தொடரும் தோழர்கள்

ஞாயிறு, மே 07, 2017

ஹாலிடே,ஜாலிடே!

அவன் காலை கண் விழிக்கும்போதே இரவு நிகழ்வுக்காக வருந்தி,அதற்குக் காரணம் எதுவோ அதன் மீது எல்லையற்ற  கோபம் கொண்டான்.

அதை எடுத்தான்....ஒரு பெட்டி பியர் போத்தல்கள்.

ஒரு காலி சீசாவை எடுத்து,"உன்னால்தான் என் மனைவியுடன் சண்டை ஏற்பட்டது.ஒழிந்து போ" என்று உடைத்தான்

இன்னொரு காலி சீசாவை எடுத்து,உன்னால்தான் என் குழந்தைகளை அடித்தேன். தொலைந்து போ என்று உடைத்தான்.

மூன்றாவது காலி சீசாவை எடுத்து,உன்னால்தான் அலுவலகத்தில் பிரச்சினை என்று உடைத்தான்

நான்காவது சீசாவை எடுத்தான்.அது திறக்கப்படாமல் இருந்தது"உனக்கு இவற்றில் தொடர்பே இல்லை.ஒதுங்கி நில்" என்று தனியே வைத்தான்!

11 கருத்துகள்:

 1. ஒதுக்கி வைத்த சீசா மீண்டும் திறக்கப்படுமா ஐயா ?

  பதிலளிநீக்கு
 2. ஹாலிடே,ஜாலிடே! என்ற தலைப்பும்

  //நான்காவது சீசாவை எடுத்தான்.அது திறக்கப்படாமல் இருந்தது "உனக்கு இவற்றில் தொடர்பே இல்லை.ஒதுங்கி நில்" என்று தனியே வைத்தான்!//

  என்ற கடைசி வரிகளும் படிக்கும்போது எனக்குள் பயங்கரமான ‘கிக்’கை ஏற்படுத்தி மகிழ்வித்தது. சூப்பர் பதிவு. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 3. எந்த நாளும் இவருக்கு ஜாலி டே ஆக வாய்ப்பே இல்லை:)

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்
  ஐயா

  சொல்ல வரும் கருத்து என்னவாக இருக்கும்ஐயா சொல்லுங்கள் ஐயா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 5. படித்திருந்தாலும் சிரிக்க, சிந்திக்க வைக்கும் ஜோக்

  பதிலளிநீக்கு
 6. ஹஹ்ஹஹ இதுதான் குடிப்பவனின் குணம்!!!

  பதிலளிநீக்கு
 7. ஆஹா.. அடுத்த நாளும் தகறாறு தான்!

  பதிலளிநீக்கு