தொடரும் தோழர்கள்

செவ்வாய், மே 23, 2017

ரிவால்வர் ரீட்டா!


திருமண மண்டபம்.

உறவினர்களாலும் நண்பர்களாலும் நிறைந்திருக்கிறது.

திருமணமாகாத பல ஆண்களும் பெண்களும்  நமக்கு  ஒரு துணை இங்கு கிடைக்குமா எனக் கண்களை மேய விடுகிறார்கள்

குழந்தைகள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடி விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

தாலி கட்டும் நேரம் வந்தாச்சு  என்று உரத்த குரல் எழும்புகிறது.

மாப்பிள்ளை தாலியைக் கையில் எடுக்கிறார்.

 சிலர் மேளக்காரரைப் பார்த்து ஒரு விரல்  எழுப்பிப் பயமுறுத்த,,அவர் பயந்து போய் வேக வேகமாகக் கெட்டி மேளம் வாசிக்க தொடங்குகிறார்..

 இதோ மாப்பிள்ளை   தாலி கட்டப் போகிறார்.

”நிறுத்துங்கள்”

கெட்டி மேளச் சத்தத்தையும் மீறி ஒரு பெண்ணின் குரல்...
.
அவள்..

மண மேடை யருகே கையில் துப்பாக்கியுடன்...

அவளை சுற்றி ஆறு பேர் கையில் துப்பாகியுடன்.

எல்லோரும் திகைக்கிறார்கள்.

அந்தப் பெண் பேசுகிறாள்”இதோ இந்த மாப்பிள்ளைக் கோலத்தில் இருக்கும் முருகன் என்னைக் காதலித்தான்.திருமணம செய்வதாக வாக்களித்தான்
ஆனால் இன்று என்னை ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணுக்குத் தாலி கட்டப் போகிறான்..,அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்”

உடன் நிற்கும் ஆண்களைப் பார்த்துக் கையசைக்கிறாள்.

அவர்களில் நால்வர் பாய்ந்து மேடை மீது ஏறி மாப்பிள்ளையை அமுக்கிப் பிடித்துத் தூக்கி மண்டப வாசலை நோக்கி நடக்கின்றனர் அப்பெண்ணும் மீதி இருவரும் துப்பாக்கியுடன் காவலாக உடன் செல்கின்றனர்.

வெளியில் நிற்கும் வேனில் ஏறி போய் விடுகின்றனர்.

எல்லோரது மனத்திலும் ஒரே கேள்வி.....

“யார் இந்த ரிவால்வர் ரீட்டா?”
..................................

எப்போதும் திரைப்படங்களில் முன்பு என்ன நடந்தது என்று(flash-back)
காட்டுவார்கள்.

ரிவால்வர் ரீட்டாவின் பெயர் வள்ளி

அவளுக்கும் முருகனுக்கும் எட்டு ஆண்டுகள் பழக்கம்.

முருகன் பெற்றோருக்குப் பயந்து அவர்கள் பார்த்த பெண்ணை மணக்கச் சம்மதிக்கிறான்

இப்போது மண்டபம்,ரீட்டா கடத்தல்.......

...........................

இந்த சினிமாவில் ஒரு flash-front...............

முருகனின் பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுக்கின்றனர்.

மணக்க இருந்த பெண்ணின் பெற்றோருக்கும் முருகனின் பெற்றோருக்கும்
வள்ளியின் தரப்பினருக்கும் பேச்சு வார்த்தை நடக்கிறது.

புகார் திரும்பபெறப் படுகிறது.....

“நிகழும் ஹேவிளம்பி ஆண்டு,வைகாசி மாதம்...நாள் திருவளர் செல்வன் முருகனுக்கும்,திருவளர் செல்வி வள்ளிக்கும் நடைபெற இருக்கும் திருமணத்துக்கு..............................”.

........................................................................................

செய்தி ஆதாரம்...இந்தியாவின் நேரங்கள்


27 கருத்துகள்:

 1. கையிலே துப்பாக்கி தூக்கலைன்னா கழுத்துலே தாலி ஏறாதே :)

  பதிலளிநீக்கு
 2. பத்திரிகைச் செய்தியை தங்கள் பாணியில் விறுவிறுப்பாகச் சொல்லியுள்ளது அருமை.

  பாதிக்கதையைப் படித்த உடனே, வள்ளியை இவ்விதமாக ரிவால்வர் ரீட்டாவாக. மணமேடைக்கு வரச்சொல்லி செட்-அப் செய்ததே நம் ஹீரோ முருகனாக இருக்குமோ என எனக்குத் தோன்றியது. :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தக் கோண்ம் எனக்குத் தோன்றவில்லையே
   நன்றி வைகோ சார்

   நீக்கு
 3. புதுமைப் பெண்களடி ..... பூமிக்குக் கண்களடி ...... !

  பதிலளிநீக்கு
 4. ஹா.. ஹா.. ஹா.. ரசித்தேன் ஐயா

  பதிலளிநீக்கு
 5. உண்மையா கதையா! அருமை!

  பதிலளிநீக்கு
 6. ஹஹஹஹஹ் அது சரி வள்ளி இக்காலத்திற்கு ஏற்றபடி ரிவால்வருடன் வந்துவிட்டார் போலும்!!! ரசித்தோம்...சார்

  பதிலளிநீக்கு
 7. வற்புறுத்தி மணந்து என்ன சுகம் காணமுடியும்?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காதலித்தவர்கள்தானே!அவன் செய்ய இருந்த மணம்தான் பெற்றோரின் வற்புறுத்தலால்!
   நன்றி ராஜி

   நீக்கு
 8. உண்மை சம்பவமா ஐயா...? இருந்தாலும் உங்கள் பாணியில் சூப்பர்...!

  பதிலளிநீக்கு
 9. வை.கோ சார் சொன்னபடிதான்
  நானும் யோசிச்சேன்
  செய்தியை சுவாரஸ்யமான
  பதிவாக்கிய விதம் அருமை
  வாழ்த்துக்களுடன்..

  பதிலளிநீக்கு
 10. வில்லி விஜயலலிதா கதாநாயகியானார்!

  பதிலளிநீக்கு
 11. அண்மையில் உ.பி யில் நடந்த ஒரு செய்தியின் அடிப்படையில், பழமையில் புதுமையைக் கலந்து ஒரு அருமையான கற்பனை. ரிவால்வர் ரீட்டா - விஜயலலிதா நடித்து வெளிவந்த 40 வருடங்களுக்கு முன்பு வந்த தமிழ் டப்பிங் படம். அது ஒரு காலம்.

  பதிலளிநீக்கு

 12. முருகனுடன் வள்ளிதானே ஜோடி சேரவேண்டும்.அதுதான் நடந்திருக்கிறது. நாளிதழில் வரும் தகவல்களை சுவையான சிறு கதையாகத் தர தங்களால் தானே முடியும். பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு