தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜூன் 10, 2011

நமிதா ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி!

சமீபத்தில் நவயுக குரு ஒருவரின் ஆன்மீக/உடல்நலப் பயிற்சியின் அறிமுக நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்.முன்பே பயிற்சி பெற்று, பயிற்றுவிக்கும் தகுதி பெற்ற ஒருவர்தான் பொறுப்பேற்றிருந்தார்.சுமார் 30 பேர் வந்திருந்தார்கள்.அதில் சிலர் முன்பே பயிற்சி பெற்றவர்கள்.

நிகழ்ச்சி தொடங்கியதும், அவர்கள் ஒவ்வொருவராக வந்து தங்கள் அனுபவங்களைக் கூறினர்.ஒருவர்,தனக்கு நீரிழிவு நோய் தீவிரமாக இருந்ததாகவும், பயிற்சிக்குப் பின் இரத்தச் சர்க்கரை அளவு சாதாரணமாகி விட்டதாகவும் கூறினார். மற்றொருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மருந்துகள் சாப்பிட்டு வந்ததாகவும்,பயிற்சிக்குப் பின் மாத்திரை சாப்பிடும் தேவையில்லாமல் போய் விட்டதாகவும் சொன்னார். இவ்வாறே மேலும் ஒரிருவர் தங்கள் அனுபவங்களை விவரித்தனர்.

இவற்றையெல்லாம் கேட்கும்போது எனக்கு வேறு ஒரு நினைவு வந்தது.கடற்கரை அல்லது வேறு சில மைதானங்களில் நடைபெறும் ஆன்மீக சுகமளிக்கும் அற்புதக்கூட்டங்கள் பற்றிய நினைப்பு.அங்கு “குருடர்கள் பார்க்கிறார்கள்,ஊமைகள் பேசுகிறார்கள்,முடவர்கள் நடக்கிறார்கள்”என்று விளம்பரம் செய்வார்கள்.கூட்டம் நடத்துபவர் பிரார்த்தனை செய்வார். பின் சிலர் சாட்சிகளாக வந்து தாங்கள் அற்புத சுகமடைந்ததைப் பற்றி விவரிப்பார்கள்.அந்த நினைவுதான் எனக்கு வந்தது.

ஏன் மக்கள் இந்த குருக்களைத் தேடி ஓடுகிறார்கள்?இவர்களிடம் என்ன இருக்கிறது?

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில்,எளிதாக மன அமைதியும் உடல் நலமும் பெறுவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று தேடும் மனிதனுக்கு,இந்த குருக்கள் ஒரு நல்ல வழியாகத் தெரிகிறார்கள் .இவர்களது தகுதிகள்-

1.பகவத்கீதை,உபநிடதங்கள்,வேதாந்த நூல்கள் பற்றிய அறிவு.

2.பிராணாயாமம்,யோகா பற்றிய அறிவு.அவற்றில் சில புதிய உத்திகள்.

3.பேச்சுத்திறமை.

நான் என்னையே எடை போட்டுப் பார்க்கிறேன்

1.சின்மயா மிஷனில் பகவத்கீதை,வேத பாராயணம்,சில உபநிடதங்கள்,ஆத்ம போதம்,விவேகசூடாமணி போன்றவற்றை சிறிது கற்றிருக்கிறேன்.

2.ஓரளவுக்குப் பேச்சுத்திறமை இருக்கிறது(வங்கிப் பணியில் அது இல்லாமல் இலக்குகளை எட்ட முடியுமா?)

3.மூச்சுப் பயிற்சி சிறிது செய்ததுண்டு.அதில் நல்ல திறமை பெறவேண்டும்.புதிய முறை ஒன்று துவங்க வேண்டும்.

4.கடைசியாக ஒரு உபரித் திறமை-சோதிடம் பற்றிய என் அறிவு.(ஓரளவுக்கு நல்ல சோதிடனாக அங்கீகரிக்கப் பட்டிருக்கிறேன். சோதிடம் என் தொழில் அல்ல!)

எனவே,சிறிது காலத்துக்குப்பின் நானும் ஒரு குருவாக மாறும் வாய்ப்பு உள்ளது!

சில குருக்களிடம் பயிற்சி பெற்றுச் சில நடிகைகள்,பயிற்சியாளராக இருப்பதை அறிந்திருப்பீர்கள்!

அது போல் நமிதா என்னிடம் பயிற்சி பெற்றுப் பயிற்சியாளராகும் நாள் வரலாம் .நமிதா ரசிகர்களே, அவரிடம் நீங்கள் பயிற்சி பெறும் வாய்ப்புக் கிடைக்கலாம் !அந்த பொற்காலத்துக்காகக் காத்திருங்கள்!)

37 கருத்துகள்:

 1. நமீதா வந்தால் நானும் வருவேன் ......

  பதிலளிநீக்கு
 2. நிஜமாகவே இது நல்ல செய்தி தான் - எங்களை விட உங்களுக்கு... :)

  எப்ப ஆரம்பிக்க போறீங்க சொல்லுங்க...

  பதிலளிநீக்கு
 3. எனவே,சிறிது காலத்துக்குப்பின் நானும் ஒரு குருவாக மாறும் வாய்ப்பு உள்ளது!//

  ஜனங்களே என்ன பார்வை வேண்டிக் கிடக்கு!

  இப்பவே பித்தன் ஐயாவின் ஆன்மீக அணியில் சேர்ந்திடுங்க...

  பதிலளிநீக்கு
 4. சில குருக்களிடம் பயிற்சி பெற்றுச் சில நடிகைகள்,பயிற்சியாளராக இருப்பதை அறிந்திருப்பீர்கள்!//

  குருவே, தங்களை மனதில் இருத்தும் சீடனுக்கு ஒரு சந்தேகம்,

  தங்களின் ஆசிரமத்தினுள் கமரா போன்களை அனுமதிப்பீர்களா?

  பதிலளிநீக்கு
 5. அது போல் நமிதா என்னிடம் பயிற்சி பெற்றுப் பயிற்சியாளராகும் நாள் வரலாம் .நமிதா ரசிகர்களே, அவரிடம் நீங்கள் பயிற்சி பெறும் வாய்ப்புக் கிடைக்கலாம் !அந்த பொற்காலத்துக்காகக் காத்திருங்கள்!)//

  ஐயா, தங்களின் சீடனாக ஏதாவது தகுதி இருக்க வேண்டுமா?
  இலத்திரனியல் சாதனங்களையும்,
  கமாரக்களையும் இயக்கத் தெரிந்தால் ஓக்கே தானே;-)))

  பதிலளிநீக்கு
 6. அருமையான செய்தி. வாழ்த்துக்க. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 7. ஐயா எங்கேயோ போயிட்டிங்க..
  எங்க ஆரம்பிச்சி எங்கயோ முடிச்சிட்டிங்க....


  இருந்தாலும் சீக்கீறம் நமிதாவுக்கு பயிற்சி கொடுத்து அனுப்பிவையுங்கள்..

  பதிலளிநீக்கு
 8. koodal bala கூறியது...

  //வடை லபக் ...//
  பாத்து,பாத்து!சுடப்போகுது!
  நன்றி பாலா!

  பதிலளிநீக்கு
 9. koodal bala கூறியது...

  // நமீதா வந்தால் நானும் வருவேன் ......//
  முதல் பெயராகப் பதிவு செய்து விட்டேன்!கட்டணச் சலுகையும் உண்டு!

  பதிலளிநீக்கு
 10. வெங்கட் நாகராஜ் கூறியது...

  // நிஜமாகவே இது நல்ல செய்தி தான் - எங்களை விட உங்களுக்கு... :)

  எப்ப ஆரம்பிக்க போறீங்க சொல்லுங்க...//
  உங்கள் அனைவரது உணர்ச்சிப் பிரதிபலிப்பைப் பொறுத்து ஆரம்பிக்க வேண்டியதுதான்!
  நன்றி வெங்கட்!

  பதிலளிநீக்கு
 11. நிரூபன் கூறியது...

  எனவே,சிறிது காலத்துக்குப்பின் நானும் ஒரு குருவாக மாறும் வாய்ப்பு உள்ளது!//

  //ஜனங்களே என்ன பார்வை வேண்டிக் கிடக்கு!

  இப்பவே பித்தன் ஐயாவின் ஆன்மீக அணியில் சேர்ந்திடுங்க...//
  வாருங்கள்!நிரூபன் தலைமையில் அணிஅணியாய் வாருங்கள்!

  பதிலளிநீக்கு
 12. நிரூபன் கூறியது...

  சில குருக்களிடம் பயிற்சி பெற்றுச் சில நடிகைகள்,பயிற்சியாளராக இருப்பதை அறிந்திருப்பீர்கள்!//

  //குருவே, தங்களை மனதில் இருத்தும் சீடனுக்கு ஒரு சந்தேகம்,

  தங்களின் ஆசிரமத்தினுள் கமரா போன்களை அனுமதிப்பீர்களா?//
  என் ஆசிரமத்தில் அதற்கு அவசியமில்லை சீடா!அது ஒரு திறந்த புத்தகம்!

  பதிலளிநீக்கு
 13. நிரூபன் கூறியது...

  அது போல் நமிதா என்னிடம் பயிற்சி பெற்றுப் பயிற்சியாளராகும் நாள் வரலாம் .நமிதா ரசிகர்களே, அவரிடம் நீங்கள் பயிற்சி பெறும் வாய்ப்புக் கிடைக்கலாம் !அந்த பொற்காலத்துக்காகக் காத்திருங்கள்!)//

  // ஐயா, தங்களின் சீடனாக ஏதாவது தகுதி இருக்க வேண்டுமா?
  இலத்திரனியல் சாதனங்களையும்,
  கமாரக்களையும் இயக்கத் தெரிந்தால் ஓக்கே தானே;-)))//
  மீண்டும் சொல்கிறேன், அதற்கெல்லாம் வேலையில்லை! அன்பே சிவம்!

  நன்றி நிரூபன்!

  பதிலளிநீக்கு
 14. இராஜராஜேஸ்வரி கூறியது...

  //அருமையான செய்தி. வாழ்த்துக்க. பாராட்டுக்கள்.//
  நன்றி இராஜராஜேஸ்வரி!

  பதிலளிநீக்கு
 15. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  // ஐயா எங்கேயோ போயிட்டிங்க..
  எங்க ஆரம்பிச்சி எங்கயோ முடிச்சிட்டிங்க....


  இருந்தாலும் சீக்கீறம் நமிதாவுக்கு பயிற்சி கொடுத்து அனுப்பிவையுங்கள்..//
  அவசரப் பட்டால் எப்படி?பொறுமை!
  நன்றி சௌந்தர்!

  பதிலளிநீக்கு
 16. மிக நல்ல கருத்தை கொண்ட பதிவு ஐயா
  அற்புத செய்திகளை தாங்கிய இந்த பதிவுக்கு தலைப்பு தான் சற்று நெருடலாய் .............

  பதிலளிநீக்கு
 17. இருக்கும் குருக்களின் இம்சை போதும் ஐயா ..
  நமீதான்னு வேற சொல்றிங்க ம்ம்ம் ஸ்லிமா எனக்கு பிடிச்ச மாதிரி யாரும் வர வாய்ப்பு இருக்கா ...இருந்தா பாபா ராம்தேவ் உங்க ஆசிரமத்துக்கு பைனான்ஸ் பண்ண ரெடியாம்

  பதிலளிநீக்கு
 18. A.R.ராஜகோபாலன் கூறியது...

  // மிக நல்ல கருத்தை கொண்ட பதிவு ஐயா
  அற்புத செய்திகளை தாங்கிய இந்த பதிவுக்கு தலைப்பு தான் சற்று நெருடலாய் .............//

  நல்ல கருத்தேயாயினும்
  நாலு பேரைச் சென்றடைய
  பொல்லாத தலைப் பொன்று
  தேவையே பதிவுலகில்!
  நன்றி ராஜகோபாலன்!

  பதிலளிநீக்கு
 19. ரியாஸ் அஹமது கூறியது...

  //இருக்கும் குருக்களின் இம்சை போதும் ஐயா ..
  நமீதான்னு வேற சொல்றிங்க ம்ம்ம் ஸ்லிமா எனக்கு பிடிச்ச மாதிரி யாரும் வர வாய்ப்பு இருக்கா ...இருந்தா பாபா ராம்தேவ் உங்க ஆசிரமத்துக்கு பைனான்ஸ் பண்ண ரெடியாம்//
  வாய்ப்பு எப்போதுமே உண்டு!பதிவு செய்து கொள்ளுங்கள்!
  நன்றி ரியாஸ்!

  பதிலளிநீக்கு
 20. // சிறிது காலத்துக்குப்பின் நானும் ஒரு குருவாக மாறும் வாய்ப்பு உள்ளது! //

  நல்ல காரியங்களைத் தள்ளிப்போடக்கூடாது. நன்றே செய்க. அதுவும் இன்றே செய்க!

  பதிலளிநீக்கு
 21. அருமையான விஷயம் ஒன்றை எளிதாக அனைவரிடமும் கொண்டு சேர்க்க, நமிதாவை பயன்படுத்திய உங்கள் சாமர்த்தியம் வியக்க வைக்கிறது!

  பதிவு நல்ல சேதிகளை சொல்கிறது!

  அனைத்துலக நமிதா ரசிகர் மன்றம் - ஃபிரான்ஸ் கிளையின் முன்னாள் தலைவர் என்ற வகையில் இதனை வாழ்த்துகிறேன்!!!!!!!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
 22. ஐயா, தித்திக்கும் இனிய செய்தி!!

  உங்களை ஏற்கனவே ஃபாலோ பண்ற எங்களுக்கு முன்னுரிமை அளிக்கணும்னு கேட்டுக்குறேன்..

  பதிலளிநீக்கு
 23. பயிற்சிக்குப்பின் மாத்திரை சாப்பிடும் தேவையில்லாமல் போய்விட்டதாகவும் சொன்னார்...
  நேரே சர்ஜரியா?

  பதிலளிநீக்கு
 24. வே.நடனசபாபதி கூறியது...

  // சிறிது காலத்துக்குப்பின் நானும் ஒரு குருவாக மாறும் வாய்ப்பு உள்ளது! //

  //நல்ல காரியங்களைத் தள்ளிப்போடக்கூடாது. நன்றே செய்க. அதுவும் இன்றே செய்க!//
  பதறாத காரியம் சிதறாது!

  பதிலளிநீக்கு
 25. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...

  //அருமையான விஷயம் ஒன்றை எளிதாக அனைவரிடமும் கொண்டு சேர்க்க, நமிதாவை பயன்படுத்திய உங்கள் சாமர்த்தியம் வியக்க வைக்கிறது!//
  வேறு வழியென்ன இருக்கிறது?

  பதிவு நல்ல சேதிகளை சொல்கிறது!

  அனைத்துலக நமிதா ரசிகர் மன்றம் - ஃபிரான்ஸ் கிளையின் முன்னாள் தலைவர் என்ற வகையில் இதனை வாழ்த்துகிறேன்!!!!!!!!!!!!!!!!
  ஏன் முன்னாள்?!
  நன்றி ஓ.வ.நா.!

  பதிலளிநீக்கு
 26. செங்கோவி கூறியது...

  //ஐயா, தித்திக்கும் இனிய செய்தி!!

  உங்களை ஏற்கனவே ஃபாலோ பண்ற எங்களுக்கு முன்னுரிமை அளிக்கணும்னு கேட்டுக்குறேன்.//
  கேட்காமலே கொடுக்கப் படும்!
  நன்றி செங்கோவி!

  பதிலளிநீக்கு
 27. அப்பாதுரை கூறியது...

  பயிற்சிக்குப்பின் மாத்திரை சாப்பிடும் தேவையில்லாமல் போய்விட்டதாகவும் சொன்னார்...
  //நேரே சர்ஜரியா?//
  அப்படித்தான் இருக்குமோ!
  நன்றி அப்பாதுரை!

  பதிலளிநீக்கு
 28. பயிற்சி நடக்கும், பயிற்சிக்குப்பின் முயற்சி இருக்குமா?

  பதிலளிநீக்கு
 29. ஓம் சந்திரானந்த (நமீதா ) நமஹா ! தங்களுக்கு எல்லா வித தகுதிகளும் உள்ளது !நீங்கள் கூறியது போல "காதலா காதலா " திரைப்படத்தில் கூட ஒரு காட்சி வரும். உங்களுக்கு கூட்டம் கூடும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை .. நமீதா பெயரை போட்டு பலரின் ஆர்வத்தை கிளப்பி விட்டீர்களே .... வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 30. FOOD கூறியது...

  //பயிற்சி நடக்கும், பயிற்சிக்குப்பின் முயற்சி இருக்குமா?//
  முயற்சி திருவினையாக்கும்!

  பதிலளிநீக்கு
 31. FOOD கூறியது...

  // தமிழ் மணம் ஏழு!//
  நன்றி,சார்!

  பதிலளிநீக்கு
 32. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

  //I am the chief seedan of you//
  உங்களுக்கு ராஜபாட்டைதான்!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 33. Vasu கூறியது...

  //ஓம் சந்திரானந்த (நமீதா ) நமஹா ! தங்களுக்கு எல்லா வித தகுதிகளும் உள்ளது !நீங்கள் கூறியது போல "காதலா காதலா " திரைப்படத்தில் கூட ஒரு காட்சி வரும். உங்களுக்கு கூட்டம் கூடும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை .. நமீதா பெயரை போட்டு பலரின் ஆர்வத்தை கிளப்பி விட்டீர்களே //

  வாங்க வாசு! ஜோதியில ஐக்கியமாயிடுங்க!
  நன்றி!

  பதிலளிநீக்கு