தொடரும் தோழர்கள்

வியாழன், ஜூன் 15, 2017

புரட்சித் தலைவர் சொன்னது சரியா?

ஒரு குட்டிக்கதை.

அக்பர்,பீர்பால் கதை

ஒரு நாள் அக்பர் தன் அவையிலிருந்த அறிஞர்களிடம் கேட்டார் ”உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.உங்கள் பதில் மூன்று சொற்களுக்கு மேல் போகக் கூடாது”

யாரும் பதில் சொல்லவில்லை.

அக்பர் பீர்பாலைப் பார்த்தார்.

பீர்பால் சொன்னார்”நான்கு விரற்கடை”

அக்பருக்குப் புரியவில்லை.

பீர்பால் சொன்னார்”கண்ணால் காண்பதெல்லாம் உண்மை;ஆனால் காதால் கேட்பவை உண்மையாகவும் இருக்கலாம்;பொய்யாகவும் இருக்கலாம். பெரும்பாலும் பொய்யே”

அக்பர் கேட்டார்”அதற்கு. ஏன் நான்கு விரற்கடை என்றீர்”

கண்ணுக்கும் காதுக்கும் இடையே உள்ள தூரம் நான்கு விரற்கடைதான் என்றார் பீர்பால்..

இப்போது கேள்வி,பீர்பால் சொன்னது சரியா என்பதே.

ஒரு சொல் வழக்கு உண்டு

“கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய்,தீர விசாரிப்பதே மெய்”

புரட்சித் தலைவர் ஒரு படத்தில் பாடுவார்”கண்ணை நம்பாதே.உன்னை ஏமாற்றும்”

ஒரு நிகழ்வைப் பார்க்கிறோம்.நம் கண்ணெதிரே நடப்பது எப்படிப் பொய்யாக முடியும்?பார்த்தவர் சொல்லும்போது கண்,காது,மூக்கு வைத்துச் சொல்கையில் அது பொய்யாகலாம்.ஆனால் பார்த்த நிகழ்வு எப்படி பொய்யாக இருக்கும்?


நிகழ்வு பொய்யல்ல;கண்  ஏமாற்றவில்லை.ஏமாற்றியது நம் எண்ணம்.

பார்க்கும் காட்சிக்கு பார்ப்பவர் மனதைப் பொறுத்து வெவ்வேறு பொருள் கற்பிக்கிறார்கள்.நிகழ்வு ஒன்றே;ஆனால் அதைப் புரிந்து கொள்வதைப் பொறுத்து அது உண்மையாகவும் பொய்யாகவும் மாறுகிறது.

பல படங்களில்,கதாநாயகன்,கதாநாயகியை எவருடனோ எங்கேயோ பார்த்து விட்டு ஆராயாமல்  சந்தேகப்படுகிறான்.(ஜெமினி கணேசனுக்குத்தான் அது போன்ற சந்தேகம் பல படங்களில் வந்து விடும்.)..

ஒரு நிகழ்வு.சாலையில் செல்லும் ஒரு பெண் தடுமாறி  விழப் போகிறாள்.அருகில் சென்று கொண்டிருந்த இளைஞன் அவளைப் பிடித்துத்தூக்கி விழாமல் காப்பாற்றுகிறான்..அருகில் நடந்து கொண்டிருந்தவருக்கு நிகழ்வு  விகல்பமாகத் தெரியாது.ஆனால் தொலைவில் இருந்து அவன் அவளைப் பிடித்து அணைத்துத்  தூக்குவதைப் பார்க்கும் சிலர்,நடு ரோட்டில் காதலா என்று தலையில் அடித்துக் கொள்ளலாம்...
.
ஒரு மண விலக்கு வழக்கறிஞரிடம் ஒரு முறை பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போது அவர் சொன்னார்”நீதி மன்றங்கள் எப்போதுமே பெண்கள் மீது அதிக பரிவுடன் இருக்கின்றன.ஒரு வழக்கில் கணவன் தன் மனைவி, ஒருவனுடன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டதைப் பார்த்ததாகச் சொல்லும்போது நீதிபதி கேட்டார்,அவர்கள் அறைக்குள் என்ன செய்தார்கள் என்பது உனக்கு எப்படித்தெரியும்?!”

இங்கு கண் பார்த்தும் பயனில்லை...


ஒரு செய்தியை உண்மையென உறுதியாகச்  சொல்ல நாம் ”என் கண்ணால பார்த்தேன் என்கிறோம்.

பிரச்சினை பார்வையில் இல்லை.;பார்த்ததைப் புரிந்து கொள்வதில்தான்

எனவே கண்ணை நம்பாதே என்று  எப்படிச் சொல்வது? கண்ணால் காண்பதும் பொய் என்று எப்படிச் சொல்வது.?

நீங்களே சொல்லுங்கள்
17 கருத்துகள்:

 1. போங்க ஸார்.. நாங்க சொல்லவேண்டியதெல்லாம் நீங்களே சொல்லிட்டீங்க!

  :)))

  பதிலளிநீக்கு
 2. நல்ல மனம் நல்லதையே காணும் :)

  பதிலளிநீக்கு
 3. ஒரே செயலை, ரெண்டுபேர் ரெண்டுவிதமாப் புரிஞ்சுக்கமுடியும். படிப்பதும் இருவருக்கு இருவேறு விதமான பொருள் அல்லது அனுமானத்தைக் கொடுக்கமுடியும்.

  பதிலளிநீக்கு
 4. //பிரச்சினை பார்வையில் இல்லை.;பார்த்ததைப் புரிந்து கொள்வதில்தான்.//
  சரியாய் சொன்னீர்கள். Seeing is believing என்று சொல்வார்கள். எனவே கண்ணால் பார்த்ததை நம்பலாம்.

  பதிலளிநீக்கு
 5. கல்லைக் கண்டால் நாயைக் காணவில்லை. நாயைக் கண்டால் கல்லைக் காணவில்லை. இதில் இரண்டு விதமாக சிந்திக்கலாம். நீங்கள் இதில் ஆன்மீகமாக சிந்தித்துப் பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 6. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம். /// அனைத்தும் அவரவர் எடுத்துக்கொள்ளும் மன நிலையைப் பொறுத்தே அமையும்.

  பதிலளிநீக்கு
 7. தலைவர் சொன்னது சரியே எனத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 8. பார்க்கும் காட்சிக்கு பார்ப்பவர் மனதைப் பொறுத்து வெவ்வேறு பொருள் கற்பிக்கிறார்கள்.நிகழ்வு ஒன்றே;ஆனால் அதைப் புரிந்து கொள்வதைப் பொறுத்து அது உண்மையாகவும் பொய்யாகவும் மாறுகிறது.// இதுதான் உண்மை அதனால்தான் கண்ணால் கேட்பதும்பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பது கூட பல சமயங்களில் தவறாகிவிடும் வாய்ப்புண்டே!!

  கீதா

  பதிலளிநீக்கு
 9. //ஜெமினி கணேசனுக்குத்தான் அது போன்ற சந்தேகம்

  hahahaha

  பதிலளிநீக்கு
 10. கேள்வியும் நானே பதிலும் நானே என தெரிவித்து விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 11. Your blog is wonderful. It is very interesting.I shared information with my husband. My husband working in Vehicle towing company. It is best knowledge provide. Thanks for posting.

  பதிலளிநீக்கு