தொடரும் தோழர்கள்

சனி, ஆகஸ்ட் 20, 2022

திருச்சிற்றம்பலம்

 தொலைபேசி மணி ஒலித்தது.

எடுத்தேன்

முகமன் கூறினேன்"ஓம் நமச்சிவாய"

ஆம்.நான் போனில் ஹலோ சொல்வதில்லை.ஆனால் இப்போதெல்லாம்  தெரியாத எண்களிலிருந்து போன் வந்தால் ஹலோ சொல்லி விடுகிறேன்.

என் நண்பர் ஒருவர் வீட்டில் என்னை என் பெயர் சொல்லிக் குறிப்பிடுவதே இல்லை.ஓம் நமச்சிவாய என்றே குறிப்பிடத் தொடங்கி விட்டனர்.


இன்னொரு நண்பர் இருக்கிறார்.அவர் போனை எடுத்ததும்"திருச்சிற்றம்பலம்" என்று சொல்வார்.


என்ன சொன்னால்தான் என்ன?எல்லாம் என்னப்பன் தென்னாடுடைய சிவன் நாமம்தானே!


திருச்சிற்றம்பலம் என்றதும் நினைவுக்கு வருகிறார் திரு.ஜெகசிற்பியன்.

விகடன் சரித்திர நாவல் போட்டியில் அவரது "திருச்சிற்றம்பலம்" என்னும் நாவல் முதல் பரிசு பெற்றது.

ஆலவாய் அழகன்,நந்திவர்மன் காதலி போன்ற சரித்திரக்கதைகளையும்,பல சமூக நாவல்களையும்,சிறுகதைகளையும் எழுதியவர்.விகடனில் சில முத்திரைக்கதைகளையும் எழுதியவர்.


உங்களில் எத்தனை பேர் திருச்சிற்றம்பலக் கவிராயரைத் தெரியும்?

தொ.மு.சிதம்பர  ரகுநாதன் என்பது அவரது இயற் பெயர்.கம்யூனிச இயக்கத்தில் பற்றுக் கொண்டவர்..

எனக்கு என் கல்லூரி நாட்களில் அவர் கவிதைகள் மிகவும் பிடிக்கும்.

கோழை மனத் தாமசஙகள் ஏதுமின்றி

தாரணியில் சோசலிசம் நாமைமக்க எண்ணுவமின்னாள்.

என்று பாடியவர்.

சீன ஆக்கிரமிப்பின்போது அவஎ எழுதிய கவிதை மறக்க முடியாதது

"பல்லாயிரம் அடி மேல் பனி மலையின் உச்சியிலே

கொல்லாமல் கொல்லுகின்ற கொடுங்குளிரின் மத்தியிலே

பொல்லாத சீனரோடு போர் புரியும் நம் வீரம்

சொல்லால் வசப்படுமோ சொல் பொருளும் ஒத்திடுமோ"

பின்னாளில் என்ன ஆனார் எனத் தெரியவில்லை

ஒரு கேள்வி

"திருச்சிற்றம்பலம்" என்று ஒரு படம் வந்திருக்கிறதாமே?

பக்திப் படமோ?











14 கருத்துகள்:

  1. நீண்ட நாட்களுக்குப் பின் தங்களின் தளத்திற்கு வருகிறேன். இனி தொடர்வேன்

    பதிலளிநீக்கு
  2. ஹா.. ஹா.. இறுதியில் கேள்வி...
    தனுஷிடம் கேட்டு சொல்கிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தைப் பார்த்துக்கூட சொல்லலாம்!நன்றி கில்லர்ஜி

      நீக்கு
  3. எனக்கு திருச்சிற்றம்பலம் என்றால் நினைவுக்கு வருவது இரண்டு விஷயங்கள்...   முதலாவது திருவருட்ச்செல்வர் படத்தில் சிவாஜி கணேசன் உணர்ச்சிவசப்பட்டு கூறும் "திருச்சிற்றம்பலம்...   திருச்சிற்றம்பலம்.."  இரண்டாவது தர்மபுரம் ஸ்வாமிநாதன் குரலில் "திருச்சிற்றம்பலம்" என்று தொடங்கி வேயுறு தோளிபங்கன்" என்று தொடரும் கோளறுபதிகம் பாடல்.

    பதிலளிநீக்கு
  4. திருச்சிற்றம்பலம் - தலைப்பைப் பார்த்ததும், நான் எழுதிய (இன்னும் எங்கும் போடவில்லை. நெடுங்கதை....இன்னும் தட்டிக் கொட்ட வே ண்டும்...) கதை ஒன்றில் ஒரு கதாபாத்திரம் - எதற்கும் தென்னாடுடைய சிவனே போற்றி என்று சொல்வதாகவே இருக்கும்.

    திருச்சிற்றம்பலக் கவிராயரைத் தெரியும்?//

    ஓ தெரியுமே!!! ஹிஹிஹி கூடவே விவேக் ஜோக் நினைவுக்கு வருகிறது!!!

    தொமுசி கதைகளும் எழுதியிருக்கிறாரே! நான் கொஞ்சம் அவரது கதைகளை எடுத்து வைத்திருக்கிறேன்.

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் தட்டிக் கொட்டி வெளியிடுவீர்கள் என நம்புகிறேன்.என் கல்லூரியில் தமிழ் மன்றத்தில் ஒரு முறை கவிராயர் உரையாற்றினார்.

      நீக்கு
  5. "திருச்சிற்றம்பலம்" என்று ஒரு படம் வந்திருக்கிறதாமே?

    பக்திப் படமோ?//

    குறும்பு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. பழந்தமிழகத்தில் முகமன் கூறுவதெல்லாம் திருச்சிற்றம்பலம் என்று தான் - என்று எங்கள் தமிழாசிரியர் சொல்லியிருக்கின்றார்..

    பிள்ளையார் சுழி என்று நாம் போடுகின்ற " உ " கூட ,

    உலகம் சிவமயம் என்பதைக் குறிக்கும் சுருக்கு எழுத்து..

    பதிலளிநீக்கு


  7. சுவையான தகவல்களை தங்கள் பாணியில் தந்திருக்கிறீர்கள். திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைபெயரில் கவிதை எழுதிய எழுத்தாளர் தொ மு சிதம்பர ரகுநாதன் பற்றி இன்னும் சில தகவல்கள். அவரது பிறந்தநாள் – அக்டோபர் 20 அவருடைய தாத்தா சிதம்பரத் தொண்டைமான், புகழ்பெற்ற ஒரு தமிழறிஞர். `ஸ்ரீரெங்கநாதர் அம்மானை’, `நெல்லைப்பள்ளு’ போன்ற நூல்களை எழுதியவர். ரகுநாதனின் அப்பா தொண்டைமான் முத்தையா, சிறந்த ஓவியர்; புகைப்படக் கலைஞர்.இந்திய ஆட்சிப்பணியில் இருந்த எழுத்தாளர் பாஸ்கர தொண்டைமான் இவரின் உடன்பிறந்த சகோதரர்.

    திரு சிதம்பர ரகுநாதன் எழுத்தாளர் புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பர். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது படைப்புகளை சேகரித்து வெளியிட்டுள்ளார். மேலும் புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.

    தன் இறுதிக்காலத்தை அவர் திருநெல்வேலியிலும் பாளையங்கோட்டையிலும் கழித்த அவர் 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் நாள் பாளையங்கோட்டையில் காலமானார்.

    தமிழர்கள் மறந்து போன எழுத்தாளார்களில் இவரும் ஒருவர்.

    பதிவின் இறுதியில் "திருச்சிற்றம்பலம்" என்று ஒரு படம் வந்திருக்கிறதாமே? பக்திப் படமோ? என்று வினவியிருக்கிறீர்கள். அப்படி ஒரு படம் வந்திருக்கிறதா என்ன?

    பதிலளிநீக்கு