தொடரும் தோழர்கள்

சனி, மே 06, 2017

பாகுபலியும்,கபாலியும்!

சோற்றுக்குப் பஞ்சமில்லை,குரல் எழுப்பிக் கூப்பிடும் மனிதர்

கிடைப்பதைப் பகிர்ந்துண்ணும் வாழ்க்கை சுகமாக.

பார்த்தது ஒரு  நாள் அக்காகம்,ஆடும் மயிலொன்றை

வண்ணத் தோகை விரித்து ஆனந்தமாய் ஆடும் மயில்

ஆசை வந்தது காகத்துக்குத் தானும் ஆட வேண்டும் என  

                       
ஆனால் கருப்பு உடல்;தோகையும் இல்லை என்ன செய்ய?

ஆழ்ந்து யோசித்தது,உதயமானது உத்தியொன்று

மயிலின் உதிர்கின்ற இறகுகளைச் சேர்த்து

தன்னிறகில் சொருகித் தானும் ஆட எண்ணிற்று

தொடங்கியது முயற்சி,சேர்ந்தன இறகுகள்

மகிழ்ந்தது காக்கை.

இறகுகளைச் சொருகித் தானும் மயிலோடு ஆடி

 ஆனந்தம் கொண்டது

மயில் சிரித்தது,ஏன் இந்த வேண்டாத வேலை.

நீ நானாக முடியாது நானும் நீயாக முடியாது

உனக்கென்றும் சில திறமைகள் உண்டே

உணர் அதை;உவகை கொள்

நாம் நாமாக இருப்பதே  யாவர்க்கும் நல்லது!

தெளிந்தது காகம்,விரைந்தது உறவு நோக்கி.

மயில் சொன்ன பாடம் இதை மறக்கலாமோ மனிதர் நாம்?

(கருத்து படித்தது;எழுத்து எனது)

டிஸ்கி: தலைப்புக்கும் சொன்ன செய்திக்கும் என்ன சம்பந்தம்?
 யாரும் வேறு யாருமாக முடியாது என்பதுதானே செய்தி.
அவரவர் சிறப்பு அவரவர்க்கு!
தலைப்புக்காகக் கொஞ்சம் வாசகர்கள் வரமாட்டார்களா ?! 11 கருத்துகள்:

 1. தலைப்புத்தேர்வினில் தங்கள் டெக்னிக் அருமை .... மயில் காக்கையிடம் சொன்னது போலவே. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 2. நாம் நாமாக இருப்பதே யாவர்க்கும் நல்லது
  உண்மை ஐயா

  பதிலளிநீக்கு
 3. தலைப்பின் மர்மம் அறிந்தேன் ஐயா

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்
  ஐயா

  அருமையாக சொல்லியுள்ளீர்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 5. தலைப்பிலேயே அடங்கிவிட்டது. நன்றி.

  பதிலளிநீக்கு
 6. சுண்டி இழுக்க இப்படி ஒரு தலைப்பு! :)

  பதிலளிநீக்கு
 7. இந்த பதிவை படித்ததும் இந்தக் கதைக்கும் தலைப்புக்கும் உள்ள தொடர்பை முடிச்சுப்போட்டு பார்த்தேன். இதில் யார் காக்கை? யார் மயில்? எனத் தெரியவில்லை. இருப்பினும் இருவருமே தனித்திறமை வாய்ந்தவர்கள் தான் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் அவர்களை ஆட்டுவிப்பவர்கள் அந்த திறமையை வெளிக்கொணர உதவுகிறார்கள் என்பதை மறுக்க இயலாது.

  பதிலளிநீக்கு
 8. தலைப்பும் அருமை கருத்தும் அருமை! நாம் நாமாக இருப்பதுதான் சிறப்பு..

  பதிலளிநீக்கு
 9. இருந்தாலும் மயிலின் ஆட்டத்தைப் பார்த்துபார்த்து போரடித்து விட்டது,அதனால் காக்கையின் ஆட்டத்துக்கு கூட்டம் அதிகமாகி விட்டது :)

  பதிலளிநீக்கு
 10. This title show how dangerous you people are! here, who is the peacock and who is crow. I am sure the kapali is the peacock.

  பதிலளிநீக்கு