மனைவி கொடுத்த கூழைக் குடித்து விட்டு வேலைக்குப் புறப்படத் தயாரானான் முருகேசன்.
மனைவி வேகமாக அருகில் வந்து”என்னங்க!இன்னைக்குத் தக்காளி சாதம் செஞ்சிருக்கேன்,உங்க மதிய உணவுக்காக.ஒரு பிளாஸ்டிக் டப்பாவில தக்காளி சாதமும்,இன்னொரு டப்பால தயிர் சாதமும் வச்சி,பையில போட்டு ரப்பர் பேண்டால கட்டி வச்சிருக்கேன். ஸ்பூனும் வச்சிருக்கேன்.இந்தாங்க.எடுத்துட்டுப் போங்க..........’என்று சொல்லி விட்டுப் பையை அவன் கையில் கொடுத்தாள்.
அவன் வாங்கிக்கொண்டு புறப்பட்டான்.
“என்னங்க!மதியம் 2 மணிக்குள்ள சாப்பிட்டுடுங்க.அப்பதான் தக்காளி சாதம் நல்லாருக்கும்” என்று வாசல் வரை வந்து சொல்லி வழி அனுப்பினாள்.
முருகேசன் வெளியே வந்து வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
அவன் கைபேசியில் தகவல்கள் வரத்தொடங்கின.
நேராக ஆரிய பவன்.இட்லி சாம்பார்,வடை.பார்சல் பையை தனது கம்பெனி பைக்குள் வைத்தான்.அதற்குள் முன்னமே ஓர் ஓரமாகத் தனது சாப்பாட்டுப் பையை வைத்திருந்தான்.
அருகில் இருக்கும் மற்றொரு உணவகத்திலிருந்து மற்றொரு பார்சல்.
அதுவும் பைக்குள் புகுந்தது.
அந்த இரண்டையும் கொடுக்க வேண்டிய இடங்களை நோக்கிப் புறப்பட்டான்.
தொடங்கி விட்டது அன்றைய வேலை
ஒட்டல் ஒட்டலாய் ,வீடு வீடாய் ,தொடர்ந்து பயணம்.
இன்று வழக்கத்தை விட ஆர்டர்கள் அதிகம்.
தொடர்ந்து ஓடிக் கொண்டே -ஓட்டிக் கொண்டே இருக்க நேர்ந்தது.
நிற்பதற்கு நேரமில்லாத ஓட்டம்.
குறித்த நேரத்துக்குள் டெலிவரி செயவ்து அவசியம்.
பசித்தது.
மணியைப் பார்த்தான்.
2.10
மனைவி சொன்னது நினைவுக்கு வந்தது.
அடுத்த ஆர்டருக்குள் சாப்பிட்டு விட வேண்டும்.
வண்டியைச் சாலையோரத்தில் நிறுத்தினான்.
பையைத்திறந்து மனைவி கொடுத்த உணவை எடுத்தான்.
ஸ்பூனால் சாப்பிடத் தொடங்கினான்.
தக்காளி சாதம் நன்றாகவே இருந்தது என எண்ணினான்.
ஆனால் முழுவதும் சாப்பிடாமல் தயிர்சாத டப்பாவை எடுத்துக் கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிட்டான்.
நேரம் ஆகி விட்டது..
கைபேசி ஒலித்தது
அடுத்த டெலிவரிக்குப் போக வேண்டும் .
டப்பாக்களைக் கட்டிப் பைக்குள் ஓரமாக வைத்தான்.
புறப்பட்டான்
பாவம் அவனுக்குத் தெரியாது.......
அவனது சாப்பாட்டு நிகழ்வுகள் அனைத்தையும் ஒரு சமூக ஆர்வலர் காணொளியாக எடுத்து விட்டார் என்பது!
டிஸ்கி:இது முழுவதும் கற்பனையே.
தொடரும் தோழர்கள்
புனைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புனைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், டிசம்பர் 13, 2018
திங்கள், ஜூலை 11, 2016
புளிய மரத்துப் பேய்!
மாலைக்காட்சி
படம் முடியும்போது இரவு மணி 9.30 ஆகி விட்டது.
“வாங்க
.டிபன் சாப்பிட்டு விட்டுப் போகலாம்” என்றனர் நண்பர்கள்
பக்கத்திலேயே
ஒட்டல்.
தோசை.சப்பாத்தி
ஆர்டர் செய்தோம்
சாப்பிடும்போது
பேச்சு படத்தைப் பற்றி எழுந்தது.
”எட்டு
கிலோமீட்டர் சைக்கிள்ள வந்து பாக்கறத்துக்கு ஒர்த் இல்ல படம்” என்றேன்.(புரிஞ்சது அவ்வளவுதான்!)
அவ்வளவு
பயமா இல்லையே என்றான் மகாராசன்
”இப்ப
அப்படித்தான் இருக்கும்.இருட்டில தனியா போகும்போது பயம் தன்னால வரும்.அந்தப் பாட்டு
காதில ஒலிச்சிக்கிட்டே இருக்கும்”இது சுப்பிரமணி
“எதுக்கும்
கொஞ்சம் சூதானமாப் போங்க.வழில இந்த ரெட்டைப் புளிய மரம் வருதில்ல.அங்கன பேய் இருக்குன்னு
பேசிக்கறாங்க.”என்றான் தலைக்கான்.
நான்
சிரித்தேன்.”சும்மா பயமுறுத்தாதீங்க.நான் இதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன்”
புறப்பட்டேன்
கம்பத்திலிருந்து
உத்தமபாளையம் 8 கிலோமீட்டர்.
சைக்கிளில் வந்திருந்தேன்.
சைக்கிளில் ஏறி உற்சாகமாக மிதிக்க
ஆரம்பித்தேன்.
ஊரெல்லை தாண்டி மக்கள் நடமாட்டமில்லாத சாலை ஆரம்பமாயிற்று.
கைக்கடிகாரத்தைப்
பார்த்தேன்.இருட்டில் ரேடியம் 10.30 காட்டியது.
சாலை
நீ...ண்டு கிடந்தது.
விசிலடித்தபடி
வேகமாக மிதித்தேன்
இருட்டு
என்னைக் கவ்வியது
பலமான
காற்று.ஆனால் மழை வரும் அறிகுறிகள் இல்லை
காற்றில்
சாலையோரப் புளியமரங்கள் தலை விரித்தாடின.
பாதி
தூரம் கடந்தாயிற்று.
இங்குதானே
அந்த ரெட்டைப் புளிய மரம் இருக்கும்.
நிஜமாகவே
பேய் இருக்குமோ?
அடி
நெஞ்சில் லேசான பயம்;விசில் பலமான பாட்டாக மாறிற்று.என்ன கத்தினாலும் யாரும் ஒன்றும்
சொல்லப் போவதில்லையே!
அப்போதுதான்
என் பாட்டையும் மீறி என் காதில் அந்தப் பாட்டு ஒலிக்க ஆரம்பித்தது....சினிமாவில் வந்த
அதே பாட்டு!
அதோ
அந்த ரெட்டைப் புளியமாரம்.
பார்த்துக்கொண்டிருக்கும்போதே
மரத்தின் கீழ் ஏதோ வெள்ளையாக ஓர் உருவம் தோன்றியது.
பயத்தில்
உடல் சில்லிடத் தொடங்கியது.
அந்த
மரத்தைத் தாண்டிப் போக வேண்டுமே,எப்படி?
என்
வாய் கந்த சஷ்டிக் கவசத்தை முணுமுணுக்க ஆரம்பித்தது
கண்களை
மூடிக் கொண்டு வண்டியை முழு வேகத்தில் மிதித்தேன்.
மரத்தைத்
தாண்டியிருப்பேன் என்ற உணர்வு ஏற்பட்டது கண்களைத் திறந்தேன்.
தாண்டி
விட்டிருந்தேன்
திரும்பிப்
பார்க்கலாமா?
வேண்டாம்;பேயைத்
திரும்பிப் பார்க்கக் கூடாது என்று சொல்வார்களே
வேகமாக மிதித்தேன்.
வீட்டை
அடையும் வரை அதே வேகம்!
வந்து படுக்கையில் விழுந்தேன்.
இரண்டு
நாட்கள் கல்லூரி செல்லவில்லை.
காய்ச்சல்!
என்
கேள்வி ...நிஜமாகவே பேய் இருந்து அதைப் பார்த்தேனா,அல்லது பயத்தினால் ஏற்பட்ட பிரமையா?
தெரியவில்லை
அந்தப்படம்.....”பீஸ்
ஸால் பாத்”
காதில்
ஒலித்த பாடல்..”கஹிம் தீப் ஜலே கஹிம் தில்”
இதோ
காணொளி
சனி, ஜூலை 09, 2016
பத்ரா
“ரவி!வாழ்க்கையே ரொம்பப் போரடிக்கிறதுடா.ஒரு திரில்லே
இல்லை.தினம் காலேஜ்,ரூம்,டீன் இப்படி எதுவுமே சுவாரஸ்யமில்லை.” என்றான் ரகு.
“ நாம் மருத்துவ மாணவர்கள்.படிக்கும்போது அப்படித்தான்
இருக்கும்.படிப்பு முடிந்து டாக்டர் ஆகிச் சம்பாதிக்கும்போது திரில் தானா வரும்.” இது
ரவி
“இருந்தாலும் ஏதாவது பண்ணணும்டா” என்று ரகு சொல்லும்போதே
அந்த நாய் அவன் அருகில் வந்து வாலை ஆட்டியபடி நின்றது.
அது ஒரு தெரு நாய்.தெருமுனை டீக்கடையில் டீ குடிக்கும்போது
அதற்கு பிஸ்கட் வாங்கிப்போடுவான் ரகு.
ரகுவின் முகம் பிரகாசமானது.”ஐடியா!” என்று உரக்கச்
சொன்னான்.நாயைக் கையில் தூக்கினான்.ரவியையும் உடன் வரச் சொல்லி மாடியேறினான். போகும்போதே
தன் திட்டத்தையும் கூறினான்அவன் மொட்டை மாடியிலிருந்து நாயைக் கீழே போடும்போது ரவி
அதை வீடியோ எடுக்க வேண்டும்.
மொட்டை மாடியை அடைந்தனர்.சுற்றுப்புறச்சுவரின் அருகில்
சென்று நாயைத் தூக்கியவாறு நின்றான் ரகு”டேய்,சரியான கோணத்தைப் பார்த்துக்கோ.நான் நாயைக்
கீழே போடுவதை அழகாகப் படம் பிடிக்க வேண்டும்”
ரவி காமிராவை சரியான கோணத்தில் வைக்க முயற்சி செய்தான்”முழுவதும் வரவில்லையே” என்றான்.
ரகு இரு என்று சொல்லி யோசித்தான்.பின் சொன்னான்”நான்
சுவற்றின் மீது ஏறி நின்று நாயை வீசுகிறேன் .பிரமாதமாக இருக்கும்.பார்ப்பவர்களும் ரசிப்பாங்க.நான்
சுவர் மீது ஏறிய பின் நாயைக் கொடு”
நாய் கை மாறியது
ரகு சுவற்றின் மீதேறி நின்று கொண்டான்
“கொடு”
ரவி நாயைக் கொடுத்தான்.அந்தநேரத்தில் ஆபத்தை உணர்ந்த
நாய், ரகு பிடிக்கும்போது துள்ளியது.அதில் நில குலைந்த ரகு தலை குப்புறக் கீழே விழுந்தான்.
தப்பி ஓடிக் கீழே இறங்கிய நாய் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த ரகுவைச் சுற்றிச்
சுற்றி வந்துச் சோகமாக ஊளையிட்டது
ர்
“
செவ்வாய், ஆகஸ்ட் 04, 2015
பாகுபலி-2
வசதியான பெரிய திரையரங்கம்.
படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
அனைவரும் படத்தில் ஆழ்ந்துள்ளனர்.
படத்தின் பெயர் பாகுபலி.
வெள்ளி, நவம்பர் 14, 2014
ஓடிப்போனவன்!
கை பேசி அழைத்தது.
ரவி எடுத்தான்.
”ரவி!போலீஸ் உன்னை நெருங்கிட்டாங்க!நீ
இருக்கும் இடத்தை குறி வெச்சிக்கிட்டே இருக்காங்க.அவங்க கிட்ட மாட்டினேன்னா
என்கவுண்டர்தான்;கைது எல்லாம் கிடையாது.தப்பிக்க முயற்சி செய்.” அவனது வக்கீல்
தந்த தகவல்.
வெள்ளி, ஜூலை 19, 2013
யார் அழகி?!
அழகு என்பது என்ன?
ஒருவரது அழகு முகத்தில்
இருக்கிறதா?உடலில் இருக்கிறதா?உள்ளத்தில் இருக்கிறதா?
ஒருவருக்கு அழகாக இருப்பது
மற்றவருக்கும் அழகாய்த் தெரியுமா?
கீட்ஸ் சொன்னார்”அழகிய பொருள் என்றும்
ஆனந்தம் தருவது” என்று.
கீட்ஸுக்கு அழகாகத் தோன்றுவது எனக்கும் தோன்ற
வேண்டும் என அவசியம் இருக்கிறதா?
இந்தக் கேள்விகள் குறிப்பாக மனிதர்களின்
அழகு குறித்தே இங்கு எழுப்பப்படுகின்றன!
நீங்கள் அழகென்று நினைக்கும் ஒரு பெண்
எனக்கு அழகாகத் தோன்றாமல் போகலாம்!
பார்க்கும் பார்வையில்தான் வேறுபாடு.
ஒரு மன்னன் இருந்தான்.
அவனுக்கு கவிதை மிகவும் பிடிக்கும்;
கவிஞர்களைத் தேடித்தேடி அழைத்துக் கவிதை
கேட்பான்.
ஒரு முறை பக்கத்து ஊரில் உள்ள ஒரு
கவிஞரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரை அழைத்து வரச் சொன்னான்.
ஆனால் அவர் இன்னும் ஓராண்டுக்கு எங்கும்
செல்ல முடியாது என்று சொல்லி விட்டார்.
ஏனெனில் அவர் காதலிக்கும் பெண்ணுக்கும்
அவருக்கும் ஓராண்டுக்குப் பின்தான் திருமணம்.
அதுவரை அவளை விட்டு வர விருப்பமில்லை;அவளை
உடன் அழைத்து வரவும் முடியாது.
மன்னன் அவள் பேரழகியோ என எண்ணினான்
கவிஞரின் வருகைக்காக் காத்திருந்தான்..
கவிஞர் மனைவியோடு வந்தார்.
மன்னன் மிகுந்த ஏமாற்றம் அடைந்தான்.
ஏனெனில்”அவள் அப்படி ஒன்றும் அழகில்லை”
மன்னன் கவிஞரிடம் கேட்டான்”இவளையா
பிரிந்து வர முடியாது என்றீர்கள்;அவ்வளவு அழகாக இல்லையே?”
கவிஞர் சொன்னார்”மன்னா!என் கண்களால்
பாருங்கள்!”
காதல் மணம் செய்து கொண்ட பல இணைகளைப்
பார்க்கும்போது எனக்கு இதுதான் தோன்றுகிறது.
என்ன பார்த்தான்(ள்) அவன்(ள்) அவளி(னி)டம்
காதலில் விழுவதற்கு?
அவர்கள் கண்களால் நாம் பார்த்தால் தான்
நமகு அது புரியும்!
எனவேதான் காதலுக்குக் கண்ணில்லை என்று
சொன்னார்களோ!
செவ்வாய், ஜூன் 11, 2013
அவள் என்னை ஏமாற்றினாளா?
இது ஒரு குட்டிப் பதிவு
ஒரு சிறுவனும் சிறுமியும் விளயாடிக் கொண்டிருந்தனர்.
சிறுவனிடம் அழகான கோலிக் குண்டுகள் இருந்தன.
சிறுமியிடம் இனிய மிட்டாய்கள் இருந்தன.
சிறுவன் சொன்னான்”நீ உன்னிடம் இருக்கும்
எல்லா மிட்டாய்களையும் எனக்குக் கொடுத்தால் நான் என்னிடம் இருக்கும் எல்லாக் கோலிகுண்டு களையும்
உனக்குத் தருவேன்”
சிறுமி ஒப்புக் கொண்டாள்.
சிறுவன் அவளுக்குத் தெரியாமல் மிக அழகிய
கோலிக்குண்டு ஒன்றை மறைத்து வைத்துக் கொண்டு,மீதியைக் கொடுத்தான்.
ஆனால் சிறுமி தன்னிடம் இருந்த எல்லா மிட்டாய்களையும்
அவனுக்குக் கொடுத்தாள்.
அன்றிரவு சிறுமி வழக்கம் போல் நிம்மதியாக
உறங்கிப் போனாள்.
ஆனால் சிறுவனோ தான் கோலியை மறைத்தது போல்
அவளும் மிட்டாய்களை மறைத்திருப்பாளோ என்ற எண்ணத்திலேயே தூக்கம் இழந்தான்.
ஆம்!உறவுகளும் அப்படித்தான்.
பரஸ்பர உறவுகளில் நாம் நூறு விழுக்காடு உண்மையாக
இல்லையெனில், நமக்கு மற்றவரும் நூறு விழுக்காடு
உண்மையானவர்களாக இருந்தனரா என்ற சந்தேகம் அரித்துக் கொண்டிருக்கும்.
நம்மைப் போல் அவர்களும் ஏதேனும் மறைத்திருப்பரோ
என்ற எண்ணமே உறவைப் பாழ்படுத்தி விடும்.
இதைப் புரிந்து நடந்தால் உறவுகள் மேம்படும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)