தொடரும் தோழர்கள்

திங்கள், மே 22, 2017

பார்த்து வாங்க வேண்டாமா?!

 சென்ற இடுகையை, “பார்த்து வாங்க வேண்டாமா?!” என்ற கேள்வியுடன் முடித்திருந்தேன்.

தனது பின்னூட்டத்தில் திரு பகவான் ஜி அவர்கள் “பார்த்து வாங்க வேண்டாமா” இதுதான் அடுத்த பதிவின் தலைப்பா எனக் கேட்டிருந்தார்.

கிடைத்தது தலைப்பு!

அதற்குத்தக எழுத வேண்டும்;அவ்வளவே.

இதோ பதிவு!

பகவான் ஜி கடையிலிருந்து வீட்டுக்கு வருகிறார்.

மனைவி கேட்கிறார்”என்ன காய் வாங்கி வந்தீங்க?”

”வெண்டைக்காய் ” பதில்.

பையிலிருப்பதைக்கீழே கொட்டி சோதித்துப் பார்க்கிறார் மனைவி.

“அய்யோ!எல்லாமே முத்தல்.பார்த்து வாங்க வேண்டாமா?

(அப்பா!தொடக்கத்திலேயே தலைப்பு வந்தாச்சு!)

இது ஒரு சிறு உதாரணம்.

எந்தப் பொருளுமே வாங்கும்போது கவனித்து வாங்க வேண்டும்.

அதன் குற்றம்,குறைகளைக் கவனிக்க வேண்டும்.

சட்டம் சொல்கிறது  caveat emptor"

அதாவது ”let the buyer beware”

வாங்குபவர் ஜாக்கிரதையாக இருக்கவும்!

ஒன்றை வாங்கும்போது அது எப்படி இருக்கிற.தோ அப்படியே வாங்குகிறோம்..”as is where is".

நாம அதை  ஏற்றுக்கொண்டு விட்டோம்.

பின்னர் வருந்தி என்ன பயன்.

வாங்கும்போதே.......பார்த்து வாங்க வேண்டாமா?

ஒரு பொருள் வாங்கும்போது விலை  அதிகமாக இருந்தாலும் உத்திரவாதம் இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

இல்லையேல்  மறுநாளே அது  வேலை செய்யவில்லை என்றாலும் ஒன்றும் செய்வதற்கில்லை.

இன்னொரு  காட்சி

ஒருவர் மடிக்கணினி வாங்கக் கடைக்குப் போகிறார்.

விலை குறைவாக எதிர்பார்க்கிறார்.

கடைக்காரர் கொஞ்சம் பயன்படுத்தப்பட்ட கணினி ஒன்று நல்ல நிலையில் இருக்கிறது,விலை மலிவு என்று சொல்லிக் கொடுக்கிறார்.

அவரும் மகிழ்ச்சியுடன் வாங்கிப் போகிறார்

ஓரிரு நாட்களில் போலிஸ் வருகிறது

அவர் வாங்கிய கணினி  திருடப் பட்டது என்று கூறி கணினியைக் கைப்பற்றுகிறது.

இவர் என்ன செய்ய முடியும்/

கடைக்காரரைக் கேட்கலாம்.

கொடுத்தால் வாங்கிக் கொள்ளலாம். வேறு எந்த உரிமையும் இவருக்கு இல்லை.

திருட்டுப் பொருளுக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது

அதன் உரிமை பறி கொடுத்தவருக்கு மட்டுமே

வாங்குபவர் ஜாக்கிரதை!

பார்த்து வாங்க வேண்டாமா?

இது போலவே  கிராஸிங் என்று காசோலையில் இரண்டு இனை கோடுகள் போடுவார்கள்

அதில் ஒரு வகை not negotiable crossing.

அத்தகைய காசோலை திருடப்பட்டதாக இருந்தால்,அதை நம்பிக்கையுடன் வாங்கியிருந்தாலும் அதற்கான உரிமை அதைத் திருடியவரிடமிருந்து பெற்றுக் கொண்டவருக்கு இல்லாமல் போகிறது.

இதைப் பற்றி சொல்வார்கள்” இது ஒரு திருடப்பட்ட பேனா அல்லது கைக்கடிகாரம் போன்றது” என்று.

காசு கொடுத்துப் பொருள் வாங்கும்போது வாங்குபவர்  கவனமாக, சாக்கிரதையாக இருத்தல் அவசியம்

இல்லையெனில் பின்னர் கேள்வி எழும்...........

“பார்த்து வாங்க வேண்டாமா?!”

டிஸ்கி: வெண்டைக்காயை நுனியை ஒடித்துப் பார்த்து வாங்க வேண்டும்.....அதற்காகக் கடைக்காரர் நம்  விரலை ஒடிக்காமல் இருந்தால்!
30 கருத்துகள்:

 1. திரைப்படங்களில் தலைப்பை வைத்துவிட்டு பின்னர் அந்த தலைப்பு வருமாறு இரண்டு மூன்று இடங்களில் சொல்லி தலைப்பை நியாயப்படுத்துவார்கள்.அது போலல்லாமல் ஒரு பொருளை பார்த்து வாங்காவிட்டால் என்ன நடக்கும் என்பதை சொன்னதின் மூலம் பதிவிற்கு சரியான தலைப்பையே தந்திருக்கிறீர்கள்.வாழ்த்துகள்!அது சரி.தலைப்பைக் கொடுத்தவரை இப்படி வாரலாமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர் நகைச்சுவை மன்னன்.தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்
   நன்றி சபாபதி சார்

   நீக்கு
  2. எனக்கு ரொம்பவும் இளகிய மனசு'லேடீஸ் ஃபிங்கர்'முனையை ஒடித்துப் பார்க்கணும்னு எண்ணமே வராது ஜி :)

   நீக்கு
 2. எத்தனையோ காய்கறி இருக்க... வெண்டைக்காயை சொல்லி இருப்பதில் ஏதும் காரணம் உண்டா ஐயா ?

  பதிலளிநீக்கு
 3. போற போக்கைப் பார்த்தால், அடுத்த இடுகையின் தலைப்பு

  "நம் விரலை ஒடிக்காமல் இருந்தால்! "

  என்றிருக்காமல் இருந்தால் சரிதான். சரி.. ஒவ்வொரு காயையும் எப்படிப் பார்த்து வாங்குவது என்று எழுதுங்களேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓகோ1அது வேற இருக்கோ?!
   நன்றி நெல்லத் தமிழன்

   நீக்கு
  2. முருங்கைக்காயை முறுக்கிப் பார்த்து,
   சௌ சௌ வை நகத்தால் அழுத்திப் பார்த்து
   கத்திரிக்காயை அமுக்கிப் பார்த்து
   வாங்க வேண்டும்!

   நீக்கு
  3. அதுக்குதான் பொண்ணு பார்க்கும் போது ஆட சொல்லி பாட சொல்லி டீ காபி போட சொல்லி காலில் விழுந்து வணங்க சொல்லி பார்க்கிறார்களோ அது எல்லாம் இல்லாததால்தான் இப்போ பல பிரச்சனைகள் வருகிறதோ

   நீக்கு
  4. இங்கு வாங்குபவர் ஜாக்கிரதை இல்லை
   விற்பவர் ஜாக்கிரதை.ஏனெனில் மாப்பிள்ளை விற்கப் படுபவர்தானே!

   நீக்கு
  5. ஹஹஹஹஹ்....சரியாகச் சொன்னீர்கள் சார்!!!

   கீதா

   நீக்கு
  6. முருங்கைக்காயை முறுக்கிப் பார்த்து,
   சௌ சௌ வை நகத்தால் அழுத்திப் பார்த்து
   கத்திரிக்காயை அமுக்கிப் பார்த்து
   வாங்க வேண்டும்!// ஆமாம் அதே அதே. வெண்டைக்காய் கூட நுனி உடைக்காமல் கைக்குள் வைத்துப் பிடித்துப் பார்த்து வாங்கிடலாம் சார்...இல்லையா..கோஸை தூக்கிப் பார்த்து...காலிஃப்ளவர் அடர்த்தியாக மஞ்சள் பாவாமல் இருக்கிறதா என்று பார்த்து, வாழைத் தண்டைக் கிள்ளிப் பார்த்து....

   கீதா

   நீக்கு
 4. தாங்கள் எது சொன்னாலும் அது சுருக்கமாகவும், சுவையாகவும், ரஸிக்கும்படியாகவும் உள்ளது.

  ’பார்த்து வாங்க வேண்டாமா?’ என்பது போலவே, நானும் சிலரின் பதிவுகளை மட்டுமே போய் ’பார்த்துப் படிப்பது உண்டு’. அதில்
  உங்களுடையதும் ஒன்று. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

  பதிலளிநீக்கு
 5. ஆகா...! பின்னோட்டமே ஒரு பதிவாய்...! உங்களால் மட்டும் இவ்வாறு எழுத முடியும்... அருமை ஐயா...

  பதிலளிநீக்கு
 6. இப்படியா ஏமாறனுமா?! பார்த்து வாங்க வேண்டாமா?!

  பதிலளிநீக்கு
 7. கடைகாரர் ஒடிக்கிறாரோ இல்லையோ வீட்டம்மா ஒடிப்பார்களே ஐயா.. முதலில் வெண்டைக்காயை பிறகு விரலை..

  பதிலளிநீக்கு
 8. விற்பவன் எப்போதும் கெட்டிக்காரனாகத்தான்
  இருக்கிறான். வாங்குபவர்கள் எல்லோரும்தான்
  எமாறுபவர்களாய் இருக்கிறார்கள்
  இதில் போட்டி என்றால் நான் முதலிடம் பிடிப்பேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதற்காகத்தான் பார்த்து வாங்க வேண்டாமா
   நன்றி ரமணி

   நீக்கு
 9. சில சமயங்களில் நாம் செய்யும் செயல்களுக்கு எதிர்பாராமல் அட்வைஸ் கிடைக்கும். நமக்கு அட்வைஸ் செய்தவர் அவர் சொல்வதற்கு நேர்மாறாய் செய்பவராய் இருப்பார். எரிச்சல் வரும். இது என் உறவில் அடிக்கடி நிகழும் ஒரு அனுபவம். அப்போ நினைச்சுப்பேன். யாரிடம் அட்வைஸ் வாங்குவது என்று "பார்த்து வாங்கக் கூடாதா!"

  :))))

  பதிலளிநீக்கு
 10. பார்த்துத்தான் வாங்க வேண்டும்
  பலவற்றையும் யோசித்துத்தான் வாங்க வேண்டும்
  அருமை ஐயா

  பதிலளிநீக்கு
 11. பார்த்து வாங்க வேண்டாமா? இதில் இவ்வளவா?

  பதிலளிநீக்கு
 12. சார் உங்களுக்கு ஒவ்வொரு பின்னூட்டத்திலும் ஒரு தலைப்பு கிடைத்துவிடுகிறது அதனை நீங்கள் மிகத் திறமையாகக் கையாண்டு விடுகிறீர்கள்...சூப்பர் சார்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 13. சமீபத்தில் ஒரு கடையில் பொருள் வாங்கிவிட்டு 2000 ரூபாய்க்கு மீதியாக புது நோட்டுகள் வாங்கும் போது அதில் மூன்று 500 ரூபாய் தாளில் எழுதியிருந்தார்கள் சிறிய எழுத்துகளாக...அதைக் கவனிக்காமல் வீட்டிற்குக் கொண்டுவந்து விட்டேன். அடுத்து வீட்டிற்கு வந்ததும் தலைவரிடம் திட்டு வாங்கினேன். லூசே பார்த்து வாங்கத் தெரியாதா என்று. இரண்டு நோட்டுகளில் பேனாவினால் எழுதப்பட்டிருந்தது. ஒன்றில் பென்சில். பென்சிலால் எழுதப்பட்டதை அழிக்க முடிந்தது. மற்ற இரண்டையும் நான் உடனே எங்கள் வங்கியின் ஏடிஎம் டெப்பாசிட் மெஷினில் கொண்டு தள்ளிவிட்டேன். அது பாவம் அதற்குத் தெரியவா போகுது நோட்டில் எழுதப்பட்டிருக்குனு.

  ஹும் புது நோட்டில் எழுதக் கூடாது என்று சொல்லப்பட்டும் மக்கள் இப்படி எழுதியிருக்கிறார்கள். என்னத்த சொல்ல..

  கீதா

  பதிலளிநீக்கு