ஒரு செங்கல் சூளை.
சுட்டெரிக்கும் வெயில்.
அங்கு வேலை செய்து கொண்டிருக்கும்
ஒரு பெண்.
எட்டு மணிநேர வேலை ஒரு நாளைக்கு.
தினக்கூலி ரூ.200/-
அந்தப் பெண்ணுடன் அவள் பெற்றோரும்
அங்கு வேலை செய்கின்றனர்.
அந்தச் சூளை அவள் மாமாவுக்குச்
சொந்தமானதுதான்.
ஆனால் வேலை செய்யாமல் காசு வருமா?
ஒரு நாளைக்கு அனைவருக்கும் சேர்த்து
ரூ.500/- வருமானம்.
அதில்தான் ஆறு பேர் கொண்ட அந்தக்
குடும்பம் வாழ்க்கையை
நடத்தவேண்டும்.
இது சாதாரணமாக நடப்பதுதானே?
கொஞ்சம் அருகில் நெருங்கிப்
பார்ப்போம்.
இந்தப் பெண்ணை எங்கோ
பார்த்தமாதிரித் தோன்றுகிறதே!
இவள் புகைப்படத்தை எப்போதோ
பத்திரிகைகளில் பார்த்திருக்கிறோமோ?
ஆம்!
இவள்தான்,தோஹாவில் 2006 இல் நடந்த
ஆசிய விளையாட்டில்,800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்ற வெள்ளி மகள்.
சாந்தி!
போட்டிக்குப் பின் நடந்த பாலினச் சோதனையில் பெண் இல்லை என்று உரைக்கப்பட்டுப் பதக்கத்தைப் பறி கொடுத்தவள்.
போட்டிகளில் மேற்கொண்டு பங்கேற்க முடியாதவாறு இந்திய தடதள சம்மேளத்தினால் தடை
விதிக்கப் பட்டவள்.
நமது நாட்டால் கைவிடப்பட்டவள்!
இன்று
இந்த நிலையில்!
தென் ஆப்பிரிக்கா.
நடக்கப்போகும் லண்டன் ஒலிம்பிக்ஸில்
அந்நாட்டு அணிக்குத் தலைமைதாங்கி அணிவகுப்பில் கொடி பிடித்து நடக்கப்போகும் பெண்.
21 வயதான செமென்யா.அப்படியென்ன
விசேஷம்.?
2009 இல் பெர்லினில் நடந்த உலக தடதளப்
போட்டிகளில் நடுந்தொலைவு ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றவள்.
சாந்தியைப் போன்றே பின் நடந்த பாலினச் சோதனையில் தவறியவள்.பதக்கம்
பறிக்கப்பட்டவள்.உலக அமைப்பால் தடை விதிக்கப்பட்டவள்.
ஆனாள் அவள் நல்லூழ்,அவள் இந்தியாவில்
பிறக்கவில்லை.
தென் ஆப்பிரிக்கா,செமென்யாவின்
கௌரவத்தையும்,உலக விளையாட்
டரங்கில் அவள் இடத்தையும் பெறுவதற்காகப் போராடியது.
அதன் பயன் தடை நீக்கப்
பட்டது..
இன்று ஒலிம்பிக்கில் கொடியேந்தி
பீடு நடை போடப் போகிறாள்.
இங்கு சாந்தி செங்கல் சூளையில் வெந்து கொண்டிருக்கிறாள்!
இதுதான் இந்தியா!
நெஞ்சு பொறுக்குதில்லையே!
செய்தி: டைம்ஸ் ஆஃப் இந்தியா,24-07-2012
செய்தி: டைம்ஸ் ஆஃப் இந்தியா,24-07-2012
வேதனைக்குரிய விஷயம்...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி சார் ... (த.ம. 2)
உன்மை
நீக்குநன்றி தனபாலன்
முழுக்க முழுக்க அரசியல் செய்யும் அரசியல்வாதிகளை இல்லை வியாதிகளை சுட்டு விடலாம் என்று தோன்றுகிறது... மாற்றம் வேண்டும் எல்லா நிலைகளிலும்
பதிலளிநீக்குமிகச்சரி
நீக்குநன்றி சீனு
நானும் அந்த செய்தியைப் படித்தேன். என்ன செய்ய? நமது ஆற்றாமையை இவ்வாறுதான் வெளிபடுத்த இயலும். பதிவுக்கு நன்றி!
பதிலளிநீக்குவேறென்ன செய்ய?
நீக்குநன்றி.
வேதனை....!எம்மவர் கதி ஏனோ இப்படியாய் தொடர்கிறது!
பதிலளிநீக்குஇது ஒரு முடிவில்ல தொடர் கதை
நீக்குநன்றி அதிசயா
நீக்குஅதெல்லாம் கவனிக்க நமக்கெது நேரம்,சனாதிபதி பதவியேற்பு விழாவுக்கு சீட் ஒதுக்கவே இங்க நேரம் பத்த மாட்டேன்குது
பதிலளிநீக்குஅப்படிச் சொல்லுங்க.
நீக்குநன்ரி கோகுல்
ம்ம்ம்... எந்த ஒரு சாதனைக்குப் பின்னும் அரசாங்கத்தின் பின்புலம் இருத்தல் நலம். நம் நாட்டு அரசாங்கங்கள் என்றுமே விளையாட்டில் அக்கறை செலுத்தியதில்லை என்பது துர்ப்பாக்கியம். கொதிக்கும் மனதை நாம் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லி தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.
பதிலளிநீக்குசரிதான்
நீக்குநன்றி
மிகவும் கொடுமையான மற்றும் வேதனையான விஷயம். கிரிக்கெட் ஒன்றுக்குத்தான் இந்தியாவில் மதிப்பு. ராகுல் ஷர்மா பற்றி சமீபத்தில் வந்த செய்தியும் பி சி சி ஐ அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காதது கவனிக்கத் தக்கது.
பதிலளிநீக்குகிரிக்கெட் பைத்டியம்பிடித்துப் பரம்பரை ஹாக்கியையும் கோட்டை விட்டாச்சு.
நீக்குநன்றி ஸ்ரீராம்
வருந்தத்தக்க விசயம் தான்.
பதிலளிநீக்குஇதையெல்லாம் கவனிக்க எங்கங்க நேரம் நம்ம ஆட்சியர்களுக்கு.
அதானே!
நீக்குநன்றி.
இதுபோன்ற கொடுமைகள் இங்கு தான் நடக்கும்..
பதிலளிநீக்குவேதனைக்குரியது...
வேதனைதான்
நீக்குநன்றி சௌந்தர்
அருமை வேதனையாக இருக்கிறது பெண்ணாக பிறந்தவளையே
பதிலளிநீக்குபெண் இல்லை எனறு கூறி அவளை சாக்கடையில் தள்ளிய இந்த
கேடு கெட்ட நாட்டில் சாதிக்க துடிக்கும் பல பாலியல் சிறுபான்மையினரின் நிலைதான் என்ன??? கஷ்டமாக உள்ளது அங்கிள்.....
காலம் மாற வேண்டுவோம்.
நீக்குநன்றி எஸ்தர்
உண்மையில் நெஞ்சு பொறுக்குது இல்லையே ///
பதிலளிநீக்குtamil manam 12
ஆம் ரியாஸ்
நீக்குநன்றி
நல்ல நிஜமான பதிவு நண்பரே.
பதிலளிநீக்குசமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க நண்பரே..
http://dohatalkies.blogspot.com/2012/07/schindlers-list_1072.html
நன்றி.
நீக்குஅவசியம் வருகிறேன்
கேவலம் கேவலம்!
பதிலளிநீக்கு(TM 14)
உண்மை
நீக்குநன்றி.
Only goes to show that we dont honor achievers be it sportsperson or be it war heros. Only few exceptions like Sachin. There have been many reported instances of parents of war heroes who have faced immense struggles to get what is their due . Bureaucratic apathy and arrogance.Some of the news items make one wonder whither India ... Vasudevan
பதிலளிநீக்குabsolutely right.
நீக்குநன்றி வாசு
வேதனையான விஷயம். நம் நாட்டில் அரசியல் பலமோ, பண பலமோ இல்லாது எவ்வித செயலும் நடக்காது.... கொடுமை.
பதிலளிநீக்குசரிதான். நன்றி.
நீக்குஆம் ஐயா!
பதிலளிநீக்குநன்றி
kevalamum
பதிலளிநீக்குkodumaiyum!
வேதனி விசயம் ஐயா அண்மையில் ஈட்டி வில் எய்தலில் தங்கப் பதக்கம் வென்ற ஒரு இந்திய வீராங்கனை குடும்ப செலவுக்குகாக தனது வில்லு மற்றும் பதக்கங்களை விற்றதாக பத்திரிகைகளில் படித்தேன்..
பதிலளிநீக்குஇந்தியாவில் சரியான முறையில் வீரர்களை ஊக்கப் படுத்த எவருமில்லை போல் தோன்றுகிறது....
This is a really unhappiness one.Even our medias such as papers weekly magazines ,tv ,movies are NOT interested to lift up this sort of talented people.Totally our manpower was exploited by the evils of the politicians.God only save our country.
பதிலளிநீக்குச்ச நினைத்து பார்க்கவே கொடுமையாக இருக்கிறது. ஏன் இந்தியா இப்படி இருக்கிறது. எப்போது மாறும் இந்த நிலை???
பதிலளிநீக்கு