தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2022

வாழ்க்கை ஒரு விளையாட்டு

                                                                              

அந்த வேதனை மறைவதற்கு இரண்டு நாட்களாயிற்று.

வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜம்தான்.

ஆனால் இப்படி ஒரு தோல்வியை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

என்ன ஆயிற்று.

ஒரு இறுதி ஆட்டத்தில் இப்படி ஒரு தோல்வி அடைவது ,அதுவும் ஒரு காலத்தில் அந்த விளையாட்டில் கொடிகட்டிப் பறந்த ஒரு நாடு,பல மறக்க முடியாத வீரர்களைத் தந்த நாடு, வெட்கப்பட வேண்டிய செய்தியே

பொதுநலவாய ஹாக்கி இறுதி ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் 7-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது 

கோவில்பட்டியில் ஹாக்கி பயின்றவன்,தயான்சந்தை நேரில் பார்த்தவன்,ஓரிரு வார்த்தை பேசியவன்,அவரது மட்டை மாயததைக் கண்டவன்  என்ற முறையில் எனது வலி மிக அதிகம்.

நான் சிறுவனாக இருந்தபோது வானொலியில் கேட்ட ஒரு ஆட்டத்தின் நேர்முக வர்ணனையின் ஒரு பகுதி இன்னும் மறக்க முடியவில்லை.இந்தியா ,ஜப்பான் நடுகளுக்கிடையேயான போட்டி.இதோ அந்தப் பகுதி...ஆங்கிலத்தில்

“Gurudev to Deshmuk,Deshmuk to Gurudev,Gurudev to Dedhmuk,Deshmuk to Gurudev,Gurudev to Deshmuk,Deshmuk to Gurudev.........A Goal !

இந்தியா அன்று 11 கோல்கள் அடித்தது.

ஆனால் இன்றோ ,இந்தியா ஜப்பானிடத்தில் இருப்பது போல் தோன்றியது

கோவில்பட்டி குப்புசாமி நாயுடு நினைவு ஹாக்கிபோட்டியில் பல முறை. ஒரு அணியிடம் எதிர் அணி வாங்கிய பலத்த அடிகளைப் பார்த்திருக்கிறேன்.

கோவில்பட்டியிலேயே மூன்று அணிகள்--A,B,C  என்று. அதில் ஏஅணி சிறந்த அணி.மற்றும் லக்ஷ்மி மில்,பெரம்பூர் ரெயில்வேஸ், கோல்டன்ராக் ஆகிய சிறந்த அணிகள்.அப்போதெல்லாம் ரெயில்வே அணிகளில் பெரும்பாலும் சிறந்த ஆட்டககாரர்களாக விளங்கியவர்கள் ஆங்கிலோ இந்தியர்களே.

பெரம்பூரின் கார்,பொன்மலையின் காட்டர் நினைவில் நிற்பவர்கள்.

ஒரு முறை கோவில்பட்டி C  அணியில் ஆடுவதற்குக் கிடைத்த வாய்ப்பு பற்றி  அடுத்த  பதிவில்எழுதுகிறேன்.

..(இன்னும் வரும்)



11 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான தொடர் தொடர்கிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில ஆண்டுகளுக்குப் பின் திரும்பி வரும் என்னை
      உடன் கருத்துச்சொல்லி வரவேற்றிருக்கும் உங்களுக்கு நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  2. ஹை செபி சார் மீண்டும் வந்துவிட்டீங்களா சூப்பர்!! ஜாலிதான்! இப்போதுதான் எங்கள் தளத்தில் அப்டேட் ஆகியிருப்பதைப் பார்த்தேன். ஸாரி தாமதமாக வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகையும்,கருத்துக்களும்தான் ,நான் தொடர்ந்து எழுதுவதற்கான வலிமை தரும் டானிக்.
      நன்றி

      நீக்கு
  3. ஹாக்கி பற்றி ரொம்பத் தெரியாது என்றாலும் தொடரிலிருந்து தெரிஞ்சுக்கலாமே.

    நீங்களும் ஹாக்கி விளையாடியிருக்கீங்களா அடுத்த பகுதிக்குப் போகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக்காலத்தில் 5-3-2-1 வியூகம்.முன்னேறுபவர் வரிசை 5 பேரில்,வலது பக்கக் கடைசி ஆட்டக்காரன் நான்.

      நீக்கு
  4. எல்லோரும் கிரிக்கெட்டை சிறப்பித்துச் சொல்வார்கள்...  நீங்கள் ஹாக்கியைத் சொல்லி இருப்பது வியப்பு.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியர்களின் கிரிக்கெட் மோகத்தால்தான் நாம் ஹாக்கியை விட்டு விட்டடோம்
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு

  5. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ‘வாழ்க்கை ஒரு விளையாட்டு’ என ஆரம்பித்து வலைப்பக்கத்தில் ‘விளையாட’ வந்தமைக்கு நன்றி!

    கடைசியாக 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நாள் வெளியிட்டிருந்த ‘என்னதான் முடிவு? என்ற பதிவின் முடிவில் தொடரும் எனப் போட்டிருந்தீர்கள். நானும் எனது கருத்தை வெளியிட்டு தங்களின் அடுத்த பதிவிற்கு காத்திருந்தேன். அந்த தொடரைத் தொடருங்களேன் .

    வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜம்தான் என்று இருக்கும்போது , இந்த தோல்வியை எளிதாக ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே. . தாங்கள் பன்முகக் கலைஞர் என்பதை அறிவேன். ஆனால் தாங்கள் வளைத்தடிப் பந்தாட்ட (Hockey) வீரர் என்பது இப்போதுதான் அறிகிறேன். தாங்கள் கோவில்பட்டி அநீல் விளையாடிய பட்டறிவு பற்றி அறிய காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 2019 ஆம் ஆண்டுப் பதிவை நினவூட்டித் தொடரச் சொல்லியிருக்ககிறீர்கள்.அப்போதைய கற்பனை என்ன என்பது நினைவில்லை.நீங்கள் அதில் தந்திருக்கும் முடிவுகளும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன.எப்படி முடிக்கப் போகிறேனோ!!

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

      நீக்கு

  6. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ‘வாழ்க்கை ஒரு விளையாட்டு’ என ஆரம்பித்து வலைப்பக்கத்தில் ‘விளையாட’ வந்தமைக்கு நன்றி!

    கடைசியாக 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நாள் வெளியிட்டிருந்த ‘என்னதான் முடிவு? என்ற பதிவின் முடிவில் தொடரும் எனப் போட்டிருந்தீர்கள். நானும் எனது கருத்தை வெளியிட்டு தங்களின் அடுத்த பதிவிற்கு காத்திருந்தேன். அந்த தொடரைத் தொடருங்களேன் .

    வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜம்தான் என்று இருக்கும்போது , இந்த தோல்வியை எளிதாக ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே. . தாங்கள் பன்முகக் கலைஞர் என்பதை அறிவேன். ஆனால் தாங்கள் வளைத்தடிப் பந்தாட்ட (Hockey) வீரர் என்பது இப்போதுதான் அறிகிறேன். தாங்கள் கோவில்பட்டி அநீல் விளையாடிய பட்டறிவு பற்றி அறிய காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு