தொடரும் தோழர்கள்

வியாழன், மே 11, 2017

பெண்மணி அவள் கண்மணி!


மரகதம்!பீரோவெல்லாம் நல்லாப்பூட்டி ஒருதடவைக்கு ரெண்டு தடவையாச் செக் பண்ணிடு

எல்லாம் பண்ணிட்டேன் .நீங்க கவலைப் படாமல் இருங்க.”’

எப்படிடீ முடியும்?”20 பவுன் நகை உள்ள இருக்கே.சனியன் பிடிச்ச லாக்கரும் கிடைக்க மாட்டேங்குது.”

எல்லாம் பத்திரமா இருக்கும்

இல்லடி.இந்த முத்து வேற கடன் வாங்கின 2 லட்சத்தை நேத்து ராத்திரித் திருப்பிக் குடுத்துத் தொலைச்சிட்டான்.அது வேற வீட்டில இருக்கே

நான் பாத்துக்கறேன்.பயப்படாதீங்க

எனக்கென்னவோ திக்கு திக்குன்னுதான் இருக்கு

கனவனும்மனைவியும் வெளியூரில் உறவினர் வீட்டுத் திருமணத்துக்கு செல்கின்றனர்.
...........
மாரி!,கீழத்தெருவில 8ஆம் நம்பர் வீட்டில வீட்டை பூட்டிட்டு வெளியூர் போயிருக்காங்க.நல்ல பசையான பார்ட்டி.இன்னிக்கு ராத்திரி நுழைஞ்சிடலாம்

“சரி,கபாலி”

இரவு.

ஊர் உறங்கி விட்ட நேரம்

உறங்காத இருவர் அந்த வீட்டின் கதவுப் பூட்டை உடைத்து உள்ளே போகின்றனர்.

இரண்டு இரும்பு பீரோக்கள்.......உடைத்துத் திறக்கப்படுகின்றன.

தேடல்,தேடல்...... துணிகள் வாரி இறைக்கப்படுகின்றன
.
எங்கு தேடியும் மதிப்புள்ள எதுவும் கிடைக்கவில்லை
.
பிச்சக்காரப் பய.ஒரு மண்ணும் இல்ல.எல்லாம் பேங்கில வச்சிருப்பான்

ஏமாற்றத்துடன் திரும்பிகின்றனர்.

மறு நாள் காலை

அண்டை வீட்டார் பார்த்துப்  போலீஸுக்குத் தகவல் சொல்கின்றனர்

வீட்டுக்காரருக்குத் தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்படுகிறது

“பீரோ ரெண்டையும் உடைச்சுட்டாங்களம் .எல்லாம் இறைஞ்சு கிடக்காம்.போச்சு,போச்சு”என்று அனத்துகிறார் அவர்.

“பொறுமையா இருங்க.போய்ப் பாக்கலாம்”

மறுநாள்..ஊர் வந்து சேர்ந்து வீட்டைஅடைகின்றனர்..கூடவே போலீஸும்.

வீடு அலங்கோலமாகக் கிடக்கிறது.அவர் வேகமாக உள்ளே சென்று பீரோவைப் பார்க்கிறார்.

ஆனால் மரகதம் எந்தப்  பரபரப்பும் காட்டவில்லை

கூடத்தின் ஒரு மூலைக்குச் செல்கிறாள்
.
அங்கு ஒரு புடவை,அவள் போட்டு வைத்துப் போன படியே கிடக்கிறது

அதை எடுத்துப்பிரிக்கிறாள்.

மடிப்பிலிருந்து ஒரு பையை எடுக்கிறாள்
.
அவள் கணவரும்,போலிஸூம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

பையில்..........அவள் வைத்து விட்டுப்போன நகைகளும்,பணமும் பத்திரமாக இருக்கின்றன!

போலீஸார் கை தட்டுகின்றனர்.

(இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த ஒரு செய்தியே கதைக்கு ஆதாரம்!)


22 கருத்துகள்:

 1. ஆம். பணம் மற்றும் மிகவும் விலை உயர்ந்த பொருட்களை பீரோவில் வைக்கவே கூடாது. நல்லதொரு சம்பவம். பிறருக்குப் பாடம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மின்னல் வேக வருகைக்கு நன்றி
   புத்திசாலி பெண்மணிதான்.

   நீக்கு
 2. சபாஷ்! நம்ம ஊரிலும் இம்மாதிரி புத்திசாலிப் பெண்கள் இருக்கிறார்களே! நீங்கள் சொன்னவிதம் அருமை.

  இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

  பதிலளிநீக்கு
 3. அந்தக் கால மெதட் - அரிசிப் பானையில் நகையை வைப்பது. அப்புறம் பீரோவில் வைப்பது. இப்போ நீங்க மூலையில் போட்ட புடவையையும் சொல்லிட்டீங்க. இப்படி எல்லா இடங்களும் தெரிந்துவிட்டால் பின்ன எங்கதான் வைக்கறது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஐயா நானும் இப்படித்தான் சிில நேரங்களில் செய்வேன்.

   நீக்கு
  2. இடம் கிடைக்காமலா பொகும்?!
   நன்றி நெல்லைத் தமிழன்

   நீக்கு
 4. திருட வந்தவனுங்க சரியான சோம்பேறிங்க :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹால்ல கிடக்கற புடவைல இருக்கும்னு நினைக்க முடியுமா.அலட்சியம்தான்
   நன்றி

   நீக்கு
 5. வெளிப்படையாக இருக்கும் எதையும் பார்க்க மாட்டார்கள். ஏமாந்த திருடர்கள்!

  பதிலளிநீக்கு
 6. ஆகா
  மிகவும் புத்திசாலித் தனமான செயலாக இருக்கிறதே

  பதிலளிநீக்கு
 7. சரியாகச் சொன்னீர்கள்
  மிகக் கவனமின்றி போடப்பட்டது போல
  மிகக் கவனமாக வைக்கப்பட்டதே
  பாதுகாப்பாய் இருக்கச் சாத்தியம்
  சொல்லிச் சென்றவிதம் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. அருமையான கதை ஐயா .திருடனுக்கு திருட ஏதும் கிடைக்கல)))

  பதிலளிநீக்கு
 9. வணக்கம்
  ஐயா

  கதையில் சொல்லிய விதம் சிறப்பு ஐயா படித்து மகிழ்ந்தேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 10. நல்லதொரு ஐடியா! பீரோவில் இருப்பது பாதுகாப்பாக இருப்பது சந்தேகமே!

  பதிலளிநீக்கு
 11. இனி திருட வரும் திருடர்கள் எதையும் விட்டு வைக்கமாட்டார்கள். அந்த பெண்மணி சாமர்த்தியமாக நகையை காப்பாற்றிய விதத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டி திருடர்களுக்கு உதவி செய்துவிட்டார்கள் என நினைக்கிறேன். நாளிதழின் செய்தியை அருமையான பதிவாக மாற்றியதற்கு பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு