தொடரும் தோழர்கள்

வியாழன், அக்டோபர் 25, 2012

இன்று புதிதாய்ப் பிறந்தேன்!

இன்று அக்டோபர்,25

1944 ஆம் ஆண்டு இதே நாளில்,இத் தருமமிகு சென்னையில்,திருவல்லிக்கேணிப் பகுதியில்  ஒரு பிறப்பு.

அவன் வாழ்க்கையில் எதையும் சாதிக்காத ஒரு சாமானியன்தான்.

வளர்ந்தான் ,படித்தான்,பணி புரிந்தான், மணம் செய்து இரு குழந்தைகளுக்குத் தந்தை யானான்,ஒரு சிறு குடியிருப்புக்குச் சொந்தக்காரனானான்,பணி ஒய்வு பெற்று வெட்டி ஆபீசராக இருக்கிறான் ;அவ்வளவே அவன் சாதனைகள்.

ஆனால் ஒரு விசயத்துக்காக அவன் மகிழ்ச்சியடைகிறான்,பெருமைப் படுகிறான்.

ஒரு வலைப்பூ தொடங்கி அதன் மூலம் பல முகமறியா நட்புக்களுக்குச் சொந்தக்காரனாகி விட்டான்..

ஆனால் ஒரு அலுப்பின் காரணமாக வலைப்பதிவு எழுதுவதைத் துறக்க எண்ணினான்.

இரண்டு மாதங்கள்.......!

நட்புகளை பிரிந்து இருக்க இயலவில்லை.

எழுதாமல் இருக்க இயலவில்லை.

போன மச்சான் திரும்பி வந்தான்!!

ஆம்;இன்று அவன் திரும்பி வருகிறான்--தனக்குத்தானே விதித்துக் கொண்ட சில கட்டுப் பாடுகளோடு.

முக்கியமானது-முன்பு போல் எழுதிக் குவிக்காமல்,வாரத்துக்கு இரண்டு பதிவுகள் மட்டுமே.

பதிவு எழுதும் நாட்களில் மட்டும் அதிக நேரம் இணைய உலா;மற்ற நாட்களில் நேரக் கட்டுப்பாடு.

அவனது இந்த பிறந்த நாளில் மீண்டும் உங்களையெல்லாம் வலைப்பூ மூலம் சந்திப்பதில்
மட்டற்ற மகிழ்ச்சியடைகிறான்.

அந்த 68 வயது இளைஞன் உங்கள் அனைவரையும்  வணங்கி நிற்கிறான்

வாழ்த்துங்களேன்!

49 கருத்துகள்:

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தல.......!

    பதிலளிநீக்கு
  2. இன்னும் பல 68களை நீங்கள் கண்டு மகிழ வாழ்த்துகிறோம்...!

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்த வயதில்லை... வழக்கம்போல் தொடருங்கள்....

    பதிலளிநீக்கு
  4. உங்கள் பதிவைக் கண்டு மிக்க மகிழ்ச்சி...

    மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  5. அறுபத்தி எட்டு வயசு ஆன‌

    அந்த வெட்டி ஆஃபீசரை

    அதுக்கும் மேலே மூணு கூடிய‌

    அதை விட வெட்டி வெட்டி ஆஃபீசர்

    வருக வருக வருக என‌

    வரவேற்கிறான்.

    அந்த ஒரு இடம் தானே
    நம்ம மனசுக்கு நிம்மதியாயிருக்கு.
    இத விட்டுட்டு போனா
    எப்படி ?

    சுப்பு ரத்தினம்.

    பதிலளிநீக்கு
  6. வருக பித்தரே வருக! பிறந்தநள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. தங்களது இந்த பிறந்தநாளில் என்னைப்போன்ற சிறுவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை நாங்கள் வேண்டுகிறோம் அய்யா!

    வருகை மகிழ்ச்சியளிக்கிறது! தொடர்வோம் அய்யா!

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்த வயதின்றி வணங்குகிறேன் ஐயா ஆசிர்வதியுங்கள்.

    பதிலளிநீக்கு
  9. மேலும் பல பிறந்த நாட்களை எங்களுடன் நீங்கள் பகிர இறைவனை வேண்டுகிறேன் ஐயா!! ஆசீர்வதியுங்கள்!!!

    பிறந்த நாளில் மீண்டு மீண்டும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி!!

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்! தங்களுக்கு எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்....மீண்டும் எழுத வந்தது மிக்க மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  12. 68 வயதான அந்த இளைஞருக்கு என் இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்பதில் கொள்ளையோ கொள்ளை மகிழ்ச்சி. நீங்களும் நம்ம கட்சியில சேர்ந்ததுல இன்னும் சந்தோஷம். (நான் எழுதத் தொடங்கிய நாள்லருந்தே வாரத்துக்கு 3 பதிவுன்னு எழுதிட்டிருக்கேன்.)

    பதிலளிநீக்கு
  13. வருக ! இனிதே தொடர்க !
    வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  14. மீண்டும் // சென்னை காதலர் // திரும்ப வந்ததில் மகிழ்ச்சி.
    பிறந்தநாளில் உங்களை நான் வாழ்த்த இயலாது. வயதில் சின்னவன்:)))
    இந்த வலை ஒரு மாயவலை "விடாது கருப்பு" போலதான்.தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துக்கள் ஐயா மீள் வருகையை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்

    மீண்டுமொரு முறை இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! மீண்டும் பதிவுலகை கலக்க வந்ததற்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  17. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  18. ஐயாவின் பதிவுலக வருகை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது! வணங்கி வரவேற்கிறேன்! வருக வருக!

    பதிலளிநீக்கு
  19. @MANO நாஞ்சில் மனோ
    முதல் வாழ்த்துக்கூறி என்னை நெகிழ வைத்த நண்பா,நன்றி

    பதிலளிநீக்கு
  20. மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  21. @வே.சுப்ரமணியன்
    நன்றி வே.சுப்ரமணியன்

    பதிலளிநீக்கு
  22. உங்களைவிட நாங்களே இந்த அறிவிப்பினால்
    அதிக மகிழ்ச்சி கொள்கிறோம்...
    வாழ்த்துக்களுடன்.....

    பதிலளிநீக்கு
  23. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். மீண்டும் பதிவுலகில் அடியெடுத்து வைத்த உங்களுக்கு நன்றி. தொடர்ந்து பதிவுகளில் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  24. இன்னும் பல பதிவுகள் எழுதி, பற்பல நண்பர்களைப் பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  25. மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  26. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார். மீண்டும் பதிவுலகுக்கு வந்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  27. பதிவுலகத்திற்கு வந்ததில் ரொம்ப சந்தோசப்படுறேன். வருக வருக.

    பதிலளிநீக்கு