என்
பெயர் நாச்சி.
என் வயது 13.
நான் ஒரு அறக் கட்டளையால் இந்தக் கோவிலுக்குத்
தானமாகக் கொடுக்கப்பட்டேன்.
சாமி ஊர்வலமாகப் போகும்போது என்னை அழகுபடுத்தி
ஊர்வலத்தில் கயிற்றைப்பிடித்து இழுத்துச் செல்வர்.
அப்போதுதான் சாமி கம்பீரமாக இருப்பாராம்
அந்தக் கயிற்றின் மூலம் எப்படி என்னைப் பிணைப்பது?
இரண்டு நாள் முன் அது நடந்தது
நான் சாவகாசமாக வேப்பங்கொழுந்துகளை மென்று
கொண்டிருதேன்.
அங்கு நான்கு பேர் வந்தனர்.
என்னை கயிற்றால் கட்டிக் கீழே தள்ளினர்.
ஒருவர் ஒரு செப்புக் கம்பியை என் மூக்கில்
குத்தித் துளைத்து இழுத்து அதை ஒரு வளையமாக
முடுக்கி,அதன் வழியாக ஒரு கயிற்றைச் செலுத்தினர்.
45 வலிக்கும் நிமிடங்கள்!
மரண வேதனை!
சாமி ஊர்வலம் சிறப்பாக அமைய எனக்கு இந்தக்
கொடுமை!
சாமி ஊர்வலத்தில் செல்வதை நான் பெருமையாக நினைக்கிறேன்.
ஆனால் அதற்காக எனக்கு இந்த வலி,வேதனையா?
இந்த மனிதர்களின் மூக்கில் ஒரு கம்பியைக்
குத்தி இழுத்தால் என்ன செய்வார்கள்?
கத்துவார்கள்;திட்டுவார்கள்;சாபமிடுவார்கள்.
ஆனால்
நான் ஒரு ஒட்டகம்!
பேசத் தெரியாது.
தன் ஊர்வலத்தில் செல்வதற்கு இந்த ஆண்டவனே
என்னை இந்த வேதனைக்கு உட்படுத்தினால் நான் யாரிடம்முறையிடுவேன்?
எங்கள் நலனுக்காக அமைப்புகள் உள்ளனவாம்!
ஆனால் யாருக்கும் இந்தக் கொடுமை தெரியவில்லை!
அவனே செய்விக்கிறான் என்றால் காப்பாற்றுபவர்
எவர்?
நீங்களே சொல்லுங்கள்!
செய்தி: திருப் பெரும்புதூர் ராமானுஜர்
கோவில் ஒட்டகத்துக்கு இது நிகழ்ந்தது
மயக்க மருந்து கொடுத்து இதைச் செய்திருக்கலாமே
எனக் கேட்ட தற்கு மிருகவைத்தியர் சொன்னார்” அது கொஞ்சம் கடினமானமுறை.அதுவும் மருந்துக்குச் செ லவு ரூ.இருனூறு
ஆகும்.அது முடியாது!”
இதில் வேதனையான வேடிக்கை என்னவென்றால் புகாரின் மேல் இப்படிப்பட்ட
கொடுமைகளுக்குச் சட்டத்தின் கீழ் தண்டனை கொடுத்தால் அதிகபட்சத் தண்டனை ரூ.50/- அபராதம்தான்!
செய்தி-இந்தியாவின் நேரங்கள் 7.நவம்பர்.
மிருகவதைத் தடுப்பு அமைப்பினர் எல்லாம் இதைக் கவனிப்பதில்லையா? என்ன கொடுமை ஸார்? வாய் பேசத் தெரிந்திருந்தால் அவற்றின் மனக்குரல் இப்படித்தான் குமுறலாய் ஒலித்திருக்கும்.
பதிலளிநீக்குதண்டனை விவரம் அறிய
பதிலளிநீக்குசட்டத்தினை எண்ணி
சிரிப்புதான் வந்தது
சொல்லிச் சென்றவிதம் மிகமிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
மிருகங்களைப் படுத்தும்பாடு வேதனையாகத்தான் இருக்கின்றது.
பதிலளிநீக்குஇந்தியாவின் நேரங்கள் ! கடுமையானவை !!!
பதிலளிநீக்குஇது போன்ற செயல்கள் கண்டனத்திற்குரியது! வேதனையான விசயம்! தண்டனைகளை கடுமையாக்க வேண்டும்!
பதிலளிநீக்குகடவுளின் பெயரால் இத்தகைய செயல்களைச் செய்வது மிக்க கயமைத்தனம்! உள்ளம் உருகும் நிலை!
அந்த ஒட்டகம் பேச நினைத்ததை நீங்கள் பேசிவிட்டீர்கள் உங்கள் பதிவின் மூலம்! மனதைத்தொட்ட பதிவு. SPCA நினைத்தால் அவர்கள் மேல் வழக்கு தொடரலாம். ஆனால் நீங்கள் சொன்னதுபோல் அபராதத்தொகை மிக குறைவுதான்.அந்த வாயில்லா ஜீவனுக்காக பரிதாபப்படத்தான் முடியும் நம்மால். இதெல்லாம் நம் நாட்டில்தான் நடக்கும்
பதிலளிநீக்குமிகவும் வேதனையான விஷயம்... மனிதனுக்கே இங்கே அநிதீகள் நடக்கும் பொழுது மிருகத்திற்கு என்ன சொல்வது...?
பதிலளிநீக்குவணக்கம் ஐயா
பதிலளிநீக்குநலமா?
மனமில்லா பிணங்கள் செய்யும் காரியங்களை
அழகாக எடுத்துச் சொன்னீர்கள்.
அருமை அருமை...
மிக கொடுமையான விடயம்.. ஆதுவும் கடவுள் பெரை பயன் படுத்தினால் அது மிக மிக கொடுமை.....
பதிலளிநீக்குv\வாயில்லா ஜீவனின் வாயாக இருந்து சொன்னது உரைக்குமா சம்பந்தப் பட்டவர்களுக்கு.?
பதிலளிநீக்குகோவில் என்ற பெயரில் நடக்கும் மிருக வதைகள் கடவுள் ஏன் தடுக்கவில்லை ?
பதிலளிநீக்குமிகவும் வேதனைக்குரிய தகவல்... மாற வேண்டும்...
பதிலளிநீக்குநன்றி...
கொடுமை.... வேதனை தான் மிஞ்சுகிறது.
பதிலளிநீக்குநன்றி பாலகணேஷ்
பதிலளிநீக்குநன்றி ஒட்டி-டமில்
பதிலளிநீக்குநன்றி ரமணி
பதிலளிநீக்குநன்றி சக்திதாசன்
பதிலளிநீக்குநன்றி இராஜராஜேஸ்வரி
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்
பதிலளிநீக்குநன்றி புலவர் ஐயா
பதிலளிநீக்குநன்றி சபாபதி சார்
பதிலளிநீக்குநன்றி ஆயிஷா ஃபரூக்
பதிலளிநீக்குநலமே மகேந்திரன்
பதிலளிநீக்குநன்றி.
நன்றி எஸ்தர் சபி
பதிலளிநீக்குநன்றி முரளி
பதிலளிநீக்குநன்றி சசிகலா
பதிலளிநீக்குநன்றி தனபாலன்
பதிலளிநீக்குநன்றி வெங்கட்
பதிலளிநீக்குசரியான தேர்வு.. எல்லோரும் சாமி அலங்காரத்தையும், சாமியின் அருளையும் பற்றி பேசும் நேரத்தில் சாமிக்காக ஊர்வலம் செல்லும் ஒட்டகத்தை பற்றி சொல்லி இருப்பது அருமை
பதிலளிநீக்கு