தொடரும் தோழர்கள்

வியாழன், ஆகஸ்ட் 20, 2015

பதிவர் சந்திப்பு-ஒரு லிமெரிக்ஹைக்கூக்கள்
***************
சூல் கொண்ட மேகம்;
கீற்றாய்  ஒளிர் நிலவு.
கூந்தலில் பூச்சரம்!
******************
மேகத்திரையில் மறைத்து,
அரை முகம் காட்டும் நிலா.
கதவோரப் பெண்!
************************
தொலைந்து போயிற்று
அதுவும் ஆனந்தமே
இதயம்!
*******************
குட்டிக் கவிதைகள்
.............................
புயல் அறிவிப்பால்
கடலுக்குப் போகவில்லை..
தண்ணீர்-
கடலில் மட்டுமல்ல
கஞ்சிக் கலயத்திலும்தான்.

-*-*-*-*-*-*-*-*-*-*-
நாய் விற்ற காசு குரைக்காது
ஆனால்
அக்காசில் வாங்கிய செருப்பு
கடித்தது!
............................
இந்நேரத்துக்குப் பொருத்தமான ஒரு லிமெரிக்!
........................................................................
பதிவர் சந்திப்புக்குப் போனாரு பித்து
பலரும் பராட்டுவாங்கன்னு யோசித்து
போற வரைக்கும் தெரியலை
அவர் பதிவை யாரும் அறியலை
பாவம் காணாமப் போச்சு இப்ப அவர் கெத்து


42 கருத்துகள்:


 1. ஹைக்கூக்கள் மற்றும் குட்டிக்கவிதைகளை இரசித்தேன். அதைவிட உங்களின் ‘லிமெரிக்’ கை இரசித்தேன். கவிதை நன்றாக இருந்தாலும் பித்தனையும் அவரது பதிவையும் யாருக்கும் தெரியவில்லை என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? இந்த இடத்தில் செல்வம் திரைப்படத்தில் வந்த ஒரு பொருத்தமான திரைப்படப் பாடலை சொல்வது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்

  உப்பு கடல் நீரும் சர்க்கரை ஆகலாம்
  முப்பது நாளிலும் நிலவை பார்க்கலாம்
  சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்
  சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்
  நீ சொன்னது எப்படி உண்மை ஆகலாம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உயர்வு நவிற்சி!
   நன்றி ஐயா-அன்புக்கும்,கருத்துக்கும்

   நீக்கு
 2. சிறப்பான ஹைக்கூக்கள், மற்றும் கவிதைகள்! உங்களை தெரியாதவங்க இருக்க முடியுமா சார்?

  பதிலளிநீக்கு
 3. அந்த பித்து யாருன்னு சொல்லுங்களேன் :)

  பதிலளிநீக்கு
 4. அந்த பித்து நாமா இருக்குமோன்னு யோசிக்க வைக்குது .

  பதிலளிநீக்கு
 5. பித்து என்பது உங்களை குறித்தால், அதை நான் வன்மையா கண்டிக்கிறேன். இங்க உங்களுக்கு ஒரு FAN CLUB பே இருக்கோம் சார்!!! அதைத்தவிர லிமரிக் செம மாஸ்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி.
   முதலில் ஏதாவது பெயரைப் போட்டு எழுத எண்ணினேன்.அப்பெயரில் யாராவது பதிவர் இருந்தால் வம்பாகி விடும்!எனவே பித்து!

   நீக்கு
 6. சுய எள்ளல் உட்பட அனைத்தையும் ரசித்தேன் ஸார்.

  பதிலளிநீக்கு
 7. ரசிக்க வைத்தன குட்டிக்கவிதைகள். அதிலும் கடைசி கவிதை வஞ்சப்புகழ்ச்சி ரகம்! அருமை அய்யா!
  த ம 8

  பதிலளிநீக்கு
 8. ஒவ்வொருவரையும் பித்தாக
  எண்ணிக்கொள்ளவைக்கும் பகிர்வுக்ள்...

  பதிலளிநீக்கு
 9. குட்டிக்கவிதைகள் அருமை. பதிவர் நகைச்சுவை மிக மிக அருமை.

  பதிலளிநீக்கு
 10. குட்டிக்கவிதைகள் அருமை அருமை!
  உங்களைத்தெரியாதவங்க உண்டா?

  பதிலளிநீக்கு
 11. அட! இப்படி எல்லாத்துலயும் கலக்குறீங்களே ஐயா! அருமை அனைத்தையும் ரசித்தோம்...

  பதிலளிநீக்கு
 12. லிமெரிக் ஹஹஹஹ உங்களையே நீங்கள் விமர்சித்தல்...ஏன்..பித்தன் இங்கும் .."அங்கும்" கலக்குகின்றாரே....ஒன்றில் வயதனாய்???..மற்றொன்றில் இளைஞராய்/குழந்தையாய்...!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ’அங்கும்”? எனக்குப் புரியவில்லை.யாரோ உங்களுக்கு ஏதோ தவறான தகவல் தந்துள்ளனர்.:))
   அனால் ஒன்று;எனக்கும் இளைஞனாய்,குழந்தையாய் இருக்க ஆசைதான்!
   நன்றி

   நீக்கு
 13. லிமெரிக் ஹஹஹஹ உங்களையே நீங்கள் விமர்சித்தல்...ஏன்..பித்தன் இங்கும் .."அங்கும்" கலக்குகின்றாரே....ஒன்றில் வயதனாய்???..மற்றொன்றில் இளைஞராய்/குழந்தையாய்...!!!

  பதிலளிநீக்கு
 14. கவிதைகள் சூப்பர்
  குறிப்பாக பதிவர் குறித்தக் கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு