தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஆகஸ்ட் 04, 2015

பாகுபலி-2வசதியான பெரிய திரையரங்கம்.

படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

அனைவரும் படத்தில் ஆழ்ந்துள்ளனர்.

படத்தின் பெயர் பாகுபலி.

வீலென்று ஒரு குழந்தையின் அழுகுரல்.

அடக்க முயன்று தோற்கும் தாய்.

அக்குரலுக்கு ஆதரவாகப் பல குழந்தைகளின் கூட்டான அழுகை ஒலி!

தாய்களைப் படம் பார்க்கச் செய்து விட்டுத் தந்தைகள் குழந்தைகளுடன் வெளியே!

குழந்தைக்கு விளையாட்டுக்காட்டி,தோளில் போட்டுத் தட்டியவாறு அவர்களின் அழுகையை அடக்கித் தூங்கச் செய்யும் முயற்சியில் கணவர்கள்.

காலம் கரைகிறது.

ஒரு தாய் தன் கணவனிடம் வருகிறாள்.

“ஏங்க!எவ்வளவு நேரம் நீங்களே படம் பார்க்காமக் குழந்தையைச் சுமப்பீங்க. எங்கிட்டக் குடுங்க.நான் பார்த்துக்கறேன்.நீங்க போய்ப் படம் பாருங்க” என்கிறாள் அன்புடன்.

கணவனோ”வேண்டாம்மா.தினம் வீட்டில் எல்லா வேலையும் செய்யறே.ஒரு நாளைக்குப் படம் பார்க்க வந்து விட்டுப் பார்க்க முடியாமல் போனா எப்படி? போய்ப் படத்தைப் பாரு.குழந்தையை நான் பார்த்துக்கறேன்” என்கிறான்

கணவர்கள் குழந்தையைத் தோளில் சாய்த்தவாறு வெளியே!

உள்ளே பாகுபலி……..

வலிமையான தோள்கள் உடையவன்!

வெளியே பாகுபலிக்கள்………

வலிமையான தோள்களோ இல்லையோ ஆனால் குழந்தையைச் சுமந்து வலியெடுத்த தோள்களுடன் ……

பாகுபலிக்கள்!

(செய்தி:இந்தியாவின் நேரங்கள்..03/08/2015)


28 கருத்துகள்:

 1. உதயத்தில் வேதம் புதிது, கையிலிருக்கும் ஒரு வயது பிள்ளை படம் ஆரம்பித்தவுடன் அழ ஆரம்பிக்க, மற்றவர்களுக்கு இடையூறாய் இருகுமே என்று பறக்க பறக்க குழந்தையை தோளில் சாய்த்து தட்டிக்கொடுத்துக்கொண்டே வெளியே வராண்டாவில் உலாத்த ஆரம்பித்து, பிள்ளை தூக்கியவுடன் மொதுவாக உள்ளே சென்று அமர்தேன். சுமார் அரைமணி நேரம் தான். இது எல்லா தகப்பன் களுக்கும் வாய்த்த ஒன்றுதான்.

  பதிலளிநீக்கு
 2. ஆஹா.... அருமையாகச் சொன்னீர்கள்.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்,
  சரிதானே,,,,,
  நன்றி,

  பதிலளிநீக்கு
 4. அடடா ......இரக்கமுள்ள பாகுபாலிகள்...அய்யா....

  பதிலளிநீக்கு
 5. அதில் லிங்கத்தை சுமந்து செல்வான் பாகு பலி. இங்கே குழதையை சுமந்து செல்வார்கள் நம் பாகு பலிகள். வித்தியாசமான சிந்தனை

  பதிலளிநீக்கு
 6. அடடா, இவர்களும் பாகுபலிகளா? வித்தியாசமான,ஆனால் பொருத்தமான சிந்தனை.

  பதிலளிநீக்கு
 7. பாகு பலியைப்பத்தித் தெரியலை. நான் இன்னமும் படம் பார்க்கலை. ஆனால் தோள் வலியைப்புரிஞ்சுக்க முடியுது.

  அதெப்படி ரொம்பச் சின்னதாய் எழுதினாலும் சுவராசியத்தைக் கூட்டிடுரீங்க? ஆச்சரியம்தான்.

  God Bless You

  பதிலளிநீக்கு
 8. உள்ளே பாகுபலி……..

  வலிமையான தோள்கள் உடையவன்!

  வெளியே பாகுபலிக்கள்………

  வலிமையான தோள்களோ இல்லையோ ஆனால் குழந்தையைச் சுமந்து வலியெடுத்த தோள்களுடன் ……

  பாகுபலிக்கள்!

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் ஐயா நலமா...
  புதுமையான வலிகள்.....

  பதிலளிநீக்கு
 10. அருமையான அப்பாக்கள் பாகுபலிதான் தல))))

  பதிலளிநீக்கு
 11. ஒரு தகவலை சுவைபட தரமுடியும் என்பதை மீண்டும் மெய்ப்பித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு