என்
தனியான பயணங்கள் எப்போதும் ஒரே மாதிரியாக அமைந்ததில்லை. தில்லி யிலிருந்து சென்னை
வரும்போது ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு மாதிரி அமையும். ஒரு முறை சுற்றியிருப்பவர்களுடன்
கலகல உரையாடலில் நேரம் கழிப்பேன்;ஒரு முறை யாருடனும் பேசாமல் புத்தகத்தில் மூழ்கி
நாளைக் கழிப்பேன். ஒரு முறை சாப்பிடுவதும் தூங்குவதும் தவிர வேறெதுவும் நடக்காது.
பயண நாளில் என் மன நிலையைப் பொறுத்தது என் விருப்பு வெறுப்புகள்.!என் கல்லூரி
நாட்களில் பயணிக்கும்போது கையில் இயான் ஃப்ளெமிங்க் நிச்சயம்!
பயணத்தில் முன்பெல்லாம் வாக்மேன் இப்போதெல்லாம் ஐபாட் இவற்றில் ஏதோ கேட்டபடிப்
பலர் பயணிப்பதைக் கண்டிருக்கிறேன்.ஒரு முறை ஜெயகாந்தன் சொன்னார்”என்னுள் நானே ஓர்
இசையை உருவாக்கி ரசித்துக் கொண்டிருக்கிறேன்” என்று.நீங்களும் கவனித்திருக்கலாம்,பயணத்தின்போது
உங்களுக்குப் பிடித்த ஒரு பாட்டு எங்கிருந்தோ ஒலித்தபடியே உங்களுடன் கூட வருவதை.நான்
கூட நினைப் பதுண்டு,வழியில் இருக்கும் இடம் ஒன்றிலிருந்து அப்பாட்டுக் கேட்கிறதோ
என்று. ஆனால் அது எவ்வாறு தொடர்ந்து வர முடியும்?
அந்த இசை தவிர நான் வேறு எந்த இசையையும் கேட்பதில்லை.எனக்கு எரிச்சல் தரும்
ஒன்று,பேருந்துகளில் அலற விடும் இசைதான்.இசையின் மென்மை தொலைந்து போய்,மனத்தை
வருடிக்கொடுக்கும் தன்மை அங்கு காணாமல் போகிறது.பயணிக்கும்போது சில நேரங்களில் வாய்க்குள் முணு முணுக்கும் இசை என்றால் அது
பெரும்பாலும் ஏதாவது கர்நாடக சங்கீதமாகவே
இருக்கும்; தப்பித் தவறிச் சப்தம் வெளியே கேட்காமல் பார்த்துக் கொள்வேன்;பின்
விளைவுகள் பற்றிய பயம்தான்!
பயண
நேரம் என்று பார்த்தால்,சிறு பயணமாயின் வசதிப்படும் நேரம்;நீண்ட பயண மாயின் வசதியான
வண்டியின் நேரம் அவ்வளவே.வாழ்க்கைப் பயணத் திலேயே சிறந்த துணை நமக்கு நாமே எனும்போது
,இப்பயணங்களில் யார் துணை?
எனக்கு
வெளிநாடுகள் செல்ல ஆர்வம் இல்லை;ஆனால் நம் நாட்டிலேயே பார்க்க வேண்டிய இடங்கள்
எத்தனையோ?இந்த வாழ்க்கைப் பயணத்தில் சிலவற்றையேனும் காண இயலுமா,அல்லது கனவாய்ப்
போகுமா?
அவன்தான்
தீர்மானிப்பான் .