு காலத்தில் அவர்களுக்கும் காது கேட்டுக் கொண்டுதான் இருந்தது.

ஆனால் ஒரு மன்னன் செவிடனாக இருந்தான்.

எனவே அவன் ஒரு ஆணை பிறப்பித்தான்,இந்த நாட்டு மக்கள் யாவரும் செவிடாக்கப் பட வேண்டும் என்று.

அரசாணையின்படி மக்கள் அனைவரின் செவிப்பறையும் கிழிக்கப் பட்டு அனைவரும் செவிடர்கள் ஆயினர்.

பிறக்கும் குழந்தைகளுக்கும் பிறந்த உடனே செவிப்பறை பழுதாக்கப் பட்டது.

நாளடைவில் இது ஒரு சடங்காகவே மாறி விட்டது.குழந்தை பிறந்தவுடன்,அரச குடும்பத்திலும்கூட, கொற்றவை கோவிலில் செவிப்பறை கிழிக்கும் சடங்கு நடத்தினால்தான் குழந்தை நன்கு வளரும் என்ற ஒரு நம்பிக்கை உருவானது. காது என்ற உறுப்பின் தேவை என்ன என்பதே தெரியாமல் போயிற்று.கேட்பது என்ற சொல் பொருளற்றதாகி விட்டது.மற்றவர் வாயசைவின் மூலம் பேசுவதைப்   புரிந்து கொள்ளும் திறன் வளர்ந்தது.யாரைப் பற்றியாவது அவர் அறியாமல் பேச எண்ணினால் அவர் முதுகுக்குப் பின் பேசும் வழக்கம் தொடங்கியது.

இந்த நாடு மலைகள் சூழ்ந்த ஒரு பள்ளத்தாக்கில் இருந்ததால் இது பற்றி யாரும் அறிந்திருக்க வில்லை.புதியவர் யாரும் வருவதில்லை.

இந்நிலையில் ஒரு நாள் வழிதவறிய குருடன் ஒருவன் அந்நாட்டின் வாயிலை வந்தடைந்தான்.

காவலர்கள் அவனைத் தடுத்து நிறுத்தி  அவனைக் கேட்டனர்யார் நீ?இங்கு எப்படி வந்தாய்?”

அவன் சொன்னான்நான் பார்வையற்றவன்.நானும் என் நண்பனும் அலைந்து திரிந்து கொண்டிருந்தோம்.ஆனால் எப்படியோ பிரிந்து விட்டோம்.நான் வழிதெரியாதவனாக இங்கு வந்து சேர்ந்தேன்,நீங்கள் யார்?இது என்ன இடம்?”

அவன் சொன்னதைக்கேட்டு ஆச்சரியப்பட்ட காவலர்கள் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டனர்.”இது கூர்மதி தேசம்.நாங்கள் கோட்டைக் காவலர்கள். உனக்குப் பார்வையில்லை என்றாய்.ஆனால் நாங்கள் பேசுவதை நீ எப்படிப் புரிந்து கொண்டாய்?”

குருடன் இப்போது ஆச்சரியப்பட்டான்,”பார்வைக்கும் கேட்பதற்கும் என்ன சம்பந்தம்?”

சொன்னான்ஐயா! நீங்கள் பேசுவதை என்னால் கேட்க முடியுமே!”

காவலர்களுக்குப் புரியவில்லை.”என்ன சொல்கிறான்?கேட்பதா? அப்படியென்றால்? இவன் ஏதோ விசேட சக்தி படைத்தவன்.”

அவனை மன்னரிடம் அழைத்துப் போய் செய்தி தெரிவித்தனர்.மன்னன் அவனுடன் பேசி அவன் பார்வையற்றாவனாக இருப்பினும் தான் பேசுவதைப் புரிந்து கொள்கிறான் என்பதை உறுதி செய்து கொண்டான். பின் அமைச்சரிடம் கேட்டான்இது எவ்வாறு சாத்தியம் அமைச்சரே?”

அமைச்சர் சொன்னார்மன்னா!அவர் தெய்வ அருள் பெற்ற மகானாக இருக்க வேண்டும்.எனவேதான் அந்த சக்தி அவரிடம் இருக்கிறது இவரை நம் நாட்டிலேயே  தங்க வைப்பது நன்மை பயக்கும்

மன்னன் குருடனிடம் சொன்னான் நீங்கள் இங்கேயே தங்க வேண்டு கிறேன்உங்களுக்கென  மாளிகை,பணியாட்கள் எல்லாம் தந்து விடுகிறேன். அவ்வப் போது எனக்கு ஆலோசனை கூறுங்கள்

குருடனுக்கு மகிழ்ச்சிஇதுதான் குருட்டு அதிர்ஷ்டம் என்பதோ? ஆலோசனை என்கிறாரே?என்ன செய்வது? சமாளித்துக் கொள்ளலாம்

குருடன் எல்லா வசதிகளுடனும் அங்கேயே தங்கினான்.

டிஸ்கி:-இது எந்த தேசம்,என்ன சொல்ல வருகிறீர்கள்,ஏதாவது உள்குத்து, வெளிக்குத்தா என்றெல்லாம் கேட்காதீர்கள்.எனக்குத் தெரியாது.இது திடீரென்று மனதில் தோன்றிய ஒரு கரு. அவ்வளவே !

ஞாயிறு, ஜனவரி 22, 2012

ஹாலிடே!ஜாலிடே!!-மேரா பாரத் மஹான்!

                                        
                               இங்கு கோபி!                                               இங்கு கோபிகா!
                                                                       ஹா,ஹா!

                                       
                             நாளைக்கும்  சேர்த்து இன்றைக்கே முடித்து விடுங்கள்!

                                                
                                                 மத நல்லிணக்கம் இதுதான்!

                                           
                                                            சூடான பசும்பால்!

                                               
                                         
                                                      பரந்து விரிந்த மார்பன்!

சனி, ஜனவரி 21, 2012

குழந்தை பீர் தெரியுமா?!

பீர் குடிக்கும் பழக்கமுள்ளவர்களுக்குக்கு, ’பீர் ’தெரியும்.ஆனால் குழந்தை பீர் தெரியுமா?குடித்துப் பார்க்க வேண்டுமா? பஞ்சாபுக்குத்தான் போக வேண்டும்!கீழே உள்ள விளம்பரப் பலகையைப் பாருங்கள்!

-----------------------------------  ---------------------------------  ------------------------------------     
 பஞ்சாப்  பற்றிப் பேசிம்போது ஒரு சர்தார்ஜி ஜோக் சொல்லாமல் இருக்க முடியுமா? 

         
             அமர் சிங் ஒரு புதிய ஊரில் பாருக்குச் சென்றார்.அந்த ஊர் பாரில் புதியவர்கள் யாரும் வந்தால் அங்கிருப்பவர்கள் ஏதாவது தொல்லை கொடுப்பது  வழக்கம்.

அமர்சிங் குடித்து முடித்த பின் வெளியே சென்றார்.அவரது மோட்டார் சைக்கிளைக் காணவில்லை.

மீண்டும் உள்ளே வந்தார்.சத்தமாகக் கடுமையாகச் சொன்னார் ”நான் இன்னும் ஒரு கோப்பை அருந்தப் போகிறேன்.அதற்குள் என் பைக் வர வேண்டும்.இல்லையெனில் நான் பாட்டியாலாவில் என்ன செய்தேனோ அதைச் செய்து விடுவேன்”

அங்கிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அமர் சிங் குடித்து முடித்து விட்டு வெளியே சென்று பார்த்தார். பைக் நிறுத்தப்பட்டு இருந்தது..அதை உயிர்ப்பித்துப் புறப்படத் தயாரானார்.

அவர் பின்னாலேயே வெளியெ வந்த பார் மேலாளர் கேட்டார் ”சார்.பாட்டியாலாவில் என்ன செய்தீர்கள்?”

அமர்சிங் சொன்னார்”நடந்தே வீடு திரும்பினேன்!!