தொடரும் தோழர்கள்

வியாழன், ஜூன் 18, 2015

நான்,.கண சிற்சபேசன்,,கலீல் கிப்ரான்!வங்கியில் வாடிக்கையாளர் சந்திப்பு என்பது ஒவ்வோராண்டும் நடைபெறும்.

ஓராண்டு சந்திப்பின்போது வரவுற்புரை நிகழ்த்திய நான் ஓரிரு குறள்களை மேற்கோள் 

காட்டிப் பேசினேன்.பேச்சின் இடையே ஒரு ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் என்ன 

சொல்வது என்று எனக்கு உடன் தெரியவில்லை .அந்தச் சொல்பாசிடிவ் திங்கிங்'.அன்று

 தலைமை தாங்கிச் சிறப்புரை ஆற்ற வந்திருந்தவர் திரு.கண.சிற்சபேசன் அவர்கள் எனவே 

ஆங்கிலத்தில் சொல்லி விட்டு அதற்கு இணையான தமிழ்ச் சொல் என்ன என்பதைத் தலைவர் 

ஐயா அவர்கள்தான் சொல்ல வேண்டும் எனக் கூறினேன்.அவர் தயங்காது சொன்னார்ஆக்க

பூர்வமான சிந்தனை

ஆம்! சிந்தனை எப்போதும் ஆக்கபூர்வமானதாகத்தான் இருத்தல் வேண்டும்,


கூட்டம் முடிந்தபின் திரு .கண சிற்சபேசனுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது .இலக்கி யத்தில் ஈடுபாடு உண்டோ என அவர் கேட்க நான் ஆம் என்றுரைத்தேன் சிறிது நேர உரை யாடலுக்குப் பின்அவர் கேட்டார்”கிப்ரான் படித்திருக்கிறீர்களா” என்று.படித்ததில்லை என்று உண்மையைச் சொன்னேன்.

படித்துப் பாருங்கள் என்றார்

பின்னர் கொஞ்ச ம்படித்தேன்.

இன்று கிப்ரானின் ஆக்கம் ஒன்றைத் தமிழாக்கித் தந்திருக்கிறேன்.

படித்துப் பாருங்கள்


புதிதாய்ப் பெய்த பனிபோல்
 வெண்மையாக இருந்த
காகிதம் ஒன்று சொன்னது
நான் தூய்மையாய்ப் படைக்கப்பட்டேன்
தூய்மையாகவே இருப்பேன் இறுதி வரை
எரிந்து வெண்சாம்பலாக உதிர்ந்தாலும்சரியே
இருள் என்னைத் தொட விடமாட்டேன்
கறை என்னை நெருங்க விட மாட்டேன்!

காகிதம் சொன்னதை கேட்ட
மைப்புட்டி நகைத்தது தன் கருத்த மனதுக்குள்
ஆனாலும் காகிதத்தை நெருங்கும்
துணிவதற்கு வரவில்லை

பெட்டியில் இருந்த பல வண்ணப் பென்சில்கள்
கேட்டன காகிதத்தின் சொற்களை
அவையும் அருகிலும் வராது கிடந்தன

அவ் வெள்ளைக் காகிதம் 
தூய்மையாய்க் கறைபடாமல்
இருந்தது என்றென்றும்
ஆம்!“தூய்மையாய்,கறைபடாமல்
ஆனால்
வெறுமையாய்!”

வாவ்!எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார் பாருங்கள்.படைப்பு ஒவ்வொன்றுக்கும் ஒரு நோக்கம் உண்டு.குறிக்கோள் உண்டு.அதைச் செய்யாது இறுமாப்புடன் இருந்தால்,யாருக்கும் பயனில்லை,தான் உள்பட!

38 கருத்துகள்:

 1. கலீல் ஜிப்ரானின் கவிதை அருமை.அர்த்தம் பொதிந்த கவிதை

  பதிலளிநீக்கு
 2. அருமை... ஆணவம் இருந்தால் எதுவுமே பயனில்லை...

  பதிலளிநீக்கு
 3. நேரம் கிடைப்பின் : http://dindiguldhanabalan.blogspot.com/2015/06/Rules.html

  பதிலளிநீக்கு
 4. 'பாசிடிவ் திங்கிங்' என்பதற்கு நேர்மறைச் சிந்தனை என்றும் 'நெகடிவ் திங்கிக்' என்பதற்கு எதிர்மறைச் சிந்தனை என்றும் பயன்படுத்துவதுண்டு. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜம்புலிங்கம் அவர்கள் சொல்வது பொருந்துகிறது.
   ஆக்கச் சிந்தனை பொருந்தும் என்றாலும் அது constructive thoughtsகளைக் குறிக்கும். (ஆக்கபூர்வமான என்பது தமிழே அல்ல :-)

   நீக்கு
 5. // படைப்பு ஒவ்வொன்றுக்கும் ஒரு நோக்கம் உண்டு.குறிக்கோள் உண்டு.அதைச் செய்யாது இறுமாப்புடன் இருந்தால்,யாருக்கும் பயனில்லை,தான் உள்பட!//

  முத்தாய்ப்பான முத்தான கருத்து. இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
 6. நல்ல கவிதை...மேலும் பதியுங்கள் ஐயா....
  தம +1

  பதிலளிநீக்கு
 7. படித்ததோடு இல்லாமல் பகிர்ந்தமைக்கு நன்றிங்க ஐயா.

  பதிலளிநீக்கு
 8. கலில் ஜிப்ரான் கவிதைகளை நானும் படித்தது இல்லை! படிக்க முயற்சிக்கிறேன்! இணையத்தில் தேடிப்பார்க்கிறேன்! அருமையான கவிதை! சிறப்பான மொழிபெயர்ப்பு! நன்றி!

  பதிலளிநீக்கு
 9. அர்த்தம் அருமை ஐயா..
  தமிழ் மணம் 9

  பதிலளிநீக்கு
 10. அருமை! சிறப்பான மொழிபெயர்ப்பு!

  பதிலளிநீக்கு
 11. அற்புதமாக கவிதை ஐயா
  வாங்கி வாசிக்கிறேன்
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
 12. கிப்ரன் அருமை.. அதை நீங்கள் சொல்லிய விதமும் அருமை.

  God Bless You

  பதிலளிநீக்கு
 13. படைப்பு ஒவ்வொன்றுக்கும் ஒரு நோக்கம் உண்டு,இதுவல்லவோ ஆக்கப் பூர்வ சிந்தனை :)

  பதிலளிநீக்கு
 14. அழகான கவிதை. மிகவும் கவர்ந்தது.
  த ம 13

  பதிலளிநீக்கு
 15. ஒவ்வொன்றுக்கும் ஒரு நோக்கம் உண்டு.குறிக்கோள் உண்டு.அதைச் செய்யாது இறுமாப்புடன் இருந்தால்,யாருக்கும் பயனில்லை,தான் அய்யா..

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் ஐயா !

  நல்லதோர் கவிதையினை மொழிபெயர்த்து எம்மோடும் பகிர்ந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன்
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 17. நேர்மறைச் சிந்தனை.....பாசிட்டிவ் திங்கிங்க்

  அழகான கவிதை! அதில் பொதிங்கு கிடக்கும் அர்த்தங்கள் உட்பட...பகிர்வுக்கு மிக்க நன்றி சார்!

  பதிலளிநீக்கு