தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஆகஸ்ட் 11, 2015

பரல்கள்-எம்.எசு.வி,சுத்தம்,நகை,லிமெரிக்
எம்.எசு.வி.  ஐயா பற்றிப் பலரும் எழுதி ஓய்ந்து விட்டார்கள்.இன்றுதான் “சொல்வனத்” தில்  என் நண்பர் பார்த்தசாரதி எழுதிய கட்டுரை படித்தேன்.அந்த இசை மாமேதை பற்றி,அவர் இசை பற்றி எல்லாம் இவ்வளவு விவரமாக இவர் எழுதியிருப்பது பிரமிக்க வைக்கிறது .படித்துப் பாருங்களேன்

..................இப்போது அடையாரில் சில வீதிகளின் ஓரங்களில் புதிய கழிப்பறைகள் கட்டியி ருக்கிறார் கள்.பள பள என்று மின்னுகின்றன இக்கழிப்பறைகள்.இவை கட்ட மாநகராட்சி தேர்ந்தெடுத் திருக்கும் இடங்கள் மிகப் பொருத்தம்.இது நாள் வரை மக்கள் எங்கு முக்கியமாகச் சிறுநீர் கழித்துத் தெருவையே நாறடித்துக் கொண்டி ருந்தார்களோ அங்கு.குறிப்பாக மின்மாற்றிகள்  அருகில்.ஏனெனில் அவற்றின்  பின்னும்,சுற்றியும்தான் சிறுநீர்ப்பாசனத்தில் மக்கள் ஈடுபடுவது வழக்கம் .சில நாட்களுக்கு முன் சுவரில் நாய் படம்போட்டு' நாயா நீ 'என்று கேட்டிருந் தார்கள். 

அதை முகநூலில் இவ்வாறு வெளியிட்டிருந்தேன்


எதோ வேலையிருப்பது போல்
அவசரமாய் ஓடும்,
குறுக்கும் நெடுக்குமாய்
ஆனாலும்
கம்பமோ கார்டயரோ கண்டால்
கால் தூக்கும்.
நாய்!
விரைவாய்ச் செல்வான் வேலையாய்
அவசரம்தான்
ஆனாலும்
ட்ரான்ஸ்ஃபார்மரோ
காம்பவுண்ட் சுவரோ கண்டால்
ஜிப் இறக்குவான்
மனிதன்!


இந்த நேரத்தில் என் பழைய கவிதை ஒன்று பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்

பாதையில் செல்லும்போது பார்வையில் கம்பம் பட்டால்
உபாதை ஒன்று  தீர்க்க உடனே விரையும் மனிதன்!
கால்தூக்கிச் சிறு நீர் கழிக்கும் தெரு நாயினும் கீழாய்!
தெருவெல்லாம் மூத்திர நாற்றம்.


நாலைந்து பேராய் நடுத் தெருவில் நின்று
கூசிடும் வார்த்தை பேசிக் கூச்சலிடும் மனிதன்!
கூடி நின்றுக் குலைத்துச் சண்டையிடும் வெறிநாய்!
தெருவெல்லாம் பேரிரைச்சல்!


குப்பைத் தொட்டி வரை செல்வதற்குச் சோம்பி
நடுத்தெருவில் குப்பை போடும் மனிதன்!
குப்பையைக் கிளறித் தெருவெல்லாம் இறைக்கும் நாய்.
தெருவே ஒரு குப்பைத்தொட்டி!


நல்லதாய் ஒன்று சொல்ல வேண்டின்
நடுத்தெருவில்  நாய்கள் செய்யும்
அந்த ஒன்றை மனிதன் செய்வதில்லை!
நாகரிகம்!நாகரிகம்!!

 ......................
அடையாரில் முன்பு ஒரு நகைக்கடை இருந்தது.சுமாராக வியாபாரம் நடந்து கொண்டி ருந்தது.அதற்குப் பக்கத்துக் கட்டிடத்திலேயே,தி.நகரின் பெயர் பெற்ற நகைக் கடை திறந்த பின்.பழைய கடைக்கு வியாபாரம் படுத்துப் போக கடை மூடப்பட்டது.பின்னர் மும்மரமாக அங்கு கட்டிடம் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கின.அங்கு என்ன கடை வரப்போகிறதோ என எண்ணியிருந்தேன், இப்போது தெரிந்து விட்டது.18 ஆம் தேதி விளமபரத்துக்குப் பெயர் பெற்ற ஒரு ’திருமண’ நகைக் கடை திறக்கப் போகிறார்கள்.சபாசு! சரியான போட்டி!
......................

லிமெரிக் எழுதி அதிக நாட்களாகி விட்டன.லிமெரிக்கைச் சிந்துகவி என்று அழைத்தார் நிரூபன் அவர்கள்

”சினிமாவுக்குப் போனா ராணி
சீட்டில இருந்தது பெரிய ஆணி
ஆச்சு அவ பின்னால பங்சர்
போட்டா அவ கொஞ்சம் டிங்சர்
இப்ப அவ நடையே புதுப் பாணி”

(லிமெரிக் என்பது நகைச்சுவைக்காக எழுதப்படும் கவிதை வகை.ஐந்து அடிகள்.கடைசிச் சொல் அ,அ,க,க,அ என்பது போல் ஒத்து வர வேண்டும். அவ்வளவே!) 
லிமெரிக்கின் சுவை கெடாது இருக்கப் பிறமொழிச் சொற்களைக் கையாண்டிருக்கிறேன்!
(ஆமா! பெரிய சுவை!)23 கருத்துகள்:

 1. அடேடே..! நாய்க் கவிதை அற்புதம்.

  நல்லவேளை அந்த ஒன்றைச் செய்வதில்லை.!

  God Bless You

  பதிலளிநீக்கு
 2. லிமெரிக் ரசித்தேன்! தெருவோரங்களை கழிப்பிடமாக்கி மூத்திர நாற்றம் பெருக்கும் மனிதன் கண்டிப்பாக நாய்தான்! நன்றி! நீங்கள் தந்த கருவொன்று கதையாகியுள்ளது என்பதிவில் இன்று! நேரம் இருப்பின் வாசிக்கவும்! நன்றி!

  பதிலளிநீக்கு
 3. சினிமாவுக்குப் போன ராணியை ரசித்தேன்!

  :)))))))

  பதிலளிநீக்கு
 4. நாய் ஒப்புமை அருமை. எவரும் இனி அவ்வாறாக நிற்க வாய்ப்பில்லை.

  பதிலளிநீக்கு
 5. நாய் கவிதை அருமை அய்யா... நானும் நாய் பற்றி எழுத உள்ளேன் அய்யா....

  பதிலளிநீக்கு
 6. கவிப்பித்தரே காலை வணக்கம்!

  பதிலளிநீக்கு
 7. வழக்கம்போல் பரல்களில் முத்துக்களும் மாணிக்கங்களும் ஒளிவிட்டன. அனைத்தையும் இரசித்தேன். மெல்லிசை மன்னர் பற்றி ஆய்வு செய்கின்ற அளவுக்கு திரு பார்த்தசாரதி அவர்களின் கட்டுரை உள்ளது. இசைப்பிரியர்களுக்கு இது ஒரு கையேடு போல. நாய் கவிதையையும் ‘லிமரிக்’ கையும் இரசித்தேன்.

  பதிலளிநீக்கு