மனைவி கொடுத்த கூழைக் குடித்து விட்டு வேலைக்குப் புறப்படத் தயாரானான் முருகேசன்.
மனைவி வேகமாக அருகில் வந்து”என்னங்க!இன்னைக்குத் தக்காளி சாதம் செஞ்சிருக்கேன்,உங்க மதிய உணவுக்காக.ஒரு பிளாஸ்டிக் டப்பாவில தக்காளி சாதமும்,இன்னொரு டப்பால தயிர் சாதமும் வச்சி,பையில போட்டு ரப்பர் பேண்டால கட்டி வச்சிருக்கேன். ஸ்பூனும் வச்சிருக்கேன்.இந்தாங்க.எடுத்துட்டுப் போங்க..........’என்று சொல்லி விட்டுப் பையை அவன் கையில் கொடுத்தாள்.
அவன் வாங்கிக்கொண்டு புறப்பட்டான்.
“என்னங்க!மதியம் 2 மணிக்குள்ள சாப்பிட்டுடுங்க.அப்பதான் தக்காளி சாதம் நல்லாருக்கும்” என்று வாசல் வரை வந்து சொல்லி வழி அனுப்பினாள்.
முருகேசன் வெளியே வந்து வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
அவன் கைபேசியில் தகவல்கள் வரத்தொடங்கின.
நேராக ஆரிய பவன்.இட்லி சாம்பார்,வடை.பார்சல் பையை தனது கம்பெனி பைக்குள் வைத்தான்.அதற்குள் முன்னமே ஓர் ஓரமாகத் தனது சாப்பாட்டுப் பையை வைத்திருந்தான்.
அருகில் இருக்கும் மற்றொரு உணவகத்திலிருந்து மற்றொரு பார்சல்.
அதுவும் பைக்குள் புகுந்தது.
அந்த இரண்டையும் கொடுக்க வேண்டிய இடங்களை நோக்கிப் புறப்பட்டான்.
தொடங்கி விட்டது அன்றைய வேலை
ஒட்டல் ஒட்டலாய் ,வீடு வீடாய் ,தொடர்ந்து பயணம்.
இன்று வழக்கத்தை விட ஆர்டர்கள் அதிகம்.
தொடர்ந்து ஓடிக் கொண்டே -ஓட்டிக் கொண்டே இருக்க நேர்ந்தது.
நிற்பதற்கு நேரமில்லாத ஓட்டம்.
குறித்த நேரத்துக்குள் டெலிவரி செயவ்து அவசியம்.
பசித்தது.
மணியைப் பார்த்தான்.
2.10
மனைவி சொன்னது நினைவுக்கு வந்தது.
அடுத்த ஆர்டருக்குள் சாப்பிட்டு விட வேண்டும்.
வண்டியைச் சாலையோரத்தில் நிறுத்தினான்.
பையைத்திறந்து மனைவி கொடுத்த உணவை எடுத்தான்.
ஸ்பூனால் சாப்பிடத் தொடங்கினான்.
தக்காளி சாதம் நன்றாகவே இருந்தது என எண்ணினான்.
ஆனால் முழுவதும் சாப்பிடாமல் தயிர்சாத டப்பாவை எடுத்துக் கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிட்டான்.
நேரம் ஆகி விட்டது..
கைபேசி ஒலித்தது
அடுத்த டெலிவரிக்குப் போக வேண்டும் .
டப்பாக்களைக் கட்டிப் பைக்குள் ஓரமாக வைத்தான்.
புறப்பட்டான்
பாவம் அவனுக்குத் தெரியாது.......
அவனது சாப்பாட்டு நிகழ்வுகள் அனைத்தையும் ஒரு சமூக ஆர்வலர் காணொளியாக எடுத்து விட்டார் என்பது!
டிஸ்கி:இது முழுவதும் கற்பனையே.
தொடரும் தோழர்கள்
நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், டிசம்பர் 13, 2018
வியாழன், ஆகஸ்ட் 24, 2017
நீங்க ஷட்டப் பண்ணுங்க !
நீங்க ஷட்டப் பண்ணுங்க!
என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம்.!
இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று.
எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக்கொண்டே இருப்பவர் பலர்.
பேசும் பேச்சில் சாரம் எதுவுமில்லாமல் வெட்டிப்பேச்சாகப் பேசுபவரைப் பார்த்து என்ன சொல்வது?

ஞாயிறு, ஜூன் 11, 2017
ஹாலிடே,ஹோலிடே!
வழக்கமான ஹாலிடே ஜாலிடே இன்று ஹாலிடே, ஹோலி(holy)டே ஆகி விட்டது.
சிரித்தும் மகிழலாம்.,தெய்வீகத்தை நினைத்தும் மகிழலாம்!
அவர்கள் இறைவன் சன்னிதியில் அமர்ந்திருந்தனர்.
எதிரே நின்ற கோலத்தில் பெருமாள்.திருப்பதி பாலாஜி.
அவர்கள் 35 பேர்.அவர்கள் ஒவ்வொருவருடனும் ஒரு துணை.
அவர்கள் ஓர் அற்புதமான இறை அனுபவத்தில்,இதுவரை கிடைத்திராத தெய்வீக அனுபவத்தில் திளைத்திருந்தனர்.

சனி, ஜூன் 03, 2017
சல்மான் கானைத் தாக்கிய நக்மா!
என்னங்க!ஒண்ணு சொல்றேன் செய்றீங்களா?
என்ன சொல்லு.
இந்தத் தாடிய எடுத்திடுங்க.
ஏன்?
இடைஞ்சலா இருக்குதுங்க! அது மட்டுமில்லாம பாக்கவும் நல்லா இல்ல.வயசான மாதிரி இருக்கு.
என்ன சொல்லு.
இந்தத் தாடிய எடுத்திடுங்க.
ஏன்?
இடைஞ்சலா இருக்குதுங்க! அது மட்டுமில்லாம பாக்கவும் நல்லா இல்ல.வயசான மாதிரி இருக்கு.
புதன், மே 31, 2017
இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை!
புகை யி(ல்)லை என்றார்கள்; ஆனால்
சுருட்டிப் பற்ற வைத்தால்
புகைதான் வருகிறதே!
இழுக்க இழுக்க இன்பம்
இறுதி வரை என்பர்
இறுதியே மிக அருகில்தானே?
பன்னீர் புகையிலை, பான் பராக்
வாயிலிட்டுச் சுவைக்கலாம்
சுருட்டு, பீடி, வெண்சுருட்டு
புகை விட்டு ரசிக்கலாம்
எத்தனை வழிகள்
எமனை விரைந்தழைக்க!
புகையை நீங்கள் விட்டீர்கள்,
ஆனால் அப்புகை உங்களை விடாது
உங்கள் புகையைக் காணாமல்!
புண்பட்டநெஞ்சத்தை
புகைவிட்டு ஆற்றுவாராம்
புகை பட்ட நெஞ்சமே
புண்ணாகிப் போகாதோ?i
இன்று
ஒரு நாள் மட்டுமேன்?
ஒரு நாள் மட்டுமேன்?
ஆண்டு முழுவதும்
எதிர்ப்பு தினமாகட்டும்
இப்பொல்லாத புகையிலைக்கு.
(மீள் பதிவு)
(மீள் பதிவு)
சனி, மே 27, 2017
நடந்ததும் நடக்காததும்!
நேற்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு செய்தி.
குஜராத்தி படங்களில் வில்லனாக நடிக்கும் ஃபெரோஸ் வோரா,தன் மகள் இரண்டு முறை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞனை மணக்க விரும்பியபோது,தடையேதும் சொல்லாமல்,மணம் செய்வித்ததோடு,மீண்டும் ஒரு முறை சிறுநீரகம் தேவைப்பட்டால் தன் சிறுநீரகத்தைத் தருவதாக வாக்கும் அளித்தார்.சமீபத்தில் மருமகனின் சிறு நீரகம் பழுதடைந்தபோது,வாக்களித்தபடி தன் சிறுநீரகத்தைக் கொடுத்துக் காப்பாற்றினார்.இது செய்தி.
இதுவே உண்மையான நிகழ்வு;அதன் முடிவு.
இதை ஆதாரமாகக் கொண்டு பிறந்ததே நேற்றைய கற்பனை.இப்படியும் நடக்கலாம் என்ற சிந்தனையின் வெளிப்பாடு. எனவே அது முடிவு இரண்டு.
மூன்று முடிவுகள் என்று நேற்று சொல்லி விட்டதால் இன்னொரு முடிவையும் தேடி எடுக்க வேண்டியதாகி விட்டது.இதோ மூன்றாவது..........
தன் பெண்ணின் விருப்பத்தை அறிந்த ராமனாதன் தடையேதும் சொல்லாமல் திருமணத்துக்குச் சம்மதித்தார்.உங்கள் அன்புக்குக் குறுக்கே எதுவும் நிற்க முடியாது.கடவுள் நிச்சயம் உங்களுக்கு நல்லதே செய்வான் என்று கூறிவிட்டார்.
திருமணம் நடந்தது.அவர்கள் வாழ்க்கை இன்பமயமாகத்தான் இருந்தது.ராமனாதனுக்கு மருமகனை மிகவும் பிடித்துப் போனது.ஒரு முறை பேசும்போது சொன்னார்”அப்படி நடக்க வேண்டாம்.ஆனால் ஒரு வேளை மீண்டும் ஒரு மாற்றுச் சிறுநீரகம் தேவைப்பட்டால்,கவலைப் பட வேண்டாம்.என்னுடைய சிறுநீரகத்தைத் தருகிறேன்.நம் இருவர் ரத்தமும் ஒரே பிரிவுதான்”
மாதங்கள் கடந்தன.
வாழ்க்கை அப்படியே இருக்குமா என்ன?
அசோக்குக்கு மீண்டும் பிரச்சினை
மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்பட வேண்டும்.
கவிதா தந்தை முன்பு சொன்னதை நினைவு கூர்ந்து,அசோக்கிடமும் சொன்னாள்.
ஆனால் ராமனாதன் அது பற்றி எதுவும் பேசவில்லை..
மருத்துவரைச் சந்திக்கும்போது உடன் சென்றார் ஆனால் தான் தருவது பற்றி வாயைத் திறக்கவில்லை.
கவிதாவுக்குப் பெரும் ஏமாற்றம்.
அவள் தர முன் வந்தும் அது சேரவில்லை.
கொடையாளி கிடைக்க சிறிது தாமதம் ஆயிற்று
அது வரை டயாலிசிஸ் செய்யப்பட்டது.
கவிதா தந்தையைத் தவிர்க்கத் தொடங்கினாள்
கொடையாளி கிடைத்து அறுவையும் நடந்தது.
எதற்குமே தந்தையின் உதவியை நாடவில்லை.
எல்லாம் சுபமாக முடிந்தபின் மருத்துவரிடம் தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது கவிதா சொன்னாள்”அன்பு,பாசம் இல்தெலாம் வெறும் வார்த்தைகள் என்பதை அப்பா எனக்கு உணர்த்தி விட்டார்.முன்பு தானாகவே தான் சிறுநீரகம் அளிப்பதாகச் சொன்னவர்,தேவைப் பட்டபோது நழுவி விட்டார்.என்ன உலகம்.எல்லாமே வேஷம்”
மருத்துவர்,அவர்கள் குடும்ப நண்பரும் கூட.
அவர் சொன்னார்”கவிதா.நீ நினைப்பது தவறு.சில மாதங்களுக்கு முன் உன் தந்தை உடல்நலக் குறைவு காரணமாக இங்கு தங்கியிருந்தபோதுதான் அது தெரிய வந்தது.அவரது ஒரு சிறுநீரகம் முழுதும் செயலிழந்து போயிருந்தது.இருந்தும் இப்போது அவர் என்னிடம் அவர் உயிர் போனாலும் பரவாயில்லை மாப்பிள்ளையைக் காப்பாற்றும் வாய்ப்பைக் கொடு என்று கேட்டார்.ஒருவரைக் கொன்று ஒருவரைப் பிழைக்க வைக்க மாடோம் என்று சொல்லி நான் ஆறுதல் சொன்னேன்.அவர் மிக மனமுடைந்து போயிருக்கிறார்.”
நாற்காலியில் அமர்ந்தபடியே முகத்தைப் பொத்தியவாறு உடைந்து அழலானாள் கவிதா.

வெள்ளி, மே 26, 2017
என்னதான் நடக்கும்...?
”அப்பா”
பெண்ணின் குரல் கேட்டுப் படித்துக் கொண்டிருந்த செய்தித்தாளைக் கீழே இறக்கிப் பார்த்தார் ராமனாதன்.
அவர் பெண் கவிதா.
“என்னம்மா”
அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்
“அப்பா!அசோக்கும் நானும் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்து விட்டொம்”
“என்னம்மா சொல்றே?இது ஏன் நடக்கக் கூடாதுங்கறதைப் பத்தி அன்னிக்கு அவ்வளவு நேரம் பேசினேனே.இன்னும் மனசு மாறலியா.”
“மாறாதுப்பா’

வியாழன், மே 25, 2017
காலா!
ஒரு திரை இசை.
வெற்றிக் கொடி கட்டு என்ற படத்தில் இடம் பெற்ற பாடல்.
"கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு" என்று துவங்கும் பாடல்.
அந்தப் பாட்டு சூப்பர் ஹிட்!
காரணம்,பாடல் வரிகளா?
பாடிய பாடகியின் குரலா?
படத்தில் ஆடிய மாளவிகாவின் ஆட்டமா?
இருக்கலாம்.
ஆனால் நிச்சயமான காரணம்......
அப்பாடலின் ஒரு வரி!
"நம்மூரு சூப்பர் ஸ்டாரு ரஜனிகாந்தும் கருப்புதான்
அழகு கருப்புதான்"
இது போதாதா பாடல் ஹிட்டாக....!
சரி,இதற்கும் தலைப்புக்கும் என்ன தொடர்பு?
காலா என்றால் இந்தியில் கருப்பு என்று பொருளாம்.
இந்தியில் ஒரு விசித்திரம்.எல்லாவற்றுக்கும் பால் உண்டு....
கண் ஆண் பால்,மூக்கு பெண்பால் என்பது போல்
அது போல் காலா என்பது காலி என்றும் மாறும்,அது குறிக்கும் பொருளைப் பொறுத்து.
அது தவிர க,ச,ட,த,ப என்ற எழுத்துக்களுக்கு நான்கு வர்க்கங்கள்!
டில்லிக்குப் போன புதிதில் ஒரு முறை அலுவலகத்தில் ஊழியரை அழைத்து ஒரு காலி கோப்பு கொண்டு வரச் சொன்னேன்.
அவர் விழித்து விட்டு அப்படியெல்லாம் கோப்பு கிடையாதே என்றார்
நான் என் தேவையை விளக்கினேன்.
ஓ! காலி கோப்பா என்று சொல்லி விட்டுக் கொண்டு வந்தார்.
என்ன இது குழப்பம் என்கிறீர்களா?
நான் கேட்டது kaaலி கோப்பு.அதாவது கருப்புக் கோப்பு!
அவர் சொன்னது khaali கோப்பு.அதாவது புதிய,எதுவும் கோக்காத கோப்பு.
தவறான உச்சரிப்பின் விளைவு!
இப்போது கருப்புக்கு வருவோம்.
அழகு கருப்புதான் ...பாடல் வரி
உண்மைதான்.
"கருப்பே ஒரு அழகு காந்தலே ஒரு ருசி " என்று சொல்வார்கள்.
உலக அழகி கிளியோபாட்ரா கருப்பு என்று சொல்வோர் உண்டு;இல்லை என்போரும் உண்டு .
காக்கும் கடவுள் திருமாலே கருப்பு நிறம்தான்.
ஆனால் அதைக் கருப்பு என்று சொல்லாமல் பச்சை என்றும்,இராமனை நீல வண்ணன் என்று சொல்வர்.
பச்சை மாமலைபோல் மேனி என்று பாடுகிறார் தொண்டரடிப்பொடியாழ்வார்.
மையோ,மரகதமோ,மழைமுகிலோ...ஐயோ என்று வர்ணிக்க முடியாமல் தவிக்கிறார் கம்பர்.
திருமால் படுத்துக் கிடப்பதனால் பாற்கடலே பச்சை நிறமாகி விட்டதாம்.
நாமும்தான் தினம் காக்கையைப் பார்க்கிறோம்.
ஆனால் பாரதி பார்க்கும்போது அவனுக்கு ........
காக்கைச் சிறகினிலே நந்தலாலாவின் கருமை நிறம் தோன்றுகிறது.
காலா என்றால் எமனை விளிப்பது.
எவரேனும் எமனை விளிப்பரா?
காலனுக்கும் காலன் உண்டா?
அவன்தான் காலகாலன்.......சிவன்.
மார்க்கண்டேயன் உயிரைக்கவர்ந்து செல்ல எமன் வந்தபோது,மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொள்ள சிவன் தோன்றி எமனைக் காலால் உதைத்து சூலத்தை ஓங்குகிறார்
எமன் மன்னிப்பு வேண்டித் தப்பிக்கிறான்
காலனைக் காலால் உதைக்கும் துணிச்சல் சிவனைத்தவிர,இவனுக்கும் இருந்தது
பாரதி!
காலருகே வா உன்னை மிதிக்கிறேன் என்கிறான்.
சாவைக் கண்டு அஞ்சாத அத்துணிவு எல்லோருக்கும் வேண்டும்!
இறுதியாக,ஆனால் முதன்மையான ஒரு செய்தி
காலா என்பது சூப்பர் ஸ்டாரின்,ரஞ்சித் இயக்கும் படத்தின் தலைப்பு.
படம் இமாலய வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

செவ்வாய், மே 23, 2017
ரிவால்வர் ரீட்டா!
திருமண மண்டபம்.
உறவினர்களாலும் நண்பர்களாலும் நிறைந்திருக்கிறது.
திருமணமாகாத பல ஆண்களும் பெண்களும் நமக்கு ஒரு துணை இங்கு கிடைக்குமா எனக் கண்களை மேய விடுகிறார்கள்
குழந்தைகள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடி விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
தாலி கட்டும் நேரம் வந்தாச்சு என்று உரத்த குரல் எழும்புகிறது.
மாப்பிள்ளை தாலியைக் கையில் எடுக்கிறார்.
சிலர் மேளக்காரரைப் பார்த்து ஒரு விரல் எழுப்பிப் பயமுறுத்த,,அவர் பயந்து போய் வேக வேகமாகக் கெட்டி மேளம் வாசிக்க தொடங்குகிறார்..
இதோ மாப்பிள்ளை தாலி கட்டப் போகிறார்.
”நிறுத்துங்கள்”
கெட்டி மேளச் சத்தத்தையும் மீறி ஒரு பெண்ணின் குரல்...
.
அவள்..
மண மேடை யருகே கையில் துப்பாக்கியுடன்...
அவளை சுற்றி ஆறு பேர் கையில் துப்பாகியுடன்.
எல்லோரும் திகைக்கிறார்கள்.
அந்தப் பெண் பேசுகிறாள்”இதோ இந்த மாப்பிள்ளைக் கோலத்தில் இருக்கும் முருகன் என்னைக் காதலித்தான்.திருமணம செய்வதாக வாக்களித்தான்
ஆனால் இன்று என்னை ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணுக்குத் தாலி கட்டப் போகிறான்..,அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்”
உடன் நிற்கும் ஆண்களைப் பார்த்துக் கையசைக்கிறாள்.
அவர்களில் நால்வர் பாய்ந்து மேடை மீது ஏறி மாப்பிள்ளையை அமுக்கிப் பிடித்துத் தூக்கி மண்டப வாசலை நோக்கி நடக்கின்றனர் அப்பெண்ணும் மீதி இருவரும் துப்பாக்கியுடன் காவலாக உடன் செல்கின்றனர்.
வெளியில் நிற்கும் வேனில் ஏறி போய் விடுகின்றனர்.
எல்லோரது மனத்திலும் ஒரே கேள்வி.....
“யார் இந்த ரிவால்வர் ரீட்டா?”
..................................
எப்போதும் திரைப்படங்களில் முன்பு என்ன நடந்தது என்று(flash-back)
காட்டுவார்கள்.
ரிவால்வர் ரீட்டாவின் பெயர் வள்ளி
அவளுக்கும் முருகனுக்கும் எட்டு ஆண்டுகள் பழக்கம்.
முருகன் பெற்றோருக்குப் பயந்து அவர்கள் பார்த்த பெண்ணை மணக்கச் சம்மதிக்கிறான்
இப்போது மண்டபம்,ரீட்டா கடத்தல்.......
...........................
இந்த சினிமாவில் ஒரு flash-front...............
முருகனின் பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுக்கின்றனர்.
மணக்க இருந்த பெண்ணின் பெற்றோருக்கும் முருகனின் பெற்றோருக்கும்
வள்ளியின் தரப்பினருக்கும் பேச்சு வார்த்தை நடக்கிறது.
புகார் திரும்பபெறப் படுகிறது.....
“நிகழும் ஹேவிளம்பி ஆண்டு,வைகாசி மாதம்...நாள் திருவளர் செல்வன் முருகனுக்கும்,திருவளர் செல்வி வள்ளிக்கும் நடைபெற இருக்கும் திருமணத்துக்கு..............................”.
........................................................................................
செய்தி ஆதாரம்...இந்தியாவின் நேரங்கள்
திங்கள், மே 22, 2017
பார்த்து வாங்க வேண்டாமா?!
சென்ற இடுகையை, “பார்த்து வாங்க வேண்டாமா?!” என்ற கேள்வியுடன் முடித்திருந்தேன்.
தனது பின்னூட்டத்தில் திரு பகவான் ஜி அவர்கள் “பார்த்து வாங்க வேண்டாமா” இதுதான் அடுத்த பதிவின் தலைப்பா எனக் கேட்டிருந்தார்.
கிடைத்தது தலைப்பு!
அதற்குத்தக எழுத வேண்டும்;அவ்வளவே.
இதோ பதிவு!
பகவான் ஜி கடையிலிருந்து வீட்டுக்கு வருகிறார்.
மனைவி கேட்கிறார்”என்ன காய் வாங்கி வந்தீங்க?”
”வெண்டைக்காய் ” பதில்.
பையிலிருப்பதைக்கீழே கொட்டி சோதித்துப் பார்க்கிறார் மனைவி.
“அய்யோ!எல்லாமே முத்தல்.பார்த்து வாங்க வேண்டாமா?”
(அப்பா!தொடக்கத்திலேயே தலைப்பு வந்தாச்சு!)
இது ஒரு சிறு உதாரணம்.
எந்தப் பொருளுமே வாங்கும்போது கவனித்து வாங்க வேண்டும்.
அதன் குற்றம்,குறைகளைக் கவனிக்க வேண்டும்.
சட்டம் சொல்கிறது caveat emptor"
அதாவது ”let the buyer beware”
வாங்குபவர் ஜாக்கிரதையாக இருக்கவும்!
ஒன்றை வாங்கும்போது அது எப்படி இருக்கிற.தோ அப்படியே வாங்குகிறோம்..”as is where is".
நாம அதை ஏற்றுக்கொண்டு விட்டோம்.
பின்னர் வருந்தி என்ன பயன்.
வாங்கும்போதே.......பார்த்து வாங்க வேண்டாமா?
ஒரு பொருள் வாங்கும்போது விலை அதிகமாக இருந்தாலும் உத்திரவாதம் இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்.
இல்லையேல் மறுநாளே அது வேலை செய்யவில்லை என்றாலும் ஒன்றும் செய்வதற்கில்லை.
இன்னொரு காட்சி
ஒருவர் மடிக்கணினி வாங்கக் கடைக்குப் போகிறார்.
விலை குறைவாக எதிர்பார்க்கிறார்.
கடைக்காரர் கொஞ்சம் பயன்படுத்தப்பட்ட கணினி ஒன்று நல்ல நிலையில் இருக்கிறது,விலை மலிவு என்று சொல்லிக் கொடுக்கிறார்.
அவரும் மகிழ்ச்சியுடன் வாங்கிப் போகிறார்
ஓரிரு நாட்களில் போலிஸ் வருகிறது
அவர் வாங்கிய கணினி திருடப் பட்டது என்று கூறி கணினியைக் கைப்பற்றுகிறது.
இவர் என்ன செய்ய முடியும்/
கடைக்காரரைக் கேட்கலாம்.
கொடுத்தால் வாங்கிக் கொள்ளலாம். வேறு எந்த உரிமையும் இவருக்கு இல்லை.
திருட்டுப் பொருளுக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது
அதன் உரிமை பறி கொடுத்தவருக்கு மட்டுமே
வாங்குபவர் ஜாக்கிரதை!
பார்த்து வாங்க வேண்டாமா?
இது போலவே கிராஸிங் என்று காசோலையில் இரண்டு இனை கோடுகள் போடுவார்கள்
அதில் ஒரு வகை not negotiable crossing.
அத்தகைய காசோலை திருடப்பட்டதாக இருந்தால்,அதை நம்பிக்கையுடன் வாங்கியிருந்தாலும் அதற்கான உரிமை அதைத் திருடியவரிடமிருந்து பெற்றுக் கொண்டவருக்கு இல்லாமல் போகிறது.
இதைப் பற்றி சொல்வார்கள்” இது ஒரு திருடப்பட்ட பேனா அல்லது கைக்கடிகாரம் போன்றது” என்று.
காசு கொடுத்துப் பொருள் வாங்கும்போது வாங்குபவர் கவனமாக, சாக்கிரதையாக இருத்தல் அவசியம்
இல்லையெனில் பின்னர் கேள்வி எழும்...........
“பார்த்து வாங்க வேண்டாமா?!”
டிஸ்கி: வெண்டைக்காயை நுனியை ஒடித்துப் பார்த்து வாங்க வேண்டும்.....அதற்காகக் கடைக்காரர் நம் விரலை ஒடிக்காமல் இருந்தால்!

சனி, மே 20, 2017
என்ன நடந்தது?...
இன்றைய பதிவுக்கு முன் ஒரு இடைச் செருகல்.
பதிவு நேற்றே எழுதியிருக்க வேண்டும்.
நேற்று காலை
11 மணி அளவில் வெறுந்தரையில் ஹாயாகப் படுத்தேன். கண்ணாடி அணிந்தபடி......
பின் அதைக் கழட்டி படுத்தபடியே அருகில் இருந்த நாற்காலி மீது வைத்தேன்.அப்போது ஓர் எண்ணம் “யாராவது வந்து கவனிக்காமல் உட்கார்ந்தால் என்ன ஆகும்?’
சிறிது நேரம் கழித்து ஒரு தொலை பேசி அழைப்பு.
தொலைபேசியை எடுத்து அருகில் வைத்துக் கொள்ள மறந்திருந்தேன்.
எழுந்தேன்
தொலைபேசியை எடுத்தேன்
பேசிக் கொண்டே நாற்காலியில் அமர்ந்தேன்
....பட்டக் .......
சப்தம்
கண்ணாடியில் லென்ஸ் இரண்டும் தெறித்து வெளியே வந்து விட்டன.
இனிமேல் என்னத்த பாத்து,என்னத எழுதி.............
மாலை கடைக்குச் சென்று சரி செய்யும் வரை.
.மாலை முதல் வேலையாக டைடன் சென்று சரிசெய்தேன்.
அதன் பின்னரே பழங்கள் வாங்கச் சென்றேன்.
பார்த்து வாங்க வேண்டாமா!

புதன், மே 17, 2017
இசை
”தன்னில் இசை இல்லாத,ஒருமித்த இனிய ஓசைகளினால் உணர்ச்சிஅடையாத,ஒருமனிதன்,துரோகி,தந்திரக்காரன் ,கெட்டவன்”(செகப்பிரியரின் வெனிஸ் வர்த்தகனிலிருந்து ஒரு மோசமான மொழி பெயர்ப்பு!)
மனித வாழ்க்கையில் இசை ஒரு முக்கிய இடம் வகிக்கிறது.பிறப்பு முதல் இறப்பு வரை நம் எல்லா விசேடங்களிலும்,இசை கலந்திருக்கிறது.தாலாட்டு முதல் ஒப்பாரி வரை.
இசையே பிடிக்காதவர்கள் மிகச் சிலரே இருப்பர்.சிலருக்கு கர்னாடக இசை,சிலருக்கு இந்துஸ்தானி இசை,சிலருக்கு மேற்கத்திய இசை,சிலருக்கு திரை இசை,சிலருக்கு நாட்டுப் பாடல் என்று ஏதாவது ஒன்றில் நாட்டம் இருக்கும்.
எனக்குக் கர்னாடக இசை.என் இசை ஆர்வத்துக்குத் தீனி அளித்தவர்கள் இருவர்.
ஒருவர் நண்பர் பார்த்தசாரதி.என் தளத்தில் அவரது பல படைப்புகள் வெளி வந்துள்ளன.வானொலியிலோ,தொலைக்காட்சியிலோ நல்ல கச்சேரி இருந்தால் உடன் தொலைபேசுவார்.இசை விழா நேரத்தில் அவர் மியூசிக் அகாடமிக்கும் நான் நாரத கான சபாவுக்கும் செல்வது வழக்கம்.தினமும் கண்டிப்பாகக் கச்சேரி பற்றிய உரையாடல்கள் நிகழும்..
அவர் சென்ற டிசம்பர் மாதம் காலமானார்.
நானும் இப்போதெல்லாம் பல காரணங்களால் கச்சேரி கேட்கும் மன நிலையில் இல்லை.
மற்றவர் எங்கள் வங்கியில் பணி புரிந்து என் போலவே விருப்ப ஓய்வு பெற்றவ பெண்மணி.பணியில் இருந்தபோது பழக்கமில்லை .பின்னாளில்,யாரோ சொல்லி சில ஆலோசனைகளுக்காக என்ன நாடி வந்தார்.நான் சொன்னவை சரியாக நடந்ததால் நம்பிக்கை மிகக் கொண்டார்.
ஒரு முறை அவராகவே கச்சேரிக்கெல்லாம் போவீர்களா எனக் கேட்டு நாரதகான சபாவில் இசை விழாவின்போது சீசன் டிக்கட் கொடுத்தார்.ஆறாவது வரிசையில் இருக்கை.தொடர்ந்து சில ஆண்டுகள் கொடுத்தார்.பின்னர் என்னால் போக இயலாத நிலை உருவான போது வேண்டாம் எனச் சொல்லி விட்டேன்
இன்று அவரது பையன் தொலைபேசி,நேற்று மதியம் அவர் மறைந்து விட்டார் என்ற தகவலைச் சொன்னான்
என் இசை ஆர்வத்துக்குத் துணை நின்ற இன்னொருவரும் மறைந்தார்.,
என் காதுகளில் இப்போது ஒலிப்பது முகாரியும்,சுபபந்துவராளியும் மட்டுமே!

ஞாயிறு, மே 14, 2017
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை.
தாய் எனும் தெய்வம்,வணங்குவோம்,போற்றுவோம்,பாதுகாப்போம்.
வயதான காலத்தில் அவர்கள் எதிர்பார்ப்பது அன்பு,பரிவு ,பாசம் இவைதாம்.
இதைத் தர முடியாதா பிள்ளைகளால்?!
அன்னையர் தின வாழ்த்துகள்!
வெள்ளி, மே 12, 2017
வீரம்+ விவேகம்= அஜித்
வீரம்
இல்லாத விவேகம் கோழைத்தனம்;விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்........(பசும்பொன் முத்துராமலிங்கத்
தேவர்)
மனத்தில்
அச்சம் நிறைந்து,ஏதாவது சால்ஜாப்புச் சொல்லிக் கொண்டு எதிர்க்குரல் எழுப்பாமல் இருப்பது
வீரம் அல்ல;கோழைத்தனம்.
சிறந்த
வீரனாயினும்,எதிரியின் வலிமை,காலம் ,இடம் இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் மோதுவது வீரமல்ல,முரட்டுத்தனம்.
ராஜாராணி
படத்தில்(பழைய படம்) சாக்ரடீஸ் நாடகத்தில் சாக்ரடீஸ்சொல்லும் அறிவுரை,முக்கியமானது.
“வீரம்
விலைபோகாது,விவேகம் துணைக்கு வராவிட்டால்.தீட்டிய வாளும்,தினவெடுத்த தோள்களிலே தூக்கிய
ஈட்டியும் மாத்திரம் போதாது வீரர்களே,இதோ நான் தரும் அறிவாயுதத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்”
வீரம்
என்பது உடல் வலு மட்டும்தானா.சண்டையிட்டு வெல்வது மட்டும்தானா?இல்லை.
எங்கு
குரல் எழுப்ப வேண்டுமோ அங்கு அச்சமின்றிக் குரல் எழுப்புவதும் வீரம்.அதற்கு உடல் வலிமை
தேவையில்லை..மன வலிமை போதும்.
அச்சத்தை
தொலைத்தால்தான்,வீரம் பிறக்கும்.
ஆனால் எங்கு அச்சப் பட வேண்டுமோ அங்கு அஞ்சுவது விவேகம்.
என்னவேதான் வள்ளுவர் சொன்னார்
“அஞ்சுவது
அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்”
என்று.
வீரமும்
விவேகமும் உள்ள ராசாக்கள்தான் அந்தக் காலத்தில் வெற்றிக் கனியைப் பறித்திருக்கிறார்கள்!
.
சூழ்நிலைகள்
மீதும் தன் உடற்குறைகள் மீதும் பழி போட்டுத் தப்பிக்காமல்,இடர்ப்பாடுகள் வென்று சாதனை
படைக்கும் எவருமே வீரர்தான்.
அறிவு,விவேகம்
இணைந்தால்தான்,வீரம் வெற்றி பெறும்.
வீரம்,விவேகம் இரண்டும் இணைந்தவன்,வெல்லப்பட முடியாதவன்....அஜித்(வட மொழியில்)
வீரம்,விவேகம் இரண்டும் இணைந்தவன்,வெல்லப்பட முடியாதவன்....அஜித்(வட மொழியில்)
வியாழன், மே 11, 2017
பெண்மணி அவள் கண்மணி!
”மரகதம்!பீரோவெல்லாம் நல்லாப்பூட்டி ஒருதடவைக்கு ரெண்டு தடவையாச் செக் பண்ணிடு”
“எல்லாம்
பண்ணிட்டேன் .நீங்க கவலைப் படாமல் இருங்க.”’
“எப்படிடீ
முடியும்?”20 பவுன் நகை உள்ள இருக்கே.சனியன் பிடிச்ச லாக்கரும் கிடைக்க மாட்டேங்குது.”
“எல்லாம்
பத்திரமா இருக்கும்”
”இல்லடி.இந்த முத்து வேற கடன் வாங்கின 2 லட்சத்தை நேத்து ராத்திரித் திருப்பிக் குடுத்துத் தொலைச்சிட்டான்.அது வேற வீட்டில இருக்கே”
”நான்
பாத்துக்கறேன்.பயப்படாதீங்க”
”எனக்கென்னவோ
திக்கு திக்குன்னுதான் இருக்கு”
கனவனும்மனைவியும்
வெளியூரில் உறவினர் வீட்டுத் திருமணத்துக்கு செல்கின்றனர்.
புதன், ஆகஸ்ட் 24, 2016
திக்குத் தெரியாத காட்டில்
இரயில்
நிலையம்.
வழக்கமான
பரபரப்பு
இன்னும்
சிறிது நேரத்தில் வரப்போகும் இரயிலுக்காகக் காத்திருக்கும் கூட்டம்
சிலர்
கையில் மினரல் தண்ணீர் பாட்டில்;சிலர் பிளாட்பாரக் குழாயில் தண்ணீர் பிடித்தபடி..
சிலர்
கையில் உள்ள பொட்டலத்தில் இருந்து எதையோ கொறித்தபடி.,சிலர் கப்பில் உள்ள காபி/டீயை
உறிஞ்சியபடி.,சிலர் மற்றவர்களைப் பார்த்தபடி. ..
என்ன
செய்து கொண்டிருந்தாலும் அவர்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தான் அந்தச் சிறுவன்.
மூன்று
வயதே இருக்கும் அவனைச் சிறுவன் என்பதா,குழந்தை என்பதா?
பிளாட்பாரத்தில்
இங்கும் இங்கும் ஓடுகிறான்.ஒரு ஓரத்தில் படுத்திருக்கும் அந்த ஆண்,பெண் அருகே வந்து
அமர்ந்து கொள்கிறான்.
ஒரு
கிழிந்த பொம்மையுடன் விளையாடுகிறான்.
அந்தப்
பெண்ணின் அருகில் படுக்கிறான்.
எழுகிறான்
மீண்டும்
ஓடுகிறான்.
ஓரிருவர்
அவனை நிறுத்தி விசாரிக்க, படுத்திருப்பவர்கள் அவன் பெற்றோர் எனவும் அவர்கள் அருகில்
உள்ள ஓர் ஊர்க்கோவிலுக்குப் போவதாகவும், அவர்கள் தூங்கி எழுந்தவுடன் போகப்போவதாகவும்
மழலையில் சொல்கிறான்.
சிலர்
பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.
படுத்திருக்கும்
தம்பதியிடம் எந்த அசைவும் இருப்பதாகத் தெரியவில்லை
அருகில்
சென்று பார்க்கையில் தெரிய வருகிறது –அவர்கள் உயிருடன் இல்லை என்பது.
சிறுவன்/குழந்தை
ஏதும் அறியாமல் அம்மாவின் புடவைத்தலைப்பைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறான்.............
நில்லுங்கள்.
என்னால்
மேலே எழுத முடியவில்லை.எழுதியதைப் படிக்க முடியவில்லை
கண்களிலிருந்து
கண்ணீர் தாரையாக வழிந்து ஓடுகிறது.
ஏதோ
ஒரு ஊரில் ஒரு இரயில் நிலையத்தில் மூன்று வயது குழந்தை, நிர்க் கதியாக, அனாதையாக............
இறைவா!இது
என்ன நீதி? அக்குழந்தை என்ன பாவம் செய்தது?
ஏன்
இப்படிச் செய்தாய்?
இருவரும்
சேர்ந்தே இறந்திருக்கிறார்கள் என்றால்,அது தற்கொலையா?காரணம் என்ன?
காரணம்
எதுவாக இருந்தாலும் அந்தக் குழந்தையைப் பற்றி நினைத்துப் பார்க்கவில்லையா அவர்கள்?
இனி
அக்குழந்தையின் நிலை என்ன?
கேள்விகள்
,கேள்விகள்,கேள்விகள்......விடை தெரியாத......
(டைம்ஸ்
இந்தியா,சென்னை,23-08-2016,செய்தியின் அடிப்படையில்)
ரு
திங்கள், ஆகஸ்ட் 08, 2016
குடைக்குள் மழை
குடைக்குள்
மழையென்றால்,குடையினால் என்ன பயன்?
மடைக்குள்
விரிசலென்றால்,மடையிருந்து என் செய்ய
வடைக்குள்
நூலென்றால் நெடுநாள் வடையதாகும்
உடைக்குள்
அரிப்பென்றால் எறும்பு கடிப்பதாகும்.
இவ்வளவுதாங்க
கவுஜ!எதுகை வந்தாச்சு இல்ல .பொருளைப் பற்றி எல்லாம் கவலை இல்லை.’ஆழ்ந்து படித்தால் ஆயிரம்
பொருள் தெரியும்’னு சொல்லிடலாம்.
முதல்
வரி மனதில் எழக்காரணம்,சில நாட்களுக்கு முன் குடையைப் பிடிச்சிட்டு மழையிலே போயும்
நனைந்து கொண்டே திரும்பி யதுதான்.இப்பல்லாம் மூணா,நாலா மடிக்கிற குடையெல்லாம் வந்தாச்சு.
அதுல
ஒரே சவுகரியம்,மடிச்சு பைக்குள்ளே வச்சுக்கலாம் அப்படீங்கறதுதான். மத்தபடிப் பெரிய மழை
னா,பாதி நனைய வேண்டியதுதான்!அதான் அந்தக்காலத்து சினிமாப் பாட்டில பாடினாங்க”சீறும்
புயலும் மழையும் சேர்ந்தால்,சின்னக்குடை தாங்காது”ன்னு.கேட்டிருக்கீங்களா,அருமையன பாட்டு.
பெரிய
குடை வசதி மட்டுமல்ல.ஒரு கம்பீரமும் கூட. ஆண்டவன் கட்டளை படத்தில் நடிகர் திலகம் அப்படி
ஒரு குடையைப் பிடிச்சிக்கிட்டு ஒரு நடை நடப்பார் பாருங்க!அது ஸ்டைலு! படம் வந்ததுக்கப்புறம்,
அதே மாதிரிக் குடையைப் பிடிச்சிக்கிட்டு நான் நடந்த நாட்களும் உண்டு.சின்னக் குடையெல்லாம்
வெறுத்துப்போய்,ரொம்பநாள் கழிச்சு ஒரு நண்பர்கிட்ட சொல்லி ஒரு மான் மார்க் குடை வாங்கிட்டு
வரச் சொன்னேன்.விலை ரூ.300இன்னும் அதைப் பிடிச்சிட்டு வெளில போகல.
மன்னர்களுக்கெல்லாம்
குடை பிடிப்பார்களாம்.அது வெண்மை நிறத்தது போலும்;எனவே வெண் கொற்றக் குடை என்றழைக்கப்பட்டது.
கம்பராமாயணத்தில் ஒரு பாடல்.இராமன்,முடி தரிக்காமல்,தனியனாக வருகிறான் கோசலையைப் பார்க்க...
.
“குழைக்கின்ற
கவரியின்றிக் கொற்ற வெண் குடையுமின்றி
இழைக்கின்ற விதி முன் செல்லத் தருமம் பின்னிரங்கியேக
மழைக்குன்றமனையான் மௌலி கவித்தனன் வருமென்றென்று
தழைக்கின்ற
உள்ளத்தன்னாள் முன்னொரு தமியன் சென்றான்.
முன்னிருந்து
கவரி வீசுவார்கள் பின்னிருந்து குடை பிடிப்பார்கள் எனத் தெரிகிறது.
கருப்புக்குடையின்
மீது சிலர் வெள்ளைத் துணியை வைத்துத் தைத்திருப்பார்கள்.அது வெயிலுக்கான குடை.
1937
இலிருந்து 1940 வரை இங்கிலாந்து பிரதமராக இருந்த நெவில் சேம்பர்லின் குடை மனிதர் என்றழைக்கப்பட்டார். ஏனெனில்
எப்போதும்கையில் குடையுடன்தான் இருப்பாராம்.
குடை தேவையானபோதுதான் பிடிக்க வேண்டும்.இல்லையெனில் இப்படித்தான் சொல்வார்கள்.
“அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான்”
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)