தொலைபேசி மணி ஒலித்தது.
எடுத்தேன்
முகமன் கூறினேன்"ஓம் நமச்சிவாய"
ஆம்.நான் போனில் ஹலோ சொல்வதில்லை.ஆனால் இப்போதெல்லாம் தெரியாத எண்களிலிருந்து போன் வந்தால் ஹலோ சொல்லி விடுகிறேன்.
என் நண்பர் ஒருவர் வீட்டில் என்னை என் பெயர் சொல்லிக் குறிப்பிடுவதே இல்லை.ஓம் நமச்சிவாய என்றே குறிப்பிடத் தொடங்கி விட்டனர்.
இன்னொரு நண்பர் இருக்கிறார்.அவர் போனை எடுத்ததும்"திருச்சிற்றம்பலம்" என்று சொல்வார்.
என்ன சொன்னால்தான் என்ன?எல்லாம் என்னப்பன் தென்னாடுடைய சிவன் நாமம்தானே!
திருச்சிற்றம்பலம் என்றதும் நினைவுக்கு வருகிறார் திரு.ஜெகசிற்பியன்.
விகடன் சரித்திர நாவல் போட்டியில் அவரது "திருச்சிற்றம்பலம்" என்னும் நாவல் முதல் பரிசு பெற்றது.
ஆலவாய் அழகன்,நந்திவர்மன் காதலி போன்ற சரித்திரக்கதைகளையும்,பல சமூக நாவல்களையும்,சிறுகதைகளையும் எழுதியவர்.விகடனில் சில முத்திரைக்கதைகளையும் எழுதியவர்.
உங்களில் எத்தனை பேர் திருச்சிற்றம்பலக் கவிராயரைத் தெரியும்?
தொ.மு.சிதம்பர ரகுநாதன் என்பது அவரது இயற் பெயர்.கம்யூனிச இயக்கத்தில் பற்றுக் கொண்டவர்..
எனக்கு என் கல்லூரி நாட்களில் அவர் கவிதைகள் மிகவும் பிடிக்கும்.
கோழை மனத் தாமசஙகள் ஏதுமின்றி
தாரணியில் சோசலிசம் நாமைமக்க எண்ணுவமின்னாள்.
என்று பாடியவர்.
சீன ஆக்கிரமிப்பின்போது அவஎ எழுதிய கவிதை மறக்க முடியாதது
"பல்லாயிரம் அடி மேல் பனி மலையின் உச்சியிலே
கொல்லாமல் கொல்லுகின்ற கொடுங்குளிரின் மத்தியிலே
பொல்லாத சீனரோடு போர் புரியும் நம் வீரம்
சொல்லால் வசப்படுமோ சொல் பொருளும் ஒத்திடுமோ"
பின்னாளில் என்ன ஆனார் எனத் தெரியவில்லை
ஒரு கேள்வி
"திருச்சிற்றம்பலம்" என்று ஒரு படம் வந்திருக்கிறதாமே?
பக்திப் படமோ?