தொடரும் தோழர்கள்

கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, செப்டம்பர் 06, 2019

என்னதான் முடிவு?


நித்யா கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

அவளுக்குக் கோலம் போடுவதில் எப்போதுமே  அதிக ஆர்வம் உண்டு.

அன்று வெள்ளிக் கிழமை வேறு.

எனவே மிகவும் மும்முரமாகக் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

அவள் அருகில் ஒரு பைக் வந்து நின்றது.

தலையைத் தூக்கிப் பார்த்தாள்.

பைக்கில் அமர்ந்திருந்தவன் தன் கையில் இருந்த காகிதத்தை நீட்டி “இந்த விலாசம் எங்கே இருக்குன்னு சொல்ல முடியுமா” என்றான்

அதை வாங்க அருகில் சென்றாள் நித்யா.

அவள் அவனை நெருங்கியதும்,அவன் அவள் கழுத்தில் இருந்த சங்கிலியை வெடுக்கென்று இழுத்து அறுத்து எடுத்துக்கொண்டு பைக்கை வேகமாகச் செலுத்தியவாறு சென்று விட்டான்.

ஒரு சில விநாடிகளில் எல்லாம் முடிந்து விட்டது.

அவன் சங்கிலியை இழுத்தபோது ஏற்பட்ட காயத்தைக் கையால் அழுத்தியவாறு நித்யா கத்த ஆரம்பித்தாள்.

அவள் கணவன்,மாமியார் உள்ளிருந்து ஓடி வந்தனர்.அண்டை அயலார்களும் வந்து கூடினர்.

அவள் நடந்ததைச் சொன்னாள்.

காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் என்பதே பலரின் ஆலோசனையாக இருந்தது.

ஆனால் நித்யா,அவள் கணவன் குமார்,அவள் மாமியார் பங்கஜம் மூவரும் காவல் நிலையம் போனால் தொடர்ந்து ஏதாவது பிரச்சினை வருமோ என்று தயங்கினர்.

அந்த வீதியிலேயே இருந்த ஒருவர்,அந்தப் பகுதி காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்தவர் குமாரைப் பார்த்துச் சொன்னார்.”கட்டாயம் புகார் கொடுக்கணும் நான் வீட்டுக்குப் போய் தயாராயிட்டு வரேன் .நீங்களும் தயாராகுங்க.இந்த வீதியிலேயே ரெண்டு சிசிடிவி காமிரா இருக்கு.அதில அவன் மாட்டிக்குவான்.”


அவர் வந்ததும் அவருடன் புறப்பட்டான் குமார்.

புகார் கொடுக்கப்பட்டது........

காவல் நிலையத்தில் காமிரா படத்தை பார்த்ததில் பைக்கில் அவன் வருவதும்,நித்யாவிடம் பேசுவதும் ,சங்கிலியை அறுத்துக் கொண்டு வேகமாகச் செல்வதும் நன்கு பதிவாகியிருந்தது.

உடன் இரு காவலர்கள் அவனைத் தேடும் பணியில் அனுப்பப் பட்டனர்.திருட்டு நகை வாங்குவதில் பெயர் பெற்ற ஒரு கடையைக் கவனிக்கத் தீர்மானித்தனர்.

கடை திறக்கவில்லை

சிறிதுதள்ளி நின்று காத்திருந்தனர் .

கடை திறந்தது.

சிறிது நேரத்தில் பைக்கில் வந்து இறங்கி உள்ளே சென்றான் அவன்.

ஓரிரு நிமிடங்கள் கழித்துக் காவலர் கடைக்குள் சென்றனர்,.

அவன் தப்ப முடியாமல் அமுக்கிப் பிடித்தனர்


கடைக்காரர் சொன்னார்”சார் !இவன் கவரிங் நகையைக் கொண்டு வந்து என்னை ஏமாற்றிக் காசு வாங்கப் பாத்தான்”

போலீசார் திகைத்தனர்..கவரிங் நகையா?

சிறிது நேரம் சென்று காவல் நிலையத்திலிருந்து குமாருக்கு அழைப்பு வந்தது.

ஆய்வாளர் கோபமாக இருப்பது தெரிந்தது.மேசை மீது அந்தச் சங்கிலையத் தூக்கி எறிந்து சத்தம்போட்டார்”ஏய்யா,கவரிங் நகைன்னு முதல்லயே சொல்லித்தொலைக்கறதுதானே? ஜம்பமா தங்கநகைமாதிரி புகார் எல்லாம் கொடுத்துட்டீங்க?எடுத்துட்டுப் போங்க”
குமாருக்கு அவமானமாக இருந்தது.

சங்கிலியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.

”என்னங்க?சங்கிலி கிடைச்சுடுச்சா” என்று ஆர்வமாகக் கேட்டாள்  .

”கிடைச்சது நித்யா.ஆனா கவரிங் நகை.போலிஸ் பிடிக்கிறதுக்கு முன்னாலயே அவன் ஏதோ பண்ணிட்டான் போல.போலிஸும் நம்பிட்டாங்க.அவங்க நம்ம மேல தப்பு சொல்றாங்க.இனிமே ஒண்ணும் செய்ய முடியாது”.

நித்யாவும் அவள் மாமியாரும்  ஏமாறத்துக்குள்ளாயினர்.

குமார் மனத்தில் ஓடிய எண்ணங்கள் அவர்களுக்குத் தெரியாது

என்னதான் நடந்திருக்கும்?

(தொடரும்)







வியாழன், ஜூன் 15, 2017

புரட்சித் தலைவர் சொன்னது சரியா?

ஒரு குட்டிக்கதை.

அக்பர்,பீர்பால் கதை

ஒரு நாள் அக்பர் தன் அவையிலிருந்த அறிஞர்களிடம் கேட்டார் ”உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.உங்கள் பதில் மூன்று சொற்களுக்கு மேல் போகக் கூடாது”

யாரும் பதில் சொல்லவில்லை.

அக்பர் பீர்பாலைப் பார்த்தார்.

பீர்பால் சொன்னார்”நான்கு விரற்கடை”

அக்பருக்குப் புரியவில்லை.

பீர்பால் சொன்னார்”கண்ணால் காண்பதெல்லாம் உண்மை;ஆனால் காதால் கேட்பவை உண்மையாகவும் இருக்கலாம்;பொய்யாகவும் இருக்கலாம். பெரும்பாலும் பொய்யே”

அக்பர் கேட்டார்”அதற்கு. ஏன் நான்கு விரற்கடை என்றீர்”

கண்ணுக்கும் காதுக்கும் இடையே உள்ள தூரம் நான்கு விரற்கடைதான் என்றார் பீர்பால்..

இப்போது கேள்வி,பீர்பால் சொன்னது சரியா என்பதே.

ஒரு சொல் வழக்கு உண்டு

“கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய்,தீர விசாரிப்பதே மெய்”

புரட்சித் தலைவர் ஒரு படத்தில் பாடுவார்”கண்ணை நம்பாதே.உன்னை ஏமாற்றும்”

ஒரு நிகழ்வைப் பார்க்கிறோம்.நம் கண்ணெதிரே நடப்பது எப்படிப் பொய்யாக முடியும்?பார்த்தவர் சொல்லும்போது கண்,காது,மூக்கு வைத்துச் சொல்கையில் அது பொய்யாகலாம்.ஆனால் பார்த்த நிகழ்வு எப்படி பொய்யாக இருக்கும்?


நிகழ்வு பொய்யல்ல;கண்  ஏமாற்றவில்லை.ஏமாற்றியது நம் எண்ணம்.

பார்க்கும் காட்சிக்கு பார்ப்பவர் மனதைப் பொறுத்து வெவ்வேறு பொருள் கற்பிக்கிறார்கள்.நிகழ்வு ஒன்றே;ஆனால் அதைப் புரிந்து கொள்வதைப் பொறுத்து அது உண்மையாகவும் பொய்யாகவும் மாறுகிறது.

பல படங்களில்,கதாநாயகன்,கதாநாயகியை எவருடனோ எங்கேயோ பார்த்து விட்டு ஆராயாமல்  சந்தேகப்படுகிறான்.(ஜெமினி கணேசனுக்குத்தான் அது போன்ற சந்தேகம் பல படங்களில் வந்து விடும்.)..

ஒரு நிகழ்வு.சாலையில் செல்லும் ஒரு பெண் தடுமாறி  விழப் போகிறாள்.அருகில் சென்று கொண்டிருந்த இளைஞன் அவளைப் பிடித்துத்தூக்கி விழாமல் காப்பாற்றுகிறான்..அருகில் நடந்து கொண்டிருந்தவருக்கு நிகழ்வு  விகல்பமாகத் தெரியாது.ஆனால் தொலைவில் இருந்து அவன் அவளைப் பிடித்து அணைத்துத்  தூக்குவதைப் பார்க்கும் சிலர்,நடு ரோட்டில் காதலா என்று தலையில் அடித்துக் கொள்ளலாம்...
.
ஒரு மண விலக்கு வழக்கறிஞரிடம் ஒரு முறை பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போது அவர் சொன்னார்”நீதி மன்றங்கள் எப்போதுமே பெண்கள் மீது அதிக பரிவுடன் இருக்கின்றன.ஒரு வழக்கில் கணவன் தன் மனைவி, ஒருவனுடன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டதைப் பார்த்ததாகச் சொல்லும்போது நீதிபதி கேட்டார்,அவர்கள் அறைக்குள் என்ன செய்தார்கள் என்பது உனக்கு எப்படித்தெரியும்?!”

இங்கு கண் பார்த்தும் பயனில்லை...


ஒரு செய்தியை உண்மையென உறுதியாகச்  சொல்ல நாம் ”என் கண்ணால பார்த்தேன் என்கிறோம்.

பிரச்சினை பார்வையில் இல்லை.;பார்த்ததைப் புரிந்து கொள்வதில்தான்

எனவே கண்ணை நம்பாதே என்று  எப்படிச் சொல்வது? கண்ணால் காண்பதும் பொய் என்று எப்படிச் சொல்வது.?

நீங்களே சொல்லுங்கள்




























ஞாயிறு, மே 28, 2017

ஹாலிடே ஜாலிடே

நூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு இளைஞன் அவளருகில் வந்தான்.

அவளருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது.

அவளிடம் மெல்லக் கேட்டான்”நான் இங்கே அமரலாமா?”

அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

பின் உரக்கச் கேட்டாள்”இன்று இரவு உன்னோடு தங்குவதா?என்ன நினைத்தாய்?”

அவள் சப்தம் கேட்டு நூலகத்தில் உள்ள அனைவரும் அவனையே பார்த்தனர்.

அவனுக்கு அவமானமாகி விட்டது.

அங்கிருந்து அகன்று ஒர் காலி இருக்கை தேடி அமர்ந்தான்.

சிறிது நேரம் சென்று அவள் அவன் அருகில் சென்றாள்.

சொன்னாள்”நான் ஒரு மனோதத்துவம் பயிலும் மாணவி.உங்கள் மன நிலையைப் பார்க்க 
எண்ணி அவ்வாறு செய்தேன்”

இளைஞன் உரக்கச் சொன்னான்”என்ன?ஓர் இரவுக்குப் பத்தாயிரம் ரூபாய் வேண்டுமா?மிக அதிகம்”

இப்போது அனைவரும் அவளையே பார்த்தனர்.  

அவள் குறுகிப் போனாள்.

அவன் சொன்னான்”நான் ஒரு வழக்கறிஞர்.யாரையும் குற்றவாளியாக்க என்னால் முடியும்!”

நன்றி:  பதிவர் குட்டன்.

வெள்ளி, மே 26, 2017

என்னதான் நடக்கும்...?

”அப்பா”

பெண்ணின் குரல் கேட்டுப் படித்துக் கொண்டிருந்த செய்தித்தாளைக் கீழே இறக்கிப் பார்த்தார் ராமனாதன்.

அவர் பெண் கவிதா.

“என்னம்மா”

அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்

“அப்பா!அசோக்கும் நானும் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்து விட்டொம்”

“என்னம்மா சொல்றே?இது ஏன் நடக்கக் கூடாதுங்கறதைப் பத்தி அன்னிக்கு அவ்வளவு நேரம் பேசினேனே.இன்னும் மனசு மாறலியா.”

“மாறாதுப்பா’

செவ்வாய், மே 16, 2017

ப.க.பு.மொ.4.....பொற்கைப் பாண்டியன்

பாண்டிய மன்னன் வழக்கம் போல் இரவுக்காவலின் பொருட்டு வீதி வலம் வந்து கொண்டிருந்தான்.

அப்போது ஒரு வீட்டிலிருந்து கேட்ட குரல்கள் அவன் கவனத்தை ஈர்த்தன.

அந்த வீட்டுத் தலைவன் வியாபார நிமித்தம் வெளியூர் செல்வதை மனைவியிடம் சொல்ல அவள் திருடர் பயம் இருக்கிறதே என்று கவலைப்பட,அவன் பாண்டியனின் செங்கோல் காக்கும் என்றுசொன்னான்.

மன்னன், மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக மகிழ்ந்து அந்த வீதியை தினம் இரவில் காக்க முடிவு செய்தான்.

சில நாட்கள் சென்றன.வழக்கம் போல் வீதி வலம் வருகையில் அந்தவீட்டிலிருந்து பேச்சுக் குரல் கேட்டது.மன்னன் ஐயமுற்று வீட்டுக்கதவைத் தட்டியபின்தான் உணர்ந்தான்,கேட்ட,கேட்கும் குரல் வீட்டுத்தலைவனுடையது என்று.தான் தட்டியது அவனுக்கு ஐயத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால்,அத் தெருவில் இருந்த அனைத்து வீடுகளின் கதவையும் தட்டிச் சென்றான் மன்னன்.

மறு நாள்...

அரசவையில் அமைச்சர்,பிரதானிகளுடன் அமர்ந்திருந்தான் பாண்டியன்.அப்போது அந்த வீதி மக்கள் எல்லோரும் வந்து முதல் நாள்யாரோ கதவைத் தட்டிய செய்தியைச் சொல்லி முறையிட்டனர்.

மன்னன் சொன்னான்”அவனைப் பிடித்து விடுவேன் விரைவில்.என்ன தண்டனை என்றுநீங்கள் சொல்லுங்கள்”

அவர்கள் சொன்னார்கள்”அவன் கையை வெட்ட வேண்டும்”

நிகழ்பவற்றைக் கவனித்து வந்தார் அமைச்சர்.அரசனின் முகமும் அவன் பேச்சும் அவருக்கு மன்னன் இதில் தொடர்புடையவனாக இருப்பான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தன

ஆம்.அந்தக்காலத்தில் அமைச்சர்கள் அறிவாளிகளாக இருந்தனர்!

அமைச்சர் எழுந்தார்”பொறுங்கள் மன்னா.எல்லார் வீட்டுக் கதவும் தட்டப்பட்டது எனில் எதோ காரணம் இருக்க வேண்டும்.எனவே தட்டியவன் பிடி பட்டவுடன்,காரணத்தை அறிந்து,அதன்பின் அதற்கேற்பவே தண்டனை வழங்க வேண்டும்.அவ்வாறின்றி தண்டனை வழங்கலாகாது” என்று சொல்லி மக்களிடமும் கேட்க அவர்களும் ஒப்புக் கொண்டனர்.

அமைச்சர் மன்னனிடம் “மன்னா!குற்றவாளியை நீங்கள் அறிவீர்கள் எனில்,விரைவில் வரச் செய்து விசாரிக்க வேண்டும்”.

“மன்னன் எழுந்தான்.ஆசனம் விட்டுக் கீழே வந்தான்”அமைச்சரே,பிரதானிகளே,குடி மக்களே நானே குற்றவாளி”என்றான். அமைச்சர் விவரம் கேட்க நடந்ததை எடுத்துரைத்தான்.

அமைச்சர் மக்களைக்கேட்டார். மக்கள் சொன்னார்கள் மன்னன் செய்தது குற்றமல்ல என்று. ஆனால்,மன்னன் தன் அவசரச் செயலுக்குத் தான் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என சொன்னான்.

அமைச்சர் சொன்னார் ”மன்னா!உங்கள் செயல் அச்சத்தையும் கலக்கத்தையும் அம்மக்களுக்கு அளித்தது என்பது உண்மை.எனவே அவர்களுக்கு அதற்காக ஈடு தர வேண்டும்.நீங்கள் அவசரப்பட்டதால் ஏற்பட்ட இக்குழப்பத்துக்குத் தண்டனை,அந்த வீதி வீடு ஒவ்வொன்றுக்கும் ஒரு பொற்கை செய்து மன்னர் வழங்க வேண்டும்”

மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

“பொற்கை அளித்தபாண்டியன்,பொற்கைப் பாண்டியன் வாழ்க எனக் குரல் எழுப்பினர்.

டிஸ்கி:எல்லா வீட்டுக் கதவையும் தட்டினான் என்றால் ஒரு வீட்டிலிருந்து கூடவா வெளியே வந்து பார்க்கவில்லை?அவ்வாறு ஒரு வீட்டிலிருந்து பார்த்திருந்தாலும் ,அடுத்த வீடுகளில் தட்டுபவனைப் பார்த்திருக்கலாமே.?பாண்டியன் ஆட்சியில் இரவு வெளி வர அவ்வளவு அச்சமா மக்களுக்கு...?

வியாழன், மே 11, 2017

பெண்மணி அவள் கண்மணி!


மரகதம்!பீரோவெல்லாம் நல்லாப்பூட்டி ஒருதடவைக்கு ரெண்டு தடவையாச் செக் பண்ணிடு

எல்லாம் பண்ணிட்டேன் .நீங்க கவலைப் படாமல் இருங்க.”’

எப்படிடீ முடியும்?”20 பவுன் நகை உள்ள இருக்கே.சனியன் பிடிச்ச லாக்கரும் கிடைக்க மாட்டேங்குது.”

எல்லாம் பத்திரமா இருக்கும்

இல்லடி.இந்த முத்து வேற கடன் வாங்கின 2 லட்சத்தை நேத்து ராத்திரித் திருப்பிக் குடுத்துத் தொலைச்சிட்டான்.அது வேற வீட்டில இருக்கே

நான் பாத்துக்கறேன்.பயப்படாதீங்க

எனக்கென்னவோ திக்கு திக்குன்னுதான் இருக்கு

கனவனும்மனைவியும் வெளியூரில் உறவினர் வீட்டுத் திருமணத்துக்கு செல்கின்றனர்.

புதன், மே 10, 2017

ப.க.பு.மொ. 2....சிபிச் சக்கரவர்த்தி

உப்பரிகையில் அமர்ந்து ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தார் சிபி.

இன்னும் சில தொடுகைகளே பாக்கி;ஓவியம் முழுமையடைந்து விடும்.

அப்போது பயத்துடன் குரல் எழுப்பியவாறே அவர் மடியில் வந்து விழுந்தது ஒரு வெண் புறா.

அதைத் துரத்தி வந்த  பருந்தொன்று மாடத்தின் சுவரில் அமர்ந்தது.

புறாவின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

சக்கரவர்த்தி சிபி அதைத் தடவிக் கொடுத்தார்.

திங்கள், மே 08, 2017

பழைய கள்,புதிய மொந்தை!-1..அவ்வையும் அதியனும்

”மன்னா!அங்கே பாருங்கள்.”

மந்திரி காட்டிய இடத்தைப் பார்த்தான் அதியமான்.

இருவரும் சில வீரர்களுடன் குதிரையில் சென்று கொண்டிருந்தனர்

“நெல்லி மரம்.இதில் என்ன புதிதாக?”மன்னன் கேட்டான்.

”அதோ உச்சியில் ஒரே ஒரு கனி இருக்கிறது பாருங்கள்.அது அபூர்வக் கனி.அதை உண்பவர் பல்லாண்டு நோயின்றி வாழலாம்.”

மன்னன் வீரர்களை அனுப்பி அதைப் பறித்து வரச் செய்தான்.

பட்டுத் துண்டில் பொதிந்து கவனமாக எடுத்துச் சென்றான்.

மந்திரி யோசித்தார்”யாருக்குத்தான் நீண்ட நாள் வாழ ஆசை இல்லை?”

அரன்மனையை அடைந்தனர்.

தகவல் கிடைத்தது தமிழ் மூதாட்டி அவ்வையார் காத்திருப்பதாக.

வேகமாகச் சென்றான் ;வணங்கினான்.

”தாங்கள் வந்திருப்பது எல்லையற்ற மகிழ்ச்சி அளிக்கிறது அவ்வை அவர்களே.”

சிறிது உரையாடலுக்குப் பின் அதியமான் நெல்லிக்கனியை எடுத்தான்.

அவ்வையிடம் கொடுத்து இதைத் தாங்கள் உண்ண வேண்டும் என்றான்.

அவ்வை யோசித்தார்.சாதாரணக் கனி என்றால் இவ்வளவுக் கவனமாகக் கொண்டு வந்திருக்க மாட்டான்.கனிவகைகள் பலவற்றை அளித்து உண்ணச் சொல்லும் மன்னன் ஒரு சிறு நெல்லிக்கனியைத் தருகிறான் என்றால் அதில் ஏதோ சிறப்பு இருக்க வேண்டும்.

கேட்டாள் மன்னனிடம்.

அவன் மழுப்பினான்.

வற்புறுத்திக் கேட்கையில் மந்திரி சொன்னார் அதன் மகத்துவம்.

வியந்தாள் அவ்வை மன்னனின் மாண்பு கண்டு.

அந்நேரம் இளவரசன்,சிறுவன் அங்கு வந்தான்

”வணக்கம் அவ்வைப்பாட்டியே”

வணங்கிய பின் தந்தையின் அருகில் சென்று நின்றான்.

சிந்தித்தாள் அவ்வை.

“மன்னா.உன் மகன் மிகுந்த அறிவுக்கூர்மையும் ஆற்றலும் உள்ளவன்.உனக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்று உன்னிலும் சிறப்பாகச் செயலாற்ற வல்லவன்.அவன் பல்லாண்டு வாழ்ந்து நாடு செழிக்க வேண்டும் இக்கனியை அவன் உண்பதே சாலச் சிறந்தது.”

மந்திரி ஆமோதித்தார்;மன்னனும் ஏற்றுக்கொண்டான்.

கனியை இளவரசன் உண்டான்!




வெள்ளி, மே 05, 2017

கொழு கொழு கன்னே......

சென்ற இடுகையின் முடிவில் கண்ணனைத் தவிர மற்ற ஆயர்கள் கையில் இருப்பது ஒரு கோலன்றிக் குழல் இல்லை என்று சொல்லியிருந்தேன்.

அது ஒருகதையை நினைவூட்டுகிறது.

குழந்தைகளுக்கான கதை.

படிக்கப் பொறுமை தேவை

கதை முடிவில் கதையின் முக்கியத்துவம் பற்றிச் சொல்வேன்

சனி, ஆகஸ்ட் 13, 2016

மரண அழைப்பு!



அன்பு நண்பரே/நண்பியே,

என் மிக நெருங்கிய நட்பு வட்டத்தைச் சேர்ந்த ஒருவர் நீங்கள் என்பதால் இந்த அழைப்பு உங்களுக்கு அனுப்பப் படுகிறது.

இந்த வார இறுதியை நான் உங்களுடன் கழிக்க விரும்புகிறேன்.எனது பண்ணை வீட்டில் வரும் சனி,ஞாயிறு ஆகிய நாட்களில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்,.முப்பது நண்பர்களை அழைத்திருக்கிறேன் .இரண்டு நாட்களும் உல்லாசமாகக் கழிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.இந்த வார இறுதி விழாவுக்கு எந்த உடைக்கட்டுப்பாடும் இல்லை. உங்களுக்கு விருப்பமான,வசதியான எந்த உடையும் அணியலாம்.பாட விரும்புபவர்கள் பாடலாம்.ஆட்டத்தில் நாட்டம் உள்ளவர்கள் ஆடலாம்.. நடிக்கத்தெரிந்தவர்கள்நடிக்கலாம்..ஆம்,ஒரே நோக்கம், கவலைகள் மறந்து அனைவரும்,நானும்தான், மகிழ்ச்சியாக இவ்விரு நாட்களைக் கழிக்க வேண்டும் என்பதுதான். .சுதந்திரமான சந்திப்பு.எந்த விதமான கட்டுப் பாடுகளும்,விதிகளும் இல்லை.ஓ,மறந்து விட்டேன்.மிக முக்கியமான விதி ஒன்று உண்டு.,யாரும் கண்ணீர் சிந்தக்கூடாது,எந்த சமயத்திலும்.

வாருங்கள்.ஒரு மகிழ்வான வார இறுதியைக் கழிக்க உதவுங்கள்

அன்புடன்
பெட்ஸி.

................................................................................
அழைப்புக் கிடைத்த அனைவரும் வார இறுதியில் குழுமினர்.சிலர் வயலின்,சிலர் கிடார்,என வாத்தியங்கள்.ஒரு வெண்ட்ரிலாக்கிஸ்ட் அவரது பொம்மையுடன். .அனைவரையும் ராதா வரவேற்றாள்.கைகுலுக்கினர்,கட்டித் தழுவினர்,கையில், கன்னத்தில் முத்தமிட்டனர்.

மகிழ்ச்சியான வார இறுதி தொடங்கிற்று.,ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டம். ராதாவுக்கு மிகவும் பிடித்த உணவு சிலர் கொண்டு வந்திருந்தனர்.அவளுக்குப் பிடித்த திரைப்படங்கள் திரையிடப்பட்டன. மது வகைகள்,வித விதமான உணவு எல்லாம் பரிமாறப்பட்டன.

இரண்டு நாட்கள் முடிவுக்கு வந்தன.குறிப்பிட்ட நேரம் வந்தது.ஆம் நேரமும் முன் கூட்டியே அவளால் திட்டமிடப்பட்டு விட்டது.

“நண்பர்களே!என் அழைப்பை ஏற்று என்னை வழியனுப்ப வந்த நீங்கள் 
 அனைவரும்  மிகவும்தைரியசாலிகள்.என் மகிழ்ச்சியே முக்கியம் என நினைப் பவர்கள்.உங்களுக்கு என் நன்றி.இப்போதுவிடை பெறும் நேரம் வந்து விட்டது ”  என்றாள் ராதா.

ஒவ்வொருவராக வந்து அவளிடம் விடை பெற்றுச் சென்றனர்.
 


அறையில் ராதாவும்,அவளது செவிலியும் மட்டும்.

செவிலி  சக்கர நாற்காலியை அந்த அறைக்கு தள்ளிச் சென்றாள்.

சட்ட பூர்வமான அனுமதியுடன்,மருத்துவர் கொடுத்த மருந்துகளை, ராதாவுக்குக் கொடுத்தாள்.அவற்றை மலர்ந்த முகத்துடன் சாப்பிட்ட ராதா செவிலியின் கையைக் குலுக்கினாள்.செவிலி பொங்கி வந்த கண்னீரை அடக்கிக்கொண்டாள், பெரும் முயற்சியுடன்.

ராதா துயிலில் ஆழ்ந்தாள்.

குணமாக்க முடியாத நோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருந்தவளுக்கு இனித் துன்பம் இல்லை.

ஆம்!மீளாத்துயில்

(கதையல்ல நிஜம்.டைம்ஸ் ஆஃப் இந்தியா 13-08-2016)

வியாழன், ஆகஸ்ட் 04, 2016

தேவனின் துப்பறியும் சாம்பு



தேவனுக்கு எரிச்சலாக இருந்தது.

தினமும் இது நடந்து கொண்டே இருக்கிறது.அவனும் ஓரிரு நாட்களில் நின்று விடும்,அவசரத்துக்கு எவரேனும் செய்திருக்கலாம் என நினைத்தான்.

ஆனால் அது தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.

அவனுக்குக் கோபமெல்லாம் செய்பவர் யாராயினும் அவனிடம் சொல்லி விட்டுச் செய்திருக்கலாமே என்பதுதான்.

இதை இப்படியே விட்டு விடக் கூடாது,இன்று யார் என்று கண்டு பிடித்து விட வேண்டும்.

ஒரு முடிவுக்கு வந்தான்.

அறையில் அவனையும் சேர்த்து நான்கு பேர்.

தினம் முதலில் குளிப்பது அவன்தான் .

வழக்கம்போல் குளித்து விட்டு வந்தான். டாம்கோ தலை முடித் தைலத்தைத் தடவித் தலை வாரிக் கொண்டான்.

சில ஏற்பாடுகளைச் செய்தான்.

அறைக்கு வெளியே வந்து நாற்காலியில் அமர்ந்து பத்திரிகையைப் பிரித்து வைத்துக் கொண்டான்,அறை வாசலைப் பார்க்க ஆரம்பித்தான்.

வெங்கி குளிக்கப் போனான். குளித்து விட்டுத் திரும்பி அறைக்குள் போனான்

சங்கர் ---------------------------do--------------------------------------------------------------- 

கடைசியாக ரவி குளித்து விட்டுத் திரும்பி வந்து அறைக்குள் போனான்.இரு நிமிடங்களில் தலையைத் துண்டால் மூடிக் கொண்டு மீண்டும் குளியல் அறைப் பக்கம் ஓடினான்.

மாட்டிக் கொண்டான்.திட்டம் பலித்து விட்டது

தினம் அவனது தலைமுடித் தைலத்தைத் தடவிக் கொண்டது யாரென்று தெரிந்து விட்டது

டாம்கோ தைலத்தை எடுத்து விட்டு அதே இடத்தில் அதேபோல் இருக்கும் டாம்கோ சாம்பு சீசாவை வைத்துப் பல நாள் திருடனைக் கண்டு பிடித்தாயிற்று

சாதாரண சாம்பு இல்லை அது.

துப்பறியும் சா(ஷா)ம்பு!

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2016

நேற்றைய பதிவில் மறைந்திருக்கும் சோதிடம்



நேற்றைய பதிவில் குரு 8 ஆம் வீட்டுக்கு வருவதால் இராசிக்குத் தீமை என்று ஒரு 

கதை எழுதியிருந்தேன்.அதில் சோதிடமும் இருக்கிறது.குரு வரும் 8ஆம் வீட்டுக்கு 

சொந்தக்காரர் யார்,கதையில்-ரவி,அதாவது சூரியன்.சூரியனின் வீடு சிம்மம்;அதாவது 

சிம்மத்துக்குக் குரு பெயர்கிறார்.எந்தராசிக்குஇது எட்டாம் வீடு?—

மகரத்துக்கு.அதாவது மகர ராசிக்கு 8இல் வரும் குருவால் தீமை என்பதாகும்.இதற்கு 

என்ன செய்வது.யார் உதவியாவது கேட்க வேண்டும்.இங்கு உதவ உறுதியளிப்பவர்

 ஆய்வாளர் ராகவேந்திரர்.அதாவது குரு கெட்.டதனால்,தீமை விலக,குரு

 ராகவேந்திரரை நாட வேண்டும் என்பதாகும்.

இது எப்படி இருக்கு?!.............