தொடரும் தோழர்கள்

புதன், ஆகஸ்ட் 26, 2015

அன்புள்ள மான்விழியே....பகுதி- 1.உஜ்ஜைனியில் சுக்ல பக்ஷ இரவு. மூன்றாம் பிறை நிலவின் ஒளியை மிஞ்சி நட்சத்திரங்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன. வான சாஸ்திர பிதாமகர் வராக மிஹிரர்,அவருடைய நந்த வனத்தில் அவரே தயாரித்த தூரதிருஷ்டி உபகரணங்கள் மூலம் வானத்தில் கிரஹங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார். அந்த தொலைநோக்குக் கருவி, கிரஹங்களுக்கும் அவர் கண்களுக்கும் உள்ள இடைவெளியை வெகுவாகக் குறைத்து, அவைகளின் போக்கை ஆராய உதவின

பாரதத்தின் பொற்காலமான குப்தர்கள் காலத்தில், அறிவுக்கு ஒளி ஊட்டிய நவரத்தினங்களில் ஒருவர் வானசாஸ்திர வித்தகர் வராகமிஹிரர். காளிதாஸர், தன்வந்தரி போன்ற மேதைகளின் சமகாலத்தவர்.

நல்ல வேளையாக அவரது பிரியமகள், “ம்ருகநயனிஅவரை இரவு உணவுக்கு அழைக்க வரும் போது மேகங்கள் வானத்தை மூடிவிட்டன

நயனி, “நடனப் பயிற்சியெல்லாம் எப்படி”?

தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது அப்பா. விஜய சிம்மனை விட நன்றாக ஆட வேண்டும் என்று மிகவும் கவனத்துடன் பயின்று வருகிறேன்.


நீ நன்றாக ஆட வேண்டும் என உன்னை விட அவன்தான் அதிகமாக ஆசைப்படுவான்.”

எனக்கு அப்படித் தெரியவில்லை,” வேண்டுமென்றே மிக நன்றாக ஆடி எனக்கு சவால் விடுகிறான்.”

உன்னை ஜெயிக்க வைத்து விடுவான், நன்றாக பயிற்சி செய்


காளிதாஸரே உங்கள் பயிற்சியை பார்வையிடுவதாக கேள்விப்பட்டேனே

அவரின் படைப்பான சாகுந்தலத்தை தானே நாங்கள் நாட்டிய நாடகமாக்கப் போகிறோம்.” அதற்காக ஒரு சில குறிப்பிட்ட கவிதைகளை அவரே தேர்ந்தெடுத்து, எங்களுக்கு பாடல் பயிற்சி அளித்து உச்சரிப்பை கவனமாக திருத்தி அப்பப்பா……… அவர் எவ்வளவு சிரத்தையாக பயில்விக்கிறார்.

நீயும் விஜயசிம்மனும் கொடுத்து வைத்தவர்கள்.” அவர் பயில்விப்பதை கவனமாக பயின்று பிழையில்லாமல் அரங்கேற்ற வேண்டும்.


என் சகுந்தலையேஎன்று அவர் கூப்பிடும் போது எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிவிடுகிறது.

பயம் அது உன் நாட்டியத் திறனை கெடுத்துவிடும். அவர் இந்த யுகத்தின் மகா கவிஞர். அவரிடம் நேரிடையாக சாகுந்தலம் பயில்வது உங்களது மாபெரும் பாக்கியம்.”

விஜயசிம்மன் அப்போது மிஹிரரை அழைக்கவந்தான். “என்ன துஷ்யந்தரே, சகுந்தலையை படாதபாடு படுத்துகிறாயாமே,” புகார்கள் குவிகின்றன.
அவன் அர்த்தபுஷ்டியுடன் அவரைப் பார்த்து புன்முறுவல் பூத்தான்.

சகுந்தலை நாடகப்பயிற்சியில், அப்பாவின் உள் நாடகமா இதுஎன்று சீறிக் கொண்டே அம்மா என்று கூப்பிட்டுக் கொண்டேஉள்ளே விரைந்தாள் நயனி.

மிஹிரரின் மனைவி மாதங்கி பரிமாறிய சுவையான சைவ உணவு வகைகளை சுவைத்து அளவோடு சாப்பிட்டார். எப்போதும் பால், பழங்களை சற்று இடைவெளி விட்டு சாப்பிடுவார் மிஹிரர், எல்லாவற்றையும் ஒரு கிரமப்படி செய்வார்.

விஜயசிம்மனும், நயனியும் சாப்பிடும் போது, தாயிடம் நயனி ஒரே அழுகை, இடைவிடாது நாட்டியப் பயிற்சி செய்யவைத்து தன் கால்கள் துவண்டு வலிப்பதற்கு காரணம் விஜயசிம்மன் தான் என்று தாயாரிடம் புகார் கூறினாள்.

நாட்டிய நாடகம் அரங்கேற இன்னும் 3 நாட்கள் தான் இருப்பதால் கடுமையான பயிற்சி அவசியம் தான் என்று கூறி மருத்துவ சாம்ராட் தன்வந்திரி தயார் செய்த தைலத்தை இதமாக தடவினாள். தாயின் கைப்பட்டவுடனேயே வலியெல்லாம் பறந்துபோக, துள்ளிக் குதித்துக்கொண்டு ஒடினாள், மானின் விழி கொண்டவள்.

நாளை அதிகாலையிலேயே நடன ஒத்திகையை ஆரம்பித்துவிடலாம் என்று விஜயனிடம் அறிவித்துவிட்டு தூங்கப் போனாள்.

மிஹிரரிடம் பால் பழம் எடுத்துக் கொண்டு சென்றிருந்த விஜயனை, குறிப்பெடுக்கும் வேலைகளை நாட்டிய நாடகம் அரங்கேறிய பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லி களைப்பாற அனுப்பிவிட்டார்.

சற்று நேரத்தில் மாதங்கி கணவர் அருகே வந்தமர்ந்தான்.


பௌர்ணமி நிலவு பக்கத்தில் வந்தவுடன் வானமே இருண்டு விட்டது.”

பிள்ளைகளின் சாகுந்தலம் ஓத்திகைக்குப் பிறகு நீங்களும் கவிதையில் பேச ஆரம்பித்து விட்டீர்களே

உன்னுடைய இசைத்திறமைதானே என்னை மயக்கியது”. 

உங்களை கணவராக  அடைய மிகவும் கொடுத்துவைத்தவள் நான் என்று சொல்லி மாதங்கி அவரை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

 நட்சத்திரங்களுக்கு பொறாமையாக இருந்தது.

மாதங்கி விஜயசிம்மனை புகழ்ந்தாள். உங்கள் தங்கை அவனை ஈன்றெடுத்து சில நாழிகை களிலேயே கண்ணை மூடினாள். அவனுக்கு இரண்டு வயது கூட இல்லை. ஷேத்ராடனம் என்று பிரயாகை சென்ற அவன் தந்தை திரும்பவே இல்லை. இமயமலைக்கு தவம் செய்ய போயிருப்பாரா”?

அந்த விஷயங்களைப் பற்றி பேசி என்னை சோகப்படுத்தாதே, விஜயனின் தந்தை உலக சுகங்களை துறந்திருக்க வேண்டும்.

விஜயன் நம்மீது உயிரையே வைத்திருக்கிறான். என்னிடம் பயிலும் மாணவர்களின் அவனுடைய அறிவையும் திறமையையும் மிஞ்சுபவர்கள் எவரும் இல்லை.”

கடவுள் அவனுக்கு எல்லா சௌபாக்யங்களையும் அருள்வாராக.

நமது நயனியியையும் சேர்த்துத்தானே.” என்றாள் மாதங்கி.

கடவுளின் அனுகிரக்தால் எல்லாம் நல்லபடியாக அமையட்டும். விஜயனையும் நயனியையும் பிரித்துப் பார்க்கவே முடிவதில்லை”.

இருவரும் பால் அருந்தியவுடன் மாதங்கி மற்ற பணிகளை முடிக்க உள்ளே சென்றாள்.

மீண்டும் வானுலக தேவதைகள் மிஹிரரை அணைத்தன. ஆயினும், அன்று வெற்றி மாதங்கிக்கே, மிஹிரர் வழக்கத்தைவிட சற்று சீக்கிரமாகவே படுக்கை அறையை அடைந்தார்.

இப்போதே சந்தோஷமாக இருந்துவிடட்டும். பிறகு வரப்போகும் சோதனைகளை மேற் கொள்ளும் போது இவர்களுக்கு சந்தோஷமாக இருக்க வேறு ஆசைவரப்போகிறதா என கிரஹங்கள் பச்சாதாபப்பட்டன.
தொடரும்

(இது நண்பர் பார்த்தசாரதியின் ஆக்கம்.எனவே வடமொழி எழுத்துகள், சொற்கள் எதையும் நான் மாற்றவில்லை)

படம்- நன்றி-கல்கி
 என் குறிப்பு:
-----------------
வேதத்தின்  ஆறு அங்கங்களாவன, சிட்சை,வியாகரணம்,சந்தம்,நிருக்தம்,கல்பம்,சோதிடம் ஆகியன
 
வராகமிகிரர்  சோதிட சாத்திர விற்பன்னர்.இவரது பிருகத் சாதகம்என்னும் நூல் இன்னும் சோதிட வழிகாட்டியாக இருந்து வருகிறது.அவர்காலத்தில் நிழற்கோள்களான ராகுவும், கேதுவும்  வழக்கத்தில் இல்லை.எனவே இந்நூலில் மற்ற ஏழு கோள்கள் பற்றியே குறிப்பிடப் பட்டுள்ளது பின்னாளில் ராகுவும் கேதுவும் ஒன்பான் கோள்களில் இணைக்கப்பட்டன.மற்றக் கோள்களுக் கெல்லாம் சொந்த ஆட்சி வீடுகள் இருக்கையில் இவ்விரு கோள்களுக்கும் சொந்த வீடுகள் என்பது கிடையாது.


22 கருத்துகள்:

 1. சுவையாகவும் இருக்கிறது! நிறைய தகவல்களை அறிந்து கொள்ளவும் முடிகின்றது! தொடர்கிறேன்!

  பதிலளிநீக்கு
 2. அருமை. வித்தியாசமான நடையாக இருக்கிறதே என்றிருந்தேன். தாங்கள் அதற்கான காரணத்தைக் கூறிவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு

 3. சிறந்த பகிர்வு

  புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
  இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
  http://www.ypvnpubs.com/

  பதிலளிநீக்கு
 4. என்ன இது தனித் தமிழ் வலைப்பதிவு எனப் போட்டுவிட்டு வடமொழி சொற்களை அதிகம் கலந்திருக்கிறீர்களே என நினைத்தேன். கடைசியில் தான் தெரிந்தது இது உங்கள் நண்பரின் கதை என்று. கதை அருமையாய் நகர்கிறது. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த ஐயம் வரக்கூடாது என்றுதான் முதலிலேயே சொல்லி விட்டேன்!
   நன்றி ஐயா

   நீக்கு
 5. எனக்கு புதிய விடயங்கள் அருமை ஐயா தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறிது சோதிடமும் கலந்து எழுதும் முயற்சி!
   நன்றி கில்லர்ஜி

   நீக்கு
 6. புதியதொரு வரலாறு...தொடர்கின்றோம்/....

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்
  ஐயா
  கதை நன்றாக உள்ளது... தொடருகிறேன். த.ம 7

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 8. ஆவலைத்தூண்டும் கதையோட்டம் தொடர்கின்றேன்

  பதிலளிநீக்கு
 9. வித்தியாசமான நடையில்
  அருமை ஐயா
  தொடர்கிறேன்
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு