தொடரும் தோழர்கள்

வியாழன், ஜூன் 30, 2011

செவ்வாய், ஜூன் 28, 2011

அம்மாவே சரண்!

சமீபத்தில் நண்பர் ஏ.ஆர்.ராஜகோபாலன் அவர்கள் அடுத்த பிறவி என்ற தலைப்பில் மனதைத் தொடும் கவிதை ஒன்று எழுதியிருந்தார்.அதைப் படித்ததும்,ஆதி சங்கரரின் ”மாத்ரு பஞ்சகம்” என்ற ஸ்லோகம் நினைவுக்கு வந்தது.

உறவுகள் அனைத்திலும் உயர்ந்த உறவு,தாய் என்ற உறவு. தாய்ப் பாசம் என்பது சன்னியாசியையும் விடுவதில்லை. தனது தாயின் மரணத்தை எண்ணிக் கலங்கி ஐந்து ஸ்லோகங்களால் தன் மன உணர்வுகளை வெளியிடுகிறார் ஜகத்குரு ஆதிசங்கரர்.நம்மையும் கலங்கச்செய்கிறார்.அந்த ஸ்லோகங்களின் தமிழாக்கம் இதோ:-

1)என்னை என் தாய் வயிற்றில் சுமந்து,பத்து மாதமும் பட்ட சிரமத்துக்கு நான் என்ன கைம்மாறு செய்திருக்கிறேன்!
பிரசவ சமயத்தில் என் தாய் அனுபவித்த சொல்லொணா வலிக்கு ஈடாக நான் என்ன செய்திருக்கிறேன்!
என் நலனைக் கருதி ருசியற்ற உணவை உண்டு வாழ்ந்த என் தாய்க்கு ஏதாவது செய்திருக்கிறேனா ?
எனக்காக உறக்கமின்றிக் கண்விழித்து,உடல் இளைத்து என் மலத்தில் படுத்து
என்னைக் காத்த என் தாயாருக்கு என்ன செய்திருக்கிறேன்!
ஒரு தாயின் செயல்களுக்கு யாராலும் கைம்மாறு செய்ய முடியாது,
எனவே அம்மா,உன்னை நான் வணங்குகிறேன் .ஏற்றுக்கொள்!

2)நான் கல்வி கற்கச் சென்றபோது, ஒரு நாள் உறக்கத்தில் நான் சந்நியாசியாவது போல் கனவு கண்டு,அழுது கொண்டே குருகுலம் வந்து அங்கிருந்த அனைவரையும் கதறி அழச் செய்த என் தாயே! உனக்கு வணக்கம்.

3)அம்மா! நீ முக்தி அடையும் சமயம் உன் வாயில் சிறிது நீராவது ஊற்றினேனா? இறந்த தாய்க்குச் செய்ய வேண்டிய கர்மாக்களாகிய சிராத்தம்,தர்ப்பணம் ஏதாவது செய்தேனா?உன் கடைசி நேரத்தில் உன் காதில் தாரக மந்திரமாவது ஓதினேனா?

எதுவும் செய்ய அதிகாரமில்லாததாலும்,சந்நியாசியானதால் வைதீகக் கர்மாக்கள் எதுவும் செய்ய இயலாமல் போனதாலும்,மனம் கலங்கி நிற்கும் உன் மகனான என்னிடம் தயவு செய்யம்மா!உன் தாமரைத்தாள் பிடித்து வேண்டுகிறேன்!

4)அம்மா! என்னை முத்தே,கண்ணே,ராஜா,என்றெல்லாம் சீராட்டி,சிரஞ்சீவியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தி,எனக்குப் பாலூட்டித் தாலாட்டி வளர்த்த என் அன்னைக்கா வேகாத அரிசியை நான் வாயில் இடுவேன்?இதைப் பொறுக்க முடியவில்லை தாயே!நீயே சரண்.

5)அம்மா,என்னை பெற்றபோது பொறுக்க முடியாத வலியில்,அம்மா!அப்பா! சிவபெருமானே!கோவிந்தா! ஹரே முகுந்தா!என்றெல்லாம் அழைத்த என் கருணைத் தெய்வமே!என் இரு கைகளையும் தூக்கிக் கூப்பி,உன்னைச் சரணடைகிறேன்!

திங்கள், ஜூன் 27, 2011

பெருமைக்குரிய ஏழு!

ஏழு என்பது ஒரு முக்கியமான எண்!

எண் கணிதத்தில் இது கேதுவின் எண்.கேது ஞான காரகன்.இந்த எண்ணின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் நிறைகுடம் போன்றவர்கள்.ஆழ்ந்த அறிவுக்கூர்மை உடையவர்கள். ஓரளவுக்கு நிலையான மனம் உள்ளவர்கள்(ஸ்திதப் பிரக்ஞர்கள்)இயற்கை ஞானம் உள்ளவர்கள்(என் பிறந்த தேதி 25--2+5=7!).

வானவில்லின் நிறங்கள் ஏழு!வானத்தில் வண்ணக்கலவையாக வானவில் தோன்றும் போது,அதன் அழகில் மயங்காதார் யார்!அடிப்படையான ஏழு நிறங்கள் இந்த விப்ஜியார்தான். மற்ற அனைத்து நிறங்களும் இவற்றின் சேர்க்கையே!

இசையின் சுரங்கள் ஏழு.ஸ,ரி,க,ம,ப,த,நி என்பவை அவை.நமது இசையில் மட்டுமல்ல.மேற்கத்திய இசையிலும் ஏழு சுரங்கள்தான். -டோ,ரே,மி,ஃபா.சோ,லா,டி (do,re,mi,fa,so,la,ti) என்பவை அவை.

சவுண்ட் ஆஃப் மியூசிக் படத்தில் ஒரு இனிமையான பாடல் கேட்டிருப்பீர்கள்-
இந்த சுரங்களை வைத்துப் புனையப்பட்ட பாடல்-” Do a deer a female deer”
எனத்தொடங்கும் பாடல்.

மனித உடலில் இயங்கும் சக்கரங்கள் ஏழு—மூலாதாரம்,ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம்,விசுத்தி,ஆக்ஞை,சகஸ்ராரம் என்பவை அவை.மூலாதார சக்தி என்பது முதிகெலும்பின் கடைசியில் அமைந்துள்ளது.இந்தச் சக்தியை மேலேற்றி சகஸ்ராரத்தை அடையச் செய்யவேண்டும். இந்தக் குண்டலினி யோகம் பற்றித் திருமூலர் நிறைய எழுதியுள்ளார்.அது பற்றி எனது மற்றப் பதிவில் இயலும்போது எழுதுகிறேன்.

எம்பெருமான் வெங்கடாசலபதியின் மலைகள் ஏழு.எனவேதான் அவன் ஏழுமலையான்.

சமுத்திரங்கள் ஏழு—ஆர்க்டிக்,அண்டார்டிக்(சதர்ன்),வடக்கு பசிஃபிக்,தெற்கு பசிஃபிக்,வடக்கு அடலாண்டிக்,தெற்கு அடலாண்டிக்,இந்துமகா என்பவை அவை.

உலக அதிசயங்கள் ஏழு.இப்போது புதிய அதிசயங்களாகத்தேர்வு செய்யப்பட்டவை--
சிச்சென் இட்சா-மெக்சிகோ;மீட்பர் கிறிஸ்து சிலை-பிரேசில்;கொலோசியம்-இத்தாலி;சீனப் பெருஞ்சுவர்-சீனா;மாச்சு பிச்சு-பெரு(இதென்ன அச்சுப் பிச்சு மாதிரி!)பெட்ரா-ஜோர்டான்;தாஜ்மஹால்-இந்தியா.

முன்பெல்லாம் வேலூரில் ஏழு அதிசயங்கள் சொல்வார்கள்!---கடவுள் இல்லாத கோவில்,ராஜா இல்லாத கோட்டை,தண்ணீர் இல்லா ஆறு,அதிகாரம் இல்லாத போலீஸ்(பயிற்சிக் கல்லூரியைக் குறிக்கிறது),மரமில்லாத மலை,வீரமில்லா ஆண்கள்,அழ்கில்லாத பெண்கள்!இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்குத் தெரியாது!

மனிதர்கள் தவிர்க்க வேண்டிய ஏழு பாவங்களைப் பற்றி காந்திஜி சொல்லியிருக்கிறார்.அவை--

உழைப்பற்ற செல்வம்

நேர்மையற்ற வியாபாரம்

ஒழுக்கமற்ற கல்வி

ஈடுபாடற்ற வழிபாடு

மனிதத் தன்மையற்ற அறிவியல்

மனச்சாட்சியற்ற இன்பம்

கொள்கையற்ற அரசியல்!

இந்தப்பாவங்கள் எல்லாம் இன்று வாழ்க்கை நெறியாகிப் போய் விட்டனவே!


கடைசியாக ஆனால் அனைத்திலும் முக்கியமாகப் பதிவர்கள் ஆவலுடன் எதிர்நோகிக் காத்திருக்கும் எண் இந்த ஏழு.தமிழ்மணத்தில் ஆறு ஓட்டு விழுந்த பின் இந்த ஏழாவது ஓட்டு,காக்க வைக்கும்,எதிர் நோக்க வைக்கும்,காத்து ஏங்க வைக்கும்! பின்னூட்டத்தில் சிலர் பெருமையாய்க் கூறுவர்”ஏழாவது ஓட்டுப் போட்டு விட்டேன்” என்று.பதிவர் நன்றிப் பெருக்கில் திக்கு முக்காடி விடுவார்!

ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல்!
ஏழு ஓட்டுக்களுக்கு எத்தனை தேடல்!
கட்டாயம் போடணும் ஓட்டு
ஆக்கணும் பதிவை ஹிட்டு
இல்லைன்னா விழும் திட்டு!


(இப்போ நான் போறேன் உங்களை விட்டு!)

வர்ட்டா?!

வெள்ளி, ஜூன் 24, 2011

உணவு உலகம்-2.

திருச்சி கடைத்தெருவில் அப்போது அம்பி ஐயர் ஓட்டல் என்று ஒன்று இருந்தது. மாலை நேரத்தில் தினமும் ஸ்பெசல் ஆக ஒரு இனிப்பு ஒரு காரம் செய்வார்கள்.காத்திருந்து வாங்கிச் சாப்பிடுவர் பலர்.நானும் கீரன் அவர்களும் அங்கு ரெகுலர்.சுடச் சுட அல்வா/கேசரி/ஜாங்கிரி என்று இனிப்பும், போண்டா/பஜ்ஜி/வடை( மனோ எங்கே போயிட்டீங்க!) என்று கார வகைகளும் மேலும் மேலும் சாப்பிடத்தூண்டும்.சொந்தக்காரர் அதை ஒரு வெறும் தொழிலாக நடத்தவில்லை.ஒரு வித ஈடுபாட்டுடன் நடத்தி வந்தார்.அவருக்கு அப்படி ஒரு ஓட்டல் நடத்த அவசியமே இல்லை.ஏனென்றால் அவரது மகன் திரு.வேதநாராயணன்தான் அப்போது தஞ்சை மாவட்டக் கலெக்டர்!

மாயவரம்/ RTC லாட்ஜ்களில் சாப்பிடாத இரவுகளில்,இரவு உணவு கொஞ்சம் வித்தியாசமாக அமையும்.கடைத்தெருவில் ஒரு கடிகாரக் கடை இருந்தது.அந்தக் கடை மாலை மூடிய பின்,அந்தக்கடை வாசலில் வேறு ஒரு கடை திறக்கப்படும். ஸ்ரீரங்கத்திலிருந்து ஒரு அய்யங்கார் புளியோதரை,சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல்,தயிர்சாதம் என்று எல்லாவற்றையும் ஒரு ஜட்கா வண்டியில் வைத்துக் கொண்டு வந்து அங்கு கடை போட்டு விடுவார்.நான்,வைத்தியநாதன் , கீரன் மூவரும் பல நாட்கள் அந்த சாலை ஓரக் கடையில் ருசித்துச் சாப்பிட்டிருக்கிறோம்! அந்த மாதிரிச் சுவையான புளியோதரை இன்று வரை நான் சாப்பிடவில்லை!

பெண்களை விட ஆண்கள்தான் உணவுப் பிரியர்களாக இருக்கிறார்கள்.நல்ல சுவையான உணவை ரசிக்கிறார்கள்.எனவேதான் சொன்னார்களோ—
The way to a man’s heart is through his stomach(ஒரு ஆணின் இதயத்துக்கு நுழை வாயில் அவன் வயிறே!) என்று.

ஒரு லிமரிக்குடன் முடித்தால்தான் எனக்குத் திருப்தி!.நையாண்டிக் கவி,சிந்து கவி என்று என்ன பெயர் வேண்டுமென்றாலும் சொல்லுங்கள்.ரோஜாவை,வேறு பெயரில் அழைத்தால் மணம் குறைந்து விடுமா என்ன!( இப்படியும் சொல்லலாமே-சாக்கடையை ரோஜா என அழைத்தால் துர்நாற்றம் போய்விடுமா?!)

”சாப்பாட்டுப் பிரியன் சின்ன மணி
நாக்கில் வந்ததொரு நாள் சனி
சொன்னான் ரசத்தில் இல்லை உப்பு
வாங்கினான் கன்னத்தில் அப்பு!
இப்பவெல்லாம் மணி கப்புச் சிப்பு!”

வியாழன், ஜூன் 23, 2011

உணவு உலகம்!

மனிதனது அடிப்படைத் தேவைகள் மூன்று-உண்ண உணவு,உடுக்க உடை,இருக்க இடம்.எத்தனையோ இடங்களில்,எத்தனையோ விதமான உணவுகளைச் சுவைத்திருப்போம். ஆனால் சில உணவுகளின் சுவை நம் நாக்கை விட்டு மட்டுமல்ல,நம் நெஞ்சை விட்டும் நீங்குவதில்லை.அத்தகைய உணவுகளைப் பற்றியும்,சம்பந்தப்பட்ட,நிகழ்ச்சிகள்,மனிதர்கள் பற்றியும் நினைத்துப் பார்க்கிறேன்.

நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது,கோவில்பட்டியில் பால முருகன் கஃபே என்றொரு ஓட்டல் இருந்தது.இது அங்கு செய்யப்படும் உப்புமா பற்றியது.

கோவில்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் ஹாக்கிப் போட்டிகள் நடை பெறும்.ஓர் ஆண்டில்,பெரம்பூர் தெற்கு ரயில்வே அணியினர் பிரமாதமாக ஆடி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.போட்டியன்று,அந்த அணியினருக்கு பாலமுருகன் ஓட்டலில் என் அண்ணாவும் நண்பர்களும் டிஃபன் வாங்கிக் கொடுத்தனர்.ஓர் உப்புமா சாப்பிட்டவர்கள் அதன் சுவையில் மயங்கி இன்னோர் உப்புமாவும் சாப்பிட்டனர்.உப்புமா வயிற்றில் போய் அமர்ந்து விட்டது போலும்!வழக்கமான வேகம் ஆட்டத்தில் இல்லை.விளைவு அவர்கள் தோற்றனர்! யார் மறந்தாலும் அவர்கள் மறக்க மாட்டார்கள் அந்த உப்புமாவை!

என்னைப் பொறுத்தவரை விவேகானந்தா கல்லூரி விடுதியில் சாப்பிட்ட மோர்க் குழம்பும்,மைசூர் ரசமும்,வெஜிடபிள் புலாவும்,சப்பாத்தி குருமாவும்,ரவா பொங்கலும் மறக்க முடியாதவை.

பட்ட மேற்படிப்பு முடிந்து சில காலம் திருச்சி தனிப் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினேன்.அது எனது நல்லூழ் என நினைக்கிறேன். ஏனென்றால் அங்குதான் எனக்குப் புலவர் கீரனின் அறிமுகம் கிடைத்தது. அவரும் அங்கு பணி புரிந்து வந்தார். நான் கல்லூரி விடுதியில் வார்டனாகவும் இருந்ததால்,எனக்கு ஒரு பெரிய அறை கொடுத்தி ருந்தார்கள். பல நேரங்களில் அங்கு அமர்ந்து நானும் கீரனும் பேசிக் கொண்டிருப்போம்.

மன்னிக்கவும்;பதிவு உணவு பற்றியது! ’கீரனும் நானும்’ என்ற தலைப்பில் பின்னர் எழுதலாம்.இப்போது எழுத வேண்டியது ’கீரையும் நானும்’ என்பது போல்தான்.

திருச்சியில் இரவுச் சாப்பாட்டுக்கு மாயவரம் லாட்ஜ்,அல்லது RTC லாட்ஜ் இரண்டில் ஒன்று.நானும் என் நண்பன் வைத்தியநாதனும் போவோம்.மேசையில் அமர்ந்து சாப்பிடுவதில்லை உள்ளே போய்ப் பலகையில் அமர்ந்து வாழை இலையில் எக்ஸ்ட்ரா நெய்யுடன் சாப்பிடும் சுகம்!ஆகா!மாயவரம் லாட்ஜில் செவ்வாயன்று இரவு,முருங்கைக்காய் போட்டு ஒரு பொரித்த குழம்பு செய்வார்கள் பாருங்கள்,அதன் சுவை மறக்க முடியுமா!

ஒரு நாள் RTC லாட்ஜில் சாப்பிடும்போது,கொஞ்ச சாதம் மிச்சம் வைத்தேன். மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்த பெரியவர் என்னருகில் வந்து” அன்னத்தை எறியக்கூடாது, சாப்பிடுங்கோ” என்று சொல்லவும் பதில் ஏதும் பேசாமல் சாப்பிட்டு விட்டேன்.(வீட்டில் பெரியவர்கள் சொன்னால் கேட்போமா?!)

அவர் சொன்ன அக்கருத்தையே தைத்திரீய உபநிடதம் சொல்கிறது—

“அன்னம் ந பரிசக்ஷீத”

அன்னத்தை எறியாதே!

(திருச்சியில் கீரனுடன் உணவு அனுபவங்கள் தொடரும்)

திங்கள், ஜூன் 20, 2011

மாறனைப் பற்றிச் சில தகவல்கள்!

மாரன் என்பது மன்மதனைக் குறிக்கும். அவனது வேறு பெயர்கள், உருவிலாளன், கரும்புவில்லி, , புட்பரசன், மகரக்கொடியோன், மதனன், வசந்தன், வேனிலான், காமன் என்பவை .சாதாரணமாக வழக்கத்தில் இருப்பவை மன்மதன்,காமன் என்பவையே. வேள் என்றும் ஒரு பெயருண்டு. அதன் பொருள் வேட்கையை ஏற்படுத்துபவன்.காமனின் நிறம் கருப்பு. (கருப்பு நிறமுள்ளவர்களே, மகிழ்ச்சியடையுங்கள்,காமனே கருப்புதான்!) முருகனின் நிறம் சிவப்பானதால் அவன் செவ்வேள்.

காமதேவன் அழகு மிகுந்தவன். காதல் தெய்வமெனச் சொல்லப்படுபவன்.

”நெஞ்சில் பாயுது காமன் விடும் பாணம்”

”கண்வழி காமனின் பாணங்கள் பாய்வது
மாலையில் மயங்கிய பொழுது”

என்றெல்லாம் மன்மதனாகிய மாரனின் பாணங்கள் பற்றிச் சினிமாப் பாடலகளில் சொல்லியிருக்கிறார்கள்.

அப்படி அவன் பாணம் என்ன?

(அருவா,கத்தி,கோடாரி,ஈட்டி,சூலம்,வேல்கம்பு?!--மனோ மன்னிக்க!)

குத்திக் கிழித்திக்காயப்படுத்தும் பாணமா!

காயம்தான்;ஆனால் சுகமான வலி உண்டாக்கும் காயம்.

அந்த பாணத்தின் சக்தி,மயங்க வைக்கும், தனியே புலம்ப வைக்கும்,உருக வைக்கும்,விரக தாபத்தில் துடிக்க வைக்கும்!.

ரத்த நாளங்களில்லாம் புது ரத்தம் பாயம்.

இதயம் ’காதல் ,காதல்’ என்றே ஒலிக்கும்!

அப்படிப்பட்ட அவன்,ஆயுதங்கள்தான் என்ன?

கரும்பு வில்;வண்டுகளால் தொடுத்த நாண்!

வில்லுக்கான அம்புகள்?

ஐந்து மலர்களே மாரனின் பாணங்கள்.

தாமரை,அசோகம்,மா,முல்லை, நீலோத்பலம் என்பன அம்மலர்கள்

தாமரை மார்பில் தாக்கும்;காதல் போதையை உண்டாக்கும்.

அசோகம் உதடுகளைத் தாக்கிக் காதலிக்காகப் புலம்பச் செய்யும்.

மாம்பூ தலையைத் தாக்கிப் பித்தனாக்கும்-(சென்னை பித்தன் அல்ல,காதல் பித்தன்!)

முல்லை கண்களைத்தாக்கும்;தூக்கம் தொலைக்கும்.

நீலோத்பலம் உடல் முழுவதும் தாக்கி விரக வேதனை ஏற்படுத்தும்.


“தவமிருந்த சிவன் மீது பாணம் தொடுத்ததால்
’தயா’ இன்றி எரித்து விட்டான் முக்கண்ணனும்
ரதி தன்’ நிதி’யான மாரன் உயிர் வேண்ட
பதியான அவன் உயிர் தந்தான் பரமன்.

இதுவே மாரனின் கதை.

ஒரு சித்தர் பாடல்—கொசுறு

“மாமன் மகளோ மச்சினியோ நானறியேன்,
காமன் கணையெனக்கு, கனலாக வேகுதடி,
மாமன் மகளாகி மச்சினியும், நீயானால்
காமன் கணை மூன்றும், கண் விழிக்க வேகாவோ.”

(மன்னிக்கவும்.தலைப்பில் ஒரு எழுத்துப் பிழை நேர்ந்து விட்டது.எல்லாம் வல்லின,இடையினக் குழப்பம்தான்.மான் என்று எழுதுவதற்குப் பதில்,மான் என்று எழுதிவிட்டேன்.மாறன் என்ற சொல் பாண்டியனைக் குறிக்குமாம்!)

வெள்ளி, ஜூன் 17, 2011

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?

நமது படங்களிலும்,தொலைக்காட்சித் தொடர்களிலும் அடிக்கடி கேட்கும் ஒரு வசனம்---”எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?”

ஒரு பாத்திரத்துக்கு ஏதாவது மோசமானது நடக்கும் போது அந்த நபர் இவ்வாறு கூறுவார்.

இன்றைக்கு நான் அதுபோன்ற நிலையில்தான் இருக்கிறேன்!

பதிவர் சந்திப்புக்குச் செல்ல இயலாவிடினும்,நேரடி ஒளி பரப்பினைக் காணலாம் என ஒரு வாரத்துக்கும் மேலாகத் திட்டம் போட்டுக் காத்திருந்தேன்!

காலை 10 மணிக்குள் வேலைகளை முடித்துக் கொண்டு தயாரானேன்.

நேரம் 10.மணி!

மின்சாரம் போய் விட்டது!

சிறிது நேரத்தில் வந்து விடும் என எண்ணினேன்.ஏனென்றால்,டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் எந்த அறிவிப்பும் இல்லை!

பக்கத்து வீட்டு நண்பரிடம் கேட்டேன். பராமரிப்புப் பணிக்காகக் காலை 10 முதல் மாலை 5 வரை எங்கள் பகுதியில் மின்சாரம் இருக்காது என்ற தகவல் “ஹிந்து”வில் இருப்பதாகச் சொன்னார்.

மாலை 4.30 க்கு மின்சாரம் வந்தது.

அத்தளத்துக்கு சென்று பார்த்தேன்.

//சீரான இணைய வேகம் இல்லாத காரணத்தால் எமது நேரடி ஒளிபரப்பினைத் தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளோம், தடங்கலுக்கு வருந்துகிறோம்.//

இச்செய்தியே காணப்பட்டது.
என்ன ஆயிற்று? ஒளி பரப்பு இருந்ததா?பார்த்தவர் யாரும் உண்டா?

எந்தப் பதிவருடனும் நேரடித் தொடர்பில் நான் இல்லாததால்,எதுவும் தெரியவில்லை.

என்ன நடந்தது,யாராவது சொல்லுங்களேன்!

வியாழன், ஜூன் 16, 2011

காதலென்னும் சோலையிலே!

Whoever loved that loved not at first sight—(Shakespeare’s ‘As you like it)

முதல் பார்வையில் காதல் வசப்படாத காதலர் யார்?
----------------------------------------
இன்று உன் நினைவுகள் அலை அலையாய் வருகின்றன என்று சொன்னால்,இத்தனை நாள் உன் நினைவு இல்லையென்றாகி விடும்.

உன்னை மறக்க முடியாமல்தானே இன்று வரை தவிக்கிறேன்.
இன்று அத்தவிப்பு அதிகமாக இருக்கிறது.

நீ என்னை உதறிச் சென்றாலும் என் உள்ளத்தோடு ஒட்டிக் கொண்டிருக்கும் உன்னை என்னால் உதற முடியவில்லையே என் அன்பே!

முன்பொரு கவிதை எழுதினேன்
இன்னும் மறக்கவில்லை என்று

சொன்னது அதில் கடுகத்தனை
இன்னமும் உள்ளது எத்தனையோ!

சென்னையின் கடற்கரை சாட்சி
நின்று அருளும் கற்பகம் சாட்சி

இன்றில்லா ப்ளூ டயமண்ட் சாட்சி
இன்சுவை ஐஸ்க்ரீம் பார்லர் சாட்சி

மயிலை சாந்தி விஹார் சாட்சி
மணம் வீசும் மல்லிகைப் பூவும் சாட்சி

தேரோடும் வீதிகள் சாட்சி
மூர்மார்க்கெட் கடைகள் சாட்சி

இத்தனை சாட்சியும் இருந்தென்ன அன்பே
பித்தனைப் போல் புலம்ப விட்டுப் போனாயே!

சாந்தோம் சந்திப்புகளின் முடிவு பொறுக்காத
சாந்தோமும் இன்றில்லாமல் போனதே!

நீ என்னை சாந்தோமில் சந்தித்துப் பிரிந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் பம்பாயில் சந்தித்தபோது—உன் பார்வையில் நான் கண்டது, வியப்பா, பயமா, வருத்தமா, வெறுமையா? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.அந்தக் கணத்தில் உன் கண்ணென்னும் கடலில் வீழ்ந்து மூழ்கித் தவித்தேன்.
இவள் என்னுடன் இருக்க வேண்டியவள்,இன்று வேறு யாருடனோ?நல்ல வேளையாக அச்சந்திப்பு நீடிக்கவில்லை;ஆனால் நெஞ்சத்தில் இருந்த தழும்பை மீண்டும் கீறி ரணமாகி விட்டது!

என்னால் மறக்க முடியாத மூன்று நாட்கள்---நாம் முதலில் சந்தித்த நாள்,நீ என்னைப் பிரிந்து சென்ற நாள்,மூன்றாவது இன்று!

Happy Birthday dear--------
எங்கிருந்தாலும் வாழ்க!

டிஸ்கி-இது முழுவதும் கற்பனையே

புதன், ஜூன் 15, 2011

ஓடிப் போன ஓட்ட வடை!!

சில நாட்களுக்கு முன் நண்பர் ஓ.வ.நாராயணன் அவர்கள் சில பதிவர்கள் வரும் வாரத்தில் போடும் பதிவுகளைப் பற்றி ஒரு அருமையான நகைச்சுவைக் காவியம்(!)
படைத்திருந்தார்.பின்னூட்டத்தில் நான் சொன்னேன், நான் எழுதப்போகும் பதிவின் தலைப்பில் அமலா பால் அல்ல ஓட்ட வடைதான் என்று .எனவே ஓட்ட வடை பற்றிய இந்தப் பதிவு.

முதலில் ஒரு கேள்வி அனைத்துப் பதிவர்களுக்கும்.ஒரு பதிவில் முதல் ஆளாகப் பின்னூட்டம் இடும்போது,’வடை எனக்குத்தான்’ என்று சொல்கிறார்களே அது என்ன வடை?ஓட்ட வடையா?!வேறா!


வடையில் பல வகையுண்டு.மெது வடை,மசால் வடை,தவலை வடை(தவளை அல்ல!),கார வடை,மிளகு வடை என்று(என்ன,சொலவடையா?அதெல்லாம் இந்த லிஸ்ட்டில் வராதுங்க!)ஆனால் எல்லா வடையிலும் ஓட்டை போடுவதில்லை!மெது வடை எனப்படும் உளுந்து வடையில்தான் ஓட்டை;அது ஏன் என்று யாருக்காவது தெரியுமா? வெந்துவிட்டதா என்று பார்ப்பதற்கா? ஆனால் ஓட்டைதான் மாவை வடையாகத் தட்டியவுடனே போட்டு விடுகிறார்களே! எனவே ஒட்டைக்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும்.

வெந்துவிட்டதா என்று பார்ப்பது என்று சொன்னதும்,அந்தக்காலத்தில் இட்லி சுடும் வழக்கம் நினைவுக்கு வருகிறது.

இட்லித்தட்டின் குழிகளில் துணி போட்டு மாவு ஊற்றிச் சுடுவார்கள். இட்லி வெந்து விட்டதா என்று பார்க்க ஒரு இட்லியில் குத்திப் பார்ப்பார்கள்,குழியாக!. ஓட்டல்களிலும் அப்படித்தான்.அங்கு பயன்படுத்தப் படும் துணியை என்றாவது பார்த்து விட்டீர்கள் என்றால் அதன் பின் அங்கு இட்லியே சாப்பிட மாட்டீர்கள்!

இப்போது டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு போட்டி நடக்கிறது.சென்னையில் இருக்கும் சில ஓட்டல்களைக் குறிப்பிட்டு,எந்த ஓட்டலில் சுவையான இட்லி, வடை, காஃபி கிடைக்கிறது என்று தீர்மானிக்க நிபுணர்களை அங்கெல்லாம் சாப்பிடச் சொல்லிப் பார்க்கிறார்கள்.வடை என்றால்,ஓட்ட வடைதான்.இட்லி சாம்பார் என்றாலே அதனுடன் இணையக் கூடியது ஓட்ட வடையாகிய மெது வடைதான்!

இரண்டு புலவர்கள் ஒரு ஓட்டலில் வடை வாங்கினார்கள்—ஓட்ட வடைதான்(ஓட்டலுக்கு முதலாவதாகப் போனார்களோ!)

ஒருவர் வடையைப் பிய்த்துப் பார்த்தார்.வடை ஊசிப் போயிருந்தது.

உடனே சொன்னார்”ஊசியிருக்கிறது!”

மற்றவர் பார்த்தார்.ஊசிய வடையில் நூல் போல வந்தது.

உடன் அவர் சொன்னர்”நூலும் இருக்கிறது!”

இருவரும் சேர்ந்து”தையலுக்காகும்” என்று சொல்லிய படியே வடைகளை வெளியில் இருந்த பெண்ணிடம் கொடுத்து விட்டனர்!

கடைக்காரரிடம் திருப்பிக் கொடுத்திருந்தால் வடைகறிக்காவது பயன் படுத்தியிருப்பார்!


வடையில்பயன்படும் உளுத்தம் பருப்பு ,எண்ணெய் இவற்றில் செய்யப்படும் கலப்படம் பற்றி,தெருவோரத்தில் விற்கப்படும் சுகாதாரமற்ற வடைகளினால் ஏற்படும் ஆபத்து பற்றி,சில கடைகளில் அவற்றைக் கைப்பற்றி அழிக்க வேண்டியதன் அவசியம் பற்றி இங்கு எழுத எண்ணுகிறேன்!

(யோவ்!அது வேறு ஒருவர் பேட்டை;காலை வைக்காதே!)

அப்படியானால் வடையில் ஓட்ட போடுவது எப்படி?கல்யாணமாகாத இளைஞர்கள் பின் மாலைக் கடிக்கு எப்படி ஓட்ட வடை சுடலாம் என்பது பற்றி ’பெண்களுக்காக’ வில் வந்த கட்டுரையிலிருந்து சில பகுதிகள்,நன்றியுடன் வெளியிடுகிறேனே!

(அடங்க மாட்டியே;அதுவும் மற்றவர் செயற்பாட்டுப் பகுதி;மூக்கை நுழைக்காதே!)

என்னவோ போங்க! அப்ப நான் என் பதிவை முடித்துக் கொள்கிறேன்!

(அதெல்லாம் சரி ஓடிப்போன ஓட்ட வடை என்ற தலைப்பு ஏன்?)

மாலையில் தெருவோரக் கடையில் இரண்டு ஓட்ட வடை வாங்கி வந்தேன். வடை சாப்பிட்டுக் கொண்டே கணினியில் தட்டிக் கொண்டிருந்தேன்.அப்போது ஒரு ஓட்ட வடை கீழே விழுந்து உருண்டு ஓடிப் பீரோ அடியில் சென்று விட்டது.அழுக்காகிப்போன ஓட்டவடையை எப்படிச் சாப்பிடுவது?!

”ஓடிப்போன ஓட்ட வடை!”

செவ்வாய், ஜூன் 14, 2011

மீண்டும் ஒரு லிமரிக்!

நேற்று என் வீட்டு அழைப்பு மணி வேலை செய்யவில்லை.நண்பர் ஒருவர் மணி அடித்துப் பயனின்றிக் கதவை உடைப்பது போலத் தட்டியவுடன்தான் கதவைத் திறந்தேன்.அவர் சென்றவுடன் ,மின்வினைஞருக்குத் தொலைபேசியில் ,அழைப்பு மணி வேலை செய்ய வில்லை எனச் சொன்னேன்.10 நிமிடத்தில் வருவதாகக் கூறினார்.ஒரு மணி நேரம் சென்றும் வரவில்லை.மீண்டும் தொலை பேசியில், ஏன் வரவில்லை எனக் கேட்டேன்.அவர் சொன்னார்---

“வந்து ரொம்ப நேரம் அழைப்பு மணியை அடித்தேன் .கதவே திறக்கவில்லை.திரும்பி விட்டேன்!”

அறிவுக் கொழுந்து!
--------------------------------------------
லிமரிக்
----------
சங்கரன் சின்ன மகள் சக்கு
பார்த்தாலே ஏறும் கிக்கு
பார்த்து மயங்கினான் மாது
விட்டான் தங்கையைத் தூது
இப்பத் தெருவெல்லாம் ’தூ,தூ’!
----------------------------------------------
ஹரி அவன் காதலியைக் கேட்டான்”உனக்கு என்ன புத்தகம் பிடிக்கும்?”

அவள் சொன்னாள்”உன் செக் புத்தகம்”
------
நல்ல வக்கீலுக்கும் திறமையான வக்கீலுக்கும் உள்ள வேறுபாடு---

“நல்ல வக்கீலுக்குச் சட்டம் நன்கு தெரியும்;திறமையான வக்கீலுக்கு நீதிபதியை நன்கு தெரியும்!”
----

திங்கள், ஜூன் 13, 2011

பரல்கள்!(மன்னிப்பும்,மற்றவையும்!)

வெள்ளியன்று மாலை BSNL காலை வாரி விட்டு விட்டது!ஆம்!இண்டர் நெட் தொடர்பு அற்றுப் போய் விட்டது.சில நேரங்களில் தானாகவே திரும்ப வந்து விடும்.எனவே நான் இரவுக்குள் தொடர்பு திரும்ப வரும் என எண்ணியிருந்தேன். ஆனால் வரவில்லை.சனியன்று காலை எழுந்ததும் முயன்றேன்;தொடர்பு இல்லை.6 மணிக்குப் புகார் கொடுத்தேன்; பதிவாகியது.ஆனால் அன்று முழுவதும் சரி செய்யப்படவில்லை.மறு நாள் ஞாயிறு;விடுமுறை நாள்.ஒன்றும் நடக்காது என்பது தெரியும்.

இன்றுதான் தொடர்பு சரி செய்யப் பட்டது,காலை 8 மணி அளவில். தானாகவே பிரச்சினை சரியாகி விட்டது என எண்ணுகிறேன்!எனவே என் பதிவில் பின்னூட்டமிட்ட நண்பர்கள் சிலருக்கு உடன் பதில் அளிக்க இயலவில்லை.நண்பர்களின் பதிவுக்குச் சென்று படித்துப் பின்னூட்டம் இட முடியவில்லை.மன்னிக்கவும்! இன்று இயன்ற வரை செய்கிறேன்!
--------------------------------------------------

ஆங்கிலத்தில் லிமரிக் என்று ஒரு வகைக் கவிதையுண்டு.ஐந்து வரிகள் உடையது.முதல் இரண்டு வரிகளின் முடிவிலும் அடுத்த மூன்று வரிகளின் முடிவிலும் சந்தம் ஒத்து வரும்.சும்மா ஒரு நகைச்சுவை வகைதான்!அந்த வகை முயற்சி,தமிழில் கீழே!

“பக்கத்து வீட்டு வாசி ராமன்
பார்ப்பதற்கு அவன் காமன்
மணந்தான் அழகு மங்கை
இணைப்பாய் அவள் தங்கை
கேட்கிறார் தத்தம் பங்கை!”

இது எப்புடி இருக்கு!
-------------------------------------------------

இரண்டு ஜோக்ஸ்

குமாஸ்தா : போடா, நீ முட்டாள் !
டைப்பிஸ்ட்: போடா, நீ தான் முட்டாள் !
மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்?
நான் ஒருத்தன் இங்கே இருப்பது
உங்களுக்கு தெரியலையா ?
-----
காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...
காதலி : !!!!
---------------------------------------------




போட்டியின்றி வாழ்க்கையில்லை!
போட்டியென்பது நாம் சிறுவர்களாய் இருக்கும்போதே ஆரம்பமாகி விடுகிறது.

மூத்தவனாய்(ளாய்) இருந்தால் தம்பி தங்கைகளுடன்,இளையவனாய் இருந்தால் மூத்தவர்களுடன் போட்டி.
இதற்குத்தான் என்றில்லை. ஒரு ஆசனத்தில் அமர்வது,டிவி. பார்ப்பது,ஒரு பொருளை முதலில் உபயோகிப்பது என்று எதிலும் போட்டி.

பள்ளியில் படிக்கும் போது நான் ஓட்டப் பந்தயம்,உயரம் தாண்டுதல்,நீளம் தாண்டுதல்,குண்டு எறிதல் என்று அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டதே இல்லை!
ஒரே ஒரு முறை,எட்டோ ,ஒன்பதோ படிக்கும்போது சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு எல்லைக் கோட்டை முதலாவதாகக் கடந்தேன்.ஆனால் பரிசு தரவில்லை!ஏனெனில் அது ”ஸ்லோ சைக்கிள் ரேஸ்”!!

வெள்ளி, ஜூன் 10, 2011

நமிதா ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி!

சமீபத்தில் நவயுக குரு ஒருவரின் ஆன்மீக/உடல்நலப் பயிற்சியின் அறிமுக நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்.முன்பே பயிற்சி பெற்று, பயிற்றுவிக்கும் தகுதி பெற்ற ஒருவர்தான் பொறுப்பேற்றிருந்தார்.சுமார் 30 பேர் வந்திருந்தார்கள்.அதில் சிலர் முன்பே பயிற்சி பெற்றவர்கள்.

நிகழ்ச்சி தொடங்கியதும், அவர்கள் ஒவ்வொருவராக வந்து தங்கள் அனுபவங்களைக் கூறினர்.ஒருவர்,தனக்கு நீரிழிவு நோய் தீவிரமாக இருந்ததாகவும், பயிற்சிக்குப் பின் இரத்தச் சர்க்கரை அளவு சாதாரணமாகி விட்டதாகவும் கூறினார். மற்றொருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மருந்துகள் சாப்பிட்டு வந்ததாகவும்,பயிற்சிக்குப் பின் மாத்திரை சாப்பிடும் தேவையில்லாமல் போய் விட்டதாகவும் சொன்னார். இவ்வாறே மேலும் ஒரிருவர் தங்கள் அனுபவங்களை விவரித்தனர்.

இவற்றையெல்லாம் கேட்கும்போது எனக்கு வேறு ஒரு நினைவு வந்தது.கடற்கரை அல்லது வேறு சில மைதானங்களில் நடைபெறும் ஆன்மீக சுகமளிக்கும் அற்புதக்கூட்டங்கள் பற்றிய நினைப்பு.அங்கு “குருடர்கள் பார்க்கிறார்கள்,ஊமைகள் பேசுகிறார்கள்,முடவர்கள் நடக்கிறார்கள்”என்று விளம்பரம் செய்வார்கள்.கூட்டம் நடத்துபவர் பிரார்த்தனை செய்வார். பின் சிலர் சாட்சிகளாக வந்து தாங்கள் அற்புத சுகமடைந்ததைப் பற்றி விவரிப்பார்கள்.அந்த நினைவுதான் எனக்கு வந்தது.

ஏன் மக்கள் இந்த குருக்களைத் தேடி ஓடுகிறார்கள்?இவர்களிடம் என்ன இருக்கிறது?

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில்,எளிதாக மன அமைதியும் உடல் நலமும் பெறுவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று தேடும் மனிதனுக்கு,இந்த குருக்கள் ஒரு நல்ல வழியாகத் தெரிகிறார்கள் .இவர்களது தகுதிகள்-

1.பகவத்கீதை,உபநிடதங்கள்,வேதாந்த நூல்கள் பற்றிய அறிவு.

2.பிராணாயாமம்,யோகா பற்றிய அறிவு.அவற்றில் சில புதிய உத்திகள்.

3.பேச்சுத்திறமை.

நான் என்னையே எடை போட்டுப் பார்க்கிறேன்

1.சின்மயா மிஷனில் பகவத்கீதை,வேத பாராயணம்,சில உபநிடதங்கள்,ஆத்ம போதம்,விவேகசூடாமணி போன்றவற்றை சிறிது கற்றிருக்கிறேன்.

2.ஓரளவுக்குப் பேச்சுத்திறமை இருக்கிறது(வங்கிப் பணியில் அது இல்லாமல் இலக்குகளை எட்ட முடியுமா?)

3.மூச்சுப் பயிற்சி சிறிது செய்ததுண்டு.அதில் நல்ல திறமை பெறவேண்டும்.புதிய முறை ஒன்று துவங்க வேண்டும்.

4.கடைசியாக ஒரு உபரித் திறமை-சோதிடம் பற்றிய என் அறிவு.(ஓரளவுக்கு நல்ல சோதிடனாக அங்கீகரிக்கப் பட்டிருக்கிறேன். சோதிடம் என் தொழில் அல்ல!)

எனவே,சிறிது காலத்துக்குப்பின் நானும் ஒரு குருவாக மாறும் வாய்ப்பு உள்ளது!

சில குருக்களிடம் பயிற்சி பெற்றுச் சில நடிகைகள்,பயிற்சியாளராக இருப்பதை அறிந்திருப்பீர்கள்!

அது போல் நமிதா என்னிடம் பயிற்சி பெற்றுப் பயிற்சியாளராகும் நாள் வரலாம் .நமிதா ரசிகர்களே, அவரிடம் நீங்கள் பயிற்சி பெறும் வாய்ப்புக் கிடைக்கலாம் !அந்த பொற்காலத்துக்காகக் காத்திருங்கள்!)

வியாழன், ஜூன் 09, 2011

பச்சோந்தி!(புதிய வடிவில்)

ஒரு கவிதை சொல்லப்பட்ட செய்தியால் மட்டும் சிறப்பாவதில்லை.
கவிதையின் வடிவமும் அதனை அழகாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது!
3-6-2011 அன்று பச்சோந்தி என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருந்தேன்.
அதைப் படித்த பதிவுலக நண்பர் ஒருவர்,ஒரு கருத்துச் சொன்னார்!
கவிதை நன்றாகவே இருந்தாலும்,அதன் வடிவத்தை மேலும் சிறப்பாக்குவதற்காக,அதன் வரிகளைச் சிறியதாக்கிப் புது வடிவம் கொடுக்கலாம் என்று சொல்லி அதன் புதிய வடிவத்தை எனக்குக் காண்பித்தார்.உண்மையில் கவிதை மேலும் அழகாக இருப்பது புரிந்தது.
அக் கவிதையைப் புது வடிவில் அளிக்கிறேன்.அப்பதிவரின் பெயரைச் சொல்ல விருப்பம்தான்!ஆனால் அவர் விருப்பம், வெளியிடக் கூடாது என்பது!

தோட்டத்தில் நீர்பாய்ச்சி
நிற்கின்ற வேளையில்
சட்டென்று கண்ணில்
பட்டதந்த பச்சோந்தி!
கல்லெடுத்து வீசினேன்;
பச்சோந்தியை நோக்கி
சொல்லொணா வேகத்தில் மறைந்ததந்தப் பச்சோந்தி!
எங்கது மறைந்ததென்று
தேடுகின்ற வேளையில்;
அங்கொரு மரக்கிளையில்-
கிளையின் நிறமெடுத்து(க்)
கிளையோடு கிளையாய்க்
கிடந்ததந்தப் பச்சோந்தி!!


மற்றொமொரு கல் வீச்சில் மறைந்திட்ட பச்சோந்தி
பற்றி நின்றது மரத்தை ,
இலைகளோடு இலையாய்ப்
புதிதாகப் பச்சை நிறமெடுத்து!
எத்தனை வண்ணம்தான்
எடுக்குமந்தப் பச்சோந்தி
தன்னுயிரைக் காப்பதற்கு!
எனக்குத் தெரியவில்லை,
அதன் உண்மை வண்ணமென்ன?
உனக்காவது தெரியுமா
உன் உண்மை நிறம் பச்சோந்தியே?

தோற்றம் மாறினால், சுவை கூடுகிறது என்பதற்கு உங்கள் வாசிப்பு அனுபமே ’நிரூபணம்’!

புதிய வடிவத்தில் ,கவிதை’வடிவா’கயிருக்கிறதா?

’ஓமெ’ன்று சொல்கிறீர்கள்தானே!

(ஒரு பதிவை ஒப்பேத்தியாச்சு,நண்பர் தயவில்!)

புதன், ஜூன் 08, 2011

ஒக்காந்து யோசிப்போம்லே !

கண்ணா நீ
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...


ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்ல பிசாசு மாதிரிதான் இருப்பா

அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால் சைட் அடிச்சா வலிக்காது

உன்னை யாராவது
லூசுன்னு சொன்னா
கவலைப் படாதே!
வருத்தப் படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேளு!


காதல் ஒரு மழை மாதிரி,
நனையும் போது சந்தோஷம்.
நனைந்த பின்பு ஜலதோஷம்.


மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?
ஐந்து கேள்விப்பா
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட் கீப்பிட் அப்


டேய் உன் ஜாதகப்படி உனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????


என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்.


நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்டறதை நிறுத்திரணும்.
அதுக சாப்பிடறதை நான் எப்படி டாக்டர் நிறுத்த முடியும்?.

டாக்டர், என் மனைவி ரொம்ப ஓவரா டி.வி. பாக்குறா''
எந்த அளவுக்கு பாக்குறாங்க?''
கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!

வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
சந்தா சிங்: ஆகிவிட்டது.
வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சந்தா சிங்: ஒரு பெண்ணை.
வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
சந்தா சிங்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..

சார்,
டீ மாஸ்டர் டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே? ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?..


''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''
''அவனுடைய காலேஜ் புஸ்தகத்துல வை.... எடுக்க மாட்டான்; பத்திரமா இருக்கும்''


ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!


உங்க கிட்னி பெயில் ஆயிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர், அது எப்படி பெயில் ஆகும்?


இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா?
இல்லை அவங்களேதான் சொன்னாங்க...



(இதெல்லாம் சொந்தமல்ல!இன்று எனக்கு வந்த மின்னஞ்சல்!)

திங்கள், ஜூன் 06, 2011

காதல் செய்வதை விட்டு விடுங்கள்!

அழகென்ற சொல்லுக்குப் பொருள் தேடிப் பார்த்தேன்
அருணா என்றே விடை வந்தது!
வடிவென்ற வார்த்தைக்குப் பொருள் தேடிப் பார்த்தேன்
வந்தனா என்பதே பதிலாயிற்று!
பண்பென்ற பதத்துக்குப் பொருள் தேடிப் பார்த்தேன்
பத்மா என்றே விடை வந்தது!
கனிவென்ற வார்த்தைக்குப் பொருள் தேடிப் பார்த்தேன்
கல்பனா என்றே பதில் வந்தது!
அறிவென்ற சொல்லுக்குப் பொருள் தேடிப் பார்த்தேன்
அகிலா என்பதே விடையாயிற்று!-என்
உயிரென்ற சொல்லுக்குப் பொருள் தேடும் போதோ
உமா என்பதே நற் பதிலாயிற்று!
ஏமாற்று என்பதற்கு பொருள் தேடிப் பார்த்தேன்
எல்லாப் பெயருமே பதிலாயிற்று!
தலைவிதி என்பதற்கு பொருள் தேடும்போதோ
தங்கமணி பெயரே பதிலாய் நின்றது !

( காதலில் நொந்த ஒரு இளைஞனின் புலம்பல்)

வெள்ளி, ஜூன் 03, 2011

பச்சோந்தி!

தோட்டத்தில் நீர்பாய்ச்சி நிற்கின்ற வேளையில்
சட்டென்று கண்ணில் பட்டதந்த பச்சோந்தி!
கல்லெடுத்து வீசினேன் பச்சோந்தியை நோக்கி
சொல்லொணா வேகத்தில் மறைந்ததந்தப் பச்சோந்தி!
எங்கது மறைந்ததென்று தேடுகின்ற வேளையில்
அங்கொரு மரக்கிளையில் கிளையின் நிறமெடுத்துக்
கிளையோடு கிளையாய்க் கிடந்ததந்தப் பச்சோந்தி!
மற்றொமொரு கல் வீச்சில் மறைந்திட்ட பச்சோந்தி
பற்றி நின்றது மரத்தை ,இலைகளோடு இலையாய்ப்
புதிதாகப் பச்சை நிறமெடுத்து!எத்தனை வண்ணம்தான்
எடுக்குமந்தப் பச்சோந்தி தன்னுயிரைக் காப்பதற்கு!
எனக்குத் தெரியவில்லை, அதன் உண்மை வண்ணமென்ன?
உனக்காவது தெரியுமா உன் உண்மை நிறம் பச்சோந்தியே?!

(பழைய கவிதை,புதிய வடிவம்!)

புதன், ஜூன் 01, 2011

கனி பற்றிச் சில செய்திகள்!

இப்போது கனி பற்றிய பேச்சாகவே இருக்கிறது எங்கும்.
ஊடகங்கள் எல்லாம் கனி பற்றியே எழுதியும் ,பேசியும் வருகின்றன.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் அல்லவா?
நானும் என் பங்குக்குக் கனி பற்றி எழுதிவிடுகிறேன்.

முக்கனிகள் என்று அழைக்கப் படுபவை—மா,பலா,வாழை என்பவை.
இப்போது மாங்கனி சீசன்.இந்த சீசனில் சாப்பிடவில்லையெனில் மீண்டும் ஓராண்டு காத்திருக்க வேண்டும்.
ஆனால் மாங்கனி பற்றி வரும் செய்திகள் பயமுறுத்துகின்றன.
“தானாகக் கனியாத பழத்தைத் தடியால் அடித்துக் கனிய வை”என்று சொல் வழக்கு உண்டு.
ஆனால் இப்போது மாங்கனியைக் கல்லால் அடித்துப் பழுக்க வைக்கிறார்களாம்.
கால்சியம் கார்பைடு கல்லை வைத்துச் செயற்கையாகப் பழுக்க வைக்கும் கனிகள்,அநேக உடல் உபாதைகளை எற்படுத்துகின்றனவாம்.
இது பற்றி நமது சங்கரலிங்கம் அவர்கள் ஒரு நல்ல விழிப்புணர்வுப் பதிவு எழுதியிருந்தார்கள்.

டன் கணக்கில் அத்தகைய கனிகள் பிடிபட்டாலும்,தொடர்ந்து செய்து கொண்டேதான் இருப்பார்கள் என எண்ணுகிறேன்.
ஆனால் அதற்காகச் சாப்பிடாமல் இருக்க முடியுமா?

இந்த மாங்கனி ஒரு குடும்பத்திலேயே பிளவை ஏற்படுத்தியதாம்.ஆனால் அது ஒரு ஞானக்கனி!அது கிடைக்காத முருகன் கோபத்துடன் மலைஏறியதால் நமக்குப் பழனி கிடைத்தது! கனிகளால் செய்யப் படும் பஞ்சாமிர்தமும் கிடைத்தது!

முக்கனிகளில் வாழை, மா இரண்டும் எளிதாக வாங்கிச் சாப்பிட முடிகிறது. ஆனால் பலா!நாம் வாங்கி அதைப் பிளந்து சுளையை எடுத்து, சாப்பிட்டு முழுக் கனியையும் காலி செய்வது என்பதெல்லாம் முடியாத செயல்.சாலயில் வாங்கும் பலாச் சுளைகளோ ஈ மொய்த்துக் கொண்டிருக்கும். எனவே பலா ஒரு எட்டாக்கனி-மரத்தில் எட்டும் உயரத்தில் இருப்பினும்!


பெண்கள் மொழி இனிமை என்பதை கருத்தில் கொண்டுதான் பெண்களுக்குக் கனிமொழி,தேன்மொழி என்றெல்லாம் பெயர் வைக்கிறார்கள்.

குரல் மட்டும் இனிமையாக இருந்தால் போதுமா?சொல்லும் சொற்களும் இனிமையானவையாக இருக்க வேண்டும்.

வள்ளுவர் சொல்கிறார்-
“இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று”

இனிய சொற்கள் இருக்கும்போதுஅவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும்போது காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது .

எல்லாக் காய்களுமே கனியாகுமா?

கிளி இலவங்காயைப் பார்த்துக் கனியானவுடன் சாப்பிடலாம் எனக் காத்திருக்குமாம்.ஆனால் அது கனியாகாமல் காய்ந்து வெடித்துச் சிதறி விடும்.அதைப் பார்த்துக் கிளி ஏமாந்து போகுமாம்.ஏதாவது ஒரு விளைவுக்காகக் காத்திருந்து அது நடக்காமல் போய் ஏமாற்றமடைவதை “இலவு காத்த கிளி போல்” என்று சொல்வார்கள்.இது உண்மையா என்பது எனக்குத் தெரியாது.

பெண்களின் பெயரில் கனி இருப்பது போல், ஆண்களின் பெயர்களிலும் உண்டு—சமுத்திரக்கனி,சண்முகக்கனி,அண்ணாமலைக்கனி என்றெல்லாம்.
நான் ஆறாம் வகுப்புப் படிக்கும்போது எனது வகுப்பு ஆசிரியர் அண்ணாமலைக்கனி என்பவர்.மாணவர்களுக்கு அவரைப் பார்த்தாலே நடுக்கம்.அவ்வளவு கண்டிப்பு.ஒருநாள் நான் ஒரு புத்தகத்தை எடுத்துச் செல்லவில்லை.அவர் என்னை வீட்டுக்கு அனுப்பிப் புத்தகத்தோடு வரச்சொல்லி விட்டார்.நான் வீட்டை அடைந்தபோது ஒரு உறவினர் வெளியூரிலிருந்து வந்திருக்கவே,நான் திரும்பிப் பள்ளி செல்லவில்லை.
மறுநாள் பள்ளி சென்றதும் நண்பர்கள் என் ’பைக்கட்டு’ தலைமை ஆசிரியர் அறையில் இருப்பதாகச் சொல்ல நான் போய் எடுத்துக்கொண்டேன்.

நடந்தது இதுதான்----

நான் திரும்பி வராததால்,ஆசிரியர் பையை எச்.எம்.அறைக்குக் கொண்டு சென்று விஷயத்தைச் சொல்லவும், அவர் “நீ ஏன் அவனை வீட்டுக்கு அனுப்பினாய்” என்று கேட்க அவர் வாயடைத்துப் போய்த் திரும்பி விட்டார். பின் அது பற்றி என்னிடம் எதுவும் கேட்கவும் இல்லை!

தலைமை ஆசிரியர்------என் தாத்தா !

’கனி’வோடு படித்தமைக்கு மனம் ’கனி’ந்த நன்றி!