தொடரும் தோழர்கள்

சனி, மே 20, 2017

என்ன நடந்தது?...

இன்றைய பதிவுக்கு முன் ஒரு இடைச் செருகல்.

  பதிவு நேற்றே எழுதியிருக்க வேண்டும்.

நேற்று காலை

11  மணி அளவில் வெறுந்தரையில் ஹாயாகப் படுத்தேன். கண்ணாடி  அணிந்தபடி......


பின் அதைக் கழட்டி படுத்தபடியே அருகில் இருந்த நாற்காலி மீது வைத்தேன்.அப்போது ஓர் எண்ணம் “யாராவது  வந்து கவனிக்காமல் உட்கார்ந்தால் என்ன ஆகும்?’

சிறிது நேரம் கழித்து ஒரு தொலை பேசி அழைப்பு.

தொலைபேசியை எடுத்து அருகில் வைத்துக் கொள்ள மறந்திருந்தேன்.

எழுந்தேன்

தொலைபேசியை எடுத்தேன்

பேசிக் கொண்டே நாற்காலியில் அமர்ந்தேன்

....பட்டக்   .......

சப்தம்

கண்ணாடியில் லென்ஸ் இரண்டும்  தெறித்து வெளியே வந்து விட்டன.

இனிமேல் என்னத்த பாத்து,என்னத எழுதி.............

மாலை கடைக்குச் சென்று சரி செய்யும் வரை.

.மாலை முதல் வேலையாக டைடன் சென்று  சரிசெய்தேன்.

அதன் பின்னரே பழங்கள் வாங்கச் சென்றேன்.

பார்த்து வாங்க வேண்டாமா!


22 கருத்துகள்:

 1. பார்த்து வாங்க வேண்டாமா!
  இதுதான் அடுத்த பதிவின் தலைப்பா :)

  பதிலளிநீக்கு
 2. ஹா.. ஹா... ஹா... குபீர் சிரிப்பை வரவழைத்தது ஐயா.

  பதிலளிநீக்கு
 3. தங்கள் பாணியில் இது போன்ற சிறியதொரு அனுபவங்களும் எழுத்தாகி சிறப்பித்து விடுகின்றன.

  //பேசிக் கொண்டே நாற்காலியில் அமர்ந்தேன். ....பட்டக் .......
  சப்தம். கண்ணாடியில் லென்ஸ் இரண்டும் தெரித்து வெளியே வந்து விட்டன.//

  நல்லவேளையாகத் தங்கள் தொடையைக்கிழிக்காமல் இருந்ததே என மகிழ வேண்டியுள்ளது. அனுபவப்பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 4. அடுத்த பதிவு எதைப்பற்றி இருக்கும் என யோசித்துக்கொண்டே இருக்கிறேன். ச.பு.க.தி ஆக இருக்குமோ?

  அது சரி பார்த்து உட்காரவேண்டாமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Are you clairvoyant?!
   சரியாகச் சொன்னால் ச.பு.க.தொ!
   இப்ப இல்லை!
   நன்றி சார்

   நீக்கு
  2. அது என்னங்கா சார் ச.பு.க.தி ? எனக்கு புரியவில்லை.

   நீக்கு
 5. சிறு அனுபவமும் பதிவு எழுத உதவும்!

  பதிலளிநீக்கு
 6. பார்த்து உக்கார வேண்டாமா ஐயா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வே.நடனசப்அஅபதியும் இதையே கேட்டார்!
   பதில்....கண்ணாடி அணிந்திருந்தால் பார்த்து உட்கார்ந்திருப்பேன்!
   நன்றி ரஜீவன்

   நீக்கு
 7. பதிவு எழுவதற்காகவே நடந்ததுன்னு நினைச்சுக்கவேண்டியதுதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்!ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு நோகம் இருக்கிறது
   நன்றி நெ.த.

   நீக்கு
 8. வல்லவருக்கும் புல்லும்
  ஆயுதம் என்கிற பழமொழிக்கு
  இந்தப் பதிவையே உதாரணமாகக் கொள்ளலாம்
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 9. யார் அந்த "இனிய நண்பர்" தொலைபேசியில்...?

  பதிலளிநீக்கு
 10. கண்ணாடி உடைந்ததால்
  ஒரு பதிவு கிடைத்திருக்கிறது

  பதிலளிநீக்கு
 11. ஹஹஹஹ் சார் இப்போ அதையும் பதிவாக்கி...இடுக்கண் வருங்கால் நகுக!!

  பதிலளிநீக்கு
 12. நாளும் ஒவ்வொரு பாடம் தரும் பயிற்சி. எப்போதும் ... எல்லோரும் ஸ்பேர் ஒன்று வைத்துக் கொள்வார்களே?

  பதிலளிநீக்கு
 13. புதிய கண்ணாடி வாங்கினீர்களா, அதே ஃபிரேமில் புதிய லென்சை இடுக்கினீர்களா, எவ்வளவு செலவாயிற்று என்றும் எழுதியிருந்தால் சிலருக்காவது பயன்படுமே! (சிலர் என்பதில் நானும் அடக்கம்.)

  (குறிப்பு: லென்சுக்கு ஃபிரேம் ஆதாரமா, ஃபிரேமுக்கு லென்ஸ் ஆதாரமா என்றும் ஒரு தலைப்பு கிடைத்திருக்குமே!)

  -இராய செல்லப்பா நியூஜெர்சி (மே 25 முதல் சென்னை)

  பதிலளிநீக்கு