நீங்க ஷட்டப் பண்ணுங்க!
என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம்.!
இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று.
எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக்கொண்டே இருப்பவர் பலர்.
பேசும் பேச்சில் சாரம் எதுவுமில்லாமல் வெட்டிப்பேச்சாகப் பேசுபவரைப் பார்த்து என்ன சொல்வது?
நீங்க ஷட்டப் பண்ணுங்க!
பேசவேண்டிய நேரத்தில் பேச வேண்டும்.
பேச்சுத்தேவையில்லையெனில் பேசக் கூடாது.
வாயை மூடிக் கொள்ள வேண்டும்.
ஷட்டப் பண்ணுங்க.
மௌனமாக இருப்பது என்பது எளிதா என்ன?
மௌன விரதம் என்று ஒரு நாள் இருந்து பாருங்கள் தெரியும்
பேச்சைக் குறைக்க வேண்டும் என்றால் மாதம் இரு நாளாவது மௌன விரதம் இருக்க வேண்டும்..
அவ்வாறு செய்தால் மற்ற நாட்களிலும் பேச்சைக் குறைப்பது எளிதாகும்.
தேவையற்ற வெட்டிப் பேச்சால் பயன் என்ன.?
மாறாக வேண்டாதவற்றைப் பேசிப் பிரச்சினையில் மாட்டிக்கொள்ள நேரிடும்.
எனவே”நீங்க ஷட்டப் பண்ணுங்க”.
சில நேரங்களில் நம்மால் சும்மா இருக்க முடிவதில்லை.
யாரோ பேசிக்கொண்டிருக்கையில் இடையில் புகுந்து எதையாவது சொல்லி அவர்களிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொள்கிறோம்...”நீங்க ஷட்டப் பண்ணுங்க”
அதற்குப் பதில் அதையே நமக்கு நாமே அறிவுரையாகச் சொல்லிக் கொண்டால்,பிரச்சனையில் மாட்ட வேண்டியதில்லை..
சிலர் சொல்லின் செல்வர்களாக இருப்பர்.
ஆனாலும் அவர்களும் சில நேரத்தில் சொல்லிக் கொள்ள வேண்டும்”ஷட்டப் பண்ணு”
நானும் ஒரு சொல்லின் செல்வர்தான்!
நான் சொல்லின் பிறர் கேட்காது செல்வர்!
எனவே எனக்கு அவசியமான அறிவுரை......
“நீங்க ஷட்டப் பண்ணுங்க!”
{ஸ்வாமி பித்தானந்தா}
இதைத்தானே நாம் சின்ன வயசிலிருந்து படித்திருக்கிறோம்.
பதிலளிநீக்குசொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்
'நாம பிடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணி'தான். நாம் என்ன பேசுகிறோம் என்பதைக் கவனித்தாலே இதனைக் கண்டுபிடித்துவிடலாம்.
அலுவலகத்தில், குறிப்பாக மேலாளர்களிடத்தில், மிகக் குறைவாகப் பேசுவது மிக நல்லது. 'குறைவாகப் பேசினால்' இவனுக்கு நிறையத் தெரியும்போலிருக்கிறது என்ற எண்ணமாவது அவருக்கு ஏற்படும். ரொம்ப பேசினோம்னா, 'ஓ.. இவனுக்கு இவ்வளவுதான் அறிவா' என்பது வெட்டவெளிச்சமாகிவிடும். த ம
அழகாககச் சொன்னீர்கள் நெ.த.
பதிலளிநீக்குமிக்க நன்றி
நானும் ஷட்டப் பண்ணத்தான் பார்க்குறேன். ஆனா முடிலப்பா
பதிலளிநீக்குமுடியும் என்றால் முடியும்!
நீக்குநன்றி ராஜி
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஸ்வாமி பித்தானந்தா அவர்களின் அறிவுரை கேட்டு மிக்க மகிழ்ச்சி! மௌனம் சம்மதம் என்று சொல்லப்படுகிறது. மௌனம் கலக நாஸ்தி என்றும் சொல்லப்படுகிறது. எது சரி என்று ஸ்வாமி பித்தானந்தா அவர்களின் விளக்கத்தை அறிய ஆவல்.
பதிலளிநீக்குஇடம்,பொருள்,ஏவல் பொறுத்தது!பேசாமல் இருந்தால் கலகம் வராதுதானே!
நீக்குநன்றி ஐயா
ஹா..... ஹா.....
பதிலளிநீக்குபித்தானந்தா எல்லாம் ஓவியனந்தாவால்...!
ஆனந்தம்!
நீக்குநன்றி டிடி
அழகாச் சொன்னீங்க...
பதிலளிநீக்குசில விஷயங்களில் ஷட்டப் செய்ய முடியாததால்தான் அதிக பிரச்சினைகளைச் சுமக்க் வேண்டியிருக்கு.
அதே!
நீக்குநன்றி குமார்.
நல்ல உபதேசம். :)
பதிலளிநீக்குசமீபத்தில் பிரபலமானது!
நீக்குநன்றி மாதேவி
என்ன ஒரு அழகான வார்த்தை..!
பதிலளிநீக்குஅழகுதான்!
நீக்குநன்றிஸ்ரீராம்
உண்மை
பதிலளிநீக்குஆம்!
நீக்குநன்றி விமல்.
கடைபிடிப்பது சற்று சிரமமே
பதிலளிநீக்குசிரமப்படாமல் முடியுமா எதுவும்!
நீக்குநன்றி ஐயா
மிக அருமை.. நானும் சட்டப் பண்ணிக்கிறேன்:).
பதிலளிநீக்குமுயற்சி திருவினை ஆக்கும்
நீக்குநன்றி ஆதிரா
வணக்கம் ஐயா நலமா ?
பதிலளிநீக்குஅருமையான தகவல் உண்மையில் பேசாமல் இருப்பது கஷ்டம்தான்.
சரி ஐயா அரசியல்வாதிகளும் மொனவிரதம் இருப்பது சாத்தியமா ?
நாப்பறை கொட்டித்தானே நாடாள வருகிறார்கள்?
நீக்குநன்றி கில்லர்ஜி.(நலமே)
நாப்பறை கொட்டி - ஆகா!
நீக்குஅருமையான எண்ணங்கள்
பதிலளிநீக்குதாங்கள் https://seebooks4u.blogspot.com/2017/08/blog-post.html இல் வெளியிட்டுள்ள மின்நூல்களை 10,000,000 வாசகர்களுக்குப் பகிர்ந்து உதவுங்கள். என்னங்க... இந்த உதவியைத் தானே கேட்கிறேன்.
வாங்க சார்! ரொம்ப நாளாச்சே! நலம்தானே!!
பதிலளிநீக்குதுளசி: பெரும்பாலும் பேசுவது குறைவுதான். ஆனால் பேசினால் கொஞ்சம் கூடுதல் ஆகும் ஹாஹாஹா ஆசிரியர் என்பதாலோ!!? நான் வகுப்பில் பயன்படுத்தும் வார்த்தை!!! நல்ல வார்த்தை!!
கீதா: நான் வீட்டிலும் சரி வெளியிலும் சரி வாயை மூடிப் பேசவும் தான்!!!! ஹாஹாஹா
நானும் மெளனவிரதம் இருக்க முயல்கின்றேன் முடியல தல))
பதிலளிநீக்குஎனக்கு சட்டப் பண்ணவும் தெரியாது ,செட் அப் பண்ணவும் தெரியாது :)
பதிலளிநீக்குஇங்லிஸ் கலந்து பேசினா ஓகேவா?
பதிலளிநீக்குநல்ல சித்தாந்தம். தாயுமானவர்,
பதிலளிநீக்குசிந்தையை யடக்கியே சும்மா விருக்கிற
திறமரிது சத்தாகி யென்
சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே.
என்று சொல்லுகிறார்.
சரியாகச் சொன்னீர்கள் ஐயா.....ஷட்டப் பண்ணுங்க../// நான் பேசுவதே இல்லை,இப்போதெல்லாம்.......முத்து உதிர்ந்து விடுமொ என்ற பயத்தினால் அல்ல....பல விடயங்களைக் கடந்து செல்ல முடிகிறது,என்பதால்..... நன்றி ஐயா,பதிவுக்கு....
பதிலளிநீக்கு