உலகம் சுற்றப் புறப்பட்ட இரு தேவதைகள்
ஓரிரவு ஒரு பணக்காரன் வீட்டில் தங்க எண்ணினர்.அந்த வீட்டில் இருந்தவர்கள் வேண்டா வெறுப்பாக தேவதைகள் ஓட்டை உடைசல் போட்டு வைத்திருந்த ஒரு
சிறு அறையில் தங்க இடம் தந்தனர்.கரடு முரடான தரையில் படுக்க வேண்டி இருந்தது.
படுக்குமுன் அந்த அறையின் சுவரில் ஒரு ஓட்டை இருந்ததை அவர்கள் கண்டனர்.பெரிய தேவதை
அந்த ஓட்டையை மூடிச் சரி செய்தது.சின்ன தேவதை ஏன் அப்படிச் செய்தாய் எனக் கேட்டது.பெரிய
தேவதை எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எனக் கூறியது.
மறுநாள் இரவு தேவதைகள் ஒரு ஏழை விவசாயியின்
வீட்டில் தங்கினர். விவசாயியும் அவர் மனைவியும் இருந்த கொஞ்சம் உணவைப் பகிர்ந்து கொண்டனர்.தங்கள்
படுக்கையை தேவதைகளுக்குக் கொடுத்தனர்.
மறுநாள் காலை விவசாயியும் அவன் மனைவியும்
அழுது கொண்டி ருந்தனர்.ஏன் எனத் தேவதைகள் கேட்க அவர்களின் ஒரே வாழ்வாதாரமான பசு இறந்து
விட்டது எனக் கூறினர்.
குட்டிதேவதை கோபமாகக் கேட்டது”பணக்காரனிடம்
நிறைய செல்வம் இருக்கிறது .ஆனல் கருமியாக இருக்கிறான்;அவனுக்கு உதவி செய்தாய்; ஆனால்
இவன் மிக நல்லவன்.பாவம் இவனிடம் இருந்த ஒரே
சொத்து அவனது பசு.அதை இறக்க எப்படி அனுமதித்தாய்?”
பெரிய தேவதை சொன்னது”எது நடந்ததோ அது
நன்றாகவே நடந்தது.
”பணக்காரன் வீட்டில் ஓட்டைக்குள் பெரிய
புதையல் இருந்தது.அது அவன் கண்ணில் படாமல் நான் மறைத்து விட்டேன்.நேற்று இரவு எமன்
விவசாயியின் மனைவியைக் கொண்டு போக வந்தான்.நான் பதிலாக பசுவைக் கொண்டு செல்ல ஏற்பாடு
செய்து விட்டேன்”
வாழ்க்கையில் இப்படித்தான்;நாம் எதிர்பார்த்தபடி
நிகழ்வுகள் நிகழாதபோது, நாம் நம்பிக்கையுடன் எண்ண வேண்டும் இவ்வாறு நடந்தது நம் நன்மைக்கே
என.
எண்ணிப்பாருங்கள்:
இன்றிரவு உறக்கம் வராதபோது.வானமே கூரையாக
வாழும் மனிதனை எண்ணிப் பாருங்கள்.
மகிழ்வுந்தில் செல்லும்போது நெரிசலில்
சிக்கிக்கொண்டால் பொறுமை இழக்காமல், பேருந்தில்
செல்லக் கூட வசதியில்லாத பலரை எண்ணிப் பாருங்கள்.
பணியிடத்தில் ஏதேனும் பிரச்சினை என்றால்,வேலையின்றித்
தவிக்கும் இளைஞர்களை எண்ணிப் பாருங்கள்.
அன்புக்குரியவர்களுடன் உறவில் விரிசல்
என்றால்,அன்பு செலுத்த ஆளில்லாத அபாக்கியவான்களை எண்ணிப்பாருங்கள்.
வார இறுதி மகிழ்ச்சியாகக்கழியவில்லையே
என வருந்தும்போது,வாரத்தில் ஏழுநாட்களும்,ஒருநாளில் 12 மணிநேரம் சொற்ப ஊதியத்தில் உழைத்துக்
குடும்பத்தைக் காப்பாற்றும் நபரை எண்ணிப்பாருங்கள்.
காதோரம் நரைத்த முடி கவலைப் படுத்தும்போது,முடியில்லாமல்
போன புற்று நோய்க்காரரை எண்ணிப் பாருங்கள் .
மற்றவர்களின் வெறுப்பால்,அறியாமையால்,சிறுமதியால்,பயத்தால்
நீங்கள் பாதிக்கப்படும்போது,எண்ணிப்பாருங்கள்,நிகழ்வு இன்னும் மோசமாக்கூட இருக்கலாம்;அவர்கள்
இடத்தில் நீங்களாக!
(மின்னஞ்சல் செய்தியின் தமிழாக்கம்)
(மின்னஞ்சல் செய்தியின் தமிழாக்கம்)
கதை நன்று..தொடர்ந்து வந்த அறிவுரைகள் அருமை..
பதிலளிநீக்குநன்றி மது
நீக்குஇங்க நான் கருத்துரைப்பதும் நல்லதும்தானே ஐயா?!
பதிலளிநீக்குநிச்சயமாக
நீக்குநன்றி ராஜி
நல்ல சிந்தனை.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குநல்ல தத்துவ கருத்துக்கள்.
பதிலளிநீக்குமனத்தை தேற்றவும் உகந்தது.
நன்றி மாதேவி
நீக்குநடப்பது எல்லாம் நம்மளாலே...
பதிலளிநீக்குநன்றி ஐயா...
tm6
நன்றி தனபாலன்
நீக்குஉண்மைதான் இப்படி எல்லோரும் எல்லோரும் இருந்துவிட்டால் நாட்டில் போட்டி, பொறாமை, சண்டை வராது.
பதிலளிநீக்குதம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென் றகமகிழ்க - தம்மினும்
கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்
எற்றே யிவர்க்குநா மென்று
- நீதி நெறி விளக்கம் 14 (குமரகுருபரர்)
அருமையான மேற்கோள்;
நீக்குநன்றி தமிழ் இளங்கோ அவர்களே
எல்லாம் நன்மைக்கே என்பதை சொன்ன கதை அருமை
பதிலளிநீக்குநன்றி முரளி
நீக்குநல்லபத்திவு!!!
பதிலளிநீக்குதிரு தி. தமிழ் இளங்கோ அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன். பதிவுக்கு நன்றி!
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஅருமையான கதை
பதிலளிநீக்குஅழகாகச் சொன்னீர்கள்..
நன்று.
நன்றி குணசீலன்
நீக்குNalla padhivu. Narukkendru ullaththai thaiththa sindhanaik kadhai. Pls visit my site.
பதிலளிநீக்குhttp://newsigaram.blogspot.com/2012/11/muga-nool-muththukkal-paththu-02-46-15.html
நன்றி பாரதி.அவசியம் படிக்கிறேன்
நீக்குநமக்கும் கீழே உள்ளவர் கோடி
பதிலளிநீக்குநினைத்துப் பார்த்து நிம்மதிநாடு
என்று கவியரசர் சொன்னதுதான்
நினைவுக்கு வருகிறது ஐயா ...
நன்றி மகேந்திரன்
நீக்குஅருமை..அருமை..கதையோடு நீங்கள் சொன்ன பல அறிவுரைகள் அருமை..தொடருங்கள்.நன்றி.
பதிலளிநீக்குhttp://kumaran-filmthoughts.blogspot.com/2012/11/1.html
நன்றி குமரன்
நீக்கு
பதிலளிநீக்கு..இருப்பதை நினைத்து சந்தோசப்படுவதைவிட இல்லாததை நினைத்து கவலைப்படுவது எவ்வளவு முட்டாள்தனமானது என அருமையாக கூறி உள்ளீர்கள் ...நன்றி அய்யா....
நன்ரி ஹாஜா
நீக்குகதையும் கருத்தும் அருமை! பித்தரே அருமை!
பதிலளிநீக்குநன்றி புலவர் ஐயா
நீக்குவிரும்பியது நடந்தால் சந்தோஷப்படு!
பதிலளிநீக்குவிரும்பியது நடக்காவிட்டால் அதிகமாக சந்தோஷப்படு...
ஏனெனில் நடந்தது உன் விருப்பப்படி அல்ல கடவுளின் விருப்பப்படி!!
அருமையாகச் சொன்னீர்கள் அஜீஸ்
பதிலளிநீக்குநன்றி
oru kariyam nadakkamal ponal adhu veru oru nalladarkku ena ninaippavan nan.adai ungal kadai ninaivuritthiyadu.
பதிலளிநீக்குநன்றி ரங்கநாதன் கேசவன்
நீக்குஒருவர் நம்மிடத்தில் கடனுக்கு பணம் கேட்கிறார்..பாக்கெட்டில் இருந்து பணம் எடுத்து தருவதற்கு முன் அவரின் பின்னால் ஒரு பாம்பு அவரை தாக்குவதற்காக வருவது தெரிகிறது ..அது நமக்குதான் தெரியும் ...அவருக்கு தெரிய வாய்ப்பு இல்லை... முதலில் நாம் பணத்தை கொடுக்க பார்ப்போமா ??? அவரை காப்பாற்ற பார்ப்போமா..??? அவரை காப்பாற்றும் நோக்கில் நாம் அவரை பிடித்து தள்ளி விடுவோம்... ஆனால் நாம் பணம் கொடுக்காமல் துரத்திவிட்டதாக அல்லவா மனிதர்களில் பெரும்பாலானோர் நினைக்கின்றனர்..!!!
பதிலளிநீக்குநல்லதொரு கருத்துள்ள பதிவு ....!!!
நன்றி !!!
அருமையாகச் சொன்னீர்கள் மீரான்.
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி