இன்று
ஒரு குட்டிக் கதையோடு தொடங்குகிறார் ஸ்வாமி
ஏன்
இந்தக் கதை என்பதைக் கடைசியில் விளக்குவார்
ஒரு
சிற்றூர்
ஒரு
ஞாயிற்றுக் கிழமை.
இரண்டு
சிறுவர்களுக்குச் செய்த குறும்பெல்லாம் அலுத்துப் போய்ப் புதிதாக ஏதாவது செய்யும்
ஆசை பிறந்தது
அருகில்
மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் அவர்கள் கண்ணில் பட்டன.
உதயமாயிற்று
புதிய குறும்பு.
மூன்று
ஆடுகளைப் பிடித்து அவற்றின் மேல் 1,2,4 என்று எண்கள் குறிப்பிட்டுப் பள்ளிக்குள் விட்டுக் கதவை மூடிவிட்டனர்.
திங்கள்
காலை பள்ளி திறந்ததும் வந்தவர்கள் அங்கு கிடக்கும் ஆட்டுப் புழுக்கைகளைக் கண்டனர்
ஏதோ
ஆடுகள் பள்ளிக்குள் நுழைந்து விட்டன எனத் தெரிந்து கொண்டனர்
தேடுதல்
ஆரம்பமாயிற்று
சிரிது
நேரத்தில் மூன்று ஆடுகளும் பிடிபட்டன..
பிடிபட்ட ஆடுகளின் மேல் எண்கள் 1,2,4 எழுதப்பட்டிருப்பதைக் கண்டனர்..
அப்படியானால்
3வது எண்ணுள்ள ஆடு எங்கே ?
பள்ளிக்குள் எங்கேயோதான் இருக்க வேண்டும்
அன்று
பகல் முழுவதும் பள்ளியின் இண்டு இடுக்கெல்லாம் தேடியும் 3ஆம் எண்ணுள்ள ஆடு
கிடைக்கவில்லை.
அன்று
பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
ஆசிரியர்கள்,எழுத்தர்கள் கடைநிலைப் பணியாளர்கள், தலைமை
ஆசிரியரும் முழுவதும் தேடும் பணியில் இறங்கி 3ஆம் எண்ணுள்ள ஆடு கிடைக்காமல்
வெறுத்துப்போயினர்.
இல்லாத
ஒரு ஆடு எப்படிக் கிடைக்கும்?!
ஏன்
இந்தக் கதை?
அவர்களைப்
போலத்தான் நாமெல்லாம்.
நம்மிடம்
இருக்கும் ஆடுகளை விட்டு விட்டு இல்லாத ஆடுகளைத் தேடிக் கொண்டி ருக்கிறோம்
நம்மிடம்
இருக்கும் திறமைகள்,வாய்ப்புகள்,வலிமை இவற்றை விட்டு விட்டு இல்லாத வற்றைத் தேடி
அலுப்படைகிறோம்.
இருப்பதை
விட இல்லாததே எப்போதும் பூதாகரமாகி நம்மை அச்சுறுத்துகிறது.
அந்த
நிலையிலிருந்து விடுபடுங்கள்.
முயலுங்கள்
முயன்றால்
முடியாததுண்டோ?
(ஸ்வாமி பித்தானந்தாவின் உரையிலிருந்து)