தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜூன் 24, 2011

உணவு உலகம்-2.

திருச்சி கடைத்தெருவில் அப்போது அம்பி ஐயர் ஓட்டல் என்று ஒன்று இருந்தது. மாலை நேரத்தில் தினமும் ஸ்பெசல் ஆக ஒரு இனிப்பு ஒரு காரம் செய்வார்கள்.காத்திருந்து வாங்கிச் சாப்பிடுவர் பலர்.நானும் கீரன் அவர்களும் அங்கு ரெகுலர்.சுடச் சுட அல்வா/கேசரி/ஜாங்கிரி என்று இனிப்பும், போண்டா/பஜ்ஜி/வடை( மனோ எங்கே போயிட்டீங்க!) என்று கார வகைகளும் மேலும் மேலும் சாப்பிடத்தூண்டும்.சொந்தக்காரர் அதை ஒரு வெறும் தொழிலாக நடத்தவில்லை.ஒரு வித ஈடுபாட்டுடன் நடத்தி வந்தார்.அவருக்கு அப்படி ஒரு ஓட்டல் நடத்த அவசியமே இல்லை.ஏனென்றால் அவரது மகன் திரு.வேதநாராயணன்தான் அப்போது தஞ்சை மாவட்டக் கலெக்டர்!

மாயவரம்/ RTC லாட்ஜ்களில் சாப்பிடாத இரவுகளில்,இரவு உணவு கொஞ்சம் வித்தியாசமாக அமையும்.கடைத்தெருவில் ஒரு கடிகாரக் கடை இருந்தது.அந்தக் கடை மாலை மூடிய பின்,அந்தக்கடை வாசலில் வேறு ஒரு கடை திறக்கப்படும். ஸ்ரீரங்கத்திலிருந்து ஒரு அய்யங்கார் புளியோதரை,சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல்,தயிர்சாதம் என்று எல்லாவற்றையும் ஒரு ஜட்கா வண்டியில் வைத்துக் கொண்டு வந்து அங்கு கடை போட்டு விடுவார்.நான்,வைத்தியநாதன் , கீரன் மூவரும் பல நாட்கள் அந்த சாலை ஓரக் கடையில் ருசித்துச் சாப்பிட்டிருக்கிறோம்! அந்த மாதிரிச் சுவையான புளியோதரை இன்று வரை நான் சாப்பிடவில்லை!

பெண்களை விட ஆண்கள்தான் உணவுப் பிரியர்களாக இருக்கிறார்கள்.நல்ல சுவையான உணவை ரசிக்கிறார்கள்.எனவேதான் சொன்னார்களோ—
The way to a man’s heart is through his stomach(ஒரு ஆணின் இதயத்துக்கு நுழை வாயில் அவன் வயிறே!) என்று.

ஒரு லிமரிக்குடன் முடித்தால்தான் எனக்குத் திருப்தி!.நையாண்டிக் கவி,சிந்து கவி என்று என்ன பெயர் வேண்டுமென்றாலும் சொல்லுங்கள்.ரோஜாவை,வேறு பெயரில் அழைத்தால் மணம் குறைந்து விடுமா என்ன!( இப்படியும் சொல்லலாமே-சாக்கடையை ரோஜா என அழைத்தால் துர்நாற்றம் போய்விடுமா?!)

”சாப்பாட்டுப் பிரியன் சின்ன மணி
நாக்கில் வந்ததொரு நாள் சனி
சொன்னான் ரசத்தில் இல்லை உப்பு
வாங்கினான் கன்னத்தில் அப்பு!
இப்பவெல்லாம் மணி கப்புச் சிப்பு!”

47 கருத்துகள்:

 1. ஆஹா.... பசிக்க ஆரம்பிச்சுடுச்சு.... சுடச் சுட புளியோதரை கிடைச்சா நல்லா இருக்கும்.

  லிமரிக்.... சூப்பர்.....

  பதிலளிநீக்கு
 2. //அந்த மாதிரிச் சுவையான புளியோதரை இன்று வரை
  சாப்பிடவில்லை!//
  சமீபத்தில் கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற வைணவத் தலமான மேல்கோட்டை போயிருந்தபோது கோவிலுக்கு வெளியே ஒரு தள்ளுவண்டியில் ஐயங்கார் ஒருவர் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் சர்க்கரைப் பொங்கல் ஆகியவைகளை வைத்து விற்றுக்கொண்டிருந்தார். வாங்கி சாப்பிட்டபோது நீங்கள் சொன்னதுபோல் சுவையாகத்தான் இருந்தது. வைணவ வழிபாட்டுத் தலங்களில் விற்கப்படும் புளியோதரைக்கு சுவையே தனிதான். என்ன சொல்கிறீர்கள்?

  லிமெரிக் கவிதை நாளுக்கு நாள் புதிய மெருகோடு வந்துகொண்டு இருக்கிறது. படித்துவிட்டு ‘கப்சிப்’ என இருக்க முடியவில்லை
  வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 3. கூப்பாடு போட்டானோ அப்பு-சற்று
  கூடினால் மட்டுமே தப்பு
  போட்டீரே ஒருபோடு பித்தன்-இனி
  போடுவீர் கவிதன்னை நித்தம்

  நன்றி நன்றி நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 4. நல்லவேளை
  மதியம் வீட்டிலிருக்கும் போது படித்ததால் தப்பித்தேன் இல்லாவிடில் உங்களின் பசியை தூண்டும் ருசியான உணவை இல்லை பதிவை படித்திருந்தால் என் கதி அதோ கதிதான்

  பதிலளிநீக்கு
 5. ///”சாப்பாட்டுப் பிரியன் சின்ன மணி
  நாக்கில் வந்ததொரு நாள் சனி
  சொன்னான் ரசத்தில் இல்லை உப்பு
  வாங்கினான் கன்னத்தில் அப்பு!/// ஐயா நீங்க தானே அந்த சின்ன மணி :-))

  பதிலளிநீக்கு
 6. உங்கள் லிமரிக்.... சூப்பர்....
  கம்மேண்டில் புலவர் ஐயாவின் லிமரிகும் சூப்பர்

  பதிலளிநீக்கு
 7. ///( இப்படியும் சொல்லலாமே-சாக்கடையை ரோஜா என அழைத்தால் துர்நாற்றம் போய்விடுமா?!)
  /////
  இதை நீங்க சொன்னதா செல்வமணி கிட்ட சொல்லவா ஹி ஹி

  பதிலளிநீக்கு
 8. ”சாப்பாட்டுப் பிரியன் சின்ன மணி
  நாக்கில் வந்ததொரு நாள் சனி
  சொன்னான் ரசத்தில் இல்லை உப்பு
  வாங்கினான் கன்னத்தில் அப்பு!///


  ஹா ஹா ஹா ஹா தல சூப்பர்....!!!

  பதிலளிநீக்கு
 9. வெங்கட் நாகராஜ் கூறியது...

  //ஆஹா.... பசிக்க ஆரம்பிச்சுடுச்சு.... சுடச் சுட புளியோதரை கிடைச்சா நல்லா இருக்கும்.

  லிமரிக்.... சூப்பர்.....//
  உங்க கமெண்ட் படிச்சதும் எனக்கே புளியோதரை சாப்பிட ஆசை வந்து விட்டதே!
  நன்றி வெங்கட்!

  பதிலளிநீக்கு
 10. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  //சுவையுடன்...//
  நன்றி சௌந்தர்!

  பதிலளிநீக்கு
 11. வே.நடனசபாபதி கூறியது...

  //அந்த மாதிரிச் சுவையான புளியோதரை இன்று வரை
  சாப்பிடவில்லை!//
  // சமீபத்தில் கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற வைணவத் தலமான மேல்கோட்டை போயிருந்தபோது கோவிலுக்கு வெளியே ஒரு தள்ளுவண்டியில் ஐயங்கார் ஒருவர் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் சர்க்கரைப் பொங்கல் ஆகியவைகளை வைத்து விற்றுக்கொண்டிருந்தார். வாங்கி சாப்பிட்டபோது நீங்கள் சொன்னதுபோல் சுவையாகத்தான் இருந்தது. வைணவ வழிபாட்டுத் தலங்களில் விற்கப்படும் புளியோதரைக்கு சுவையே தனிதான். என்ன சொல்கிறீர்கள்?//
  உண்மையே!

  //லிமெரிக் கவிதை நாளுக்கு நாள் புதிய மெருகோடு வந்துகொண்டு இருக்கிறது. படித்துவிட்டு ‘கப்சிப்’ என இருக்க முடியவில்லை
  வாழ்த்துகள்!//
  நன்றி சபாபதி அவர்களே!

  பதிலளிநீக்கு
 12. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  //ஆஹா.. சாப்பாட்டு பதிவு..//
  ஏவ்!(ஏப்பம்!)
  நன்றி கருன்!

  பதிலளிநீக்கு
 13. புலவர் சா இராமாநுசம் கூறியது...

  //கூப்பாடு போட்டானோ அப்பு-சற்று
  கூடினால் மட்டுமே தப்பு
  போட்டீரே ஒருபோடு பித்தன்-இனி
  போடுவீர் கவிதன்னை நித்தம்

  நன்றி நன்றி நன்றி//
  இதுவும் ஒரு கவிதை என்று
  சொன்ன புலவருக்கு நன்றி!
  நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 14. A.R.ராஜகோபாலன் கூறியது...

  //நல்லவேளை
  மதியம் வீட்டிலிருக்கும் போது படித்ததால் தப்பித்தேன் இல்லாவிடில் உங்களின் பசியை தூண்டும் ருசியான உணவை இல்லை பதிவை படித்திருந்தால் என் கதி அதோ கதிதான்//
  நானே நொறுக்குத்தீனியைக் கொரித்துக் கொண்டேதான் தட்டினேன்!
  நன்றி ராஜ கோபாலன்!

  பதிலளிநீக்கு
 15. கந்தசாமி. கூறியது...

  ///”சாப்பாட்டுப் பிரியன் சின்ன மணி
  நாக்கில் வந்ததொரு நாள் சனி
  சொன்னான் ரசத்தில் இல்லை உப்பு
  வாங்கினான் கன்னத்தில் அப்பு!/// ஐயா நீங்க தானே அந்த சின்ன மணி :-))
  நான் ஆரம்பத்திலிருந்தே கப்சிப் தான்!
  நன்றி கந்தசாமி!

  பதிலளிநீக்கு
 16. ரியாஸ் அஹமது கூறியது...

  //உங்கள் லிமரிக்.... சூப்பர்....
  கம்மேண்டில் புலவர் ஐயாவின் லிமரிகும் சூப்பர்//
  நன்றி,நன்றி! ஒன்று என்சார்பில் ஒன்று புலவர் சார்பில்!

  பதிலளிநீக்கு
 17. பிளாகர் ரியாஸ் அஹமது கூறியது...

  ///( இப்படியும் சொல்லலாமே-சாக்கடையை ரோஜா என அழைத்தால் துர்நாற்றம் போய்விடுமா?!)
  /////
  //இதை நீங்க சொன்னதா செல்வமணி கிட்ட சொல்லவா ஹி ஹி//
  இது வேறா?நான் சொன்னது பூவைத்தான்,பூவையை அல்ல!

  பதிலளிநீக்கு
 18. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  ”சாப்பாட்டுப் பிரியன் சின்ன மணி
  நாக்கில் வந்ததொரு நாள் சனி
  சொன்னான் ரசத்தில் இல்லை உப்பு
  வாங்கினான் கன்னத்தில் அப்பு!///


  //ஹா ஹா ஹா ஹா தல சூப்பர்....!!!//
  வாங்க மனோ!

  பதிலளிநீக்கு
 19. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //அசத்திட்டீங்க தல...!!!//
  நன்றி மனோ!

  பதிலளிநீக்கு
 20. ஆஹா அருமையான லிமரிக் + சாப்பாட்டுக்கடைப் பதிவு! நேரே கடைக்குப் போய்வந்த திருப்தி! மகன் மாவட்ட கலக்டெராக இருந்தும் , அப்ப உழைத்து சாப்பிட நினைப்பது, அவர் மீதான மரியாதையைக் கூட்டுகிறது!

  பதிலளிநீக்கு
 21. காமெடிக் கவிதை சூப்பர்..வைணவப் புளியோதரைகளுக்குத் தனி ருசி தான்.

  பதிலளிநீக்கு
 22. சூடான சுவையான பகிர்வு. நன்றி.

  பதிலளிநீக்கு
 23. பதிவு முடிஞ்சதும் கலக்கலா நாலு வரி பஞ்ச் செம கலக்கல்...நானும் உணவு ப்ரியந்தான்...தொடர்ந்து பகிருங்கள்

  பதிலளிநீக்கு
 24. சில புகழ்பெற்ற கோயில்களில் தரும் புளியோதரையும் செம டேஸ்டாக இருக்கும்..உதாரணம் மதுரை

  பதிலளிநீக்கு
 25. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...

  //ஆஹா அருமையான லிமரிக் + சாப்பாட்டுக்கடைப் பதிவு! நேரே கடைக்குப் போய்வந்த திருப்தி! மகன் மாவட்ட கலக்டெராக இருந்தும் , அப்ப உழைத்து சாப்பிட நினைப்பது, அவர் மீதான மரியாதையைக் கூட்டுகிறது!//
  அப்படியும் சிலர்! நன்றி ஓ.வ நா.

  பதிலளிநீக்கு
 26. செங்கோவி கூறியது...

  //காமெடிக் கவிதை சூப்பர்..வைணவப் புளியோதரைகளுக்குத் தனி ருசி தான்.//
  உண்மை.
  நன்றி செங்கோவி!

  பதிலளிநீக்கு
 27. FOOD கூறியது...

  // சூடான சுவையான பகிர்வு. நன்றி.//
  நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 28. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

  // பதிவு முடிஞ்சதும் கலக்கலா நாலு வரி பஞ்ச் செம கலக்கல்...நானும் உணவு ப்ரியந்தான்...தொடர்ந்து பகிருங்கள்//
  நன்றி சதீஷ்!

  பதிலளிநீக்கு
 29. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

  //சில புகழ்பெற்ற கோயில்களில் தரும் புளியோதரையும் செம டேஸ்டாக இருக்கும்..உதாரணம் மதுரை//

  பிரசாதம் என்பதாலேயே ஒரு தனிச் சுவை வந்துவிடுகிறது!

  பதிலளிநீக்கு
 30. புளியோதரை வடை என்று சாப்பாட்டு ஐட்டம் பெயர் சொல்லி கடுப்பை கிளப்புகிறார் மை லார்ட்!!

  பதிலளிநீக்கு
 31. ரசிச்சு ரசிச்சு சாப்பிட்டமாதிரி இருக்கு இரண்டு பதிவுகளும் !

  பதிலளிநீக்கு
 32. புளியோதரை உணவு பற்றிய, இன்றும் நெஞ்சில் நிழலாடும் சுவை குன்றாத நினைவுகளை இப் பதிவினூடாக மீட்டியிருக்கிறீங்க.

  பதிலளிநீக்கு
 33. ஒரு லிமரிக்குடன் முடித்தால்தான் எனக்குத் திருப்தி!.நையாண்டிக் கவி,சிந்து கவி என்று என்ன பெயர் வேண்டுமென்றாலும் சொல்லுங்கள்.//

  ஐயா இப்ப நேரடியாகே நம்மளைக் குத்துறார்...
  ஹி...ஹி....

  பதிலளிநீக்கு
 34. சாப்பாட்டுப் பிரியன் சின்ன மணி..

  ஹி...ஹி...
  லிமரிக் சூப்பரா இருக்கு ஐயா,

  பகிர்விற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 35. மைந்தன் சிவா கூறியது...

  //புளியோதரை வடை என்று சாப்பாட்டு ஐட்டம் பெயர் சொல்லி கடுப்பை கிளப்புகிறார் மை லார்ட்!!//
  ”அப்ஜெக்‌ஷன் ஓவர்ரூல்ட்”
  நன்றி மைந்தா!!

  பதிலளிநீக்கு
 36. ஹேமா கூறியது...

  // ரசிச்சு ரசிச்சு சாப்பிட்டமாதிரி இருக்கு இரண்டு பதிவுகளும் !//
  நன்றி ஹேமா!

  பதிலளிநீக்கு
 37. நிரூபன் கூறியது...

  //புளியோதரை உணவு பற்றிய, இன்றும் நெஞ்சில் நிழலாடும் சுவை குன்றாத நினைவுகளை இப் பதிவினூடாக மீட்டியிருக்கிறீங்க.//
  உணவின் சுவை அப்படி!

  பதிலளிநீக்கு
 38. நிரூபன் கூறியது...

  ஒரு லிமரிக்குடன் முடித்தால்தான் எனக்குத் திருப்தி!.நையாண்டிக் கவி,சிந்து கவி என்று என்ன பெயர் வேண்டுமென்றாலும் சொல்லுங்கள்.//

  //ஐயா இப்ப நேரடியாகே நம்மளைக் குத்துறார்...
  ஹி...ஹி....//

  குத்தவெல்லாம் இல்லை,நன்றி அறிவிப்பே!லிமெரிக் என்ற பெயரில் ஐந்து வரி கிறுக்கியதற்கு ஒரு அங்கீகாரம் கொடுத்ததற்கு நன்றியின் வெளிப்பாடு, நகைச்சுவையுடன்!

  பதிலளிநீக்கு
 39. நிரூபன் கூறியது...

  //சாப்பாட்டுப் பிரியன் சின்ன மணி..

  ஹி...ஹி...
  லிமரிக் சூப்பரா இருக்கு ஐயா,

  பகிர்விற்கு நன்றி.//

  நன்றி நிரூ!

  பதிலளிநீக்கு
 40. உணவு என்றால் எனது நண்பர் சேலம் பாலுவைதான் ஞாபகம் வரும். சேலத்தை சுற்றியுள்ள அனைத்து ஓட்டல்களும் அவருக்கு அத்துப்படி. அதன் ருசி, அதன் உரிமையாளர் இப்படி அடுக்கி கொண்டே போவார். அலுவல் வேலையாக எத்தனையோ முறை சேலம் சென்ற போதெல்லாம் அதே கடைக்கு அவர் அழைத்துச் சென்றதில்லை ஆனால் நான்தான் திரும்ப சென்றிருக்கிறேன்.

  வேதநாரயணனை அதிகாரியாகதான் அறிவேன் அவரிடம் பணிபுரிந்ததால் ஆனால் அவர் தந்தை ஒரு உணவகம் நடத்தினார் என்பது செய்திதான் எனக்கு.

  உணவென்றால் நாவுறும்
  பணமிருந்தால் பந்தியும் மாறும்
  பித்தனின் கவிபடிக்க
  வந்த பசியும் மாறும்

  பதிலளிநீக்கு
 41. வேல்முருகன் அருணாசலம் கூறியது...

  உணவு என்றால் எனது நண்பர் சேலம் பாலுவைதான் ஞாபகம் வரும். சேலத்தை சுற்றியுள்ள அனைத்து ஓட்டல்களும் அவருக்கு அத்துப்படி. அதன் ருசி, அதன் உரிமையாளர் இப்படி அடுக்கி கொண்டே போவார். அலுவல் வேலையாக எத்தனையோ முறை சேலம் சென்ற போதெல்லாம் அதே கடைக்கு அவர் அழைத்துச் சென்றதில்லை ஆனால் நான்தான் திரும்ப சென்றிருக்கிறேன்.

  வேதநாரயணனை அதிகாரியாகதான் அறிவேன் அவரிடம் பணிபுரிந்ததால் ஆனால் அவர் தந்தை ஒரு உணவகம் நடத்தினார் என்பது செய்திதான் எனக்கு.

  உணவென்றால் நாவுறும்
  பணமிருந்தால் பந்தியும் மாறும்
  பித்தனின் கவிபடிக்க
  வந்த பசியும் மாறும்


  //சில இடங்களில் சாப்பிட்ட உனவின் சுவை நினைவை விட்டு நீங்குவதில்லை!//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 42. என்ன ஐயா இப்போ கொஞ்ச நாளா சாப்பாடு பதிவா போடறீங்க. அதுதான் இப்போதைய ட்ரண்டோ?

  பதிலளிநீக்கு
 43. @சாப்பாடு எப்பவுமே டிரண்ட்தான்!
  தூங்கிக்கொண்டிருந்தவரை மனோ வந்து எழுப்பி விட்டாரோ!
  நன்றி விஜயன்!

  பதிலளிநீக்கு
 44. http://krvijayan.blogspot.com/2011/06/blog-post_26.html ஐயா இது தான் என் லிங்க. படிக்கவும் ஐயா.

  பதிலளிநீக்கு