தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஜூன் 11, 2017

ஹாலிடே,ஹோலிடே!

வழக்கமான ஹாலிடே ஜாலிடே இன்று     ஹாலிடே, ஹோலி(holy)டே  ஆகி விட்டது.

சிரித்தும் மகிழலாம்.,தெய்வீகத்தை நினைத்தும் மகிழலாம்!

அவர்கள் இறைவன் சன்னிதியில் அமர்ந்திருந்தனர்.

எதிரே நின்ற கோலத்தில் பெருமாள்.திருப்பதி பாலாஜி.

அவர்கள் 35 பேர்.அவர்கள் ஒவ்வொருவருடனும் ஒரு துணை.

அவர்கள் ஓர் அற்புதமான இறை அனுபவத்தில்,இதுவரை கிடைத்திராத  தெய்வீக அனுபவத்தில் திளைத்திருந்தனர்.


கண்களில் கண்ணீர்  பெருகிக் கன்னத்தின் வழியோடிக் கொண்டிருந்தது.வாய்" ஓம் நமோ வேங்கடேசாய" என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது.

உடன் இருக்கும் வழிகாட்டிகள் பகவானின் தோற்றத்தை வர்ணிக்கின்றனர்...

"சுமார் பத்தடி உயர விக்ரகம்.18 அங்குல பீடத்தின் மீது.மூக்கிலிருந்து புறப்பட்டு நெற்றியில் பெரிய நாமம்  .தலையில்கிரீடம்.தோளில் வலது புறம் சக்கரம்.இடது புறம் சங்கு.......
.........
......
வர்ணனை தொடரத் தொடர அவர்கள் அகக் கண்ணில் ஆண்டவன் தரிசனம் நிகழ்கிறது.இரவு முழுவதும் மலையேறிய களைப்பும்,கால்வலியும் எங்கோ ஓடி விட்டன.

இருபது நிமிடங்கள் அவன் சன்னிதியில்

.அவன் ஆனந்த தரிசனத்தில்.

ஆம்!

அவர்கள் அகக் கண்ணால் மட்டுமே அவனைக் காண முடியும்.

இன்று

அவர்களை அங்கு அழைத்து வந்த தோழர்கள் அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு தெய்வீக அனுபவத்துக்குக் காரணமாயினர்.

வாழ்த்துவோம் அவர்களை.

செய்தி:இன்றைய இந்தியாவின் நேரங்கள் சென்னைப் பதிப்பு பக்கம் 4.

கொசுறு:ஒரு சொந்த அனுபவம்.

சில காரணங்களால் சில நாட்களாக என் தினசரி பூசையை நிறுத்தி விட்டேன்.

இன்று விரக்தியின் உச்சத்தில் குளித்தபின் திருநீறு பூசவும் இல்லை.

நாளிதழ் படித்துக் கொண்டிருந்தேன்.

யாரோ அழைத்தனர்.

என் குடியிருப்பு நண்பர்.

பாபா பக்தர்.

ஒவ்வொரு வியாழனும் கோவிலுக்குச் சென்று அங்கிருந்து கொண்டு வரும் விபூதியை வீட்டில் ஒரு டப்பாவில் போட்டு வைப்பார்.

அவர் கையில் விபூதி டப்பாவுடன் நின்று கொண்டிருந்தார்.

அதை என்னிடம் கொடுத்து,விபூதியை எடுத்துக் கொண்டு டப்பாவைக் கொடுங்கள் என்றார்.

மெய் சிலிர்த்துப் போனேன்.

விபூதி அணிய மாட்டாயோ!இந்தா டப்பா நிறைய விபூதி என்று ஆண்டவன் அனுப்பி விட்டு சிரிக்கிறானோ?!

19 கருத்துகள்:

  1. இரண்டுமே மனதைத் தொட்டது. எதற்கும் ஒரு காரண காரியம் இருக்கும் 'கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா'. அதை நம்பித்தான் வாழ்க்கை ஓடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகாகச் சொல்லி விட்டீர்கள்.
      மிக்க நன்றி நெல்லைத் தமிழன்

      நீக்கு
  2. மிகவும் அருமையானதொரு இறை அனுபவத்தை தங்கள் பாணியில் வெகு இனிமையாகச் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. காரணமின்றி காரியம் இல்லை ஐயா
    த.ம.நாளை.

    பதிலளிநீக்கு
  4. இந்த அனுபவத்தின் சூட்சுமம்
    எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாது
    மனம் கவர்ந்த பதிவு
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  5. இதிலென்ன அதிசயம் ,விபூதி இல்லா உங்கள் நெற்றியைப் பார்த்து குடியிருப்பு நண்பர் கொடுத்து இருக்கலாமே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பார்வை தவறு.
      நான் வீட்டை விட்டு வெளியே போகவேயில்லை.
      அதோடு அவர் எங்கள் பிளாக்கிலேயே மாடியில் இருப்பவர்.பார்க்க வாய்ப்பேயில்லை.அப்படியே யாராவது பார்த்தாலும் ஒரு டப்பா விபூதி கொணர்ந்து கொடுப்பாரா என்ன?
      நன்றி பகவான் ஜி

      நீக்கு
  6. //விபூதி அணிய மாட்டாயோ!இந்தா டப்பா நிறைய விபூதி என்று ஆண்டவன் அனுப்பி விட்டு சிரிக்கிறானோ?!//

    நாம் மறந்தாலும் இறைவன் நம்மை மறப்பதில்லை ..இரண்டும் அருமையான அனுபவங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நாம் மறந்தாலும் இறைவன் நம்மை மறப்பதில்லை//
      உண்மை
      நன்றி ஏஞ்சலின்

      நீக்கு
  7. சில அனுபவங்களுக்கு காரணகாரியங்களைத் தேட முடியாது. சிலிர்க்க வைக்கும் அனுபவமாக மாறிவிடும். அனுபவித்தவர்களுக்கே புரியும். கண்பார்வை அற்றவர்கள் ஸ்வாமி தரிசனம் - நெகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  8. இறைவனை அகக்கண்ணால் தரிசித்த அந்த அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்து சொல்லி அந்த தகவலைப் பகிர்ந்த தங்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
    ‘நீரில்லா நெற்றி பாழ்’ என்ற ஔவைப்பாட்டியின் வாக்கு பொய்க்கக்கூடாது என்பதற்காக அந்த இறைவனே டப்பா நிறைய விபூதியை அனுப்பியிருப்பார் என எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
  9. தெய்வ தரிசனத்திற்குக் கண்கள் வேண்டுமோ?!! நெகிழ்ச்சி!! என்றாலும் கண்கள் இருந்தும் அந்த இறைவனை உணர முடியாமல் போவோரின் நடுவில் கண்கள் அற்றவர்கள் அகக்கண்ணால் உணர முடிவது அதுதானே உண்மை. கண்கள் இருந்தாலும் அகக்கண்ணால் இறைவனை உணர்வதுதானே உண்மையான உணர்தல்!!உங்கள் அனுபவமும் அருமை!!! எல்லா நிகழ்வுகளுக்கும் காரணம் உண்டு. நமக்குச் சில புரியும். சில புரியாது. அதற்குத்தான் அகக் கண்ணை எப்போதும் விழிப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது போலும்!!! அருமை!!!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு