தொடரும் தோழர்கள்

திங்கள், ஆகஸ்ட் 10, 2015

தண்ணித் தொட்டி தேடி வந்த........நேற்று நண்பர் தொலைபேசினார்.என் பழைய பதிவொன்றைக் குறிப்பிட்டு ”இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமான கதை,குறிப்பாகக் கடைசிப் பத்தி மிகவும் பொருத்தம்  “நச்” சென்று இருக்கிறது ;எனவே மீண்டும் வெளியிடலாமே ” என்றார்.
 
அவர் வேண்டுகோளுக்கிணங்கி இந்த மீள் பதிவு.............

//ஜெகன்னாதன் வீட்டு வசதி வாரியத்திலிருந்து 1980 ஆம் ஆண்டு வாங்கிய ஒரு ஃப்ளாட்டில் 30 வருடத்துக்கும் மேலாகக் குடியிருப்பவர்.வெகு காலமாக அங்கேயே இருந்து விட்டதால் அங்கு வசிப்பதில் உள்ள குறைகள் முழுவதையும் மறந்தவர்.

அங்கு ஒவ்வொரு 100 குடியிருப்புகளுக்கும் உடைகளை அயர்ன் செய்து கொடுக்கும் தொழில் செய்பவர்கள்  நான்கு சக்கர வண்டியில் நிலையான  ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு, தங்கள் தொழிலை சிரத்தையுடன் செய்வதாக ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி,அயர்ன் செய்வது தவிர, லேவா தேவி, மனை,வீட்டுத் தரகு என்று பல வேலைகளையும், சட்டத்துக்கு விரோத மான  சில வேலைகளையும் பல காலமாகச் செய்து  சம்பாதித்து வந்தனர் பக்கத்தில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்களும் இதில் கூட்டு.

ஜெகன்னாதன் ஃப்ளாட் வாசலில் அயர்ன் வண்டி வைத்தி ருந்தவன் விநாயகம். அவனும் மற்ற வண்டிக்காரர் போலத் தான். ஆனால்  காலை 8 மணிக்கு ஆரம்பித்து, இரவு 7 மணி வரை--ஒரு மணி நேர உணவு இடை வேளை தவிர-அயராது உழைத்தான்.அவனது ஊர்க் காரன் ஒருவன்,பெயர் திருநீர் செல்வம்,அவனுக்கு உதவியாளனாக இருந்தான்.இவர்களுக்கு உழைப்பின் அலுப்பு நீங்க ஒரே மருந்துதான்--டாக்டர்.டாஸ்மாக் கொடுப்பது!விநாயகத்துக்கு மனைவி , குடும்பம் என்று இருந்ததால் அவனது இரவு வாழ்க்கை பற்றித் தெரியாது.

திருநீர்செல்வம் கதை அப்படியல்ல!ஊதாரி.பலவித உல்லாசத்தில் பணத்தை இழந்தவன். மனைவியால் விரட்டி யடிக்கப்பட்டவன்.வார ஊதியம் ரூ.1000 இல் பெரும் பகுதியை டாஸ்மாக்கில் இழப்பவன்.இரவு அந்த வண்டி அருகிலேயே வாழ்க்கை.குடிபோதை அதிகமானால்,உரத்த குரலில்,கர்ணகடூரமாகப் பாட்டு வேறு.

2010 நவம்பரில்தான் செல்வம் அந்த இஸ்திரி வண்டி அருகில் குடியேறினான். அந்தக்கால கட்டத்தில் ஒரு நாள் இரவு  9 மணியிருக்கும்.திடீரென்றுஐயோ ! கொல்றாங்களே, காப்பாத்துங்க!என்ற அபயக்குரல் கேட்டு டிவியில் ஆழ்ந்திருந்த ஜெகன்னாதன் வெளியே வந்தார். கத்திக்கொண்டே திருநீர் மாடிப்படியில் ஓடி வந்து கொண்டி ருக்க,கருத்த,தடித்த ஒருவர் அவனைத் துரத்தி வந்து கொண்டி ருந்தார்.

அந்த ஆளை நிறுத்தி  ஜெகன்னாதன் விசாரித்தார்.அவன் சொன்னான்எங்க ஓனர் ஒரு பெரிய சங்கீத வித்வான்; அவரைக் கெட்ட வார்த்தையிலே திட்டிட்டான் இந்தப் பொறுக்கி. அந்த நாயை நாலு சாத்து சாத்தணும் அவன் நாக்கை அறுக்கணும்

அவனை வித்வானின் டிரைவர் எனப் புரிந்துகொண்ட  ஜெகன்னாதன்நீங்க கீழே போங்க,அவனை நான் கூட்டிட்டு வரேன்.இங்க வந்த சப்தம் போட்டா, எல்லாருக்கும் இடைஞ்சல்என்று சொல்லி விட்டு திருநீரையும் கண்டித்து விட்டுக் கீழே அழைத்து வந்தார். திருநீர் அங்கு வந்து ஒரு மாதமே ஆகியிருந்ததால்,அவன் யார் என்பதோ மற்ற எந்த விவரமோ அவருக்குத் தெரியாது.

அவனை விசாரிக்க,அவன் ,இஸ்திரி வண்டிக்குப் பக்கத்தில் படுத்துக் கொண்டி ருக்கும் போது,சாலையில் பாகவதரும், டிரைவரும் கழித்தசிறுநீர்,காற்றில் பறந்து அவன் மீது தெளித் ததால் திட்டினதாகச் சொன்னான். பலமான வடகிழக்குப் பருவக்காற்று போலும்!

கீழே சென்ற ஜெகன்னாதன் அந்த பாகவதரைப் பார்த்ததும் இவராஎன்று ஆச்சரிய மடைந்தார் !

ஓ! இவரா என்று அதிசயித்தார்

ஆம்!அவர்தான் என  உறுதி செய்தார்.

பாகவதரிடம் சென்று  தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தான் அவரது பரம ரசிகன் என்று கூறினார்.

பாகவதர் பேச ஆரம்பித்தார்.அவரது வாயிலிருந்து சிகரெட்,பான்பராக்,மதுபான வாடைகள் கலந்து பலமாக வீசின.

அவரது தோற்றத்துக்கும் தொழிலுக்கும் பொருத்தமில்லாதவாறு கெட்ட வார்த்தைகள் அவர் வாயிலிருந்து சரளமாகப் புறப்பட்டன.திருநீரை அவ்வார்த்தைகளால் வசை பாடி விட்டு ஐ வில் டீச் ஹிம்  அ லெசன்என்றார் அரசியலிலும்,அதிகார வர்க்கத்திலும் பலர் அவரது விசிறிகள்,ஒரு பெரிய புள்ளிக்கு ஏற்கனவே ஃபோன் செய்தாகி விட்டது ,இன்னும் 10 நிமிடத்தில் போலீஸ் வந்து விடும் என்றார்.

ஜெகன்னாதன் அவரிடம்நீங்க பெரிய வித்வான்.ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உங்களுக்கு இருக்கா.இந்தச் சின்ன விஷயத்துக்குப் போய் எதுக்குப் பெரிய லெவலுக்குப் போறேள்என்றார்.

அவருக்குப் போதை கொஞ்சம் தெளிய ஆரம்பிக்க ஜெகன்னாதன் போல் தன்னை அறிந்த வர்கள் வந்தால் அசிங்கமாகி விடும் என்றெண்ணியோ என்னவோ புறப்படத் தயாரானார்.

திருநீரின் கெட்ட நேரம் அப்போது போலீஸ் ஜீப் வந்து நின்றது.பாகவதரின் ட்ரைவர் அவனைப் போலீஸிடம் ஒப்படைக்க,ஆய்வாளர் அவனை ஜீப்பில் ஏற்றி விட்டுப் பாகவதரை நெருங்கினார். அந்தப் பொறுக்கி என்னைக் கெட்ட வார்த்தையால திட்டிட்டாம்பா.முட்டிக்கு முட்டி தட்டி ஒரு வாரம் உள்ளே  வச்சி அனுப்புஎன்று சொல்லிவிட்டு,ஜெகன்னாதனைப் பார்த்து அடுத்த வாரம் கச்சேரிக்கு அழைத்து விட்டுப் போய் விட்டார்.

இன்ஸ்பெக்டர் ஜெகன்னாதனிடம் என்ன சார் ஆச்சு என்று கேட்க ,அது  பாகவதர், ட்ரைவர், திருநீர் மூவரும் போதையில் இருந்ததால் ஒரு ஈகோ பிரச்சினை என்று சொன்னார்., விஷயத் தை  முடிக்க விரும்பிய ஆய்வாளர் என்ன செய்யலாம் என்று கேட்க, ஜெகன்னாதன், திருநீரை,சீரியசாக் கண்டிச்சு விட்டு விடுங்கள் என்று சொன்னார்.

ஆய்வாளரும் அவன ஒரு அறை அறைந்து,இனிமேல் இதுபோல் ஏதாவது நடந்தால் உள்ளே தள்ளிவிடுவேன் என்று சொல்லி விட்டுக் கைபேசியில் யாரையோதொடர்பு கொண்டு சார், இன்ஸ்பெக்டர் கருணாநிதி பேசறேன், அந்த நியூசென்ஸ் கேஸ் முடிச்சாச்சுஎன்று ரிபோர்ட் செய்து விட்டு ஜீப்பில் ஏறிச் சென்று விட்டார்.

ஜெகன்னாதன் நினைத்தார்பாகவதர் வி.ஐ.பி பெயரெல்லாம் சொன்னார்,ஒரு வி.வி.ஐ பி யே இன்ஸ்பெக்டராக வந்து விட்டாரே! சிரித்துக் கொண்டார்.

குடி குடியைக் கெடுக்கும்.தன் நிலையிலிருந்து தாழ்த்தும், நகைப்புக் கிடமாக்கும், நடு ரோட் டில் நிறுத்தும்  ஆனாலும் ஒழியாது,ஒழிக்கும் அதிகார முள்ளவர்கள் நினைத்தா லொழிய!”  என்றெண்ணியவாறே  படியேறினார் ஜெகன்னாதன்.//

19 கருத்துகள்:

 1. குடி குடியைக் கெடுக்கும்.தன் நிலையிலிருந்து தாழ்த்தும், நகைப்புக் கிடமாக்கும், நடு ரோட் டில் நிறுத்தும் ஆனாலும் ஒழியாது,ஒழிக்கும் அதிகார முள்ளவர்கள் நினைத்தா லொழிய!” // சத்தியமான வார்த்தைகள்! இப்போதுதான் முதல் முறையாக படிக்கிறேன்! மீள்பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி! நல்லதொரு பதிவு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. இன்ஸ்பெக்டருக்கு ஏன் அந்த பெயரை சூட்டினீர்கள் .விளக்கம்,பிளிஸ்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜீ! இது ஓர் உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுந்தது.ஆய்வாளர் பெயர் மாற்றாமல் வைத்துக் கொண்டேன் ஒரு தாக்கத்துக்காக!
   நன்றி

   நீக்கு


 3. மதுவிலக்கை அதிகாரத்தில் இருப்போர் நினைத்தால் மட்டுமே கொண்டுவரமுடியும் என்ற உண்மை நிலையை சொல்லியுள்ளீர்கள்.

  மீள் பதிவானாலும் மீண்டும் மீண்டும் பதிவிடவேண்டிய பதிவு இது. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. பலமான வடகிழக்குப் பருவக்காற்றுக்கு அவ்வளவு பலமா... ஆச்...ச்ச.ச்ச ..ரியம் அய்யா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பருவகாலத்தில் வேகமாகக் காற்று வீசுவதுண்டு ஐயா
   நன்றி

   நீக்கு
 5. முகத்தில் சிறுநீர் வந்து விழுந்தால் யாருக்குத்தான் பொறுமை இருக்கும்!

  பதிலளிநீக்கு
 6. உண்மை சம்பவங்களை சுவாரசியமாக ஆக்குவது உங்களுக்குகை வந்த கலை ஆயிற்றே. பொருத்தமான பதிவுதான்.

  பதிலளிநீக்கு
 7. மீள் பதிவு என்றாலும் எக்காலத்திற்கும் பொருந்துவதாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. //’குடி குடியைக் கெடுக்கும்.தன் நிலையிலிருந்து தாழ்த்தும், நகைப்புக் கிடமாக்கும், நடு ரோட் டில் நிறுத்தும் ஆனாலும் ஒழியாது,ஒழிக்கும் அதிகார முள்ளவர்கள் நினைத்தா லொழிய!” //

  உண்மை தான். அவர்களுக்கு இது மாதிரி எண்ணமே கிடையாது!

  பதிலளிநீக்கு
 9. ஒழியாதுதான்.

  இனி எப்போதும் ஒழியாது போலிருக்கே..

  கதையில் உண்மைச்சம்பவத்தின் தாக்கம் அப்படியே தெரிகிறது.

  God Bless You

  பதிலளிநீக்கு