தொடரும் தோழர்கள்

வெள்ளி, நவம்பர் 14, 2014

ஓடிப்போனவன்!கை பேசி அழைத்தது.

ரவி எடுத்தான்.

”ரவி!போலீஸ் உன்னை நெருங்கிட்டாங்க!நீ இருக்கும் இடத்தை குறி வெச்சிக்கிட்டே இருக்காங்க.அவங்க கிட்ட மாட்டினேன்னா என்கவுண்டர்தான்;கைது எல்லாம் கிடையாது.தப்பிக்க முயற்சி செய்.” அவனது வக்கீல் தந்த தகவல்.

அவனுக்குத் தெரியும்.மதுரைக் காவல் துறை அவனைத் தேடி வருவார்கள் என்பது. அவர்களிடம் மாட்டினால்,சுட்டுத்தள்ளி விடுவார்கள்.என்ன செய்யலாம்.?
யோசித்தான்.

எப்படியாவது அவர்களிடம் மாட்டாமல் மதுரை சென்று அங்கு நீதி மன்றத்தில் சரணடைந்து விடுவதுதான் சரி.

ஆனால் தனது கைபேசியை வைத்து, தான் இருக்கும் இடத்தை அவர்கள் அறிந்து பின் தொடர்கிறார்கள் எனபதை அவன் நிச்சயமாக உணர்ந்தான்.அவ்வாறன்றி அவன் இருக்கும் இடம் அறிய வேறு வழியில்லை.

யோசித்தான்.

ஒரு முடிவுக்கு வந்தான்.

வண்டியை ஒரு கடையருகில் நிறுத்தி இறங்கினான்.

கடைக்குச் சென்று “அவசரமாக ஒரு ஃபோன் பண்ணனும்”.

போனை எடுத்தான்.

டயல் செய்தான்.

“மாணிக்கம்.நான் சொல்வதைக் கவனி.அது போல் உடனே செய்”

விலகினான்.

 சிறிது நேரத்துக்குப் பின்அவன் வண்டி மதுரை நோக்கிப் புறப்பட்டது
.....................
அந்தப் போலீஸ் வேன் காத்திருந்தது.

உள்ளே இருந்த போலீஸார்,அந்தக் கைபேசியின் இருப்பைக் கொண்டு அதைத் துரத்தியவாறு இருந்தனர் .

“சார்!இப்ப வடபழனியில இருக்கான்.”
சரி தொடர்ந்து கொண்டிருங்கள்.சரியான இடமும் நேரமும் வரும்போது போட்டுத் தள்ளி விடலாம்”
காலை முதல் இருட்டும் வரை.தொடர்ந்தவாறு காத்திருந்தனர்.

நேரமும் இடமும் சரியாக அமைந்தபின் அந்த வண்டியைச் சூழ்ந்தனர்.

வண்டியில் அந்தக் கைபேசியுடன் இருந்தவன் .....ரவி இல்லை!
அவனை ஒர் அறை விட்டனர்.


”யாருடா நீ”

”சார் என் பேர் மாணிக்கம்”

கோட்டை விட்டு விட்டோம் என்பது புரிந்தது.
...................
...............மாலை 4 மணி அளவில் ரவி மதுரை நீதி மன்றத்தில் சரணடைந்தான்.
...................
என்ன நடந்தது?

கடையில்ருந்து போன் செய்த ரவி மாணிக்கத்திடம்”மாணிக்கம்.நீ விஜயா மால் வாசலில் நில்லு.நான் அங்கு வந்து உன்னைச் சந்திக்கிறேன்” என்று சொன்னான்.

அவனைச் சந்தித்த போது அவனிடம் தன் கை பேசியைக் கொடுத்து சென்னையின் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று கைபேசியில் பேசி விட்டு அதை அணைத்து வைக்கும் படிக் கூறினான். 

அதன் படி அவன் செய்ய,போலிஸ்,மாம்பலம்,மைலாப்பூர்,அடையார் பெசண்ட் நகர் என அலைந்து ஏமாந்தது!

இது கதையல்ல ;நிஜம்!

 இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த செய்தியின் அடிப்படையில் எழுதப்பட்ட்து!


8 கருத்துகள்:

 1. கதையல்ல நிஜம்!

  எப்படியெல்லாம் யோசிக்கறாய்ங்க! :)

  பதிலளிநீக்கு
 2. இதிலிருந்து தெரிந்துக் கொள்வது என்னவென்றால்....

  நம் ஊர் போலிசை ஈஸியாக ஏமாற்றி விடலாம்..... என்பதே.

  இது கதையல்ல நிஜம்...... உண்மைதாங்க பித்தன் ஐயா... இப்படியெல்லாம் நிஜத்தில் தான் நடக்கிறது.

  த.ம. 2

  பதிலளிநீக்கு
 3. என்னது நிஜமா...? இதுவும் நடக்கும், எதுவும் நடக்கும்...!

  பதிலளிநீக்கு

 4. வரிச்சியூரார்(!) காவல் துறைக்கே ‘தண்ணீர்’ காட்டிய செய்தியை வழக்கம்போல் அழகாக கதை போல் சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. அம்மாடி.....அவன் ரவுடி இல்ல சார்.... சரியான கேடி..

  பதிலளிநீக்கு
 6. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 7. ஏமாற்றுபவர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள்

  பதிலளிநீக்கு