தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜனவரி 12, 2016

ஆண்டாளின் சமையலறை!
”வைதேகி,வைதேகி”

“ஏன்னா கூப்பாடு போடறேள்”

இன்னிக்கு என்னதேதி

இதைக் கேக்கறதுக்கா கூப்பிட்டேள்

இல்லடி ;ஒனக்கு நெனவிருக்கா பாத்தேன்

இது கூடத்தெரியாதா? 12

 மார்கழி மாசம் என்ன தேதி? 27 டி

அதுக்கென்ன?

இன்னிக்குக் கூடாரவல்லியாச்சே!

தெரியுமே இன்னிக்குச் சக்கரைப் பொங்கல் ஞாபகம் வந்துடுத்தாக்கும்.ஏதாவது ஒரு பண்டிகைன்னு  சொல்லி விதவிதமாத் தின்னுட்டு அஜீர்த்தில அவஸ்தைப் பட வேண்டியது! அன்னிக்கு அப்படித்தான்;அனுமத் ஜெயந்திக்கு உளுந்தவடை பண்ணி னேன்; எத்தனை வடை தின்னேள்னு ஒங்களுக்கும் தெரியாது அந்த அனுமாருக்கும் தெரியாது. அப்பறம் ரெண்டு நாள் பத்தியம்.இன்னிக்குச் சக்கரைப் பொங்கல். கொஞ்சமாத்தான் பண்ணப் போறேன்

அடியே!எவ்வளவு பண்ணாலும் அதை நன்னாப் பண்ணணும்.நெய்யைக் கஞ்சத்தனம் பண்ணாம ஊத்தணும்!அள்ளிச் சாப்பிட்டா நெய் அப்படியே முழங்கை வழியா வழிஞ்சு ஓடணும்!

ஆமா! இன்னிக்கு நெய் ஓடும்;நாளைக்கு டாக்டர் கிட்ட நீங்க ஓடணும்;இந்தக் கொழுப்பு குறைய பத்து நாள் ஓடணும்! அதெல்லாம் அந்தக்காலத்துக்குச் சரின்னா! இப்பல்லாம் மாறிடுத்து;சக்கரை வியாதி,கொலஸ்ட்ரால்னு ஆயிரம் வியாதி.

போங்கோ,போய் மொதல்ல ஸ்நானம் பண்ணிட்டுக் கோவிந்தனைச் சேவிச்சுட்டு வாங்கோ; அப்பறம்தான் காபியே!

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்---
படத்தில் இருப்பது அக்கார அடிசில்! சகோதரி ஜெயஸ்ரீ கோவிந்தராஜனுக்கு நன்றி
எப்படிச் செய்வது? செய்முறை அவர் பதிவில்!
29 கருத்துகள்:

 1. ஆஹா, பதிவும் படமும் அக்கார அடிசல் போலவே மிகவும் இனிமை. என் நாக்கில் நீர் ஊற வைத்துவிட்டீர் நீர் ! பகிர்வுக்கு நன்றிகள், சார்.

  பதிலளிநீக்கு
 2. கோதாவரி... கோதாவரி.... என்ற குரலும் நினைவில் சேர்ந்து ஒலிக்கிறது! நாங்கள் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டாச்சு! அப்போ நீங்க?!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் பித்தா பித்தா என்று கூப்பிட்டு அந்தப் பித்தன்,பிறைசூடியே வந்து பொங்கல் தந்தால்தான் உண்டு!
   நன்றி ஸ்ரீராம்

   நீக்கு
 3. ஒவ்வொரு ஆண்டும் தைத் திங்கள் 27 ஆம் நாள் வரும்போது ‘கூடாரவல்லி’ யை நினைவுபடுத்தி விடுகிறீர்கள். பதிவை படிக்கும்போது நெய் மிதக்கும் சர்க்கரைப் பொங்கல் போன்ற அக்கார அடிசிலை உடனே சாப்பிட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள்! பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 4. அக்கார அடிசிலின் மணம் வீசியது...
  ஆன்மீக மணம் வீசியது...
  ஆனால்
  கோவிந்தனை சேவித்தபின் தரும் துளசி தீர்த்தமணம் பதிவிடவில்லை என்றாலும் கோவிந்தனை நினைத்தபோதே மணம் வீசுகிறதே அய்யா!

  பதிலளிநீக்கு
 5. ஆகா
  சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற உணர்வு
  மேலிடுகிறது ஐயா
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
 6. நெய் அபுதாபி வரை மணக்கிறது ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவ்வளவு நல்ல நெய் போலும்!ஆன்மீக நெய்!
   நன்றி கில்லர்ஜி

   நீக்கு
 7. கூடாரை வல்லியை நினைவுப்படுத்திய பதிவுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்
  ஐயா
  சுவையான உணவு... மணம் வீசுகிறது..ஐயா.கற்பனையில்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 9. எத்தனை கலன்கள்...? எவ்வளவினிமை!

  சுவை தேன்.

  நன்றி ஐயா.


  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. மார்கழி 27 கூடாரவல்லி...தை 27 அல்ல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொங்கல் நினைவில் அவருக்கு மாதம் பெயர் கூட மறந்து விட்டது!ஹி ஹி
   நன்றி வித்யா(என் பெண்ணின் பெயரும் ஸ்ரீவித்யாதான்)

   நீக்கு
 11. 2016 தைப்பொங்கல் நாளில்
  கோடி நன்மைகள் தேடி வர
  என்றும் நல்லதையே செய்யும்
  தங்களுக்கும்
  தங்கள் குடும்பத்தினருக்கும்
  உங்கள் யாழ்பாவாணனின்
  இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 12. இன்னாளும் எந் நாளும் நன்னாளாய் அமைய இறைவனை வேண்டியும், தங்கள் நலமுடன் வாழவும் பிரார்த்தித்து, தங்களின் பொங்கல் நல்லாசி வேண்டி... இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அய்யா!

  பதிலளிநீக்கு
 13. மூட நெய் பெய்து முழங்கைவழிவார...இப்படித்தான் பால் சோறு அன்று செய்வார்களாம்..(அக்காரவடிசல்) எங்கள் வீட்டிலும் பிராபல்யம் இந்த வடிசல். ரெயில்வே ட்ராக்குக்கு அந்தப்பக்கமிருந்து இந்தப்பக்கம் வரை மணக்குது! லேட்டானாலும்..மணக்குதே!!

  கீதா

  பதிலளிநீக்கு