தொடரும் தோழர்கள்

சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூன் 10, 2017

ஒ.கி.க.ம...முடிச்சாச்சு!

ஒருவனுக்கு வயது 35.

இப்போதுதான் திருமணம்.

ஆனால் பெண் வீட்டில் வயதைக் குறைத்துச் சொல்லியிருப்பான் போலும்.

அந்நிலையில் அப்பெண்ணுக்கு எதிரில் யாராவது அவனுக்கு 35 என்று சொன்னால் கோபம் வருமா,வராதா?!

வரும்.,வருகிறது...

கதாநாயகனுக்கு.

ஒருகாட்சியில் இது காட்டப்படுகிறது.

 மீண்டும் ஒரு காட்சி.

முக்கியமான பேச்சு நடை பெறுகிறது.

கொலைப் பழியை லாரி ஓட்டுனர் ஏற்றுக்கொள்வது பற்றி..

அப்போது அந்த ஓட்டுனர்,35 வயசுல கல்யாணம் முடிச்ச உனக்கு என்று சொல்ல,நாயகனுக்குக் கோபம் வெடித்து வந்து அடிக்கப் போகிறான்.

தலைக்கு மேல்  தொங்கும் கத்தி பெரிதாகத் தெரியவில்லை.,மனைவி  முன் இப்படி வயதைச் சொல்லி விட்டானே என்றே கோபம்!

மனித குணம்    இயல்பாக!

படத்தில் வரும் யாருமே செயற்கையாயில்லை.

இயல்பான நடிப்பு.

எனக்கு ஒரு எண்ணம்.

அனைவரையும் போலிஸ் லாரியில் ஏற்றி அழைத்துச் செல்கையில் பலிக்குக் கொண்டு வந்த ஆட்டை அவிழ்த்து விட அது ஓடுகிறது...

அவர்கள் பிடித்து வந்த ஆடுவிடுதலை ஆகிறது

அவர்கள்போலீஸால் பிடித்துச் செல்லப் படுகின்றனர்

அவர்கள் கருணை மனு என்ன ஆகும்?!

என்னஒரு முரண் நகை.

இங்கேயே படத்தை முடித்திருக்கலாம் என்பதே என் எண்ணம்.

ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பின் என்று,அவர்கள் விடுதலை இத்யாதிகளைக் காட்டுவது ஒரு சமரசமாகத் தோன்றுகிறது.

நல்ல படம்.

புதன், ஜூன் 07, 2017

ஒரு கிடாயின் கருணை மனு..-1

முதலிரவு

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் கணவன்.

ஆனால்,மனைவியோ வந்து படுத்துவுடன் தூங்கி விடுகிறாள்.

பெருத்த ஏமாற்றம் கணவனுக்கு.

மறுநாள்..

வியாழன், ஜூன் 01, 2017

கடுகு!

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் என்று சிலர் பாடுவது கேட்கிறது.

இதே வேலையாப் போச்சு என்று சலித்துக் கொள்வது மனக் கண்ணில் தெரிகிறது.

ஆனாலும் ஏமாறத்தான் போகிறீர்கள்.

வியாழன், மே 25, 2017

காலா!

ஒரு திரை இசை.

வெற்றிக் கொடி கட்டு என்ற படத்தில் இடம் பெற்ற பாடல்.

"கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு" என்று துவங்கும் பாடல்.

அந்தப் பாட்டு சூப்பர் ஹிட்!

காரணம்,பாடல் வரிகளா?

பாடிய பாடகியின் குரலா?

படத்தில் ஆடிய மாளவிகாவின் ஆட்டமா?

இருக்கலாம்.

ஆனால் நிச்சயமான காரணம்......

அப்பாடலின் ஒரு வரி!

"நம்மூரு சூப்பர் ஸ்டாரு ரஜனிகாந்தும் கருப்புதான்
 அழகு கருப்புதான்"

இது போதாதா பாடல் ஹிட்டாக....!

சரி,இதற்கும் தலைப்புக்கும் என்ன தொடர்பு?

காலா என்றால் இந்தியில் கருப்பு என்று பொருளாம்.

இந்தியில் ஒரு விசித்திரம்.எல்லாவற்றுக்கும் பால் உண்டு....

கண் ஆண் பால்,மூக்கு பெண்பால் என்பது போல்

அது போல் காலா என்பது காலி என்றும் மாறும்,அது குறிக்கும் பொருளைப் பொறுத்து.

அது தவிர க,ச,ட,த,ப என்ற எழுத்துக்களுக்கு நான்கு வர்க்கங்கள்!

 டில்லிக்குப் போன புதிதில் ஒரு முறை அலுவலகத்தில் ஊழியரை அழைத்து ஒரு காலி கோப்பு கொண்டு வரச் சொன்னேன்.

அவர் விழித்து விட்டு அப்படியெல்லாம் கோப்பு கிடையாதே என்றார்

நான் என் தேவையை விளக்கினேன்.

ஓ! காலி கோப்பா என்று சொல்லி விட்டுக் கொண்டு வந்தார்.

என்ன இது குழப்பம் என்கிறீர்களா?

நான் கேட்டது kaaலி கோப்பு.அதாவது கருப்புக் கோப்பு!

அவர் சொன்னது khaali கோப்பு.அதாவது புதிய,எதுவும் கோக்காத கோப்பு.

தவறான உச்சரிப்பின் விளைவு!

இப்போது கருப்புக்கு வருவோம்.

அழகு கருப்புதான் ...பாடல் வரி

உண்மைதான்.

"கருப்பே ஒரு அழகு காந்தலே ஒரு ருசி " என்று சொல்வார்கள்.

உலக அழகி கிளியோபாட்ரா கருப்பு என்று சொல்வோர் உண்டு;இல்லை என்போரும் உண்டு .
காக்கும் கடவுள் திருமாலே கருப்பு நிறம்தான்.

ஆனால் அதைக் கருப்பு என்று சொல்லாமல் பச்சை என்றும்,இராமனை நீல வண்ணன் என்று சொல்வர்.

பச்சை மாமலைபோல் மேனி என்று பாடுகிறார் தொண்டரடிப்பொடியாழ்வார்.

மையோ,மரகதமோ,மழைமுகிலோ...ஐயோ என்று வர்ணிக்க முடியாமல் தவிக்கிறார் கம்பர்.

திருமால் படுத்துக் கிடப்பதனால் பாற்கடலே பச்சை நிறமாகி விட்டதாம்.

நாமும்தான் தினம் காக்கையைப் பார்க்கிறோம்.

ஆனால் பாரதி பார்க்கும்போது அவனுக்கு ........

காக்கைச் சிறகினிலே நந்தலாலாவின் கருமை நிறம் தோன்றுகிறது.

காலா என்றால் எமனை விளிப்பது.

எவரேனும் எமனை விளிப்பரா?

காலனுக்கும் காலன் உண்டா?

அவன்தான் காலகாலன்.......சிவன்.

 மார்க்கண்டேயன் உயிரைக்கவர்ந்து செல்ல எமன் வந்தபோது,மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொள்ள சிவன் தோன்றி எமனைக் காலால் உதைத்து சூலத்தை ஓங்குகிறார்

எமன் மன்னிப்பு வேண்டித் தப்பிக்கிறான்

காலனைக் காலால் உதைக்கும் துணிச்சல் சிவனைத்தவிர,இவனுக்கும் இருந்தது

பாரதி!

காலருகே வா உன்னை மிதிக்கிறேன் என்கிறான்.

சாவைக் கண்டு அஞ்சாத அத்துணிவு எல்லோருக்கும் வேண்டும்!

இறுதியாக,ஆனால் முதன்மையான ஒரு செய்தி

காலா என்பது சூப்பர் ஸ்டாரின்,ரஞ்சித் இயக்கும் படத்தின் தலைப்பு.

படம் இமாலய வெற்றி பெற வாழ்த்துகிறேன்.



ஞாயிறு, மே 14, 2017

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை.


தாய் எனும் தெய்வம்,வணங்குவோம்,போற்றுவோம்,பாதுகாப்போம்.

வயதான காலத்தில் அவர்கள் எதிர்பார்ப்பது அன்பு,பரிவு ,பாசம் இவைதாம்.

இதைத் தர முடியாதா பிள்ளைகளால்?!

அன்னையர் தின வாழ்த்துகள்!

சனி, மே 06, 2017

பாகுபலியும்,கபாலியும்!

சோற்றுக்குப் பஞ்சமில்லை,குரல் எழுப்பிக் கூப்பிடும் மனிதர்

கிடைப்பதைப் பகிர்ந்துண்ணும் வாழ்க்கை சுகமாக.

பார்த்தது ஒரு  நாள் அக்காகம்,ஆடும் மயிலொன்றை

வண்ணத் தோகை விரித்து ஆனந்தமாய் ஆடும் மயில்

ஆசை வந்தது காகத்துக்குத் தானும் ஆட வேண்டும் என  

ஞாயிறு, மே 04, 2014

ஆட்ரி எனும் அற்புத நடிகை

அழுக்கில்லையென்றாலே அழகு வந்துவிடும்.

நான் சொல்வது உடல் அழுக்கல்ல; மன அழுக்கு!

கீழேயுள்ள அழகுக் குறிப்புகளைப் பாருங்கள் ---

உதடுகள் அழகாக இருக்க எப்போதும் அன்பான சொற்களையே பேசுங்கள்.

கண்கள் அழகு பெற மற்றவர்களிடம் இருக்கும்  நல்ல  பண்புகளையே பாருங்கள்.

அழகிய மெல்லிய உடல் அழகுக்கு உங்கள் உணவை பசித்தவர் களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

கேசப் பொலிவுக்கு தினம் ஒரு முறையாவது ஒரு குழந்தையின் கைகள் உங்கள் கூந்தலைத் தடவட்டும்.

நிமிர்ந்த நன்னடைக்கு,எப்போதும் நாம் தனியாக இல்லை என்ற நினைப்பு உங்களுடன் இருக்கட்டும்.

உதவும் கரம் தேவையென்றால் நினைவில் வையுங்கள் அது உங்கள் மணிக்கட்டுக்குக் கீழே இருக்கிறது என்பதை.வயது முதிர்ச்சி யடையும்போது,உணருங்கள் இரண்டு கரம் உள்ளது, ஒன்று உங்களுக்கு உதவ,மற்றது அடுத்தவர்க்கு உதவ என்பதை.

ஒரு பெண்ணின் அழகு அவள் உடலமைப்பிலோ,அவள் அழகிய உடைகளிலோ,அவள் கூந்தல் அலங்காரத்திலோ இல்லை.
அது அவள் அன்பு உறையும் ஆன்மாவின் சாளரமான அவள் கண்களில்தான் இருக்கிறது.

இறைவனின் கண்களில் அனைவரும் அழகுதான்.அவன் அனைவரையும் விரும்புகிறான்.அவன் பார்வையில் ,அனைவருமே அழகானவர்கள்தான்

இந்தச் சிந்தனைகள் யாரிடம் பிறந்தன தெரியுமா?

ரோமன் ஹாலிடே என்ற படத்தில்  ஹாலிவுட்டில் அறிமுகமாகி,ஒரு மிகச் சிறந்த நடிகையாக மட்டுமன்றி,ஒரு மிக நல்ல  மனித உயிராகவும் இருந்த ஆட்ரி ஹெப்பர்னிட மிருந்து!. 


அவரது மிகச் சிறப்பான நடிப்பில் வெளி வந்த ரோமன் ஹாலிடே,சரேட்,மை ஃபேர் லேடி,வெயிட் அன்டில் டார்க்,ஹௌ டு ஸ்டீல் ய மில்லியன் போன்ற படங்கள் காலத்தால் அழியாதவை.
 
அவர் பிறந்த தினம் மே 4!
 
 

திங்கள், நவம்பர் 21, 2011

தலயா,தளபதியா?அதுதான் கேள்வி!

தொலைபேசி மணி ஒலித்தது.

எடுத்தேன்.

“ஹலோ!சென்னை பித்தன் பேசுகிறேன்”

மறுமுனையிலிருந்து குரல்”ஹலோ!நான் ஏபிசி ஃபில்ம்ஸிலிருந்து மாக்கான்   பேசுகிறேன்.நான் தயாரிப்பாளர்.நம்ம டைரக்டர் உங்க “அங்கதன் காத்திருக்கிறான்” படிச்சுட்டு ,அதை டெவலப் பண்ணி ஒரு    நல்ல திரைப் படமாக்கலாம்னு  நினைக்கிறார்.பழி வாங்கும் மெயின் லைனுடன்,காதல்,சென்டிமெண்ட்,சண்டை எல்லாம் சேர்த்து ஒரு ஸ்க்ரீன்ப்ளே அவுட்லைன் ரெடி பண்ணி நாளை மாலை 4 மணிக்கு எங்க ஆஃபீசுக்கு வாங்க.முடிச்சுடலாம்.”


“சரி” சொல்லி விட்டுத் தொலை பேசியை வைத்தேன்.தலைகால் புரியவில்லை.மக்கு இப்படி ஒரு ஆஃபரா? இப்பவே தொடங்கிடலாம்.


தனியாக உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தேன்.5 மணி நேர வேதனைக்குப் பின், பிறந்தது ஒரு அவுட்லைன்!


மறுநாள் போனேன்.மாக்கான்,இயக்குனர் பள்ளம் மண்டு ,இரண்டு உதவியாளர்கள் இருந்தனர்.


நேரத்தை வீணாக்காமல் தொடங்கினேன்.


//ஒரு கிராமம்.அங்கு கோவில் திரு விழா.பெண்கள் பொங்கல் வைக்கிறார்கள்.     குலவையிடுகிறார்கள்.ஆட்டம் ஆரம்பம்.ஒரு       வாலிபன்  பாடுகிறான்  அய்யனார் சாமி வந்து எங்களைக் காப்பாத்து நீ” என்று,தொகையறாவாக”.


இப்போ ஹீரோ எண்ட்ரி.”நான் ஜெயிக்கப் பிறந்தவண்டா ”என்று பாடியபடி.


பாட்டு முடியும்போது சில ரவுடிகள் வந்து கலாட்டா செய்ய,ஹீரோ  எல்லாரையும் உதைத்து அனுப்புகிறார்.

கோவிலில் கிராமத் தலைவனான சித்தப்பாவுக்கு முதல் மரியாதை நடக்க,ஹீரோ மனம் புழுங்குகிறார்.


வீட்டுக்குத் திரும்பிய பின் அம்மாவிடம் பொருமுகிறான்.நான் நடந்ததை   யெல்லாம் மறக்கவில்லை. என்று சொல்ல ஃப்ளாஷ் பேக்கில் அவன் சிறுவனாயிருந்தபோது,ஒரு நகர அரசியல்வாதி துணையுடன்  சித்தப்பா அவன் தந்தையைக்கொன்று தலைவைனான காட்சி மனதில் விரிகிறது.


இது முடிந்ததும்,ஹீரோவுக்கு சென்னை அப்போலோ மருத்துவ மனையிலிருந்து  பணி நியமன உத்தரவு வருகிறது.


ஆம் .ஹீரோ ஒரு டாக்டர்.லண்டனில் போய்ப் படித்தவர்.


அவர் அம்மா முறுக்கு சுட்டு விற்று பணம் சம்பாதித்து அவரைப் படிக்க வைத்தார்.ஹீரோவும் இந்தியாவிலேயும்,பின் லண்டனிலும் பகுதி நேர ஊழியம் செய்து சம்பாதித்தார்---(இதுவும் ஃப்ளாஷ் பேக்.)


லண்டனில் ஒரு சக தமிழ் மாணவியுடன் காதல் ஏற்படுகிறது.

(லண்டன் பாரிஸ்,ஸ்விட்சர்லாந்து இங்கெல்லாம் டூயட் பாட்டு).எல்லாம் ஃப்ளாஷ்பேக்.


சென்னை செல்லும்முன் சித்தப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாததால், ஹீரோ போய்ப் பார்த்து ஒரு ஊசியும் போடுகிறான்.


பின் சென்னைப் பயணம்.அங்கு காதலி கொடுத்த விலாசத்தில் போய்ப் பார்த்தால் அவள் அப்பாதான் ஹீரோவின் தந்தையைக் கொன்றவர். காதலா?கடமையா?

(இங்கே ஒரு பாட்டு வச்சிக்கலாம்)


ஹீரோ ஒரு முடிவுடன் காதலைத் தொடர்கிறான்.


ஒரு முறை பீச்சில் காதலியுடன் இருக்கும்போது,ரவுடிகளுடன் ஒரு சண்டை!

ஒரு சமயம் காதலி அவள் அப்பா இருவருக்கும் டெங்கு வந்து விட,ஹீரோ வந்து ஊசி போடுகிறான்.


இதற்கிடையில் சித்தப்பா மாரடைப்பால் மரணம் என்று செய்தி வர ஹீரோ ஊருக்குப் போகிறார்.அங்கு அவர் தலைவராகிறார். இனிக் கிராமத்திலேயே பணி புரிவேன் எனச் சொல்லிச் சென்னை திரும்புகிறார்,வேலையை ராஜினாமா செய்ய.


சென்னைக்கு வந்து பணியிலிருந்து விலகக் கடிதம் கொடுத்துச் சில நாட்கள் இருக்கும்போது காதலியின் தந்தை மாரடைப்பால் இறந்து விடுகிறார். காதலியைத் தேற்றி  ஊருக்குச் சென்று அன்னையிடம் பேசி விட்டு வருவதாகச் சொல்லிப் போய்,அன்னையைக் கண்டு.தான் கண்டுபிடித்த மருந்தால் இருவரையும் கொன்ற விஷயத்தைச் சொல்கிறார்அந்த மருந்து மெல்ல வேலை செய்து ஒரு மாதம் கழித்து மாரடைப்பை ஏற்படுத்தும், எதுவும் கண்டு பிடிக்க முடியாது என்றும் கூறுகிறார்.


அவரைத்தேடி வந்த காதலி அதைக் கேட்டு விட்டு,அவரைக் கொலை காரன்  என்று சொல்லி அழ.ஹீரோவின் தாய் அவளிடம் பழைய நிகழ்ச்சிகளை எடுத்துச் சொல்லிச் சமாதானப்படுத்தி இருவர் கைகளையும் இணைத்து வைக்கிறார்!

டாக்டர் தொழிலை பயன்படுத்தி இரு கொலைகள் செய்த தான் இனி அத் தொழிலைச் செய்யப்போவதில்லை என்றும்,விவசாயத்தில் ஈடுபடப் போவதாகவும்  ஹீரோ சொல்கிறார்.

முடிவில் அவர் தந்தை பெயரில் ஒரு மருத்துவ மனை  நிறுவி அதை ஹீரோயின் கவனித்துக் கொண்டிருக்க,ஹீரோ டிராக்டர் ஒட்டி வயலை உழுதிடும் காட்சியோடு படம் முடிகிறது.

சுபம்----//

எல்லோரும் பாராட்டுகிறார்கள்.

“படத்துக்கு டைட்டில் “அங்கதன் F.R.C.S” என்று வைக்கலாம்” நான்.

அதுவும் பிடித்துப் போகிறது.

”பதிவர்கள் கவிதை வீதிசௌந்தரையும்,அம்பாளடியாளையும் பாட்டெழுதச் சொல்லலாம்”நான்.

எந்த ரோல் யார் யார் என்பதும் முடிவாகிறது.
ஹீரோயின் த்ரிஷா!(செங்கோவி மன்னிக்க)ஹீரோ?

இயக்குனர் பள்ளம் சொல்கிறார்” யோசிக்கலாம், அஜீத் அல்லது விஜய்--யார்?”

”அதுதான் கேள்வி!!”