என்னங்க!ஒண்ணு சொல்றேன் செய்றீங்களா?
என்ன சொல்லு.
இந்தத் தாடிய எடுத்திடுங்க.
ஏன்?
இடைஞ்சலா இருக்குதுங்க! அது மட்டுமில்லாம பாக்கவும் நல்லா இல்ல.வயசான மாதிரி இருக்கு.
என்ன சொல்றே நீ?மார்க்கத்துல பற்று உள்ளவன் இப்படித்தான் இருக்கணும்.
நீங்கதான் இருக்கீங்க.உங்க நண்பர்கள் ஷாருக்,அமீர் இவங்களெல்லாம் தாடியா வச்சிருக்காங்க?
அவங்க என்னவோ செய்யட்டும்.நான் இப்படித்தான் இருப்பேன்.
இன்னோரு விசயம் கூட.....
என்ன?
எப்பப்பாத்தாலும் என்ன இது பைஜாமாவும் ஜிப்பாவும்?ஜெமினி கணேசன் சோகக் காட்சில வர மாதிரி. எல்லார் மாதிரியும் ஜீன்ஸ் .டீ சர்ட்டெல்லாம் போட்டா எவ்வளவு நல்லாருப்பீங்க தெரியுமா?
இதோ பாரு நக்மா.என் மத நம்பிக்கைகளை நான் விட மாட்டேன்.
திருமணமாகி ஆறு மாதங்களில் தினமும் இதேகதைதான்.
இந்த வாக்குவாதம் தொடர்கிறது
ஒரு நாள்.................
ஆத்திரமடைந்த நக்மா,சல்மான் கான் முகத்தில் கொதிக்கும் நீரை வீசி விடுகிறாள் .
சல்மான் கானுக்கு 20 % தீக்காயம்.
நக்மா கொலை முயற்சிக்காகக் கைது செய்யப் படுகிறாள்
ஆதாரம் :இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா.அலிகாரில் நடந்த நிகழ்வு
சேட்டை சேட்டை அத்தனையும் சேட்டை
பதிலளிநீக்குபத்திரிகைச் செய்தியைச் சொல்லியிருக்கிறேன்!!
நீக்குநன்றி ராஜி
நானும் தான் ‘இந்தியாவின் நேரங்கள்’ நாளிதழைப் படிக்கிறேன். ஆனால் தங்கள் கண்ணுக்கு தெரியும் பதிவுக்கான கரு எனக்கு ஏனோ தெரிவதில்லை. வழக்கம்போல் பிரபலமான பெயர்களை வைத்து விளையாடிவிட்டீர்கள்! ஏமாந்தது நிஜம்! பாராட்டுகள்!
பதிலளிநீக்குபதிவு எழுத ஒரு சூடான செய்தியாச்சே!
நீக்குநன்றி சார்
இப்படியா மனதை பதற விடுவது ஐயா.
பதிலளிநீக்குஇதற்கெல்லாம் பதறலாமா?!
நீக்குநன்றி கில்லர்ஜி
உண்மையில் நடிகை நடிகைகள் என்றால் ஊடகம் எல்லாமே இதே செய்தியை பிரேகிங் நியூஸ் ஆக்கியிருப்பார்களே :)
பதிலளிநீக்குசரியாச் சொன்னீங்க!
நீக்குநன்றி பகவான்ஜி
வயசுக்கேற்ற பதிவு!?😊.
பதிலளிநீக்குகுசும்பு இருக்கலாம்., ஆனா
இவ்வளவு. இவ்வளவு.. இவ்வளவூ... (வடிவேலு வாய்ஸ்ல படிங்க) இருக்கப்படாது.
நானும் ஒரு செகண்ட் குழம்பிப்போனேன் :) சல்லு வுக்கு தாடி இல்லையேன்னு :) ஹாஹா
பதிலளிநீக்குஓ... இப்படி எல்லாம் கூடச் செய்வார்களா!
பதிலளிநீக்குஅடப்பாவி... (2)
பதிலளிநீக்குஇப்படியா செய்வார்கள்
பதிலளிநீக்கு//எப்பப்பாத்தாலும் என்ன இது பைஜாமாவும் ஜிப்பாவும்?ஜெமினி கணேசன் சோகக் காட்சில வர மாதிரி. எல்லார் மாதிரியும் ஜீன்ஸ் .டீ சர்ட்டெல்லாம் போட்டா எவ்வளவு நல்லாருப்பீங்க தெரியுமா?//
பதிலளிநீக்குஅவங்க சொன்னது சரி தான்.
தாடியுடன் தள்ளியே இருந்திருந்தால்
பதிலளிநீக்குதொல்லை இல்லாதும் இருந்திருக்கும்
இதுபோல் நடக்காதும் இருந்திருக்குமோ ?
கொடுமை
பதிலளிநீக்குநல்ல வேளை , என் மனைவி தாடி நல்லா இல்லைன்னதும் எடுத்துட்டேன். :)
பதிலளிநீக்குஇப்படியுமா?!!!
பதிலளிநீக்குதுளசிதரன், கீதா