தீபாவளியும் அதுவுமா கணினி
படுத்து(தி) விட்டது! தாய் பலகை ஃபணால். கணினிப் பொறியாளர் எடுத்துப்போய் எனக்கு 3200 ரூபாய் செலவு வைத்து
இன்றுதான் கணினியைத் திரும்பக் கொண்டு வந்து வைத்தார்.தீபாவளிக்கான மற்றச்
செலவுகளோடு இதுவும் சேர்ந்து கொண்டது. சொல்லப் போனால் இதுதான் அதிகச் செலவு.இன்னும்
எத்தனை நாட்களுக்கு ஒழுங்காக வேலை செய்கிறதோ பார்க்கலாம்.
தீபாவளிச் செலவு என்று சொன்னேன்
இல்லையா?எனது உடைக்கு நான் எதுவும் செலவழிக்க வில்லை.பீரோவில் எப்போதெல்லாமோ
கிடைத்த ஏழு வேட்டிகள் ஏழு துண்டுகள் இருந்தன! நண்பர்கள்,உறவினர்கள் கொடுத்த சில
சட்டைகள்,டீ சட்டைகள்
இருந்தன.அவற்றோடு என் மகள் ,’ராசி’யிலிருந்து
இரண்டு அரைக்கை குர்தாக்கள் வாங்கிக் கொடுத்தாள்.மாலாடும் மிக்சரும் வாங்கினேன்.பெண்ணிடமிருந்து.மைசூர்பா
,பாதாம் கேக்,மிக்சர்,லேகியம் வந்தது.என் அண்ணா, அவர் மகள்,அண்டை வீட்டுக்காரர்கள் என்று பலரிடமிருந்து,ரவாலட்டு,பர்ஃபி,முறுக்கு,ரிப்பன்
பக்கோடா எனப் பல வந்தன. ஏவ்வ்!
ரிப்பன் பக்கோடா என்றதும் என்
திருப்பூர் நண்பர் இராமதாஸ் நினைவுதான் வருகிறது.அவர்கள் வீட்டில் அதை ஓட்டு
பக்கோடா என்று சொல்வார்கள்.மிகச் சுவையாக செய்வார்கள்.நாங்கள்
ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை செல்லும் போது எங்களுடன் ஒரு எவர்சில்வர் பாத்திரம் நிறைய
ஓட்டுப் பக்கோடா அவர்கள் வீட்டிலிருந்து வரும்.தின்று கொண்டே போவோம்.
எங்கள் சபரிமலைப் பயணமே ஒரு பிக்னிக்
மாதிரிதான்.நான் முதல் முறை -கன்னிச்சாமி- சென்றதே ஒரு எதிர்பாராத நிகழ்வுதான்.தில்லியில்
பணி புரிந்து வந்தபோது விடுப்பில் , நெல்லையில்
இருந்த என் அண்ணா வீட்டுக்கு வந்திருந்தேன்.நான் முன் பணி புரிந்த திருப்பூர் சென்று
நண்பர்களைச் சந்திக்க எண்ணினேன்.நான் அங்கு சென்றபோது இரு நாட்களில் அவர்கள் சபரிமலை
செல்லத் தயாராக இருந்தனர்.நண்பர் ராமதாஸ் என்னைப் பார்த்ததும் “சார்,நீங்களும் எங்களுடன்
மலைக்கு வருகிறீர்கள்.நாளைக்காலை மாலை போட்டுக் கொள்ளுங்கள்.மறுநாள் புறப்படுகிறோம்.உங்களைப்
பொறுத்த வரை எப்போதுமே விரதம்தானே!” என்று சொல்லி விட்டார்.அவ்வாறு அமைந்தது என் முதல்
ஐயப்ப தரிசனம்.
எப்போது எங்கள் பயணத்தில் முக்கியமாக
அமைவது தீனிதான். போகும் போதே திருப்பூர் அருகில் ஒரு முருகன் கோவிலில் நிறுத்தி இனிப்பு
,இட்லி வகையறாவை ஒரு கை பார்ப்போம்.வேனில் செல்லும்போது ஏதாவது கொறித்துக் கொண்டேதான்
செல்வோம்.ஜாலியாகப் பேசியபடியேதான் செல்வோம்.அப்போது நான் சொல்வேன்,
”மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற”
என்று!
முக்கியமான சில நிகழ்வுகள்,திரும்பும்போது
இரவில் குற்றாலம் சேர்ந்து, அருவியில் குளித்து,இட்லிக்கடையில் இட்லி ,தோசை என்று எண்ணிக்கை யில்லாமல்
உள்ளே தள்ளுவது,ஜாதிக்காய் ஊறுகாய் வாங்குவது, தாராபுரத்தில் தவறாமல் ரவா தோசை சாப்பிடுவது
ஆகியவை.
எட்டு ஆண்டுகள் தொடர்ந்து மலைக்கு அதே
திருப்பூர் நண்பர் குழுவுடன் சென்றேன்.
நினைத்துப்பார்க்கும்போதே இனிக்கிறதே!
எதிர்பாராமல் கவிழ்த்துவிடுவது கணினி
பதிலளிநீக்குஉங்கள் நினைவுகளைப் பகிர்ந்ததில் மகிழ்ச்சி
பழைய நிகழ்வுகளை நினைத்தாலே இனிக்கும். இதுபோன்று தங்களின் நினைவுகளை அசைபோடலாமே!
பதிலளிநீக்குரசனையான பயணத்தை ரசித்தேன்...
பதிலளிநீக்குtm2
வணக்கம் ஐயா..எப்படி இருக்கீங்க.மீண்டும் பதிவுலகிற்கு அன்போடு வரவேற்கிறேன்.. பயணத்தில் தீனி ஜாலிதான்..எனக்கெல்லாம் பயம்.. பின்விளைவுகள் ஏதும் ஏற்பட்டுவிடுமோவென்று..
பதிலளிநீக்குமலரும் நினைவுகள்..
பதிலளிநீக்குஅசைபோட இனிமையானவை...
நல்ல அனுபவ பயண பகிர்வு... அதுவும் நண்பர்களுடன் என்றால் சொல்லவே வேண்டாம் தனி குஷி தான்...
பதிலளிநீக்குதாய்ப்பலகை சரி, அப்ப தேனீர் சட்டையாக வேண்டாமோ?
பதிலளிநீக்குதீபாவளி வாழ்த்துக்கள்.
சபரிமலைப் பயணம்
பதிலளிநீக்குமிகவும் அழகான ஒன்று...
பயண அனுபவம் நன்று ஐயா ..
// நினைத்துப்பார்க்கும்போதே இனிக்கிறதே! //
பதிலளிநீக்குஉங்கள் மனக் குளத்தில் நல்ல நினைவலைகள். அலைகள் ஓய்வதில்லை. தொடரட்டும்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமலரும் இனிய பயண நினைவுகள்...
நன்றி முரளி
பதிலளிநீக்கு@வே.நடனசபாபதி
பதிலளிநீக்குபோட்டாப்போச்சு! நன்றி சார்
நன்றி தனபாலன்
பதிலளிநீக்கு@மதுமதி
பதிலளிநீக்குநலமே மது.அந்தக்காலத்தில் நான் பின் விளைவுகளுக்கு பயப்பட்டது கிடையாது;இப்போது முடியுமா?!
நன்றி
நன்றி முனைவர் அவர்களே
பதிலளிநீக்குநன்றி ஆயிஷா ஃபரூக்
பதிலளிநீக்கு@அப்பாதுரை
பதிலளிநீக்குநான் திருத்தப்பட்டு நிற்கிறேன்!(இது எப்படியிருக்கு ஃபாதர்?!)
நன்றி
நன்றி மகேந்திரன்
பதிலளிநீக்குநன்றி தமிழ் இளங்கோ
பதிலளிநீக்குநன்றி இராஜராஜேஸ்வரி
பதிலளிநீக்குஇனிய பயண நினைவுகள்.
பதிலளிநீக்குநன்றி மாதேவி
நீக்குஇனிப்பு எனக்கு ஆகாது என்றாலும் நான் உண்டேன்! அதுதான் உங்கள் பதிவைப் படித்தேனே! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதீபாவளியில் ஆரம்பித்து சபரிமலைவரை தோய்வின்றி அழைத்துச் சென்ற உங்கள் நடை மிகவும் அருமை. இந்த ஆண்டும் மலையேறுவீர்களா ஐயா?
பதிலளிநீக்கு