தொடரும் தோழர்கள்

புதன், ஜூன் 07, 2017

ஒரு கிடாயின் கருணை மனு..-1

முதலிரவு

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் கணவன்.

ஆனால்,மனைவியோ வந்து படுத்துவுடன் தூங்கி விடுகிறாள்.

பெருத்த ஏமாற்றம் கணவனுக்கு.

மறுநாள்..


கணவன் வருகிறான்.

மனைவி ஒருக்களித்துப் படுத்துத் தூங்கிக்கொண்டிருக்கிறாள்.

கணவன் ஒரு  பெருமூச்சுடன் தூங்கி விடுகிறான்.

அவன் மனதில் பல எண்ணங்கள்.

அவளுக்கு என்னை பிடிக்கவில்லையோ?

தாம்பத்திய உறவில் நாட்டமில்லையோ?

நம் இல் வாழ்க்கை வீணானதோ?

விரிசலுக்கான வித்து!

புரிதல் இல்லாததால் ஏற்பட்ட குழப்பம்!

இதைப் பேசித் தீர்த்துக் கொள்ளவில்லையெனில் வாழ்க்கையே நரகம்தான்.

இப்போது படத்துக்கு வருவோம்.

புது மனைவி பரிசுப் பொட்டலங்களைப் பிரித்துக் கொண்டிருக்கிறாள்.

நண்பி கொடுத்த பரிசு ராதா-கிருஷ்ணன் படம்.

கணவன் பார்த்துவிட்டு ஜோடிப் பொருத்தம் நல்லாருக்கு என்கிறான்.

நண்பி,அவள் குழந்தை என்று பேச்சு நடக்கிறது.

கணவன் கேட்கிறான்"உனக்குக் கொளந்தன்னா பிடிக்குமா?"

மனைவி"யாருக்குதான் பிடிக்காது?"

கணவன்,ஆர்வத்துடன்"நாம கொளந்த பெத்துக்கலாமா?"

மனைவி அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டுத் தலை குனிந்து நாணத்துடன் தலையசைக்கிறாள்.

அவன் அவசரமாக அவள் அருகில் வந்து அமர்ந்து கேட்கிறான் "பின்ன ஏன் மொத ராத்திரி தூங்கிட்ட?"

அவள்"எனக்குத் தலையை வலிச்சுது,தூங்கிட்டேன்"

நேத்து? என்று அவன் கேட்க அவள் சொல்கிறாள்"நான் முழிச்சிட்டுதான் இருந்தேன்.நீங்கதான் வந்தவுடனே தூங்கிட்டீங்க.டயர்டா இருக்கீங்கன்னு பேசாம இருந்துட்டேன்"

அவன் முகத்தில் பெரிய நிம்மதி "இவ்வளவுதானா " என்கிறான்

சிறப்பான காட்சி.

நமக்கெல்லாம் ஒரு பழக்கம் உண்டு.

கூட்டமாகச்  செல்பவர்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கப்போனால்,எல்லோரும் போய் வருவார்கள்.

படத்தில் லாரியில் ஏறியதும் ஒரு கிழவி சிறுநீர்கழிக்கச் செல்ல, அனைவரும் லாரியிலிருந்து இறங்கி அதே காரணத்துக்காகச் செல்கின்றனர்.வண்டியில் எஞ்சியிருப்பது,ஆடு மட்டுமே.அதுவும் நிமிர்ந்து பார்த்து விட்டுச்  சொட சொட எனச்.........!

ஒரு மெலிதான நகைச்சுவை.அத்துடன் நாம் எல்லாருமே ஆட்டு மந்தைகள்தான் என ஆடு பரிகசிப்பது போல் தோன்றியது.

டிஸ்கி: படம் கொஞ்சம்தான் பார்த்தேன்.பார்க்கப் பார்க்கப் பார்த்ததை பகிர்ந்து கொள்கிறேன்!

   

31 கருத்துகள்:

  1. காட்சி விவரிப்பு அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பாணியில் அருமையாக ஏதேதோ சட சடன்னு சொல்ல ஆரம்பித்து, ஒருவித ஆர்வத்தினைத் தூண்டிவிட்டு, கடைசியில் சொட சொட எனச்.........! சொல்லி முடித்துவிட்டீர்கள்.

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இதுவும் நல்லாவேதான் இருக்குது.

    பதிலளிநீக்கு
  3. பார்க்க கூடிய படம் போல்ததான் தெரியுது.
    ஆனா நீங்களே முழுசா பாக்கலைன்னு சொல்லுறத பாக்க பயமா இருக்கே...😊☺

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எப்போதுமே ஒரே மூச்சில் படம் பார்ப்பதில்லை.முடியும்போதெல்லாம் சிறிது சிறிதாக பார்ப்பேன்,பலனியில்
      படம் நல்ல படம் என்பதே பேச்சு
      நன்றி

      நீக்கு
  4. இப்படி ஒரு படம் வந்துதா? அதுவே எனக்குத் தெரியல! :)

    பதிலளிநீக்கு
  5. link கொடுங்க ,பொறுமையா காத்திருக்க முடியலே :)

    பதிலளிநீக்கு
  6. ஆட்டுமந்தைகள் தான் பல இடத்தில்))

    பதிலளிநீக்கு
  7. கொஞ்சம் மூளையைக் கசக்கியும்
    பார்த்துவிட்டேன்
    படம் எதுவெனத் தெரியவில்லை
    சொல்லிச் சென்ற விதம் அருமை
    வாழ்த்துக்களுடன்..

    பதிலளிநீக்கு
  8. படத்தின் பெயரே தலைப்புதானா
    இது இந்தியாவில் இல்லாததால் வந்த தொல்லை
    இன்னொரு பதிவினைத் தொடர்கையில்
    இதைத் தெரிந்து கொண்டேன்

    பதிலளிநீக்கு
  9. புதிய படங்கள் எல்லாம் பார்க்கத் தொடங்கி விட்டீர்கள். ,முதலிரவுத் தூக்கமும் மறுநாள் தலைவலியும்.... - அருமை. நம் மனதில் படும் எண்ணங்களுடனேயே வாழத் தொடங்கி விடுகிறோம்!















































    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னூட்டத்தில் எவ்வளவு இடம் வேஸ்ட் செய்திருக்கிறேன்!!!

      :))))

      நீக்கு
    2. புதுசு புதுசா ஏதோ செய்யறீங்க!
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  10. அத்தி பூத்தாற்போல் (இந்த எடுத்துக்காட்டே தவறு. ஏனெனில் அத்தி பூக்கும்.) திரைப்பட விமரிசனம் தந்தாலும் அருமையாய் தந்து படத்தைப்பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட்டீர்கள்! படத்தைப் பார்த்திடவேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  11. இது படமா? நானும் என்ன இடுகை என்று யோசித்துக்கொண்டிருந்தேன். படம் பார்க்கும்படி இருக்கா இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முழுவதும் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்!
      நன்றி நெல்லைத் தமிழன்

      நீக்கு
  12. அடடா பித்தன் ஐயா பித்துப் பிடிக்க வைக்கிறீங்களே கதையை சொல்லி ம்ம் நல்லது மேலும் எழுதுங்கள் வியந்து பார்க்கிறோம் நன்றி

    பதிலளிநீக்கு
  13. //படத்தில் லாரியில் ஏறியதும் ஒரு கிழவி சிறுநீர்கழிக்கச் செல்ல, அனைவரும் லாரியிலிருந்து இறங்கி அதே காரணத்துக்காகச் செல்கின்றனர்.வண்டியில் எஞ்சியிருப்பது,ஆடு மட்டுமே.அதுவும் நிமிர்ந்து பார்த்து விட்டுச் சொட சொட எனச்.........!
    // அஹஹஹ்ஹஹஹ் செம!! ஆட்டுமந்தை!!! நம்மை நல்லா டீஸ் பண்ணுது ல?!!

    பொதுவாக நீங்கள் படத்தின் பெயரைப் போட்டு உங்கள் பதிவு எழுதுவீர்கள் இல்லையா அது போல என்று நினைத்தால் நிஜமாகவே படம்!!! ஆம் இந்தப் படம் மிக அருமை நு சொல்லிக்கறாங்க பார்க்க நினைத்துள்ளோம்...முடிவும் தெரியும்!!!! சரி நீங்க சொல்லுங்க...

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  14. இந்த ஜொள்ளு ...சாரி ...லொள்ளு தான வேணாங்குறது!.....

    பதிலளிநீக்கு