”சந்துரு!ஏலேய்”
திரும்பிப் பார்த்தேன்
என் வகுப்புத்தோழன் சிதம்பரம்தான் அழைத்தது
“ஒன்னை ஹாக்கி அகஸ்டின் அண்ணாச்சி கூப்பிடறாரு. மைதானத்துல
இருக்காரு”
அகஸ்டின் முன்னாள் மாணவன்.ஹாக்கிவீரன்.இப்போது கோவில்பட்டி’சி’அணிக்காக
ஆடுகிறார்.அணித்தலைவர்.கோல் கீப்பர்.
என்னை எதற்குக் கூப்பிடுகிறார்?
யோசித்தபடியே போனேன்.
அவரை நெருங்கி” கூப்பிட்டீங்களாமே?” என்றேன்.
அவர் கேட்டார்”நீ எப்பவும் என்ன பொசிசன்ல ஆடுற?”
“ரைட் அவுட் அண்ணாச்சி”
”உம்.டோர்னமெண்ட்ல ஆடுவயா?”
ஒன்றும் புரியவில்லை.
அவரையே பார்த்தேன்
”வெள்ளிக்கிழமை நம்ம அணிக்கு மேச் இருக்கு.இன்னிக்குத்
திங்கள்.ஊருக்குபோன செல்லப்பா இன்னும் வரலை.அவன் ரைட் அவுட்தான்.அவன் வரல்லேனா நீ ஆடணும்.முடியுமா?”
எனக்குஒருஇன்ப அதிர்ச்சி.
‘ஆடுறேன் அண்ணாச்சி”
“லிஸ்ட் எல்லாம் பாத்தயில்ல.யாரோட ஆடறோம் தெரியுமாலே?”
”பாத்தேன்.ஆனா ஞாபகம் இல்ல.”
“கோல்டன் ராக்.தயாரா இரு”.
என் வயிற்றைக் கலக்கியது “கோல்டன் ராக்”
காட்டரை எதிர்த்தா?
வீட்டுக்கு வேகமாகத் திரும்பி நேராக டாய்லெட் போய்விட்டேன்.
அன்று இரவு சரியாகத் தூக்கம் வரவில்லை.
மறுநாள் முழுவதும் ஒரு கலக்கம்தான்
மாலை பயிற்சி ஆட்டம்.
பயத்துடன் ஆட ஆரம்பித்தாலும் கொஞ்ச நேரத்தில் ஆட்டத்துடன்
ஒன்றி விட்டேன்.
லேசாக பயம் தெளிந்து விட்டது.
இவ்வாறாக மேலும் இரு நாட்கள் சென்றன.
வெள்ளியன்று காலை செல்லப்பா வந்துவிட்டான் என்ற செய்தி கிடைத்தது.
கொஞ்சம் ஏமாற்றம்; கொஞ்சம் ஆறுதல்!
அன்று….
ஆட்டம் தொடங்கியது.
காட்டர் எப்போதும் எங்கள்D யிலேயே இருப்பது போல்
தோன்றியது.
முடிவு பொன்மலை அணி வெற்றி….12-0
ஒரு பெருமூச்சு விட்டேன்.
நல்லவேளை நான் ஆடவில்லை
ஆனால் நான் ஆடியிருந்தால் முடிவு 12-0 என்று இருந்திருக்காது
……..
……….
……….
15-0 ஆகக் கூட இருந்திருக்கலாம்!
15-0 ஆகக் கூட இருந்திருக்கலாம்//
பதிலளிநீக்குஹா.. ஹா.. இதுவும் பெருமைதானே...
தொடர்ந்து எழுதுங்கள் ஐயா.
நன்றி கில்லர்ஜி
பதிலளிநீக்குகடைசி வரி சொல்வது அப்ப நீங்கள் ஹாக்கி விளையாட்டில் தேர்ந்தவரா..பெருமை மிக்க விஷயம்.
பதிலளிநீக்குஉங்கள் டீமின் தலைவர் அண்ணாச்சி என்ன சொன்னார்?
கீதா
உண்மையிலேயே நான் ஓரளவுக்கு நல்ல பிளேயர்தான்.கடைசி வரி நகைச்சுவைக்கு! நாந்தான் விளையாடவில்லையே! அண்ணாச்சி சொல்ல ஒன்றுமில்லை.அவ்ரே நொந்து போய்க் கிடந்தார்!
நீக்குநீங்கள் நம்புவீர்களா என்று தெரியவில்லை, எங்கள் பழைய பதிவுகள் கதைகளை ஆராய்ந்து கொண்டிருந்தபோது நம்புங்கள் ஜஸ்ட் 6 நாட்கள் முன்பு.....பித்தானந்தா சுவாமியை உட்படுத்தி ஒரு கதை எழுதியிருந்தேன் 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' உங்கள் கருத்தும் அங்கு உள்ளது.... அதைப் பார்த்ததும். என்னாச்சு செபி சார் அவர் அம்மா இறைவனடி சேர்ந்தது தெரியும் ஆனால் அதன் பின்னர் காணவில்லையே என்று தோன்றி நம்புங்கள், என் மனதில் செபி சார் மீண்டும் வருவார் என்று நினைத்து பதிவு வந்ததா நாம் தான் மிஸ் பண்ணிவிட்டோமோ என்று பார்த்தேன் அன்று எதுவும் இருக்கவில்லை.....ஆனால் பாருங்கள் அடுத்த நாட்களில் நீங்கள் வந்திருக்கிறீர்கள்!!
பதிலளிநீக்குகீதா
நிச்சயமாய் நம்புகிறேன்.இது போன்ற உள்ளுணர்வுகளை விளக்க இயலாது.உங்கள் எண்ணமே என்னை எழுதத் தூண்டியதோ?நன்றி
நீக்குஅருமை சார் கலக்குங்கள்
பதிலளிநீக்குநன்றி முரளிதரன்
நீக்குநன்றி முரளிதரன்
பதிலளிநீக்குதன்னம்பிக்கை. அதுவே டானிக்.
பதிலளிநீக்குஉண்மை.நன்றி
நீக்கு
பதிலளிநீக்குபதிவின் இறுதியில், ‘நல்லவேளை நான் ஆடவில்லை. ஆனால் நான் ஆடியிருந்தால் முடிவு 12-0 என்று இருந்திருக்காது---15-0 ஆகக் கூட இருந்திருக்கலாம்!’ என்று சுஜாதா அவர்கள் பாணியில் சொல்லியுள்ளீர்கள். நிச்சயம் நீங்கள் விளையாடியிருந்தால் தாங்கள் சொன்னது நடந்திருக்கும். தங்களின் தன்னம்பிக்கைக்கு பாராட்டுகள் !
என் தன்னம்பிக்கையை விட என்மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகம் போலிருக்கிறதே!
நீக்குநன்றி