தொடரும் தோழர்கள்

புதன், நவம்பர் 21, 2012

ஒரு இலங்கைத் தமிழ்க் குடும்பத்தின் கதை!

நான் நித்யா.

வயது 31,இன்று நான் உங்களுடன் பேசுவதே ஒரு அதிசயம்தான்.

மேலும் பல அதிசயங்கள் !

ஆனால்  ஆறு ஆண்டுகளுக்கு முந்திய அந்த இருண்ட நாளின் வடு என்னை விட்டு நீங்குமா?

ஆண்டு 2006.

இலங்கை,தலைமன்னாரில் எங்கள் வீடு.என் மூத்த மகள் லாவணி பள்ளி சென்று விட்டாள். என் கணவரும் வீட்டில் இல்லை

அந்த நேரத்தில் ஒரு கும்பல் வந்து என்னையும் என் மகள் தாரணி( வயது 3) மகன் மதுரன்(1) மூவரையும் கடத்திச் சென்றது. கண்களைக்கட்டி எங்களை அழைத்துச் (இழுத்து?) சென்றனர். சென்ற இடம் வன்னியில் ஒரு ராணுவ முகாம்.அங்கிருந்த பலரில் என் கணவரை அடையாளம் காட்டச் சொன்னார் கள்.  ஆனால் என் கணவர் அங்கில்லை.என்னை ஒரு இருட்ட றையில் தள்ளி மூன்றாண்டுகள் சித்திரவதை செய்தனர். என் கைகளைப்பாருங்கள்,சுட்ட அடையாளங்கள்.அவர்கள் எனக்குத்தந்த பரிசு.(உடைந்து கதறுகிறார்).

ஒரு நண்பர் சிறிது பணம் கொடுத்தார்;என் நகைகளையும் பணத்தையும் கொடுத்து 2010 இல் விடுதலையானேன்.கடவுச்சீட்டு கிடைக்க ஓராண்டு காலம் பிடித்தது.சென்ற ஆண்டு சென்னை வந்து சேர்ந்தோம்.ஒவ்வொரு முகாமாகச் சென்று என் கணவரும் மூத்தமகளும் இருக்கிறார்களா என்று தேடினேன்.கிடைக்கவில்லை.நான் நம்பினேன், அவர்கள் நிச்சயம் உயிருடன் இருக்கி றார்கள்  என்று.இறுதியில் மண்டபம் முகாமில் ஒருவர் செஞ்சிலுவைச் சங்கத்தை அணுகச் சொன்னார்.சென்னையைச் சேர்ந்த செஞ்சிலுவை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி,உலகளவில் தேட வைத்து ஜூலை 2011 இல் என் கணவர் சதாசிவமும் மகளும்  ஹாலண்டில் இருப்பதைத் தெரிந்து கொண்டார்.அதுவரை என் கணவர் கிடைக்கவில்லையென்றால் குழந்தை களை  யாரிடமாவது கொடுத்து விட்டு உயிரை விட எண்ணியிருந்தேன்.

என் மகளுடன் தொலைபேசியில் பேசினேன்.இருவருக்கும் பேச்சே வரவில்லை. பின் மாலையில் கணினியில் என் கணவரைப் பார்த்ததும் என் கண்களையே நம்ப முடியவில்லை.இது ஒரு அதிசயம்தான்;சில நல்லவர்களால்  நடந்த அதிசயம்.நுழைவனுமதியும்,இந்திய அரசின் வெளிச்செல்ல அனுமதியும் கிடைத்து விட்டன.

செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் சேர்ந்து ரூ.86000 சேர்த்து விமானச் சீட்டு வாங்கிக் கொடுத்து விட்டனர்.

இதோ,நாளை புறப்படுகிறேன்,ஹாலண்டுக்கு, சிதைந்து போன வாழ்வின் சோக நினைவுகளைப் பின் தள்ளி விட்டு.இதோ என் கையில் மகளுக்கு ஒரு  ஆடை.அவருக்கு ஒரு டீ சர்ட்டும்.எனக்கு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி”

----இன்றைய பத்திரிகைச் செய்தியை அந்தப் பெண் சொல்வது போல் சொல்லியிருக்கிறேன். 

ஆனால் கணவர் சதாசிவத்தின் துன்பம் சொல்லப் படாமல்.செய்தி நிறைவ டையாது.மனைவியும் குழந்தைகளும் கடத்தப்பட்ட செய்தி அறிந்து பள்ளி சென்று மகளை அழைத்துக்கொண்டார்.மனைவியும் குழந்தைகளும் இறந்தி ருக்கலாம் என்று எண்ணி இந்தியா வந்தார். அங்கிருந்து ஹாலண்டில் தஞ்சம் புகுந்தார்.செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் செய்தியறிந்து மாதாமாதம் 3000 ரூபாய் அனுப்பி வந்தார்.எப்படித் தெரியுமா?ஹாலந்து அரசு அவருக்கு அளித்த உணவுப் படியிலிருந்து ஒரு வேளை உண்ணாமல் பணத்தைச் சேமித்து!

இதைப் படித்ததும் நிச்சயமாக ஒரு துளி கண்ணீராவது சிந்துவீர்கள்.

இலங்கையில் துன்பப்பட்டு வாழ்விழந்த அனைத்துத் தமிழர்களுக்கும் அது உங்கள் அஞ்சலியாகட்டும்.

29 கருத்துகள்:

  1. படிக்கும்போதே! என்ன என்னவோ தோன்றியது, எப்படியோ இப்போதாவது ஒன்று செர்ந்துவிட்டார்களே! அதுவே மனதுக்கு ஆறுதலாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. படிக்கும் போது கண்ணீர் வந்து விட்டது.

    எங்களது அஞ்சலிகளும்....

    பதிலளிநீக்கு
  3. நித்யாவின் குடும்பம்போல் எத்தனையோ குடும்பங்கள் இன்னும் தவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இந்திய அரசு இப்போதாவது தலையிட்டு ஆவன செய்யும் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  4. என்ன சொல்வதென்றே தெரியவில்லை :(

    பதிலளிநீக்கு
  5. நெஞ்சை உருக்கும் உண்மைச் சம்பவம்! இனியாவது அவர்கள வாழட்டும்!

    பதிலளிநீக்கு
  6. //இதைப் படித்ததும் நிச்சயமாக ஒரு துளி கண்ணீராவது சிந்துவீர்கள்.//

    நிச்சயமாக!.

    ஐயா வே.நடனசபாபதி அவர்களின் கருத்தாகிய

    //நித்யாவின் குடும்பம்போல் எத்தனையோ குடும்பங்கள் இன்னும் தவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இந்திய அரசு இப்போதாவது தலையிட்டு ஆவன செய்யும் என நம்புவோம்.// நிச்சயமாக வழி மொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. என் அஞ்சலிகளும்...

    பதிலளிநீக்கு
  8. வே.நடனசபாபதி21 நவம்பர், 2012 8:56 pm

    நித்யாவின் குடும்பம்போல் எத்தனையோ குடும்பங்கள் இன்னும் தவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இந்திய அரசு இப்போதாவது தலையிட்டு ஆவன செய்யும் என நம்புவோம்.

    இந்தியா ஒரு மண்னாங்கட்டியும் செய்யாது

    அட பாவமே இன்னுமா இந்த தமிழினம் இந்தியாவை நம்புகிறது.

    பதிலளிநீக்கு
  9. சோகங்கள் ஆயிரம் ஆயிரம் சுமந்த வண்ணம் உலகில் போர்ச்சூழல்களால் அவதிப்படும் எண்ணற்ற மக்கள். நம் தமிழ் சோதரங்களுக்கு நாம் தமிழர்களாக என்னத்தை செய்துக் கிழித்துவிட்டோம்... !

    பதிலளிநீக்கு
  10. உலகமெங்கும் சோகங்கள், துயரங்கள், கண்ணீர் கடல்கள்..என்ன சொல்வது.
    போர், மதம், வெறி என்ற வார்த்தைகளை உறுதிப்படுத்துவதற்காக இத்தனை ரத்தங்களா ?
    இந்த ஒரு குடும்பத்தின் துன்பம், பல ஆயிர மக்களின் கண்ணீரை காட்சிப்படுத்துகிறது சார். அவர்கள் இனி மேலாவது பல சிறப்புகள் பெற்று வாழட்டும்.இந்த பதிவு ஏதோ செய்கிறது.மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  11. உலகமெங்கும் சோகங்கள், துயரங்கள், கண்ணீர் கடல்கள்..என்ன சொல்வது.
    போர், மதம், வெறி என்ற வார்த்தைகளை உறுதிப்படுத்துவதற்காக இத்தனை ரத்தங்களா ?
    இந்த ஒரு குடும்பத்தின் துன்பம், பல ஆயிர மக்களின் கண்ணீரை காட்சிப்படுத்துகிறது சார்..அவர்கள் இனி மேலாவது பல சிறப்புகள் பெற்று வாழட்டும்.இந்த பதிவு ஏதோ செய்கிறது.மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  12. இப்படி எத்தனையோ கதைகள் எங்கள் மண்ணின்

    பதிலளிநீக்கு
  13. போர் என்பது நமக்கு செய்தி. ஆனால் அவர்களுக்கு வாழ்க்கையை கலைத்துப் போடும் கொடூரம்.

    பதிலளிநீக்கு
  14. இது போரின் தாக்கம் அல்லது விளைவு. நிச்சயம் கல்லும் கசிந்துருகும் இவர்களின் நிலை கண்டு. யோசிக்கவே பயமாக உள்ளது...
    மனைவி இறந்துவிட்டதாக எண்ணி கணவனின் வாழ்க்கை...
    கணவனும் மகளும் இருக்கிறார்களா என்று தெரியாமல் பெண்ணின் நிலை...
    ஓ கடவுளே யாருக்கும் வரக்கூடாது இந்த நிலை!

    ஆனால் இந்த போரையே தங்கள் வளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொண்டு இன்றும் தலைவன் சாகவில்லை போர் முடியவில்லை என்று கூறிக்கொண்டு திரிகிறது ஒரு கூட்டம். இவர்களால் ஒரு போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு பிரயோஜனமும் ஏற்படாது.

    பதிலளிநீக்கு
  15. மனம் கனத்தது... இந்தக் கொடூரம் விரைவில் மாறட்டும்...

    பதிலளிநீக்கு
  16. மனம் மிகவும் சஞ்சலம் கொண்டது
    படிப்பவர்கள் அனைவரும் நிச்சயம்
    கண்ணீர் வடிக்காமல் இருக்கமுடியாது
    சொல்லிச் சென்றவிதம் தங்கள்
    பாண்டித்தியத்தை உணரச் செய்தது
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு