தொடரும் தோழர்கள்

பதிவர் சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவர் சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, செப்டம்பர் 12, 2015

எல்லாச் சாலைகளும் புதுக்கோட்டைக்குச் செல்கின்றன!




புதுக்கோட்டையின் சிறப்பு பற்றி,பார்க்க வேண்டிய இடங்கள் பற்றியெல்லாம் பலர் எழுதி விட்டனர்.

நான் புதுக்கோட்டைக்கு இன்று வரை போனதில்லை.

போக வேண்டும் என்றொரு ஆசை ,பலமான ஆசை சில முறை எழுந்ததுண்டு.

 1967 .....

ஒரு பகலில் ஓடும் ரயிலில்  சந்தித்த நட்பை மாலை பிரிகையில் அந்நட்பு புதுக்கோட்டை யைச்  சேர்ந்தது என்பது தவிர வேறெதுவும் அறியாமல்  திரும்பிய காலம்.

சில நாட்கள், சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்ததுண்டு. போய்த் தேடிப்
பார்க்கலாமா என.னாலும் ஓர் அச்சம்.   ஊரில் எங்கென்று தேடுவது.அங்கும் இங்கும் அலைந்து யாருக்காவது ஐயம் ஏற்பட்டால்?எனவே போகாமலே இருந்து விட்டேன்.இன்றும் புதுக்கோட்டை என்றால் நினைவுக்கு வருவது அந்த அழகிய நட்பே!

மற்றொரு தொடர்பு சாந்தானந்த சுவாமிகள்.என் உறவினர் ஒருவர் என்னை அவர் மடத்தில்
 (எதில் என்று சரியாகத் தெரியவில்லை) ஆயுட்கால உறுப்பினர் ஆக்கி விட்டார்.பணம் நான்தான் கட்டினேன்!முன்பெல்லாம் என் பிறந்தநாளன்று குங்குமப் பிரசாதம் வந்து கொண்டிருந்தது; இப்போது இல்லை.சுவாமிகளையும் நான் சேலத்தில்தான் பார்த்தேன்.


என் அம்மாவின் சித்தி,புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள்,கல்யாண சமையலைக் கூடக் கவனிக்கும் சாமர்த்தியம் பெற்றவர்கள்.புதுக்கோட்டைக் காரர்கள் எல்லாருமே சமையலில் விற்பன்னர்களோ என நினைக்கிறேன்


புதுக்கோட்டைப் பிரபலம் என்றால் என் நினைவுக்கு வருபவர் ஜெமினி கணேசன் அவர்கள்



இதெல்லாம் பழங்கதை.இன்று புதுக்கோட்டை என்றால் நினைவுக்கு வருவது அக்டோபர் 11 ஆம் நாள் நடக்க இருக்கும் மிகப் பிரம்மாண்டமான பதிவர் சந்திப்புதான்

எல்லாச் சாலைகளும் ரோமுக்குச் செல்கின்றன என்று சொல்வார்கள்.அதன் பொருள் வேறாக இருக்கலாம்.ஆனால் அந்த வாக்கியம் இன்று பொருத்தமாகப் படுகிறது …..


எல்லாச் சாலைகளும் புதுக்கோட்டைக்குச் செல்கின்றன”.

இங்கு ரோமையும் புதுக்கோட்டையும் ஒப்பிட்டுச் சொன்னதுகூட பொருத்தம்தான்!

இதைப் படியுங்கள்


//புதுக்கோட்டைப் பகுதியிலிருந்து பருத்தியும், பட்டு மெந்துகிலும், நல்லெண்னையும் ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. புதுக்கோட்டை வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் எனபதற்கு ஆதாரமாக ஆலங்குடிக்கு அருகிலுள்ள கருக்காக்குறிச்சியில் ரோம பொன் நாணயங்கள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் கி.மு 29க்கும் கி.பி 79க்கும் இடைப்பட்ட காலத்தவை. ரோம் நாட்டு வரலாற்றில் புகழ்பெற்ற பல மன்னர்களின் நாணயங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன. இந்த நாணயங்கள் தமிழகத்தில் செலவாணியில் இல்லாவிட்டாலும் தங்கத்தின் மதிப்பிற்காக பாதுகாக்கப்பட்டு வந்தது(செலவாணியில் இருந்ததாக எட்கார் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்.)// ......தமிழ் விக்கிபீடியா


பதிவர் சந்திப்புக்குச் செல்பவர்களுக்கு இதுநாள் வரை எழுத்தில் மட்டுமே அறிமுகமான நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புடன்,புதுக்கோட்டையிலும் அதை ஒட்டியும் உள்ள சிறப்பான இடங்களைப் பார்க்கவும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.


புதிய இடங்கள்.புதிய காட்சிகள்,சில புதிய நண்பர்களும் கூட உங்களுக்காகக் காத்திருக் கின்றன(ர்)

ஏற்கனவே சமையல் சாமர்த்தியம் பற்றிச் சொல்லி விட்டேன்!எனவே சிறப்பான உனவு காத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை!


சென்று வாருங்கள் அன்பு உள்ளங்களே!

நானும் உங்களுடன் இருப்பேன்.........

மனதால்!






வியாழன், ஆகஸ்ட் 20, 2015

பதிவர் சந்திப்பு-ஒரு லிமெரிக்



ஹைக்கூக்கள்
***************
சூல் கொண்ட மேகம்;
கீற்றாய்  ஒளிர் நிலவு.
கூந்தலில் பூச்சரம்!
******************
மேகத்திரையில் மறைத்து,
அரை முகம் காட்டும் நிலா.
கதவோரப் பெண்!
************************
தொலைந்து போயிற்று
அதுவும் ஆனந்தமே
இதயம்!
*******************
குட்டிக் கவிதைகள்
.............................
புயல் அறிவிப்பால்
கடலுக்குப் போகவில்லை..
தண்ணீர்-
கடலில் மட்டுமல்ல
கஞ்சிக் கலயத்திலும்தான்.

-*-*-*-*-*-*-*-*-*-*-
நாய் விற்ற காசு குரைக்காது
ஆனால்
அக்காசில் வாங்கிய செருப்பு
கடித்தது!
............................
இந்நேரத்துக்குப் பொருத்தமான ஒரு லிமெரிக்!
........................................................................
பதிவர் சந்திப்புக்குப் போனாரு பித்து
பலரும் பராட்டுவாங்கன்னு யோசித்து
போற வரைக்கும் தெரியலை
அவர் பதிவை யாரும் அறியலை
பாவம் காணாமப் போச்சு இப்ப அவர் கெத்து