தொடரும் தோழர்கள்

செவ்வாய், நவம்பர் 20, 2012

கற்பனைப் பாம்புகளும் கடிக்குமோ?!



ஒரு மனிதன் மூடியிலும்,ஓரங்களிலும் துளையிடப்பட்ட ஒரு பெட்டியைத் தன் கையில் வைத்துக் கொண்டு தெருவில் மெதுவாக நடந்து கொண்டிருந்தான். 

பார்த்தால் ஏதோ உயிருள்ள விலங்கைப் பெட்டியில் வைத்து எடுத்துச் செல்வது போல் தோன்றியது.

எதிரில் வந்த ஒருவர் அவனைப் பார்த்து ”பெட்டியில் என்ன கொண்டு போகிறாய்?”  எனக் கேட்டார்.”

அவன் சொன்னான்”கீரிப்பிள்ளை!”

அவர் கேட்டார் “எதற்கு?”

அவன் சொன்னான்”நான் இப்போது கள்ளுக்கடைக்குச் சென்று குடிக்கப் போகிறேன்.நன்கு குடித்த பின் என்னைச் சுற்றிப் பாம்புகளைப் பார்ப்பேன்! எனக்குப்பயமாக இருக்கும்.அதனால் இந்தக் கீரிப்பிள்ளை என்னுடன் இருந்தால் எனக்குப் பயம் ஏற்படாது!”

அவர் சிரித்தார்”என்ன பைத்தியக்காரத்தனம்!அவையெல்லாம் கற்பனைப் பாம்புகள்தாமே!”

அவன் பெட்டியைக்காட்டிச் சொன்னான் “இதுவும் கற்பனைக் கீரிப்பிள்ளை தானே!”

ஒரு கற்பனையைச் சரி செய்ய மற்றொரு கற்பனை.

நம்மில் பலர் இது போல் தேவையற்ற கற்பனைகளை வளர்த்துக் கொண்டி ருக்கிறோம்

சில கற்பனைகளில் மகிழ்ச்சியடைகிறோம்.

சில கற்பனைகளால் கவலைப்படுகிறோம்.

பிரியமானவர்கள் வீடு திரும்ப நேரமானால் ஏதாவது நடந்திருக்குமோ என்ற கவலை.

முக்கியமான நிகழ்வு ஏதாவது நடக்குமுன்,ஏதாவது தவறாக நடந்து விடுமோ என்ற  கவலை

பழைய திரைப்படம் ஒன்றில் –சின்னஞ்சிறு உலகம் என எண்ணுகிறேன் – நாகேஷ் ஏற்ற பாத்திரம் எல்லாவற்றையும் கற்பனை செய்து வருத்தப்படுவார்.
திருமண வீட்டில் விளக்கையும் மணப்பெண்ணின் சேலைத் தலைப்பையும் பார்த்து தீப்பிடிப்பதாகக் கற்பனை செய்து அழ ஆரம்பித்து விடுவார்!

இது   போன்ற கற்பனைகளால் என்ன பயன்,வேண்டாத மனக்குழப்பத்தைத் தவிர?

இதைத்தவிர்த்து மனத்தைக் கட்டுப்படுத்த வழி என்ன?

ஒரே வழிதான்!

இறைவனைப் பற்றிய சிந்தனைதான்.

எவ்வளவுக்கெவ்வளவு கடவுளைப் பற்றிய எண்ணத்தில் ஒன்றிப் போகி றோமோ  அவ்வளவுக்கவ்வளவு வேண்டாத எண்ணங்கள்,கற்பனைகள் அகலும்.

மனம் நமக்கு வசப்படும்!

24 கருத்துகள்:

  1. கற்பனைகள் என்றும்
    கடிவாளமற்ற குதிரைகள் தான்...
    செல்லும் திசை அறியோம்....

    அருமையான கதை ஐயா ..

    பதிலளிநீக்கு
  2. மனதை கட்டுப்படுத்த, இறைவனைப் பற்றிய சிந்தனைதான் ஒரே வழி என்ற நல்ல கருத்தை, வெளியிட்டமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. கற்பனை என்று எழுதியுள்ளீர்கள் என் உறவினர் ஒருவருக்கு இது போலவே இரவில் அறை முழுவதும் அவர் மேலும் பாம்புகள் ஊறுவதுபோல தோன்றுமாம் எங்கேயும் சென்றாலும் வந்தாலும் அக்கம்பக்கதில் செல்வதுபோலவே இருக்குமாம். இந்துவான அவர் நாகூர் தர்காவிற்கு சென்று வந்ததிலிருந்து இவை தென்படுவதில்லை என தெரிவிக்கிறார். இதற்காகவே அவர் அங்கு அடிக்கடி சென்று வருவதாகவும் சொன்னார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க்கையில் நம்பிக்கைகள் தேவையே!அதற்கும் அளவு உண்டல்லவா?
      நன்றி கலாகுமரன்

      நீக்கு
  4. கற்பனைகளும் கனவுகளுமே நம்மை முன்னேற்றும்.
    ஆனாலும் பல சமயங்களில் அவைகளே நம்மை முடக்கியும் விடுகின்றன.
    எனவே கற்பனைகளும் கனவுகளும் தவறல்ல... அவற்றால் நாம் முன்னேறுகிறோமா அல்லது முடங்கிவிடுகின்றோமா என்பதுதான் முக்கியம்.
    அருமையான பதிவு ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான கருத்தைச் சொன்னீர்கள் அஜீஸ்.கனவு மெய்ப்பட வேண்டும்!
      நன்றி

      நீக்கு
  5. //எவ்வளவுக்கெவ்வளவு கடவுளைப் பற்றிய எண்ணத்தில் ஒன்றிப் போகி றோமோ அவ்வளவுக்கவ்வளவு வேண்டாத எண்ணங்கள்,கற்பனைகள் அகலும்.//

    ஒழுக்கமும் கூட மிக அதிகரிக்கும் உண்மையான இறை நம்பிக்கையால்.

    நல்ல கதை + கருத்துக்கள்!.

    பதிலளிநீக்கு
  6. அருமையாக மன அமைதிக்கான வழியை சொல்லி இருக்குறீர்கள்

    பதிலளிநீக்கு
  7. அருமையான கருத்து. மிகவும் அரிதானதும் கூட. நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  8. ஒரு கற்பனையிலிருந்து மனதைக் கட்ட இன்னொரு கற்பனை தேவைங்கறீங்க.. கீரிப்பிள்ளை போல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெத்தியடி!இப்படி அருமையாகச் சொல்ல அப்பாதுரையால் மட்டுமே முடியும்.
      நன்றி

      நீக்கு
  9. தேவையில்லாத சிந்தனைகளை அகற்றுதல்வேண்டும். நல்ல சிந்தனை.

    பதிலளிநீக்கு
  10. எவ்வளவுக்கெவ்வளவு கடவுளைப் பற்றிய எண்ணத்தில் ஒன்றிப் போகி றோமோ அவ்வளவுக்கவ்வளவு வேண்டாத எண்ணங்கள்,கற்பனைகள் அகலும்.

    மனம் நமக்கு வசப்படும்!

    சிறப்பாக விளக்கிய விதம் அருமை ஐயா தங்கள் நலம் அறிய ஆவல் . அம்மாவும் நலமா ?

    பதிலளிநீக்கு
  11. அழகாகச் சொன்னீர்கள் ஐயா..
    மனதை ஒருநிலைப்படுத்த இதுவும் ஒருவழியென்பதை நன்கு சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு