தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஜூன் 07, 2015

ஹாலிடே ஜாலிடே!

அப்புவும் குப்புவும்  ஒரு விடுமுறை நாளில் ஏரியில் மீன் பிடிக்க  வாடகைப்  படகொன்று எடுத்துப் புறப்பட்டனர்

ஒரு மணிநேரம் மீன் பிடித்ததில் ஏராளமான மீன்கள் கிடைத்தன.

இருவருக்கும் அளவில்லா மகிழ்ச்சி.

”அடுத்த வாரமும் மீன் பிடிக்க வரலாம்” என்றான் அப்பு

“அடடா!நிறைய மீன் கிடைத்த இடத்திற்கு அடுத்த வாரமும் போகலாம் என்றால்,ஏரியில் அதற்காகக் குறி ஒன்றும் இடாமல் வந்து விட்டோமே” என்று வருத்தப்பட்டான் குப்பு.

அப்பு சொன்னான்”கவலைப்படாதே.நான் புத்திசாலித்தனமாக் அந்த இடத்தில் இருக்கும் போதே நம் படகில் X குறியிட்டு விட்டேன்”

குப்பு மேலும் கவலையுடன் சொன்னான்”அடுத்த வாரமும் X  குறியிட்ட இதே படகு கிடைக்க வேண்டுமே!”32 கருத்துகள்:


 1. இருவரும் பரமானந்த குருவின் சிஷ்யர்களோ? இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
 2. ஹாலிடே ஜாலிடே எங்களுக்கு நகைச்சுவை டே.....நன்றிகள் ஐயா

  தம 2

  பதிலளிநீக்கு
 3. ஸூப்பர் அப்பு ஸூப்பர் குப்பு
  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
 4. புத்திசாலிகளை ரசித்தேன் ஐயா
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
 5. அப்பு குப்பு விலாசம் கொடுங்கள் ,அவர்களுடன் நானும் மீன் பிடிக்கப் போகணும் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னைக்கும் மீன் பிடிக்கப் போயிருக்காங்க,அதே படகுல.வந்ததும் வாங்கித்தறேன்.
   நன்றி

   நீக்கு
 6. நல்ல புத்திசாலிகள்.பரமானந்த குருவிடம் பாடம் படிச்சிருப்பாங்களோ?

  பதிலளிநீக்கு
 7. இந்த அறிவாளிகள் எப்படி மீன் பிடித்தாரகள்...??????

  பதிலளிநீக்கு
 8. ஒரு படத்தில் பாக்கியராஜ் சொல்லுவார் - 'நம்ம சிஷ்யனுங்களும் நம்ம மாதிரியே இருக்காங்க'.....

  பதிலளிநீக்கு
 9. குப்பென சிரிக்க வைத்துவிட்டார்கள் அப்புவும் குப்புவும் ! பரமார்த்த குருவின் இன்றைய சீடர்கள் ?!!!

  நன்றி
  சாமானியன்

  எனது புதிய பதிவு : " பொறுமை என்னும் புதையல் ! "
  http://saamaaniyan.blogspot.fr/2015/06/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

  பதிலளிநீக்கு