ஆண்
1.காரை எடுத்துக் கொண்டு ஏடிஎம்முக்குச் செல்கிறார்
2.மெசினில் அட்டையைச் செருகுகிறார்
3.பின்எண்ணையும்,தொகையையும் அழுத்துகிறார்
4.பணத்தையும் ரசீதையும் எடுத்துக் கொண்டு புறப்படுகிறார்
பெண்
1.காரில் ஏடிஎம்முக்குப் போகிறார்
2.கைப்பையைத் துழாவி அட்டை அகப்படுகிறதா எனப்
பார்க்கிறார்
3. கையில் கண்ணாடியும் அகப்படுகிறது.ஒப்பனையைச்
சரி செய்து கொள்கிறார்,தலை முடியைத் திருத்திக் கொள்கிறார்.
4.கிட்டத்தட்ட இரண்டு பேர் மேல் மோத இருக்கிறார்.
5. ஏடிஎம் அருகில் காரை நிறுத்த முயல்கிறார்.
6.சரியாக வரவில்லை
7.இரண்டாவது முயற்சி வெற்றிகரம்
8.கைப்பையிலிருந்து அட்டையை எடுத்துச் செருகுகிறார்
9.ஏடிஎம் ஏற்க மறுக்கிறது
10.பேன் அட்டையைப் பையில் வைத்து விட்டு.ஏடிஎம்
அட்டையை எடுத்துச் செருகுகிறார்
11,பின் எண் எழுதி வைத்திருந்த சீட்டு பையில்
இல்லை
12.கணவருக்குப் போன் செய்து பின் எண் கேட்கிறார்
13.அழுத்துகிறார்
14 எவ்வளவு எடுப்பது என்று மீண்டும் யோசிக்கிறார்.
15.தொகையை அழுத்துகிறார்
16.பணத்தை எடுத்துக் கொண்டு புறப்படுகிறார்
17.கார் அருகே வரும்போது கார் சாவி கையில்
இல்லை என்பது தெரிந்து மீண்டும் ஏடிஎம் போய் சாவியை எடுத்து வருகிறார்.
18.காரில் புறப்பட்டதும் ரசீது எடுக்காதது
நினைவுக்கு வருகிறது
19.போய் எடுத்து வருகிறார்.
20.கார் கண்ணாடியில் பார்த்து ஒப்பனையைச் சரி
செய்து கொள்கிறார்.
21.கடைக்குப் போய் எல்லாம் செலவான பின் மீண்டும்
நம்பர் 1!
டிஸ்கி:சகோதரிகள் கோபித்துக் கொள்ள வேண்டாம்.இது நடப்பை ஒட்டி வராத நகைச்சுவை என்பதே என் ஆணித்தரமான நம்பிக்கை.
(இந்த டிஸ்கி எழுதலேன்னா இன்று இரவு சோறு கிடைக்காது!)