இன்று அக்டோபர்,25
1944 ஆம் ஆண்டு இதே நாளில்,இத் தருமமிகு சென்னையில்,திருவல்லிக்கேணிப் பகுதியில் ஒரு பிறப்பு.
அவன் வாழ்க்கையில் எதையும் சாதிக்காத ஒரு சாமானியன்தான்.
வளர்ந்தான் ,படித்தான்,பணி புரிந்தான், மணம் செய்து இரு குழந்தைகளுக்குத் தந்தை யானான்,ஒரு சிறு குடியிருப்புக்குச் சொந்தக்காரனானான்,பணி ஒய்வு பெற்று வெட்டி ஆபீசராக இருக்கிறான் ;அவ்வளவே அவன் சாதனைகள்.
ஆனால் ஒரு விசயத்துக்காக அவன் மகிழ்ச்சியடைகிறான்,பெருமைப் படுகிறான்.
ஒரு வலைப்பூ தொடங்கி அதன் மூலம் பல முகமறியா நட்புக்களுக்குச் சொந்தக்காரனாகி விட்டான்..
ஆனால் ஒரு அலுப்பின் காரணமாக வலைப்பதிவு எழுதுவதைத் துறக்க எண்ணினான்.
இரண்டு மாதங்கள்.......!
நட்புகளை பிரிந்து இருக்க இயலவில்லை.
எழுதாமல் இருக்க இயலவில்லை.
போன மச்சான் திரும்பி வந்தான்!!
ஆம்;இன்று அவன் திரும்பி வருகிறான்--தனக்குத்தானே விதித்துக் கொண்ட சில கட்டுப் பாடுகளோடு.
முக்கியமானது-முன்பு போல் எழுதிக் குவிக்காமல்,வாரத்துக்கு இரண்டு பதிவுகள் மட்டுமே.
பதிவு எழுதும் நாட்களில் மட்டும் அதிக நேரம் இணைய உலா;மற்ற நாட்களில் நேரக் கட்டுப்பாடு.
அவனது இந்த பிறந்த நாளில் மீண்டும் உங்களையெல்லாம் வலைப்பூ மூலம் சந்திப்பதில்
மட்டற்ற மகிழ்ச்சியடைகிறான்.
அந்த 68 வயது இளைஞன் உங்கள் அனைவரையும் வணங்கி நிற்கிறான்
வாழ்த்துங்களேன்!