தொடரும் தோழர்கள்

திங்கள், ஜூன் 22, 2015

உண்டி சுருங்குதல் யாருக்கழகு?நடைப் பயிற்சி என்பது அவரவர் வசதியைப் பொறுத்தது.

சிலர் காலை சீக்கிரம் எழுந்து(என்னைப்போல்)நடைப் பயிற்சிக்குச் சென்று விடுகிறார்கள்.

சிலர் சிறிது நேரம் சென்று போகிறார்கள்.

காலையில் செல்ல இயலாதவர்கள் மாலையில் செல்கிறார்கள்.

சிலர் இரு வேளையும் செல்கிறார்கள்.

பொதுவான உடல் நலம்,உயர் ரத்த அழுத்தம் குறைய,உடல் பருமன் குறைய என்று பல காரணங்கள்

நான் காலையில் நடை மட்டும்;மாலையில் நடையுடன் கடைக்குச் செல்வதும்,அவசியம் என்றால்.

இவ்வாறு மாலை செல்கையில் சில சுவாரஸ்யமான உரையாடல்களைக் கேட்க நேரிடுகிறது.

இன்று மாலை செல்கையில் ஓரிடத்தில் இருவர் நின்று பேசிக் கொண்டிருந்தனர் .

ஒருவர் கேட்டார்”நல்லா மெலிஞ்ச மாதிரித் தெரியுதே?’

மற்றவர்”ஆமாம்.சாப்பாடு வேற குறைஞ்சு போச்சு.டாக்டர் சொல்லிட்டார், ரொம்பப் பருமனாத் தெரியுது.ஒரு நாளைக்கு 350 கிராமுக்கு மேல சாப்பிடக் கூடாது என்று..காலையில் 150 கிராம்,மாலையில் 200 கிராம் .அவ்வளவுதான்;அதைத்தவிர ரெண்டு வேளை நடை .மெலியாம என்ன செய்யும்?”

அவரைப் பார்த்தால் அவ்வளவு மெலிந்தவராகத் தெரியவில்லையே என யோசித்தேன்.

ஆனால் பின்னர் தெரிந்தது பேச்சு அவரைப் பற்றி அல்ல அவர் கூட இருந்த மூன்றாமவரைப் பற்றி என்று

அந்த நபரோ தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பது போல எங்கோ பார்த்தபடி,நின்று கொண்டிருந்தார்.நாக்கை வெளியே தொங்கப்போட்டபடி!

விளக்க வேண்டிய அவசியம் இல்லையே!

47 கருத்துகள்:

 1. //விளக்க வேண்டிய அவசியம் இல்லையே!//

  ’நாக்கை வெளியே தொங்கப்போட்டபடி!’ என்ற சொற்களால் நன்றாகவே விளங்கி விட்டது. :)))))

  பதிலளிநீக்கு
 2. உண்டி சுருக்குதல் இதற்கழகு என்று ஒருபோதும் நினைக்கவில்லை.


  த ம வாக்குப்பட்டை?

  பதிலளிநீக்கு
 3. மறுபடியும் எப்படி blogspot.in என்று மாறியது...?

  பதிலளிநீக்கு
 4. ஆஹா... யாருக்கோ அழகென்று தமிழில் படித்ததையும், அனைவருக்கும் அழகுதானே என்று நினைத்து வந்ததையும் மீறி, ‘அவருக்கு’ கூட அழகு என்பதை நான் எதிர்பார்க்கவேயில்லை ஐயனே...

  பதிலளிநீக்கு
 5. ஹி ஹி ஹி புரிஞ்சுடுத்தூ.....
  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
 6. ஹா ஹா நாக்கினை தொங்கப்போட்டபடி சிரிப்பு வெடி[[[[[[[[[[[[[[[[[[

  பதிலளிநீக்கு
 7. உண்டி சுருங்குதல்
  நோயின்றி வாழ்வோருக்கு
  அழகு!

  சிறந்த வழிகாட்டல்
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 8. நடைப் பயிற்சியின்போது பலர் Walkingக்குக்காக வருவதில்லை Talkingக்குக்காக வருகிறார்கள் என்பதுதான் உணமி. பதிவை இரசித்தேன்!

  இன்றைய வலைச்சரத்தில் தங்களை திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்கள் தங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம்
  ஐயா
  புரிந்து கொண்டேன்... பகிர்வுக்கு நன்றி த.ம 7
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 10. படிக்காதவன் ஊர்லே மாடு மேய்பான் படிச்சவன் பட்டணத்திலே நாய் மேய்ப்பான் என்று சொல்வார்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்பச் சரி/சில நேரம் அவர்கள் நாயை மேய்க்கிறார்களா அல்லது நாய் அவர்களை மேய்க்கிறதா என்ற சந்தேகம் எழும்!
   நன்றி ஐயா

   நீக்கு
 11. ஹஹஹ...ஹா...நல்ல புரிந்து விட்டது...
  தம 9

  பதிலளிநீக்கு
 12. அந்தக் காலத்தில் காலையில் உழவர்கள் வயல் வேலைகளுக்கு மாடுகளை ஓட்டிச் செல்வார்கள். இன்றோ நகர வீதிகளில் நாய் “ஆய்” போவதற்கு ஓட்டிச் செல்கிறார்கள். அய்யா.....

  பதிலளிநீக்கு
 13. ஹா..ஹா.. கடசியில செம பன்ச்.. நான் ஏதோ இரண்டு கால் ஜீவனைப் பத்திதான் சொல்றீங்கனு நெனச்சுட்டேன்..த.ம 11

  பதிலளிநீக்கு
 14. சிலர் இதற்காகவும் தானே வாக்கிங் போகிறார்கள் :)

  பதிலளிநீக்கு
 15. ஹா ஹா .....எல்லாம் காலம் செய்த கோலம்தான் என்ன செய்வது. செம சகோ !

  பதிலளிநீக்கு
 16. நல்ல வேளை திரும்ப நீங்களுமா? என்று,,,,,,,
  யாருக்கோ,
  அப்பாடா,
  நன்றி.

  பதிலளிநீக்கு
 17. ஹஹஹஹஹஹஹ் அந்த மூன்றாவது நபர் யாரென்று சொல்லித் தெரிவதில்லை....நன்றாகவே புரிஞ்சுடுச்சு....

  பதிலளிநீக்கு