தொடரும் தோழர்கள்

ஞாயிறு, அக்டோபர் 23, 2011

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு !!!

இது எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்.அதை அப்படியே தருகிறேன்.சொல்லப்பட்டிருப்பது எந்த அளவு உண்மை என எனக்குத்தெரியாது.மேலும் தகவல்கள்,விவரங்கள் இருந்தால் நீங்கள் சொல்லலாம்.

quote

//" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என பல்வேறு காரணங்களுக்காக
பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கை கோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தைஅளித்தது.




இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.



ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.


அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.

இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.



இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்

திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டாயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.//

unquote.

81 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. இந்த கதையெல்லாம் வெறும் பொய் brother… வதந்தி…
      இந்த வதந்தியைப் பரப்பியவர்களுக்கு செயற்கைக்கோளைப் பற்றி தெரியவில்லை;… செயற்கைக்கோள் ஸ்தம்பித்தால்! நிலைநிறுத்தப்பட்ட தனது சுற்றுப்பாதையிலிருந்து ஏதோ ஒரு விசை செயற்கைக்கோளை நிறுத்துமேயாயின் அது பூமியின் காற்று மண்டலத்திற்குள் வேகமாகக் கீழறங்கத் தொடங்கும் . நாம ஒழுங்கா ''communication'' - லாம் பண்ணமுடியாதுப்பா...செயற்கைகோள் position மாறிடும்.
      மூன்று வினாடி ஸ்தம்பித்தால் தனது சுற்றுப்பாதையிலிருந்து இறங்கும் இடைவெளியை செயற்கைக்கோளால் மீண்டும் எட்டமுடியாது. அதை, சரியான இடத்தில் உந்தித் தள்ளுவதற்கு ராக்கெட் இருக்காது. புரியுதா?.
      செயற்கைகோளின் speed தெரியுமா?. speed of something like 6 miles per second (nearly 10 kilometers per second) இவ்வளவு வேகத்துல சுற்றி வருகிற செயற்கைகோள் - ஐ 3 second -ல speed brake போட்டெல்லாம் நிறுத்த முடியாதுப்பா...... அப்படி நிறுத்தினா செயற்கைகோளுக்கும் பூமிக்குமான location மாறிடும். தொடர்ந்து TV- ல programme பார்க்க முடியாது புரியுதா?.

      நீக்கு
  2. மிகவும் ஆச்சரியத்தக்க தகவல்தான்..

    தொழில்நுட்பம் இல்லாத காலங்களில் முன்னோர்கள் செய்த இது போன்றவை பிரமிப்பூட்டுகின்றன

    பகிர்விற்க்கு மிக்க நன்றி

    நட்புடன்
    சம்பத்குமார்

    பதிலளிநீக்கு
  3. உண்மையில் ஆச்சரியமாக உள்ளது, ஆனால் இந்த தகவல் சரியாக இருப்பின் இந்திய அரசு அதை பற்றி மக்களுக்கு அதிகாரபூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. நம் முன்னோர்கள் நமக்கு நன்மையானவகளை விட்டு சென்றுள்ளனர், நாம்தான் நம் சந்ததிகளுக்கு அணுமின் நிலையம் போன்றவற்றை விட்டு விட்டு செல்கிறோம்...!!!!

    பதிலளிநீக்கு
  5. ஆச்சரியமா இருக்கு ஐயா ....

    பதிலளிநீக்கு
  6. எங்கள் தங்கம் என்ற படத்தில் M .G .R அவர்கள் ஒரு மேடை நிகழ்ச்சியில் சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புவதை வைத்து நம் மூடநம்பிக்கை பற்றி நக்கலாக சொல்லி இருப்பார் .அது இப்போது ஞாபகம் வருகிறது

    பதிலளிநீக்கு
  7. எங்கள் தங்கம் என்ற படத்தில் M .G .R அவர்கள் ஒரு மேடை நிகழ்ச்சியில் சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புவதை வைத்து நம் மூடநம்பிக்கை பற்றி நக்கல்லாக சொல்லி இருப்பார் .அது இப்போது ஞாபகம் வருகிறது

    பதிலளிநீக்கு
  8. இதில் எந்தவித உண்மையும் இருப்பதாகத் தெரியவில்லை. எவனோ ஆரம்பித்து வத்த புரளியாகத்தான் தோன்றுகின்றது. ஸாட்டிலைட்டுகள் ஸ்தம்பித்து நிற்பதாகச் சொன்னால என்ன ஆதாரம், எந்த நிறுவனம் இப்படிப்பட்ட செய்தியைச் சொல்கிறது என்று தெளிவாகச் சொல்ல வேண்டும். இல்லா விட்டால் இது இன்னுமொரு புரளி என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். "நாசாவுக்கே தண்ணி காடிய திருநள்ளாறு" என்ற தலைபெல்லாம் ஓவராகத் தெரிகின்றத்து. இதில் இந்தப் புரளியை ஆரமபித்து வைத்தவனை விட, அதனைப் படித்து 'பிரமித்து' நிற்பவர்களைப் பார்த்தால்தான் பரிதாபமாகத் தெரிகின்றத்து. இங்கே நான் ஒருவருடைய தெய்வ நம்பிக்க்கையை கேள்வி கேட்கவில்லை. ஆனால் ஆதாரம் இல்லாமல் அடிச்ச்சுவிடும் புரளிகளைப் பற்றி மட்டுமே கேள்வி கேட்கின்றேன். - சிமுலேஷன்

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் ஐயா,
    நலமா?
    விஞ்ஞானத்தை மெய்ஞானத்தால் வென்றுள்ள எம் முன்னோர்களின் இச் செயலை நினைக்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறதே!

    பதிலளிநீக்கு
  10. எனக்கு இது புதிய செய்தி சார். ஒரு சில மூடப்பழக்கங்கள் தவறுதான். அனைத்தையும் கிண்டல் செய்யும் பகுத்தறிவாளர்கள்(?) இதை படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. செயற்கை கோள்கள் மூன்று வினாடிகள் செயலிழந்து விடுவது குறித்து நாசாவிடமிருந்தும் மற்றும் பிற நாடுகளின் வின் வெளி கட்டமைபிளிருந்தும் இதுவரை எந்த வித தகவல்களுமே இல்லையே. மூன்று வினாடிகள் என்ற கால அளவு நமக்கு வேண்டுமானால் மிக மிக அல்பமாக இருக்கலாம் ஆனால் GRPS போன்ற அதி நவீன தொழில் நுட்பங்கள் எல்லாம் இந்த மூன்று வினாடிகள் வேறுபாட்டால் சிதைந்து சின்னாபினமாகி இருக்க வேண்டுமே? ஆனால் அப்படியெல்லாம் நிகழவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது வெறும் கட்டுக்கதையே அன்றி வேறில்லை. நண்பர் "Simulation "கருத்தேதான் என்னுடையதும்.

    இது போன்ற புரளிகளை புறம் தள்ளுவதே சரி. நீங்கள் நாசாவை பற்றி மேலும் நிறைய தெரிந்து கொள்ளுங்கள் எவ்வித Bias இல்லாமல். பிறமித்துப்போவீர்கள்!! உங்கள் தலைப்பு மிக தவறான ஒன்று என்பதை உணர்வீர்கள் .

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. நான் இதை ஒரு பிளாக்கில் படித்தேன் அய்யா! இதைப்பற்றி செங்கோவி அண்ணனின் ஒரு பதிவில் விவாதித்தோம்.நான் பார்த்த பிளாக்கில் விக்கிபீடியா லிங்க் எல்லாம் கொடுத்திருந்தார்கள்.ஆனால் அந்த லிங்கில் போய் பார்த்த போது அப்படி ஒன்றும் இல்லை!

    பதிலளிநீக்கு
  14. செய்தியின் நம்பகத்தன்மை பற்றி முதல் இரண்டு வரிகளில் நீங்களே குறிப்பிட்டுவிட்டீர்கள்... அப்புறமென்ன...

    பதிலளிநீக்கு
  15. அறியப்படாத புதிய தகவல் மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .
    ஒரு காதல்க் கவிதை காத்திருக்கின்றது .

    பதிலளிநீக்கு
  16. இதன் மூலச் செய்தி எந்த செய்தித்தாளில் வந்தது. நாசாவின் அறிக்கை போன்றவை இல்லையா?
    இதை எந்த வகையில் நம்புவது.
    இந்தியா பற்றியதென்றதுமே, நமக்கு மயிர்க் கூச்செறிவது நல்லதல்ல!
    நம்பும் படியாக இல்லை.

    பதிலளிநீக்கு
  17. இதில் எந்த உண்மையும் இருப்பதாக தெரியவில்லை. வெறும் புரளி என்றே நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  18. இந்த செய்தி உண்மையாய் இருப்பின் நிச்சயம் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். எதற்கும் விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள் எனப் பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  19. இது போன்ற நகைப்புக்குரிய செய்திகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் மின்மடல்களில் வருவது வாடிக்கையாகி விட்டது. எனக்கும் வந்தது; இதில் திருநள்ளாறு சம்பந்தப்பட்டிருந்ததால், இதைப் பற்றி ஒரு மொக்கை எழுதலாம் என்று ஏற்பட்ட ஆவலை அடக்கிக்கொண்டேன்.

    எவ்வளவு நூற்றாண்டுகள் ஆனாலும், மூடநம்பிக்கைகளை சகட்டுமேனிக்கு பரப்புகிற பேர்வழிகள் இருந்தே தீருவார்கள் போலிருக்கிறது. இந்த மடலை யார் அனுப்பியிருந்தாலும், அவர்கள் உண்மையான ஆன்மீகம் குறித்து கிஞ்சித்தும் அறியாதவர்கள் என்பதே எனது கருத்து.

    பதிலளிநீக்கு
  20. //இது எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்.அதை அப்படியே தருகிறேன்.சொல்லப்பட்டிருப்பது எந்த அளவு உண்மை என எனக்குத்தெரியாது.மேலும் தகவல்கள்,விவரங்கள் இருந்தால் நீங்கள் சொல்லலாம்//
    நம்பகத்தன்மை குறித்து நீங்கள் ஆரம்பத்திலேயே கூறிவிட்டீர்களே விடுங்க பாஸ்! :-)

    பதிலளிநீக்கு
  21. புரளி அல்ல, உண்மைதான். சித்தர்கள் பித்தர்கள் அல்ல. நம் முன்னோர்களின் பெருமையை நாம்தான் உணராமல் இருக்கிறோம். காலத்தை வென்று நிற்கும் எத்தனையோ ஆலயங்களை எந்த ஆர்க்கிடெக்சர் கல்லூரியில் படித்துக் கட்டினார்கள்? நல்ல பதிவு. உங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. பதிவுலக உறவுகளுக்கு வணக்கம். இந்த மின்னஞ்சல் எனக்கு மிகச் சமீபத்தில்தான் வந்தது.படித்ததும் இது ப்ற்றிய மேலும் தகவல்கள் பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் இதைப் பகிர்ந்து கொண்டேன். ஏனென்றால், பதிவர்களில் பல துறையைச் சார்ந்தவர்கள், பல படிப்பாளிகள்,பல நாடுகளில் பணி புரிபவர்கள் என்று பலரும் இருக்கிறார்கள்;அவர்களால் இந்தச் செய்தி பற்றி மேலும் அதிகத் தகவல்கள் அளிக்க முடியும் என்ற நம்பிக்கையே காரணம்.தலைப்பு பற்றிய கருத்தும் வந்திருப்பதால் சொல்கிறேன், மின்னஞ்சலில் இருந்த தலைப்பை நான் அப்படியே கொடுத்து விட்டேன்.இது முன்பே வலம் வந்த ஒரு செய்தி என்பதை கோகுலும்,கோவி கண்ணன் அவர்களும் தெரியப்படுத்தி யிருக்கிறார்கள். நன்றி.
    திருநள்ளாரில் டிசம்பர் 21 அன்று சனிப்பெயர்ச்சி.இச்செய்தி உன்மையானால் அன்றும் ஏதாவது நிகழவேண்டும்;அது பற்றித் தகவல் வர வேண்டும் பார்ப்போம்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  23. முற்றிலும் புதிய செய்தி


    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  24. பிரமிப்பான விஷயம் சார்..

    தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  25. @ஜ.ரா.ரமேஷ் பாபு
    நன்றியுடன்,தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  26. ஆச்சர்யமானது தான்

    தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  27. ஐயா புதிய கவிதை ஒன்று காத்திருக்கின்றது வாருங்கள்
    வந்து உங்கள் பொன்னான கருத்தைக் கூறுங்கள் .பிடித்திருந்தால்
    மறக்காமல் ஓட்டுப் போடுங்கள் .மிக்க நன்றி ஊக்குவிப்புகளிற்கு .

    பதிலளிநீக்கு
  28. @கவிதை வீதி... // சௌந்தர்
    நன்றி.தீபாவளி நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  29. இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டாயம் பிரமிக்கவேண்டும்."

    இது மட்டுமா ... இன்னும் எத்தனை எத்தனையோ கூறலாம் .. எனக்கு தெரிந்த ஒன்றிரண்டு ...

    ஆதவன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் வருவதாக கூறுவார் . Prism ஒன்றை சூரிய ஒளி முன்பு காண்பித்தால் ஏழு வண்ண கதிர்கள் வரும் என்பது நமக்கு சயின்ஸ் புகட்டும் பாடம்;
    ராம பாணத்தை பற்றி படித்திருப்போம் .. துரத்தி அடித்து இலக்கினை தாக்கும் .. இதேதான் அமெரிக்க நாடு பிற்காலத்தில் போரில் பயன் படுத்திய Patriot missile என கூறலாம் ..
    மகாபாரத்தில் எங்கோ நடக்கும் போரினை பற்றி சஞ்சய் நேரில் பார்ப்பது போல வர்ணிப்பார் ..இதை எள்ளி நகையாடியவர்கள் பலர் உண்டு .. ஆனால் எங்கோ நடக்கும் நிகழ்சிகளை தற்போது நாம் தொலை காட்சியின் மூலம் பார்க்கிறோமே ... இன்னும் எத்தனையோ கூறலாம் . நம் முன்னோர்களுக்கு தெரிந்த பல விஷயங்கள் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன ....வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  30. இந்தக் கருத்து முற்றிலும் உண்மையானது.பகுத்தறிவுப்பகலவன்களுக்கு இதை நம்ப மனது வராது.ஆதாரம் ஆன்மீகக்கடல் டாட் காம் 2008 பதிவுகள்.இங்கிருந்துதான் வலையுலகம் முழுக்க இந்த தகவல் பரவியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  31. 100% unmai idhu, dhina thanthiyil padichen sanipeyarchi andru, nasa viyanigal araichi seidhadhu unmai, sani peyarchil irunthu 45 naatkaluku adarthi adigama irukumam - kuzhsli

    பதிலளிநீக்கு
  32. புளுகினாலும் பொருத் தமாகப் புளுகுங்கடா, அட போக்கத்தப் பசங்களா! என்று உடுமலை நாரா யணகவி எழுதிய பாடல் தான் நினைவிற்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  33. புளுகினாலும் பொருத் தமாகப் புளுகுங்கடா, அட போக்கத்தப் பசங்களா! என்று உடுமலை நாரா யணகவி எழுதிய பாடல் தான் நினைவிற்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  34. ஐயா இந்த தகவல் வெற்று புரளியே!!
    மேலும் தகவல்களுக்கு:
    http://www.aalunga.in/2011/11/2.html

    பதிலளிநீக்கு
  35. Plz confirm this news as a real one .If it is the case we may be very proud of it.by DK.

    பதிலளிநீக்கு
  36. இது தொடர்பான மேலதிக தகவல்கள் http://www.venkkayam.com/2012/10/blog-post_7.html

    பதிலளிநீக்கு
  37. இந்த கதையெல்லாம் வெறும் பொய் brother… வதந்தி…
    இந்த வதந்தியைப் பரப்பியவர்களுக்கு செயற்கைக்கோளைப் பற்றி தெரியவில்லை;… செயற்கைக்கோள் ஸ்தம்பித்தால்! நிலைநிறுத்தப்பட்ட தனது சுற்றுப்பாதையிலிருந்து ஏதோ ஒரு விசை செயற்கைக்கோளை நிறுத்துமேயாயின் அது பூமியின் காற்று மண்டலத்திற்குள் வேகமாகக் கீழறங்கத் தொடங்கும் . நாம ஒழுங்கா ''communication'' - லாம் பண்ணமுடியாதுப்பா...செயற்கைகோள் position மாறிடும்.
    மூன்று வினாடி ஸ்தம்பித்தால் தனது சுற்றுப்பாதையிலிருந்து இறங்கும் இடைவெளியை செயற்கைக்கோளால் மீண்டும் எட்டமுடியாது. அதை, சரியான இடத்தில் உந்தித் தள்ளுவதற்கு ராக்கெட் இருக்காது. புரியுதா?.
    செயற்கைகோளின் speed தெரியுமா?. speed of something like 6 miles per second (nearly 10 kilometers per second) இவ்வளவு வேகத்துல சுற்றி வருகிற செயற்கைகோள் - ஐ 3 second -ல speed brake போட்டெல்லாம் நிறுத்த முடியாதுப்பா...... அப்படி நிறுத்தினா செயற்கைகோளுக்கும் பூமிக்குமான location மாறிடும். தொடர்ந்து TV- ல programme பார்க்க முடியாது புரியுதா?.

    பதிலளிநீக்கு
  38. இன்னும் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...

    பதிலளிநீக்கு